Ads (728x90)

தமிழ்நாடு முழுவதும் பஸ் போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று காலையில் டிரைவர்–கண்டக்டர்கள் மறியலில் ஈடுபட்டு பஸ்களை இயக்க விடாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசினர். வேலைக்கு இடைஞ்சல் செய்யாதீர்கள். போராட்டம் நடத்துவதாக இருந்தால் ஓரமாக நின்று ஆர்ப்பாட்டம் நடத்துங்கள் மற்றவர்கள் பணி செய்வதை தடுக்க கூடாது என்றனர். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது.

இன்று நிலவிய அசாதாரணநிலை பற்றி போக்குவரத்து கழக அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது.

போக்குவரத்து கழக ஊழியர்கள், டெப்போ முன்பு மறியலில் ஈடுபட்டதால் சென்னை பல்லவன் பணிமனை, அண்ணாநகர், பெரம்பூர், திருவான்மியூர், பஸ் டெப்போக்களில் இருந்து பஸ்கள் வெளியே செல்வதில் சிரமம் ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்களை எடுக்க தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பஸ்களை இயக்க தேவையான டிரைவர்–கண்டக்டர்கள் எங்களிடம் அதிகமாகவே உள்ளனர். எனவே போராட்டம் நடத்துபவர்கள் மக்களுக்கு இடைஞ்சல் இன்றி ஓரமாக நடத்த வேண்டும்.

பஸ்களை இயக்க விடாமல் மறியல் செய்தால் கண்டிப்பாக தேவையான நடவடிக்கைகளை சட்டப்படி மேற்கொள்வோம்.

பஸ்கள் மீது கல்வீசுபவர்கள், பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பவர்களை கைது செய்து ரிமாண்ட் செய்யவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதிகாரி கூறினார்.
வழக்கம்போல் இயக்கப்படும் பஸ்களை மறித்தால் கடும் நடவடிக்கை: அரசு அதிகாரி எச்சரிக்கை

தமிழ்நாடு முழுவதும் பஸ் போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று காலையில் டிரைவர்–கண்டக்டர்கள் மறியலில் ஈடுபட்டு பஸ்களை இயக்க விடாமல் மறியல் ...

ம்பிக்கை மிகுந்த தகவல் பரிமாற்றத்தில் தற்போது மிக முக்கிய இடத்தில் இருப்பது, ‘மெயில்’ என்று சொல்லப்படும் மின்னஞ்சல்.

இதில் நம் விருப்பத்திற்கு ஏற்ப நமது பெயரில் மெயில் ஐடியை உருவாக் கிக்கொள்ளலாம் என்பது நாம் அறிந்ததே. ஆனால், டொமைனையும் நீங்கள் விரும்பும் வண்ணம் அமைத்துக்கொள்ளலாம் என்பதே, Mail.com  சேவையின் சிறப்பம்சம்!

Mail.com என்பது ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் போன்றவற்றுக்கு அடுத்தபடியாக மிக அதிகமானோர் பயன்படுத்தும் மின்னஞ்சல் கணக்கு. மற்ற மின்னஞ்சல் கணக்குகளைப் போலவே எல்லாவிதமான வசதிகளையும் கொண்டுள்ள இதன் கூடுதல் பிளஸ்... வழக்கமான  மின்னஞ்சல் முகவரி போன்று நாம் கொடுக்கும் மெயில் ஐடியுடன்.. yourname@gmail.com, yourname@yahoo.com, yourname@ymail.com என்று இல்லாமல் yourname@mail.com, yourname@email.com, yourname@post.com, yourname@photographer.net, yourname@engineer.com போன்ற 200க்கும் அதிகமான டொமைன்களையும் தேர்வுக்குத் தருகிறது.

இதன் மூலமாக நாம் விரும்பும் அல்லது நம் பணியை எடுத்துச் சொல்லும் வகையிலான டொமைனை தேர்வு செய்துகொள்ளலாம். 

www.mail.com என்ற வலைதள முகவரியில் உள்ள Get your free email account  அல்லது free email என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, கேட்கப் படும் தகவல்களை கொடுத்து, இனி விரும்பும் டொமைனில் இமெயில் கணக்கை உருவாகிக்கொள்ளுங்கள்!

 இதன் கூடுதல் சிறப்பு...


* அன்லிமிட்டட் மெயில் ஸ்டோரேஜ்
* எளிதில் நினைவில் கொள்ளும் வண்ணம் மின்னஞ்சல் முகவரி உருவாக்கும் வசதி.
* மிக எளிதாக பயன்படுத்தும் வண்ணமாக எளிய அமைப்பு.
* வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு.

- சா.வடிவரசு
இமெயில் ஐடியில் டொமைன் உங்கள் சாய்ஸ்!

ந ம்பிக்கை மிகுந்த தகவல் பரிமாற்றத்தில் தற்போது மிக முக்கிய இடத்தில் இருப்பது, ‘மெயில்’ என்று சொல்லப்படும் மின்னஞ்சல். இதில் நம் விருப்பத...

ந்த வருடம் மோட்டோரோலா நிறுவனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கூகுள் தேடலிலும் அதிகம் தேடப்பட்டவை பட்டியலில் கூட மோட்டோ ஜி மாடல் முதல் இடத்தையும், மோட்டோ ஈ நான்காம் இடத்தையும், மோட்டோ எக்ஸ் (gen 1) ஒன்பதாம் இடத்தையும் பிடித்த சந்தோஷத்தில் உள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

புதிய மோட்டோரோலா X(Gen2)க்கு கூடிய சீக்கிரமே லாலிபாப் ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் என உறுதியளித்துள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

இன்றைய யுகத்தில் மொபைல் பயனாளர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் விஷயம் இரட்டை சிம்கள் கொண்ட வசதி, அதிக பேட்டரி திறன் மற்றும் 4ஜி தொழில்நுட்பம். அடுத்த வருடம் 4ஜி மொபைல்கள் தான் ஆள போகிறது. ஆனால் மோட்டோரோலா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள புதிய மோட்டோரோலா X (Gen2) மொபைலில் இரட்டை சிம் வசதியும் இல்லை, 4ஜி தொழில்நுட்பமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

இயங்குதளம்:

ஆண்டிராய்டு ஓஎஸ் கிட்கேட் 4.4

எடை மற்றும் அளவுகள்:

9.97மிமீ தடிமனும், 144கிராம் எடையும் கொண்டது.

பிராசசர்:

2ஜிபி ரேம்-வுடன் கூடிய Snapdragon 801 adreno GPU 330 மற்றும் 2.5GHz கொண்ட பிராசசரை கொண்டு இயங்குகிறது.

ஸ்கிரீன்:

5.2 இன்ஜ் தொடு திரையுடன் கார்னிங் கொரில்லா க்ளாஸ்-வுடன் கூடிய oled டிஸ்பிளேவை (1920x1080) கொண்டுள்ளது.

கேமரா:

LED பிளாஷ்-வுடன் கூடிய 13 மெகா பிக்சல் திறன் கொண்ட பின் பக்க கேமிராவும்,2 மெகா பிக்சல் முன் பக்க கேமிராவும் கொண்டுள்ளது.

நினைவகம்:

16 மற்றும் 32 ஜிபி போன் மெமரியை கொண்டுள்ளது.

பேட்டரி:

இதன் பேட்டரி 2,300mAh திறனும் கொண்டது.

சிம்:

இந்த மொபைலில் ஒரு சிம் மட்டுமே இயக்கலாம். அதுவும் நானோ சிம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

நிறம்:

வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் இந்த போன் வெளி வருகிறது.

இணைப்பு:

நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் தரப்பட்டுள்ளன.

நிறைகள்:

வட்ட வடிவ ரிங் LED பிளாஷ் டிஸ்ப்ளே  நல்ல பேட்டரி சேமிப்பு திறன்  துல்லியமான கேமரா

குறைகள்:

மெமரி கார்டு வசதி இல்லை. 4ஜி இல்லை. இரட்டை சிம் வசதி இல்லை. முன் பக்க கேமரா 2 மெகா பிக்சல் மட்டுமே

விலை:

இந்த மொபைல் பிரத்யேகமாக பிளிப்கார்ட் ஆன்லைன் ஸ்டோரில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ₹31,999 ரூபாய். லெதர் பேக் கவர் மற்றும் வுட்டன் பினிஷ் கவர்-வுடன் ₹33,999 ரூபாய்.

- ஜி.கே.தினேஷ்
(மாணவர் பத்திரிகையாளர்) 
-vikatan-
புதிய மோட்டோரோலா X (Gen2) மொபைல்

இ ந்த வருடம் மோட்டோரோலா நிறுவனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கூகுள் தேடலிலும் அதிகம் தேடப்பட்டவை பட்டியலில் கூட மோட்டோ ஜி மாடல் ...

சேரனின் C2H - டைம் டு சேஞ்ச்

நேத்து ரிலீஸ் ஆன புதுப்பட டிவிடி இருக்கு சார்!
5.1 ஒரிஜினல்னா குடு இல்லான்னா எடத்த காலி பண்ணுப்பா!!

 

சேரனின் C2H - டைம் டு சேஞ்ச்

சேரனின் C2H - டைம் டு சேஞ்ச் நேத்து ரிலீஸ் ஆன புதுப்பட டிவிடி இருக்கு சார்! 5.1 ஒரிஜினல்னா குடு இல்லான்னா எடத்த காலி பண்ணுப்பா!! ...

