Ads (728x90)

Showing posts with label இந்து. Show all posts

சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, அலங்கரிக்கப்பட்ட விநாயகப்பெருமான் சிலை அல்லது படத்திற்கு விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். அவரை வழிபட சாஸ்திரம் படிக்க வேண்டும் என்பதில்லை.

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார். முடிந்தவர்கள், ‘சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்! பிரஸன்ன வதனம் தியாயேத் ஸர்வவிக்ன உபசாந்தயே’ – எனக் கூறலாம். விநாயகப்பெருமானே உன்னை நினைத்து நான் இந்த விரதத்தை தொடங்கி இருக்கிறேன். எந்த இடையூறும் இல்லாமல் நடத்தி கொடுத்து அருள வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அன்று முழுவதும் விரதம் இருந்து விநாயகரை அருகம்புல்லினால் பூஜிக்க வேண்டும். நாவல்பழம், கொய்யா, பேரிக்காய், கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை படைக்கலாம். மாலையில் மீண்டும் நீராடி விநாயகரை இரவு சந்திரோதயத்தை பார்த்து வணங்க வேண்டும். விநாயகருக்கு படைத்த பிரசாதங்களை மட்டும் இரவு உணவாக உட்கொள்வது சிறப்பு.

நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்கள் உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விரதம் மேற்கொள்பவர்கள் கோவிலுக்கு சென்று விநாயகரை தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும். விநாயகர் அகவல், விநாயகர் புராணத்தை படிப்பதும் நன்மைகளை தரும்.
பிள்ளையாருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்கும் முறை

சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, அலங்கரிக்கப்பட்ட விநாயகப்பெருமான் சிலை அல்லது படத்திற்கு விளக்கேற்...


சக்தி பீடத்தலங்கள் வரிசையில் இரண்டாவதாக அமைந்து விளங்குவது மதுரை பதியாகும். இம்மதுரைத் தலம், மந்திரிணி பீடத்தலமாகும். வைகை ஆற்றின் கரையிலுள்ள மதுரைத்தலம் இவ்வுலகில் வாழும் போதே வீடு பேறு (சீவன் முத்தி) அளிக்கும் சிறப்புடையதாகும். ஆகையால் இத்தலத்திற்குச் சீவன் முத்திபுரம் என்னும் பெயரும் உண்டு.

இதற்குக் காரணம், மீனாட்சி அம்மையாருடன் சுந்தரேசுவரர் கோவில் கொண்டு எழுந்தருளித் திகழ்வதுதான். சக்திக்கு முக்கியத்துவமுடைய தலங்களுள் மதுரை குறிப்பிடத்தக்க பெருமையும் சிறப்பும் உடையது. மதுரையே மீனாட்சி, மீனாட்சியே மதுரை என்று கூறும் அளவிற்கு இத்தலத்தில் அன்னை மீனாட்சி முக்கியத்துவமும் சிறப்பும் கொண்டு விளங்குகின்றாள்.

அன்னை மீனாட்சியின் நிழலிலேயே சுந்தரேசுவரர் இங்குத் திகழ்கின்றார். எனவேதான் இத்தலத்துத் கோவிலுக்கு மீனாட்சி சுந்தரரேசுவரர் கோவில் என்னும் திருப்பெயர் அமைந்தது.  மீனாட்சி என்னும் திருப்பெயர், மீன்போன்ற கண்களையுடையவள் என்னும் பொருளைக் குறிப்பது. மீன+அட்சி-மீனாட்சி.

மீனம்-மீன்,அட்சம்-கண், அட்சி-கண்ணையுடைவள். மீன், தன் முட்டைகளைக் கண்ணால் பார்த்து நின்று, அக்கண்பார்வைத் திறனால் அம்முட்டைகளினின்று குஞ்சுகளைத் தோன்றச் செய்து காப்பாற்றும் இயல்புடையது. அவ்வாறே அன்னை மீனாட்சியும் உலகத்து உயிர்களையெல்லாம் தன் அருள்கனிந்த கடைக்கண் பார்வைத் திறத்தால் பாதுகாத்து அருளுகின்றாள்.

அன்னை மீனாட்சி, தன் கணவனைச் செல்வம், அரசு முதலிய வாழ்வில் உயர்த்தும் மனைவியாக குணவதியாக விளங்குவதோடுன்றி, தன் குழந்தைகளாகிய உலக உயிர்களுக்கெல்லாம் ஆக்கத்தை -செல்வச் செழிப்பை அருளுபவளாகவும் திகழ்கின்றாள். எனவே தான் பசுமை நிறத் (செல்வச்செழிப்பு) திருமேனியளாக, பசுங்கிளி ஏந்தியபடி காட்சியருளுகின்றாள்.

இந்திரன், தனக்கு நேர்ந்த கொலைப் பாவத்தைப் போக்கி கொள்ள பல தலங்களுக்கு சென்று வரும்போது கடம்ப மரங்கள் செறிந்து விளங்கியதால் கடம்பவனம் என்னும் பெயர் பெற்ற இத்தலத்தில் ஓர் லிங்கத்தை கண்டு அதனை வழிபடவே, பாவம் நீங்கியது. அவன் இந்திர விமானத்துடன் கூடிய இதனால் கோவிலை கட்டுவித்தான் என்று கூறுவர்.