ண்டித மதன் மோகன் மாளவியா இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்காற்றிய முக்கிய ஆளுமைகளில் ஒருவர். இந்து தேசியத்தை முன்னிறுத்தி ஹிந்து மகாசபையைத் துவங்கி வைத்தவர். பாகவத சொற்பொழிவுகள் நிகழ்த்தும் குடும்பத்தில் பிறந்த அவர், சம்ஸ்கிருத மொழியில் தேர்ச்சி பெற்றதோடு நில்லாமல் ஆங்கிலக் கல்வியையும் பெற்றார். பின்னர் அரசாங்கத்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில், இந்தியர்களுக்குச் சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்று அவர் ஆற்றிய உரை பரவலான கவனத்தை ஈர்த்தது. காங்கிரசின் முக்கிய முகங்களில் ஒருவராக அவர் மாறுவதற்கான வாய்ப்புகளை அது வழங்கியது. ஹிந்துஸ்தான் இதழின் ஆசிரியராக ஆனவர், அதற்குப் பின்னர்ச் சட்டம் பயின்றுவிட்டு திரும்பினார்.

காசியில் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் கனவு கண்டார். பல லட்சம் ரூபாய் நிதியை அலைந்து திரிந்து திரட்டினார். அன்னிபெசன்ட்டும் மத்திய இந்துப் பள்ளி ஒன்றை ஆரம்பிக்கும் கனவில் இருந்தார். இரண்டு கனவுகளையும் இணைத்து தனியார் முயற்சியில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வி தரும் நிலையமாகப் பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தை நிர்மாணித்தார்கள்.

காந்தியடிகளின் ஒத்துழையாமை போரில் பங்கு பெற்றுச் செயல்பட்டாலும், இஸ்லாமியர்களை இணைத்துக்கொண்டு பணியாற்றும் கிலாபத் இயக்கத்துக்கு எதிராக அவர் இருந்தார். செளரி சௌரா சம்பவத்தால் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபொழுது, அந்தக் காவல் நிலைய எரிப்புச் சம்பவத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை வாதாடி அவர் மீட்டார்.


ஆங்கிலேய அரசு சட்டசபைகளுக்குள் இந்தியர்களுக்கு இடம் வழங்க ஆரம்பித்த பொழுது அதில் மாளவியாவும் இடம் பெற்றார். உருதுவைப் போலச் சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட ஹிந்தியையும் நீதிமன்றங்களில் பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துப் போராட்டங்கள் நடைபெற்ற பொழுது அதில் இவர் பங்குகொண்டார். அது அப்போராட்டங்களுக்கு அரசியல் சாயம் பூசியது.
 காங்கிரசின் சட்டசபைக்குள் நுழைவதில்லை என்கிற காங்கிரசின் முடிவை மறுத்து 1923 சுயராஜ்யக்கட்சியைச் சித்தரஞ்சன்தாஸ், மோதிலால் நேரு ஆகியோருடன் மாளவியாயும் இணைந்து ஆரம்பித்தார். அடுத்து வந்த தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை ஐக்கிய மாகாணங்கள், வங்கத்தில் பெற்றார்கள். கிலாபத் இயக்கத்தினரும் முனிசிபல் தேர்தல்களில் சுயராஜ்யக் கட்சியில் இணைந்து வென்றிருந்தார்கள்.

காந்தி-அம்பேத்கர் இடையே பூனா ஒப்பந்தம் கையெழுத்து ஆவதில் முக்கியப் பங்காற்றினார் அவர். உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு நானூறுக்கும் மேற்பட்ட நபர்களோடு சிறை சென்றார் அவர். அதே வருடம், 'இந்தியப் பொருட்களை மட்டும் வாங்குங்கள்', என்கிற திட்டத்தை முன்னெடுத்தார். அதே போல ஒடுக்கப்பட்ட மக்களை மீண்டும் இந்து மதத்துக்குள் சேர்க்க அவர்களுக்கு மந்திர தீட்சை கொடுத்து அவர்களின் ஜாதி போய்விட்டதாக அறிவித்தார் அவர். கலாராம் ஆலயத்துக்குள் இருநூறு தலித்துகள் நுழையும் நிகழ்வை முன்னின்று அவரே நடத்தினார்.

1934-ல் சைமன் கமிஷனுக்குப் போட்டியாக இஸ்லாமிய தலைவர்கள் டெல்லி பரிந்துரைகளைக் கொண்டு வந்தார்கள். அதில் சிந்தை தனி மாகாணம் ஆக்குதல், வட கிழக்கு மாகாணத்தைத் தனி மாகாணமாக நடத்துதல், மூன்றில் ஒரு பங்கு இடங்கள் இஸ்லாமியர்களுக்கு மத்திய சட்டசபையில் ஒதுக்குதல், இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருக்கும் பஞ்சாப் மற்றும் வங்காள மாகாணங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு என்று அவர்களின் கோரிக்கைகள் நீண்டன.

இதையெல்லாம் சேர்த்துக்கொண்டு கூடவே தனித் தொகுதிகள் உள்ளிட்ட இன்ன பிற கோரிக்கைகளையும் இணைத்துக்கொண்டு ஜின்னா பதினான்கு புள்ளி அறிக்கையை உருவாக்கினார். இதற்கு இணையாகக் காங்கிரசின் சார்பாக நேரு கமிட்டி அறிக்கை வந்தது. மேலே இருந்த டெல்லி பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு ஒரே ஒரு நிபந்தனை விதித்தது நேரு அறிக்கை. தனித்தொகுதிகளை லீக் விட்டுவிட வேண்டும் என்பதுதான் அது! ஜின்னா அதற்கு இசைந்தாலும் கட்சிக்குள் இருந்த மதவாதிகள் அதை ஏற்க மறுத்தார்கள்.

இன்னொரு புறம் ஹிந்து மகா சபை, சீக்கிய லீக் ஆகியனவும் முஸ்லீம்களுக்கு விட்டுக்கொடுக்கிறார்கள் என்று எதிர்க்க ஆரம்பித்தார்கள். மும்பை காங்கிரஸ் 1934-ல் கூடியது, "காங்கிரஸ் எல்லா மதத்தவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற கட்சியாகவே திகழ்கிறது. நாங்கள் தனித்தொகுதிகளை ஏற்கவும் இல்லை, நிராகரிக்கவும் இல்லை." என்றது.
மாளவியா கடுப்பாகி, இது இஸ்லாமியர்களை ஊக்குவிக்கும் போக்கில் இருக்கிறது என்று தேசிய கட்சியை அதே வருடத்தில் ஆரம்பித்துத் தேர்தலில் நின்று, வெறும் பன்னிரெண்டு இடங்களில் தன் கட்சியை வெல்ல வைத்தார்.
பிரிட்டிஷ் அரசு பல்வேறு தரப்பு கோரிக்கைகளை நிறைவேற்றியது மற்றும் உடல்நலமின்மை ஆகியவற்றால் தீவிர அரசியலில் இருந்து அவர் விலகினார்.

தற்போது இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்து உள்ளது.
- பூ.கொ.சரவணன்
பண்டித மதன் மோகன் மாளவியா - சிறப்பு பகிர்வு

ப ண்டித மதன் மோகன் மாளவியா இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்காற்றிய முக்கிய ஆளுமைகளில் ஒருவர். இந்து தேசியத்தை முன்னிறுத்தி ஹிந்து மகா...

சி.எஃப்.எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்து விட்டால், உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது .
ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம், ஆர்சனிக், துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மை உள்ளது. இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு, உடல் அசைவுகள், பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம். அலர்ஜி பிரச்சனை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம்.
சி.எஃப்.எல். பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்...?
* உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும். அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம். நொறுங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும்.
* vacuum cleaner-ரால் சுத்தப்படுத்தக் கூடாது. வேக்வம் உறிஞ்சப்பட்டால், அது உள்ளே ஒட்டிக்கொள்ளும். அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரி துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி, மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
* கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம்.
* உடைந்த துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து, 'சீல்' செய்யவும். சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல், கார்ப்பரேஷன் 'ரீசைக்கிள் பின்'னில் கொண்டு சேர்த்தால், அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள்.
சி.எஃப்.எல். பல்புகள்(CFL Blbus) கைத்தவறி விழுந்து உடைந்து விட்டால், உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது .

சி.எஃப்.எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்து விட்டால், உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்...

வீட்டைக் கட்டிப் பார்... கல்யாணத்தைப் பண்ணி பார், என்பார்கள்.  அத் தனை நிஜம் இந்த வார்த்தைகள். பெண் தேடும் படலம் துவங்கி சாந்தி முகூர்த்தம் வரை பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டிருக் கின்றன திருமணங்கள். எந்த மதமானாலும் சாதியானாலும் திருமணம் என்பது பொதுவானதே.

சடங்குகள் மட்டுமே வேறுபடுகின்றன. பெற்றோர்கள் தங்கள் மகனுக்கோ அல்லது மகளுக்கோ நல்ல இடத்தில் வரன் பார்த்து திருமணம் செய்து வைப்பதே அவர்களின் ஆசையும் எதிர்பார்ப்புமாக உள்ளது. பழங்காலத்தில் தரகர்கள் மூலம் பெண் பார்க்கும் படலம் நடந்தது.

பின்னர், நாளிதழ்களில் விளம்பரம் என பரவி இன்று ஊடகங்கள், இணை யங்கள், மற்றும் மேட்ரி மோனி யங்கள் எனப் பிரத்யேக வலைதளங் கள் பலவற்றின் மூலம் பொருத்தங்கள் பார்க்கப்பட்டு திருமணங்கள் முடிகின்றன. அதற்கேற்றாற்போல், போலி யான தரகர்களும் மேட்ரிமோனியங்களும் உருவாகிவிட்டதா கவும் அதிலும் குறிப்பாக மிரட்டி பணம் பறிக்கும் மேட்ரிமோனியங்கள் பல வரன்தேடுவோரை ஏமாற்றிவருவதாக புகார் எழுந்துள்ளது..

பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க மேட்ரிமோனியங்களை அணுகினால், அவர்கள் முதலில் நுழைவுக்கட்டணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி பதிவு செய்யச் சொல்கின்றனர். சில மேட் ரிமோனியங்களில் ஜாதகம் ஒன்றுக்கு ரூ.50 வீதமும், குறிப்பிட்ட எண்ணிக்கை உடைய ஜாதகங்களுக்கு ரூ.1,500 க்கும் மேல் கட்டி பதிவு செய்த பிறகு ஜாதகங்களைத் தருகின்றனர். அந்த ஜாதகங்கள் தங்களுடைய ஜாதகத்துக்குப் பொருத்தமானதாக இருப்பதில்லை என்பதோடு அதில் பல தவறானதாக இருக்கின்றன. என்கிறார்கள் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள். 

“ மேட்ரிமோனி நிறுவனம் தரும் முகவரிகளும், போன் நம்பர்களும் போலியானதாக இருக்கின்றன. மேட் ரிமோனியத்தினரே இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஒரே மேட்ரிமோனியத்திடம் எங்கள் மகனுக்குப் பொருத்தமுள்ள ஜாதகம் கேட்டு ரூ.10,000 வரை செலவு செய்துவிட்டோம். ஆனால், மேலும்மேலும் அவர்கள் பணம்தான் கேட்கிறார்களே தவிர, இதுவரை உருப்படியான ஜாதகத்தைக்கூட அவர்கள் தரவில்லை.

அவர்கள் தந்த சில முகவரிகளை அணுகினால் தாங்கள் அப்படி எதுவும் பதிவு செய்யவில்லை என அதிர்ச்சி தருகின்றனர் அவர்கள். பணம் பறிப்பதற்காக அதே ஜாதகங்களில் பெயர், முகவரி, போன் நம்பர் ஆகியவற் றை மாற்றி, திரும்ப அனுப்பி வைக்கின்றனர். இதுகுறித்து வேறு எங்காவது புகார் கொடுத்தால், உன் மகன் (மகள்) ஜாதகத்தை எங்களிடம் கொடுத்திருக்கே. அதில் தோஷம் இருப்பதாகவும் வேறு பலவிதமான செய்திகளையும் திரித்துக் கூறி கல்யாணம் ஆகாமல் செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர்“ என்று கண்ணீர் மல்கக் கூறினார் சென்னைவாசி ஒருவர்.

“ ஒரு பதிவு நம்பருக்கு ஒருமுறை மட்டுமே ஜாதகங்களை அனுப்புவோம். திரும்ப அனுப்பமாட்டோம். நாங்கள் அனுப்பியுள்ள ஜாதகங்களில் முழு விவரத்துடன் போன் நம்பர் கொடுத்துள்ளோம்.

அவர்கள்தான் அதை முழுதாகத் தெரிந்துகொண்டு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.  வழங்கப்பட்ட ஜாதகங்களில் யாருக்காவது திருமணம் நடந்திருந்தால், அதை உடனே தெரியப்படுத்தி விடுவோம்.

அதற்கு மேலும் ஜாதகம் வேண்டுமெனில், அவர்கள் பதிவு நம்பரை புதுப் பிக்க வேண்டும். அதற்குத் தனியே பணம் செலுத்த வேண்டும். இந்த நிபந் னைகளை முதலிலேயே அவர்களுக்கு தெரிவித்து விடுகிறோம். தவிர, நாங்கள் அதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவது கிடையாது.’’ என்றார் வாடிக் கையாளரின் குற்றச்சாட்டு பதில் அளித்த ஒரு திருமணத் தகவல் மைய பொறுப்பாளர்.

திருமணம் என்பது ஆயிரங் காலத்துப் பயிர் என்பார்கள். அது தழைத்து ஓங்க மேட்ரிமோனியங்கள் பெற் றோர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

- ஜெ.பிரகாஷ்
மிரட்டி பணம் பறிக்கின்றனவா மேட்ரிமோனியங்கள்?

வீ ட்டைக் கட்டிப் பார்... கல்யாணத்தைப் பண்ணி பார், என்பார்கள்.  அத் தனை நிஜம் இந்த வார்த்தைகள். பெண் தேடும் படலம் துவங்கி சாந்தி முகூர்த்...


நடிகர் : வைபவ் நடிகை : சோனம் ப்ரீத் பாஜ்வா இயக்குனர் : கார்த்திக் ஜி கிரிஷ் இசை : நடராஜன் சங்கரன் ஓளிப்பதிவு : தினேஷ் கிருஷ்ணன்

ஒரு கிராமத்தில் 5 சிறுவர்கள் பள்ளியில் படித்து வருகிறார்கள். இதில் ஒருவன் நாயகன் வைபவ். இந்த 5 சிறுவர்களும் கடைசி பெஞ்சில் உட்கார்ந்துக் கொண்டு அரட்டை அடித்துக் கொண்டு நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றார்கள். அந்த கிராமத்தில் கெத்தாக வாழ்ந்து வரும் ரோபோ சங்கரை இவர்களுக்கு ரோல் மாடலாக நினைத்து வருகிறார்கள்.

 ஒருநாள் ரோபோ சங்கர் தாடி வைத்து சோகமாக இருக்கிறார். அப்போது ஒருவர் ஏன் இப்படி இருக்கிறாய்? என்று கேட்க, அதற்கு ரோபோ சங்கர், கல்யாணம் செய்ததால் நான் நல்ல நண்பர்களை இழந்து விட்டேன். நண்பர்களை இழக்க கூடாது என்றால் கல்யாணம் செய்யக் கூடாது என்று கூறுகிறார். இதை கேட்கும் சிறுவர்கள், நாமும் பிரிந்து விடக்கூடாது என்பதால் கல்யாணம் செய்யப்போவதில்லை என்று அனைவரும் சத்தியம் செய்துகொள்கிறார்கள். ஆனால், வைபவ் மட்டும் சத்தியம் செய்ய மறுக்கிறார். பின்னர் நண்பர்கள் எல்லாம் வைபவை வலுக்கட்டாயமாக சத்தியம் செய்ய வைக்கிறார்கள். பள்ளி படிப்பை முடித்து விட்டு கல்லூரி செல்கிறார்கள்.

 அங்கு வைபவ் ஒரு பெண்ணை காதலிக்க முயற்சி செய்கிறார். அதை நண்பர்கள் கெடுத்து விடுகிறார்கள். இதன்பிறகு வைபவ் சென்னைக்கு சென்று ஒரு பெண்ணை காதலித்து ஊர் சுற்ற வேண்டும் என்று எண்ணுகிறார். இதற்காக நண்பர்களிடம் பொய் சொல்லிவிட்டு சென்னைக்கு செல்கிறார். சென்னையில் விடிவி கணேஷ் வீட்டில் தங்குகிறார் வைபவ். வேலை செய்து வரும் விடிவி கணேஷ், பெண்களுடன் ஜாலியாக பழகி வருகிறார். இதனால் ஒரு பெண்ணுடன் பழக வேண்டும் என்று கணேஷிடம் ஐடியா கேட்கிறார் வைபவ். அதற்கு அவர் பப்பிற்கு சென்றால் அங்கு நிறைய பெண்கள் வருவார்கள். அவர்களில் ஒரு பெண்ணை நீ தேர்ந்தெடுக்கலாம் என்று கூறுகிறார். அதன்படி வைபவ்வும் பப்பிற்கு செல்கிறார். அங்கு பெண்களுடன் வந்தால் தான் உள்ளே அனுமதி என்று கூறுகிறார்கள்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பப்பின் வாசலில் நிற்கிறார். அப்போது நாயகி சோனம் பாஜ்வாவை பார்க்கிறார். அவரும் தனியாக வருவதால் அவரிடம் பேசி இருவரும் பப்பிற்கு செல்கிறார்கள். அங்கு இருவரும் மது அருந்திவிட்டு ஜாலியாக இருக்கிறார்கள். அப்போது சோனம் பாஜ்வாவிடம் பேசி அவருடைய போன் நம்பர் மற்றும் வீட்டின் விலாசத்தையும் பெற்றுக் கொள்கிறார். மறுநாள் சோனம் பாஜ்வாவை தேடி அவரது வீட்டிற்கு செல்கிறார் வைபவ். அங்கு அவரை யார் என்றே தெரியாது என்று கூறுகிறார் சோனம். முதல் நாள் நடந்த விஷயங்களை ஞாபகபடுத்த முயற்சி செய்கிறார். சோனம் பாஜ்வா போதையில் இருந்ததால் யார் என்று தெரியாது என்று கூறி அவரை அனுப்புகிறார். ஆனால், சோனம் பாஜ்வாவை காதலித்தே தீர வேண்டும் என்று முடிவு செய்து அவர் பின்னாலேயே அலைகிறார். இதனால் கடுப்பாகிறார் சோனம். இதற்கு முடிவு கட்ட வேண்டும் எண்ணி வைபவிடம் பேசுகிறார். அதற்கு வைபவ் என்னிடம் 2 நாட்கள் பழகிப்பாருங்கள் என்று கூறி இருவரும் பழக ஆரம்பிக்கிறார்கள்.