இக்கோவில் உள்ளே எட்டு கோபுரங்களும், இரண்டு விமானங்களும் உள்ளது. வலப்புறம் அன்னை மீனாட்சி கோவிலும், இடப்புறம் சுவாமி கோவிலும் அமைந்துள்ளன. இத்தலம் சக்திக்கு முக்கியத்தவம் உடைய தலமாதலின் அன்னை மீனாட்சியை முதலில் தரிசித்து, பின்னர் சுவாமி கோவிலுக்கு சென்று வழிபட வேண்டியது முறையாகும்.

கருவறையில் நடுநாயகமாக அன்னை மீனாட்சி அம்மையார் கருணை நோக்குடனும், இரண்டு கரங்களுடனும் திருக்காட்சியருளுகின்றாள். அங்கயற்கண்ணி அடிக்கமலங்கள் போற்றி வணங்கி வழிபடுதல் வேண்டும்.

மீனாட்சியம்மனை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களுடன் கூடிய வாழ்க்கை, கல்யாண பாக்கியம், குழந்தை பாக்கியம் அமைகின்றன. வேண்டும் வரமெல்லாம் அருளும் அன்னையாக மீனாட்சி விளங்குகிறாள். இறைவன் சொக்கநாதரை வணங்கினால் மனதுக்கு அமைதியும், நிம்மதியான முக்தியும் கிடைக்கும்.
சக்திக்கு முக்கியத்துவமுடைய தலம்

சக்தி பீடத்தலங்கள் வரிசையில் இரண்டாவதாக அமைந்து விளங்குவது மதுரை பதியாகும். இம்மதுரைத் தலம், மந்திரிணி பீடத்தலமாகும். வைகை ஆற்றின் கரையி...