 இவர்களின் பழக்கம் காதலாக மாறுகிறது. இந்நிலையில் ஊரில் இருந்து நண்பர்கள் சென்னைக்கு வருகிறார்கள். வைபவ் காதலித்து வருவது அவர்களுக்கு தெரிய வருகிறது. இதனால் கோபமடையும் நண்பர்கள் வைபவ் காதலை பிரிக்க முயற்சி செய்கிறார்கள். கல்யாணம் செய்ய வேண்டாம் என்ற முடிவில் இருக்கும் நண்பர்கள் வைபவின் காதலை பிரித்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை. நாயகன் வைபவ் முழுநீள நகைச்சுவை படத்தில் கதாநாயகன் பொறுப்பேற்று சிறப்பாக நடித்திருக்கிறார். நண்பர்களான கருணா, அர்ஜூனன், வெங்கட் சுந்தர், கார்த்திக் இவர்களுடன் சேர்ந்து லூட்டி அடிக்கும் காட்சிகள் காதலுக்காக அடிவாங்குவதும் இவர் செய்யும் சேட்டைகள் என ரசிக்கும் படி செய்திருக்கிறார். நாயகி சோனம் பாஜ்வா முதல் படத்திலேயே மாடர்ன் பெண்ணாக வலம் வருகிறார். அழகாக வந்து கவர்ச்சி காண்பித்து ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார்.

நண்பர்களாக நடித்திருக்கும் கருணா, அர்ஜூனன், வெங்கட் சுந்தர், கார்த்திக் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். முழு நீள நகைச்சுவை படத்தை கையில் எடுத்துக் கொண்ட இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ், திரைக்கதையின் நீளத்தை குறைத்திருக்கலாம். நல்ல பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார். ஷங்கரின் உதவியாளராக இருந்தவர் என்று பாடல் காட்சிகளில் தெரிகிறது. நடராஜன் சங்கரன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் ‘கப்பல்’ நீண்ட பயணம்.
கப்பல் பட விமர்சனம்

நடிகர் : வைபவ் நடிகை : சோனம் ப்ரீத் பாஜ்வா இயக்குனர் : கார்த்திக் ஜி கிரிஷ் இசை : நடராஜன் சங்கரன் ஓளிப்பதிவு : தினேஷ் கிருஷ்ணன் ஒரு க...

இந்தனோசியாவின் வடக்கு சலவேசி பகுதியில் உள்ள டோமொகன் சந்தை…
காலையில் இந்த சந்தை கடுமையான பிஸியாக இருக்கும் பல் சமூகத்தவரும் இந்த சந்தைக்கு வந்து இறைச்சிகளை வாங்ஙிச் செல்வார்கள்…
இங்கு மலைப்பாம்பு இறைச்சி (Python), மர எலிகள் (tree rats),பறக்கும் நரிகள்( flying fox), நாய் இறைச்சி (dogs), என்று பலவகை இறைச்சிகளும் மிகாசா மக்களுக்கு பிடித்தவையாம்..

இந்த இறைச்சிக்கடையில் என்னவெல்லாம் விற்கிறாங்கள்? (((இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம்)))

இந்தனோசியாவின் வடக்கு சலவேசி பகுதியில் உள்ள டோமொகன் சந்தை… காலையில் இந்த சந்தை கடுமையான பிஸியாக இருக்கும் பல் சமூகத்தவரும் இந்த சந்தைக்...


விஜய் டிவி யின் முகத்திரையை கிழிக்கும் திருநங்கை இப்படிக்கு ரோஸ் !! கண்டிப்பாக பாருங்கள் !! வீடியோ இணைப்பு

 Samsung Galaxy Grand 2 vs HTC Desire 820Q


Quick Facts about HTC Desire 820q Dual SIM
  • 5.5 inch (720x1280 pixels) Capacitive touchscreen
  • 1.2 GHz Quad-core Cortex-A53 processor
  • 1 GB RAM | 16 GB internal memory | 128 GB expandable via MicroSD
  • 13 MP Primary camera | 8 MP Front camera
  • Bluetooth | EDGE | GPRS | Wi-Fi802.11 b/g/n | USB Connectivity
  • Li-Po 2600 mAh Non-removable battery
  • Android v4.4.2 (KitKat) OS
Quick Facts about Samsung Galaxy Grand 2
  • 5.25 inch (720x1280 pixels) Capacitive touchscreen
  • 1.2 GHz Quad-core Cortex-A7 processor
  • 1.5 GB RAM | 8 GB internal memory | 64 GB expandable via MicroSD
  • 8 MP Primary camera | 1.9 MP Front Camera
  • Bluetooth | EDGE | GPRS | Wi-Fi802.11 b/g/n | USB Connectivity
  • Li-Ion 2600 mAh battery
  • Android v4.3 (Jelly Bean), upgradable to v4.4.2 (KitKat) OS

cases for samsung galaxy s3otterbox ,samsung galaxy s3root, samsung galaxy s3,samsung galaxysamsung galaxy 10 1,samsung galaxy 2,samsung galaxy 2 tablet,samsung galaxy 3,samsung galaxy 4,samsung galaxy 5,samsung galaxy ace,samsung galaxy camera,samsung galaxy discover,samsung galaxy gear,samsung galaxy iii,samsung galaxy light,samsung galaxy mega,samsung galaxy mini,samsung galaxy nexus,samsung galaxy note,samsung galaxy note 10 1,samsung galaxy note 10.1,samsung galaxy note 2,samsung galaxy note 2 cases,samsung galaxy note 3 accessories,samsung galaxy note 3 case,samsung galaxy note 3 cases,samsung galaxy note 3 review,samsung galaxy on 3,samsung galaxy phones,samsung galaxy player,samsung galaxy player 5 0samsung galaxy precedentsamsung galaxy ssamsung galaxy s 4samsung galaxy s 4gsamsung galaxy s ii,samsung galaxy s iii,samsung galaxy s2,samsung galaxy s2 battery,samsung galaxy s2 case,samsung galaxy s2 cases,samsung galaxy s3,samsung galaxy s3 battery,samsung galaxy s3 casesamsung galaxy s3 casessamsung galaxy s3 minisamsung galaxy s3 pricesamsung galaxy s3 reviewsamsung galaxy s3 updatesamsung galaxy s3 vs iphone 5samsung galaxy s4samsung galaxy s4 accessoriessamsung galaxy s4 activesamsung galaxy s4 casesamsung galaxy s4 casessamsung galaxy s4 minisamsung galaxy s4 reviewsamsung galaxy s4 updatesamsung galaxy s4 verizonsamsung galaxy s5 release datesamsung galaxy tabsamsung galaxy tab 10 1samsung galaxy tab 2samsung galaxy tab 2 10 1samsung galaxy tab 3samsung galaxy tab 3 7.0samsung galaxy tab ssamsung galaxy tabletsamsung galaxy tablet 10 1samsung galaxy tablet 2samsung galaxy ysprint samsung galaxy s3unlock samsung galaxy s3unlocked samsung galaxy s3verizon samsung galaxy s4verizon samsung galaxy s5



Samsung Galaxy Grand 2 vs HTC Desire 820Q

 Samsung Galaxy Grand 2 vs HTC Desire 820Q   Quick Facts about HTC Desire 820q Dual SIM 5.5 inch (720x1280 pixels) Capacitive touch...

நண்பேன்டா - டப்பாங்குத்து பாடல் ஆடியோ!



நண்பேன்டா - டப்பாங்குத்து பாடல் ஆடியோ!

நண்பேன்டா - டப்பாங்குத்து பாடல் ஆடியோ!  

 கலையுலக பிரம்மா கே.பாலச்சந்தரின் சாதனை பட்டியல்

• கமல், சரிதாவை வைத்து பாலச்சந்தர் தெலுங்கில் இயக்கிய ‘மரோசரித்திரா’ படம் வெற்றிகரமாக ஓடியது. தமிழகத்திலும் இப்படம் பெரிய வரவேற்பை பெற்றதால் தமிழில் அதை எடுக்கவில்லை. இந்தியில் ‘ஏக் துஜே கேலியே’ என்ற பெயரில் அதை ரீமேக் செய்தார். கமல், ரதி நடித்தனர்.

இப்படம் வெளியாகி இந்தி பட உலகையே கலக்கியது. இந்தி பட உலகில் ராஜ்கபூர் எடுத்த ‘பாபி’ படத்துக்கு பிறகு பெரிய வெற்றியை பெற்ற படமாக இது அமைந்தது. இந்தி பட உலகினர் பாலச்சந்தரை வியந்து பாராட்டினார்கள். மும்பையில் இளைஞர்கள் படத்தை பார்த்து பைத்தியமாகி அங்குள்ள கடற்கரையில் நாயகன், நாயகி பெயரை இருநூறு மீட்டர் தூரம் மணலிலேயே எழுதி வைத்து வியக்க வைத்தனர்.

• அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி அறிமுகமானாலும் அதில் அவருக்கு சிறிய கேரக்டர்தான். ‘மூன்று முடிச்சு’ படம்தான் அவரை பிரபலமாக்கியது. இந்த படத்தில் ரஜினியை ஒப்பந்தம் செய்வதற்கு முன்னால் அவரிடம் பாலச்சந்தர் சிகரெட்டை தூக்கி போட்டு வாயால் பிடிக்கிற பயிற்சியை செய்து கொண்டு வா. அதை சரியாக செய்தால் உனக்கு வாய்ப்பு தருகிறேன் என்று நிபந்தனை விதித்தாராம். ரஜினியும் அப்படியே பயிற்சி எடுத்து நடித்தார். ரஜினியின் அந்த ஸ்டைல் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. பிறகு ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்திலும் அதே சிகரெட் ஸ்டைல் இடம் பெற்றது.

• ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான் ‘ரோஜா’ படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் பாலச்சந்தர். இந்த படத்தை அவரது கவிதாலயா பட நிறுவனம்தான் தயாரித்தது. இயக்குனர்கள் விசு, மவுலி, அமீர்ஜான், இசை யமைப்பாளர்கள் மரகதமணி, சாக்ஸபோன் கலைஞர் கத்ரி போன்றோரும் பாலச்சந்தர் தயாரித்த படங்கள் மூலம்தான் அறிமுகமானவர்கள்.

• சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய பாலச்சந்தர், நமது இளைய சமுதாயத்தினர் அதிகமாக மது அருந்துவதாக படங்களில் காட்டுகிறார்கள். இந்த போக்கு அபாயகரமானது. நாம் இதை மாற்ற வேண்டும். படங்களில் இளைஞர்கள் மது அருந்தும் காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்றார். பாலசந்தர் விடுத்த கடைசி வேண்டுகோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கலையுலக பிரம்மா கே.பாலச்சந்தரின் சாதனை பட்டியல்

 கலையுலக பிரம்மா கே.பாலச்சந்தரின் சாதனை பட்டியல் • கமல், சரிதாவை வைத்து பாலச்சந்தர் தெலுங்கில் இயக்கிய ‘மரோசரித்திரா’ படம் வெற்றிகரமாக...

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளி மற்றும் கல்லூரிக்குள் புகுந்த தெரிக்-இ-தலிபான் இயக்க தீவிரவாதிகள் பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் 132 பள்ளி குழந்தைகள் உள்பட 145 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல குழந்தைகள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூரமான நிகழ்வை பாகிஸ்தானை சேர்ந்த சிறுமி மலாலா கடுமையாக கண்டித்துள்ளார்.

இது குறித்து மலாலா கூறியுள்ளதாவது;

இது முற்றிலும் முட்டாள்தனமான செயல். அப்பாவி பள்ளி குழந்தைகளை இதுவரை இப்படி யாரும் பயமுறுத்தியதில்லை. இப்படிப்பட்ட தாக்குதல் சம்பவங்களால் நாம் ஒரு போதும் வீழ்ந்துவிடமாட்டோம். இந்த தருணத்தில் பலியான சகோதர, சகோதரிகளுக்கு உலகம் முழுவதிலும் உள்ள மக்களுடன் சேர்ந்து எனது அஞ்சலியை செலுத்துகின்றேன். இந்த தீவிரவாத செயலை எதிர்த்து போராடும் அரசுக்கும், ராணுவ வீரர்களுக்கும் அனைவரும் ஒருங்கிணைந்து ஆதரவு தரவேண்டும் என்று மலாலா கூறியுள்ளார்.

இதனிடையே சில தினங்களுக்கு முன் மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கியதற்கு பழி தீர்க்கும் விதமாக தான் பெஷாவர் பள்ளியில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t50594-topic#ixzz3MDDO9hu5 
Under Creative Commons License: Attribution
பாகிஸ்தானில் பள்ளி குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: மலாலா கண்டனம்

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளி மற்றும் கல்லூரிக்குள் புகுந்த தெரிக்-இ-தலிபான் இயக்க தீவிரவாதிகள் பள்ளியில் இருந்த குழந்தைகள் ...

உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில்தார் )செல் எண்

1 சென்னை மாவட்டம்
1 Fort-Tondiarpet 94450 00484
2 Purasawakkam-Perambur 94450 00485
3 Egmore-Nungambakkam94450 00486
4 Mylapore-Triplicane 94450 00487
5 Mambalam-Guindy 94450 00488
2 திருவள்ளூர் மாவட்டம்
6 Ambattur 94450 00489
7 Ponneri 94450 00490
8 Gummudipoondi 94450 00491
9 Thiruthani 94450 00492
10 Pallipattu 94450 00493
11 Thiruvallur 94450 00494
12 Uthukottai 94450 00495
13 Poonamallee 94450 00496
3 காஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram
14 Kancheepuram 94450 00497
15 Uthiramerur 94450 00498
16 Sriperumbudur 94450 00499
17 Chengalpattu 94450 00500
18 Thirkkalukunram 94450 00501
19 Tambaram 94450 00502
20 Madurantakam 94450 00503
21 Cheyyur 94450 00504
4 வேலூர் மாவட்டம் Vellore
22 Arcot 94450 00505
23 Valaja 94450 00506
24 Arakkonam 94450 00507
25 Vellore 94450 00508
26 Gudiyatham 94450 00509
27 Katpadi 94450 00510
28 Tirupathur 94450 00511
29 Vaniyampadi 94450 00512
5 திருவண்ணாமலை மாவட்டம் Thiruvannamalai
30 Cheyyar 94450 00513
31 Vandavasi 94450 00514
32 Arni 94450 00515
33 Thiruvannamalai 94450 00516
34 Polur 94450 00517
35 Chengam 94450 00518
6 விழுப்புரம் மாவட்டம் Villupuram
36 Kallakurichi 94450 00519
37 Sankarapuram 94450 00520
38 Thirukkoilur 94450 00521
39 Ulundurpettai 94450 00522
40 Thindivanam 94450 00523
41 Chengee 94450 00524
42 Villupuram 94450 00525
43 Vanur 94450 00526
7 கடலூர் மாவட்டம் Cuddalore
44 Chidambaram 94450 00527
45 Kattumannarkoil 94450 00528
46 Cuddalore 94450 00529
47 Panruti 94450 00530
48 Virudhachalam 94450 00531
49 Tittakudi 94450 00532
8 தருமபுரி மாவட்டம் Dharmapuri
50 Dharmapuri 94450 00533
51 Harur 94450 00534
52 Pappireddipatti 94450 00535
53 Pennagaram 94450 00536
54 Palacode 94450 00537
9 கிருஷ்னகிரி மாவட்டம் Krishnagiri
202 Krishnagiri 94450 00538
203 Uthangarai 94450 00539
204 Pochampalli 94450 00540
205 Hosur 94450 00541
206 Denkanikottai 94450 00542
10 நாமக்கல் மாவட்டம் Namakkal
64 Namakkal 94450 00543
65 Rasipuram 94450 00544
66 Thiruchengode 94450 00545
67 Paramathi-Velur 94450 00546
11 சேலம் மாவட்டம் Salem
55 Salem 94450 00547
56 Yercaud 94450 00548
57 Valaappadi 94450 00549
58 Attur 94450 00550
59 Gangavalli 94450 00551
60 Mettur 94450 00552
61 Omalur 94450 00553
62 Sankari 94450 00554
63 Edappadi 94450 00556
12 நீலகிரி மாவட்டம் The Nilgiris
84 Gudalur 94450 00557
85 Pandalur 94450 00558
86 Uthagamandalam 94450 00559
87 Kuntha 94450 00560
88 Kothagiri 94450 00561
89 Coonoor 94450 00562
13 ஈரோடு மாவட்டம் Erode
77 Erode 94450 00563
78 Perundurai 94450 00564
79 Dharapuram 94450 00565
80 Kangeyam 94450 00566
81 Bhavani 94450 00567
82 Gobichettiapalayam 94450 00568
83 Sathyamangalam 94450 00569
14 கோவை மாவட்டம் Coimbatore
68 Coimbatore(South) 94450 00570
69 Coimbatore(North) 94450 00571
70 Mettupalayam 94450 00572
71 Palladam 94450 00573
72 Thirupur 94450 00574
73 Avinashi 94450 00575
74 Pollachi 94450 00576
75 Valparai 94450 00577
76 Udumalaipettai 94450 00578
15 திண்டுக்கல் மாவட்டம் Dindigul
90 Dindigul 94450 00579
91 Natham 94450 00580
92 Nilakottai 94450 00581
93 Palani 94450 00582
94 Oddanchatram 94450 00583
95 Vedasedur 94450 00584
96 Kodaikanal 94450 00585
16 Madurai 102 Madurai(North) 94450 00586
103 Madurai(South) 94450 00587
104 Melur 94450 00588
105 Vadipatti 94450 00589
106 Usilampatti 94450 00590
107 Thirumangalam 94450 00591
108 Peraiyur 94450 00592
17 தேனி மாவட்டம் Theni
97 Periakulam 94450 00593
98 Theni 94450 00594
99 Andipatti 94450 00595
100 Uthamapalayam 94450 00596
101 Bodinayakanur 94450 00597
18 Karur 109 Karur 94450 00598
110 Aravakurichi 94450 00599
111 Kulithalai 94450 00600
112 Krishnarayapuram 94450 00601
19 திருச்சி மாவட்டம் Tiruchirapalli
119 Tiruchirappalli 94450 00602
120 Srirangam 94450 00603
121 Manapparai 94450 00604
122 Lalgudi 94450 00605
123 Manachanallur 94450 00606
124 Musiri 94450 00607
125 Thottiam 94450 00608
126 Thuraiyur 94450 00609
20 பெரம்பலூர் மாவட்டம் Perambalur
113 Perambalur 94450 00610
114 Veppanthattai 94450 00611
115 Kunnam 94450 00612
116 Ariyalur 94450 00613
117 Udayarpalayam 94450 00614
118 Senthurai 94450 00615
21 நாகப்பட்டம் மாவட்டம் Nagapattinam
127 Nagapattinam 94450 00616
128 Vedaranyam 94450 00617
129 Keelvelur 94450 00618
130 Thirukkuvalai 94450 00619
131 Mayiladuthurai 94450 00620
132 Tharangampadi 94450 00621
133 Seerkazhi 94450 00622
22 திருவாரூர் மாவட்டம் Tiruvarur
134 Mannargudi 94450 00623
135 Needamangalam 94450 00624
136 Thiruthuraipoondi 94450 00625
137 Thiruvarur 94450 00626
138 Nannilam 94450 00627
139 Kodavasal 94450 00628
140 Valangaiman 94450 00629
23 தஞ்சை மாவட்டம் Thanjavur
141 Thanjavur 94450 00630
142 Thiruvaiyaru 94450 00631
143 Orathanadu 94450 00632
144 Kumbakonam 94450 00633
145 Thiruvidaimaruthur 94450 00634
146 Papanasam 94450 00635
147 Pattukottai 94450 00636
148 Peravoorni 94450 00637
24 புதுக்கோட்டை மாவட்டம் Pudukkottai
149 Kolathur 94450 00638
150 Elluppur 94450 00639
151 Alangudi 94450 00640
152 Pudukkottai 94450 00641
153 Gandarvakottai 94450 00642
154 Thirumayam 94450 00643
155 Aranthangi 94450 00644
156 Avudaiyarkoil 94450 00645
157 Manamelkudi 94450 00646
25 சிவகங்கை மாவட்டம் Sivagangai
158 Thirupathur 94450 00647
159 Karaikudi 94450 00648
160 Devakottai 94450 00649
161 Sivagangai 94450 00650
162 Manamadurai 94450 00651
163 Ilayankudi 94450 00652
26 ராமநாதபுரன் மாவட்டம் Ramanathapuram
164 Ramanathapuram 94450 00653
165 Rameswaram 94450 00654
166 Thiruvadanai 94450 00655
167 Madukalathur 94450 00656
168 Kamudhi 94450 00657
169 Paramakudi 94450 00658
170 Kadaladi 94450 00659
27 விருதுநகர் மாவட்டம் Virudhunagar
171 Srivilliputhur 94450 00660
172 Rajapalayam 94450 00661
173 Sathur 94450 00662
174 Sivakasi 94450 00663
175 Aruppukkottai 94450 00664
176 Kaariapatti 94450 00665
177 Virudhunagar 94450 00667
178 Thiruchuli 94450 00668
28 திருநெல்வேலி மாவட்டம் Tirunelveli
187 Palayamkottai 94450 00669
188 Sakarankoil 94450 00670
189 Tirunelveli 94450 00671
190 Ambasamudram 94450 00672
191 Nanguneri 94450 00673
192 Radhapuram 94450 00674
193 Thenkasi 94450 00675
194 Shenkottai 94450 00676
195 Veerakeralampudur 94450 00677
196 Aaangulam 94450 00678
197 Sivagiri 94450 00679
29 தூத்துக்குடி மாவட்டம் Thoothukudi
179 Thoothukudi 94450 00680
180 Srivaikuntam 94450 00681
181 Thiruchendue 94450 00682
182 Sathankulam 94450 00683
183 Koilpatti 94450 00684
184 Ottapidaram 94450 00685
185 Vilathikulam 94450 00686
186 Ettaiyapuram 94450 00687
30 கன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari
198 Thovalai 94450 00688
199 Agastheeswaram 94450 00689
200 Kalkulam 94450 00690
201 Vilavancode 94450 00691
உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில்தார் )செல் எண்

உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில்தார் )செல் எண் 1 சென்னை மாவட்டம் 1 Fort-Tondiarpet 94450 00484 2 Purasawakkam-Perambur 944...

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..!
சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.
தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.
சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
குப்லாய் கான் (Kublai Khan)
சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.
இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.
சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.
இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.
சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.
சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..!

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..! சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் க...

ரு திரைப்படத்தை குறைந்த அளவு திரையரங்குகளில் திரையிட்டு, ஓடும் நாட்களின் அடிப்படையில் வெற்றியைக் கணித்தது ஒரு காலம். அதிக திரையரங்குகளை ஆக்கிரமித்து, முதல்நாள் வசூல் அடிப்படையில் திரைப்படம் வெளியான அன்று  மாலையே படத்தின் வெற்றிவிழா கொண்டாடுவது இப்போதைய தமிழ் சினிமாவின் நிலை.
அந்த அளவுக்கு டெக்னாலஜியின் வேகத்துக்கு சினிமாவும் ஈடுகொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த இரண்டு நிலையான காலக்கட்டத்திலும் ஒரு படம் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு, தொடர்ந்து திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது என்றால், அதுதான் ஒரு படைப்பின் உச்சகட்ட வெற்றி!
அந்த உச்சகட்ட வெற்றியைத் தொட்டுத் தொடர்ந்துகொண்டிருக்கிறது 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே' என்ற இந்திப்படம். ஷாரூக்கான், கஜோல், அனுபம் கெர், கரண் ஜோஹர் நடிப்பில் ஆதித்யா சோப்ரா இயக்கிய இந்தப் படம் வெளியானது அக்டோபர் 20, 1995. காதலை மையமாகக்கொண்ட சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்தப் படம்தான், ஷாரூக்கானை இந்தியாவைக் கடந்தும் பரவலாக்கியது.
படம் வெளியான நாளிலிருந்து மும்பை 'மரதா மந்திர் சினிமா' திரையரங்கில் 19 வருடங்களாகத் தொடர்ந்து திரையிடப்பட்டுக்கொண்டிருக்கும் 'தில்வாலே துல்ஹனியா லி ஜாயங்கே' திரைப்படம் நேற்றுடன் 1000 வாரங்களை நிறைவு செய்திருப்பதோடு, பகல் 11.30 மணிக்காட்சியாக இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.

- கே.ஜி.மணிகண்டன்
ஆயிரம் வாரங்கள் தாண்டிய காதல்!

ஒ ரு திரைப்படத்தை குறைந்த அளவு திரையரங்குகளில் திரையிட்டு, ஓடும் நாட்களின் அடிப்படையில் வெற்றியைக் கணித்தது ஒரு காலம். அதிக திரையரங்குக...

தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளாக அதிக பாடல்கள் எழுதி முதலிடத்தில் இருப்பவர் கவிஞர் நா.முத்துக்குமார். இவர் கடந்த ஆண்டு ’தங்கமீன்கள்’ படத்திற்காக எழுதிய ’ஆனந்த யாழை’ பாடலுக்காக தேசிய விருது பெற்றது நாம் அனைவரும் அறிந்ததே.
தற்போது அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைகழகம் நா.முத்துக்குமாருக்கு டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்துள்ளது.

இந்த விழா தியாகராயநகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் சமீபத்தில் நடைபெற்றது.
அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தலைவர் முனைவர் திரு.செல்வின்குமார் நா.முத்துக்குமாருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
2006 ஆம் ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பாடல்கள் குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 
டாக்டர் பட்டம் பெற்ற நா.முத்துக்குமார்!

தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளாக அதிக பாடல்கள் எழுதி முதலிடத்தில் இருப்பவர் கவிஞர் நா.முத்துக்குமார். இவர் கடந்த ஆண்டு ’தங்கமீன்கள்’...


சூரிய பகவான் த்விஷ்டா என்பவரின் மகள் சுவர்ச்சலாதேவியை திருமணம் செய்தார். அவர்களுக்கு வைவஸ்தமனு, எமன் என்ற 2 மகன்களும் யமுனை என்ற மகளும் பிறந்தனர். சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாத சுவர்ச்சலாதேவி தன் நிழலை ஒரு பெண்ணாக மாற்றினாள்.

அந்த பெண்ணுக்கு சாயாதேவி என்ற பெயரிட்டாள். பிறகு அவள் இனி நீ சூரியனுடன் குடும்பம் நடத்து என்று கூறி விட்டுத் தன் தந்தை வீட்டுக்கு சென்று விட்டாள். இதையடுத்து சாயாதேவிக்கு சூரியன் மூலம் தபதீ என்ற மகளும் ச்ருதச்ரவசி, ச்ருதசர்மா என்ற 2 மகன்களும் பிறந்தனர்.

இவர்களில் ச்ருதசர்மா உன்னத பலன்கள் பெற்று சனிபகவான் என்ற அந்தஸ்தை பெற்றார். சிவனை வழிபட்டு ஈஸ்வர பட்டமும் பெற்றார்.
சனி என்பவர் யார்?

சூரிய பகவான் த்விஷ்டா என்பவரின் மகள் சுவர்ச்சலாதேவியை திருமணம் செய்தார். அவர்களுக்கு வைவஸ்தமனு, எமன் என்ற 2 மகன்களும் யமுனை என்ற மகளும் ப...

 சிட்னி ஓட்டலுக்குள் நுழைந்து தீவிரவாதியை நோக்கி ஆஸ்திரேலிய போலீஸார் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி, பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, 16 மணி நேரம் நீடித்த பரபரப்பு சம்பவம் முடிவுக்கு வந்தது. தங்கள் நடவடிக்கை நிறைவடைந்துவிட்டதாக ஆஸ்திரேலிய போலீஸ் தெரிவித்தனர்.
பிணைக்கைதிகளை தன் பிடியில் வைத்திருந்த ஈரான் அகதி என அறியப்பட்ட நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், பிணைக்கைதிகளில் ஒருவர் பலியானதாகவும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில், காயமடைந்தோர் மற்றும் உயிர்ச்சேதம் குறித்து ஆஸ்திரேலிய போலீஸ் தரப்பில், இந்திய நேரப்படி திங்கள்கிழமை இரவு 10.20 வரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
ஆஸ்திரேலிய போலீஸ் அதிரடி நடவடிக்கையாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டபோது, ஓட்டலுக்குள் இருந்து பிணைக்கைதிகள் சிலர் அலறியடித்து வெளியேறினர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
காயமடைந்த சிலரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர்.
ஆஸ்திரேலிய போலீஸ் அதிரடி: சிட்னி ஓட்டலில் பிணைக்கைதிகள் மீட்பு

ஓட்டலில் பொதுமக்கள் சிறைபிடிப்பு
முன்னதாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள லிண்ட் கபே என்ற பிரபல ஓட்டலில் இருந்த பொதுமக்கள், ஊழியர்களை துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் ஒருவர் பிணைக்கைதிகளாக சிறைபிடித்து வைத்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இது குறித்த தகவல் வெளியானதும் போலீஸாரும், தொலைக்காட்சி செய்தியாளர்களும் அங்கு விரைந்தனர். தொலைக்காட்சி சேனலில் காட்டப்பட்ட காட்சி ஒன்றில், ஓட்டலுக்குள் பிடிபட்டிருக்கும் பொதுமக்கள் சிலர் ஜன்னலோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததும், அவர்கள் கைகளில் கருப்புக்கொடி கொடுக்கப்பட்டிருந்ததும் பதிவானது.
அந்தக் கொடியில், வெள்ளை நிறத்தில் அரபு மொழியில் ஏதோ எழுதப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். எனவே, இது இஸ்லாமிய போராளிகள் அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ்.-ன் செயலாக இருக்கலாமோ என சந்தேகிப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், அமைச்சரவை கூட்டத்தை அவசரமாகக் கூட்டினார். ஓட்டலில் பிணைக்கைதிகள் பிடித்துவைக்கப்பட்டுள்ளது குறித்து ஆலோசித்தார். ஆஸ்திரேலியாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக அபாட் ஏற்கெனவே எச்சரித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
சிரியா, இராக்கில் போராடி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியாவும் கூட்டுச் சேர்ந்துள்ளது. இதற்கு பதிலடியாக ஐ.எஸ். அமைப்பு இத்தகைய தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அஞ்சப்பட்டது.
பிணைக்கைதிகளில் ஒருவர் இந்தியர்
சிட்னி ஓட்டலில் எத்தனை பேர் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற தகவல் முதலில் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அங்கு இந்தியவைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஒருவரும் சிக்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக மக்களவையில் அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்திருந்தார். இத்தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
சிட்னி ஓட்டலில் இன்போசிஸ் ஊழியர்
இதனிடையே, சிட்னியில் லிண்ட் கபே ஓட்டலில் பிணைக்கைதிகளாக சிக்கியிருப்பவர்களில் தங்கள் நிறுவன ஊழியர் ஒருவரும் அடங்குவார் என பெங்களூரு இன்போசிஸ் நிறுவனம் உறுதிபடுத்தியது.
இது தொடர்பாக அந்நிறுவன தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆஸ்திரேலியாவில் உள்ள எங்களது நிறுவனத்தின் மற்ற ஊழியர்களின் பாதுகாப்பு குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். இந்தியத் தூதரகத்தோடு தொடர்பில் இருக்கிறோம். சம்பந்தப்பட்ட ஊழியரின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்துள்ளோம். ஓட்டலில் இருந்து எங்கள் ஊழியர் உள்பட அனைத்து பிணைக்கைதிகளும் பத்திரமாக திரும்ப வேண்டும் என பிரார்த்திக்கிறோம்" என தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், இன்போசிஸ் ஊழியர் பத்திரமாக இருப்பதாக தகவல் வெளியானது.
மர்ம நபருடன் போலீஸ் பேச்சுவார்த்தை
ஓட்டலில் ஊழியர்கள், பொதுமக்களை சிறைபிடித்து வைத்துள்ள மர்ம நபரை போலீஸார் தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்பட்டது. பிணைக்கைதிகளை பிடித்துவைக்க காரணம் என்ன? அரசிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார் என பேச்சுவார்த்தை நடத்தியதாக போலீஸ் தரப்பு தெரிவித்திருந்தது.
5 பேர் தப்பினர்:
அந்தச் சூழலில், ஓட்டலில் இருந்து 5 பிணைக்கைதிகள் தப்பிவந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இத்தகவலை, மெல்போர்ன் போலீஸ் துணை ஆணையர் கேத்தரின் பர்ன் உறுதிப்படுத்தினார்.
பிரதமர் மோடி கண்டனம்:
ஆஸ்திரேலியாவில் பொதுமக்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில், "சிட்னியில் நடைபெறும் சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. மனிதாபிமானமற்ற, துரதிர்ஷ்டவசமான சம்பவம். பிணைக்கைதிகளாக இருக்கும் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்" என குறிப்பிட்டார்.
ஆஸி. பிரதமர் ஆறுதல்:
சிட்னி நகரின் மார்டின் பிளேஸில் பிணைக்கைதிகள் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் சம்பவம் வருத்தமளிக்கிறது. இருப்பினும், ஆஸ்திரேலியர்கள் பீதியடைய வேண்டாம். ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு நிறுவனங்கள் நிலைமையை திறம்பட கையாண்டு வருகிறது என ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் ஆறுதல் தெரிவித்திருந்தார்.
இந்தியத் தூதரகம் மூடல்

இதனிடையே, ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டுள்ளது. இந்திய தூதரக அதிகாரிகள் அனைவரது பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வெளியுறவுச் செயலர் சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், ஆஸ்திரேலிய சம்பவத்துக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். 
ஆஸ்திரேலிய போலீஸ் அதிரடி: சிட்னி ஓட்டலில் பிணைக்கைதிகள் மீட்பு

 சிட்னி ஓட்டலுக்குள் நுழைந்து தீவிரவாதியை நோக்கி ஆஸ்திரேலிய போலீஸார் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி, பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கைய...

சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, அலங்கரிக்கப்பட்ட விநாயகப்பெருமான் சிலை அல்லது படத்திற்கு விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். அவரை வழிபட சாஸ்திரம் படிக்க வேண்டும் என்பதில்லை.

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார். முடிந்தவர்கள், ‘சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்! பிரஸன்ன வதனம் தியாயேத் ஸர்வவிக்ன உபசாந்தயே’ – எனக் கூறலாம். விநாயகப்பெருமானே உன்னை நினைத்து நான் இந்த விரதத்தை தொடங்கி இருக்கிறேன். எந்த இடையூறும் இல்லாமல் நடத்தி கொடுத்து அருள வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அன்று முழுவதும் விரதம் இருந்து விநாயகரை அருகம்புல்லினால் பூஜிக்க வேண்டும். நாவல்பழம், கொய்யா, பேரிக்காய், கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை படைக்கலாம். மாலையில் மீண்டும் நீராடி விநாயகரை இரவு சந்திரோதயத்தை பார்த்து வணங்க வேண்டும். விநாயகருக்கு படைத்த பிரசாதங்களை மட்டும் இரவு உணவாக உட்கொள்வது சிறப்பு.

நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்கள் உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விரதம் மேற்கொள்பவர்கள் கோவிலுக்கு சென்று விநாயகரை தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும். விநாயகர் அகவல், விநாயகர் புராணத்தை படிப்பதும் நன்மைகளை தரும்.
பிள்ளையாருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கும் முறை

சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, அலங்கரிக்கப்பட்ட விநாயகப்பெருமான் சிலை அல்லது படத்திற்கு விளக்கேற்...

லகமே செல்ஃபி உலகமாகி விட்டது. மார்கெட்டுக்கு போனா செல்ஃபி.. பிக்னிக் போனா செல்ஃபி..
பார்ட்டிக்கு போனா செல்ஃபி.. பீச்சுக்கு போனா செல்ஃபி.. இன்னும் டெட் பாடி பார்க்க போன இடத்துலதான் நம்மவர்கள் செல்ஃபி எடுக்காம இருக்காங்க ..! அந்த அளவுக்கு உலகம் முழுவதும் செல்ஃபி மயம்!

ஆம், 2014 ஆம் ஆண்டு அப்படி ஒரு செல்ஃபி ஜுரம் அனைவரையும் தொற்றி கொண்டுவிட்டது. அப்படிப்பட்ட செல்ஃபி மக்களுக்காகவே வரவிருக்கிறது  மைக்ரோமேக்ஸின் புதிய மொபைல் "மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் செல்ஃபி !"
 

சோனி சென்சார்கள் மற்றும் LED பிளாஷ்-வுடன் கூடிய 13மெகா பிக்சல் திறன் கொண்ட முன் பக்க காமிராவும், பின் பக்க காமிராவும் கொண்டுள்ளது.

4.7 இன்ஜ் தொடு திரையுடன் கார்னிங் கொரில்லா க்ளாஸ்-வுடன் கூடிய IPS HD (720x1280p) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் 16.7 மில்லியன் கலர்கள் காண முடியும்.

2ஜிபி ரேம்-வுடன் 1.7GHZ Tru octa கோர் பிராசசரை கொண்டு இயங்குகிறது. ஆண்டிராய்டு கிட்கேட் 4.4 வெர்ஷனில் இயங்குகிறது.

இந்த மொபைலில் இரண்டு சிம்களை இயக்கலாம். ஆனால் நானோ சிம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். 16 ஜிபி போன் மெமரியை கொண்டுள்ளது. 32 ஜிபி வரை மெமரி கார்டு-ஐ ஏற்றுக் கொள்கிறது.

Mystic Blue மற்றும் Angelic White ஆகிய நிறங்களில் இந்த போன் வெளி வருகிறது. லெதர் பேக் பினிஷ் கொண்டுள்ளது.

நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் தரப்பட்டுள்ளன. இதன் பேட்டரி 2300 mAh திறனும் கொண்டது.

போட்டியாளர்கள்: ஏற்கனவே மார்க்கெட்டில் உள்ள செல்ஃபி மொபைல்களான HTC டிசயர் 820, ஒப்போ என்1, ஒப்போ என்1 மினி, என்3 ஆகியவை இதற்கு போட்டியாக அமையும்.

இந்த மொபைலின் விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை என மைக்ரோமேக்ஸின் சி.இ.ஓ வினீத் தனிஜா தெரிவித்துள்ளார். இந்த மொபைல் வரும் ஜனவரி மாதம் 2ஆம் வாரத்திலிருந்து அனைத்து கடைகள் மற்றும் ஆன்லைன் சைட்களிலும் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

தனி சிறப்புகள்:

செல்ஃபி கேமிரா 13 மெகா பிக்சல்
இன் பில்ட் கேமரா ப்யூட்டி டூல்ஸ்
-Eye enhancement
-Face slimming
-Skin smoothening
-Remove oils and fade
-Removes dark circles
-Make up
-Mascara
-Eye shadow
-blush
-lip gloss

இனிமேல் எல்லாரும் செல்ஃபியா எடுத்து தள்ள போறாங்க..!

லெட்ஸ் டேக் செல்ஃபி மக்களே..

- ஜி.கே.தினேஷ் (மாணவப் பத்திரிகையாளர்)
"மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் செல்ஃபி !" - புதிய மொபைல்

உ லகமே செல்ஃபி உலகமாகி விட்டது. மார்கெட்டுக்கு போனா செல்ஃபி.. பிக்னிக் போனா செல்ஃபி.. பார்ட்டிக்கு போனா செல்ஃபி.. பீச்சுக்கு போனா செல்ஃப...

யாஸிதி இன பெண்களை எவ்வாறு நடத்துகிறோம் என்பது குறித்து, ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட சுமார் 5,000 யாஸிதிப் பெண்கள் தீவிரவாதிகளால் தினந்தினம் கற்பழிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கு ஆதரவு தெரிவித்து ஐ.எஸ்.ஐ.எஸ்-யில் உள்ள பிரித்தானிய விபச்சார பெண்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, தீவிரவாதிகள் தங்களிடம் வரும் பெண்கள் முதலில் கற்பு உள்ளவராய் இருக்க வேண்டும் என நினைக்கின்றனர் என்றும் அப்பெண்களை அடிப்பதோ அவர்களை கற்பழிப்பதோ தவறில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
யாஸிதி இன பெண்களை எவ்வாறு நடத்துகிறோம் என்பது குறித்து, ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்ட photo

யாஸிதி இன பெண்களை எவ்வாறு நடத்துகிறோம் என்பது குறித்து, ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிர...

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள  படம் 'லிங்கா'. 'லிங்கா' ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில் 'லிங்கா' டிக்கெட் புக்கிங் சென்னை உள்பட சில நகரங்களில் தொடங்கி உள்ளது.
 
சென்னையில் உள்ள சத்யம் சினிமா குரூப் தங்களது தியேட்டர்களில் வெள்ளிகிழமை மட்டும் 89 காட்சிகளில் 'லிங்கா' திரைப்படத்தைத் திரையிடுகிறது.'லிங்கா' டிக்கெட் புக்கிங் ஆரம்பிப்பதை அறிந்துகொண்ட ரஜினி ரசிகர்கள் ஒரே நேரத்தில் சத்யம் தளத்தை முற்றுகை இட்டதால் சில மணி நேரங்கள் சத்யம் இணையதளம் முடங்கியது.
 
 
 
வெள்ளிக்கிழமைக்கான புக்கிங் ஆராம்பித்த ஓரிரண்டு மணிநேரத்திலேயே  89 காட்சிகளுக்கும் டிக்கெட்டுகள்  விற்ருத் தீர்ந்தன. மேலும், சனிக்கிழமை மற்றும் ஞாயற்றுக்கிழமையும் 'லிங்கா' படத்துக்கு சத்யம குழுமம்  89 ஷோ ஒதுக்கியிருக்கிறது. சனி,ஞாயற்றுக்கிழமைக்கும்  பெரும்பாலான ஷோக்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
 
 சென்னையில் உள்ள மற்றொரு  தியேட்டரான தேவி ஒரு நாளைக்கு 15 ஷோ 'லிங்கா' வுக்கு ஒதுக்கியிருக்கிறது .தேவியிலும் அனைத்து டிக்கெட்டுகளும் தீர்ந்துவிட்டன. தேவியில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் டிக்கெட் புக்கிங் மூலம் மட்டும் 15 லட்ச ரூபாய் அளவுக்கு வியாபாரம் நடந்துள்ளது. இதே போல சென்னையை தவிர்த்த மற்ற ஊர்களில் உள்ள தியேட்டர்களிலும் விரைவில் முன்பதிவு தொடங்கி இருக்கிறார்கள்.
 
'லிங்கா' திரைப்படத்துக்கு முன்பதிவு முறையில் டிக்கெட்டுகள் விற்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ள தியேட்டர் உரிமையாளர்கள் முதல் மூன்று நாட்களுக்குள்ளேயே லாபம் கிடைத்துவிடும் என கணக்கு போட்டிருக்கிறார்கள்.டிக்கெட் முன்பதிவில் கிடைக்கும் வரவேற்பை அறிந்த 'லிங்கா' படக்குழு 100 கோடி வசூலை ஒரு வாரத்தில்  கடந்து விடமுடியும் என கணித்து இருக்கிறது.  
 
சூப்பர் ஸ்டார்னா சும்மாவா ..!
 
 
 
 - பு.விவேக் ஆனந்த்
'லிங்கா' டிக்கெட் முன்பதிவில் புதிய சாதனை!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள  படம் 'லிங்கா'. 'லிங்கா' ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 1...

சமையல் கேஸ் மானியத்தை வங்கிக் கணக்கில் பெறுவது எப்படி?
சமையல் எரிவாயு மானியத்தை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு என்னென்ன நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பதுபற்றி, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாகப்பெறும் திட்டம், இந்தியாவில் 54 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நேரடி மானியத்தைப் பெறுவதற்காக அடுத்த ஆண்டு 2015-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிவரை வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை தவறவிட்டால், எரிவாயுக்கான நேரடி மானியத்தை பெறமுடியாமல் போய்விட வாய்ப்புள்ளது.
மானியத் திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால், எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு, அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு இருக்கவேண்டும். அவர்கள் முழு தொகை செலுத்தி எரிவாயு வாங்கினாலும், மத்திய அரசு அளிக்கும் மானியத்தொகை, அந்த வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுவிடும்.
அந்த வகையில் எரிவாயுக்கான மானியத்தை இதன்மூலம் வாடிக்கையாளர் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் சேர்ந்ததில் இருந்து மானியத்தொகை கிடைக்கத் தொடங்கிவிடும். எரிவாயு சிலிண்டரை வாங்கிய 3 அல்லது 4 நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் மானியத்தொகை வந்து சேர்ந்துவிடும்.
எரிவாயுக்கான நேரடி மானிய திட்டத்தில் இதில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் முறை எளிதானதுதான்.
யார் பெயரில் சிலிண்டர் இருக்கிறதோ, அவர் தனது எரிவாயு சிலிண்டர் முகவரை அணுகவேண்டும். தன்னிடமுள்ள ஆதார் எண் மற்றும் வங்கிக்கணக்கு எண்ணை குறிப்பிட்டு, அவர் கொடுக்கும் படிவம்-1 மற்றும் படிவம்-2 ஆகியவற்றை பூர்த்தி செய்யவேண்டும். படிவம்-1-ஐ வங்கியிலும், படிவம்-2-ஐ முகவரிடமும் வழங்கவேண்டும்.
ஆதார் அட்டை அல்லது எண் இல்லை என்றால், வங்கிக்கணக்கு புத்தகத்தை காட்டி முகவரிடம் இருந்து படிவம்-3 மற்றும் படிவம்-4 ஆகியவற்றை வாங்கி பூர்த்தி செய்யவேண்டும். பின்னர் படிவம்-3-ஐ வங்கியிலும், படிவம்-4-ஐ முகவரிடமும் கொடுக்கவேண்டும்.
வங்கியில் படிவம் செலுத்தப்பட்டது என்பதற்கு அத்தாட்சியாக, படிவத்தின் கடைசி பகுதியை கிழித்து, அதில் வங்கி முத்திரையை பதித்தும், கையெழுத்திட்டும் வழங்குவார்கள். அதை பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த நடைமுறைகள் மூலம் எரிவாயுக்கான நேரடி மானியத்திட்டத்தில் சேர்ந்துவிடலாம். அதன்பின்னர் எப்போதும்போல் பணத்தை செலுத்தி சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம். அதற்கான மானியத்தொகை வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.என்று கூறப்படுகிறது.



சமையல் கேஸ் மானியத்தை வங்கிக் கணக்கில் பெறுவது எப்படி?

சமையல் கேஸ் மானியத்தை வங்கிக் கணக்கில் பெறுவது எப்படி? சமையல் எரிவாயு மானியத்தை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு என்னென்ன நடைமுறைகளை பின்பற...