'உன் எதிர்காலம் உன் கையில்தான்’ என்று பெரியவர்கள் சொல்வார்கள். 'உன் கைரேகையும், அது காட்டும் வழியில் உள்ள உழைப்பும்தான் உன் உயர்வுக்குக் காரணம்’ என்பதே அந்த வாக்கியத்துக்கான பொருள்.
கைரேகை மூலம் பலன் சொல்வது, திறமையான வைத்தியர் ஒருவர் நோயை சரியாக நிர்ணயித்து குணப்படுத்துவது போன்றது. வியாதியின் பொதுவான அடையாளங்களை வைத்து, இது மலேரியா, இது டைஃபாய்டு அல்லது இன்ஃப்ளூவென்சா என்று யூகிக்க முடிந்தாலும், ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் வாயிலாகவும், சில நேரங்களில் எக்ஸ்ரே முதலான பரிசோதனைகள் மூலமும் வியாதியின் மூலகாரணங்களைக் கண்டுபிடித்து, அது தீர்வதற்கான மருந்துகளை நிர்ணயித்து வியாதியைக் குணப்படுத்துவார்கள்.
அதுபோலவே, ரேகை சாஸ்திரத்திலும் கையின் அமைப்பு, உள்ளங்கை, ரேகைகள், மேடுகள் மற்றும் உள்ளங்கையில் அமைந்துள்ள குறிகளின் தன்மைகளைக் கண்டறிந்து, ஒப்பிட்டு, விளக்கமும் பலனும் சொல்லவேண்டும்.
முதலில் கையின் அமைப்பை அறிவோம்.
கையின் வடிவமைப்பு: உள்ளங்கையைத் தரையில் வைத்து, விரல்களைச் சற்று அகற்றி வைத்துக்கொண்டு, கைகளின் மேற்புற அமைப்பைப் பார்த்து, வடிவமைப்பை நிர்ணயிக்கவேண்டும். இந்த வடிவங்களை பொதுவாக மிகச் சிறிய கை, சிறிய கை, சாதாரண கை, நீளமான கை, மிக நீளமான கை என ஐந்து விதமாக வகைப்படுத்துவார்கள்.
இங்கே பெரிய கை, சிறிய கை என்றதும், பெரியவர்களின் கை, சிறியவர்களின் கை என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. குறிப்பிட்ட வயதினருக்கு பொதுவாக கையின் அமைப்பு எப்படி இருக்கும் என்பதை நிர்ணயித்துக்கொள்ளவேண்டும். 'இந்த வகை கைக்கு இன்ன பலன்கள்’ என்று குறிப்பிடப்படும் அம்சங்கள் அனைத்தும் அப்படியே பொருந்தும் என்று முடிவெடுத்துவிடக் கூடாது. கைகளில் இருக்கும் ரேகைகள், குறிகள் ஆகியவற்றையும் ஆராய வேண்டும். கை அமைப்பு ஒன்றியிருந்தாலும் ரேகைகள், குறிகள் ஆகியன மாறுபட வாய்ப்பு உண்டு.
இனி, கையின் ஐவகை வடிவங்களையும், பொதுவான இயல்புகளையும் பற்றிக் காண்போம்.
மிகச் சிறிய கை: சுயநலம் மிகுந்தவர். பணம் - பொருளில் ஆசை மிகுந்தவர். சந்தேகக் குணமும் சண்டை போடும் சுபாவமும் மிகுந்திருக்கும். குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள். தனது சுயநலத்துக்காக எதையும் செய்பவர்கள்.
மேலும், சந்தர்ப்பவாதிகளாகவும், மற்றவரை குறை கூறுபவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்குத் திறமை இருந்தாலும், பிறரால் விரும்பப்படாதவராகத் திகழ்வார்கள்.
சிறிய கை: திறமை மிகுந்தவர். முன்னுக்கு வரவேண்டும் எனும் ஆசை இருக்கும். ஆனாலும், சோம்பல் மிகுந்தவர்கள். உழைப்பதில் ஆர்வம் இருக்காது. போலித்தனமாக வாழ்பவர்கள். சிந்திப்பதைச் செயல்படுத்தும் துணிவு இருக்காது.
தங்களுடைய தோல்விக்கு மற்றவர்களைக் குறை சொல்வார்கள். அதிர்ஷ்டத்தை நம்புபவர்களாகவும், எல்லாம் தானாகவே நடக்கும் என்ற எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். போலி வேதாந்தம் பேசுபவர்கள். குறுக்குவழியில் வெற்றியடைய நினைப்பவர்கள்.
சாதாரண கை: பெரும்பாலனவர் களின் கை இந்த வகையில் அடங்கும். இந்த வகையினர் பொறுமைசாலிகள். வாழ்வில் கஷ்டநஷ்டங்களையும், மேடு பள்ளங்களையும் அறிந்தவராக இருப்பார்கள்.
திட்டமிடலும், எது சாத்தியமோ அதையே செயல்படுத்துபவராகவும் விளங்குவார்கள். போதுமான திறமை, சாமர்த்தியம் உள்ளவர்கள். நம்பிக்கைக்கு உகந்தவர்கள். இவர்கள், பெரிய அளவில் சாதனைகள் புரியாவிட்டாலும், தோல்வி அடைய மாட்டார்கள். சிறுகக் கட்டிப் பெருக வாழ்பவர்கள். சந்தர்ப்பத்துக்கு ஏற்ப வளைந்துகொடுத்து வாழ்வார்கள். இயன்ற அளவு பிறருக்கு உதவி செய்யக்கூடியவர்கள். பொதுவாக இவர்கள் நடுத்தர வாழ்க்கைச் சூழலில், அமைதியுடனும் பிறரின் விருப்பத் துக்கு உரியவர்களாகவும் வாழ்வார்கள்.
நீளமான கை: மிகவும் திறமைசாலிகள். புத்தி சாதுர்யமும்,  துணிச்சலும், ஆவேசமும் உள்ளவர்கள். வாழ்வில் உயர்வதற்காக கடுமையாக உழைப்பவர்கள். நேர்மையாளர்களாகவும், வெளிப்படையாகப் பேசுபவர்களாகவும் விளங்குவர்.
பிரச்னைகளைச் சமாளிப்பதில் இவர்கள் வல்லவர்களாகத் திகழ்வார்கள். தலைவர்களாக இருக்கத் தகுந்தவர்கள். தனக்கும் பிறருக்கும் பயனுள்ளவர்கள். பாசமும், நேசமும், பற்றும் மிகுந்தவர்கள். நினைத்ததை முடிக்கும் ஆற்றல் உள்ளவர்கள்.  நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள். அதேநேரம், கர்வமும், பிடிவாதமும் இவர்களிடம் உண்டு.
மிக நீளமான கை: இவர்கள் முற்றிலும் வித்தியாசமானவர்கள். திறமைசாலிகளாகவும், அதிமேதைகளாகவும் விளங்குவார்கள். ஆனால், இவர்களைப் புரிந்துகொள்வது கடினம்.
சட்டம், ஒழுங்கு, சமுதாயக் கட்டுக்கோப்புக்குள் அடங்காதவர்கள்; சுதந்திரப் பிரியர்கள். பிறரைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். கஷ்ட நஷ்டங்களை லட்சியம் செய்யாதவர்கள். வெளியில் தங்களை தைரியமுள்ளவர்களாகக் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் அச்சம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். இவர்களை நம்புவது கடினம். ஆனால், இவர்கள் கெட்டவர்கள் அல்ல; வித்தியாசமானவர்கள்!
அமைப்பின் அடிப்படையில் ஐவகைக் கரங்களைப் பற்றி அறிந்தோம். இதுபோன்று, கை அமைப்பை ஏழாகப் பிரித்து விளக்கும் வேறொரு வகைப்பாடும் உண்டு.
கைகளில் உள்ள எலும்புகள், அதை மூடியிருக்கும் தசைப்பகுதிகள், விரல்களின் நீளம், உள்ளங்கையின் நீள அகலம் ஆகியவற்றைப் பொறுத்து இந்த வடிவமைப்புகள் பிரிக்கப்படுகின்றன.
1. ஆரம்ப நிலை கை
2. சதுரமான கை
3. உழைப்பாளி கை
4. தத்துவஞானி கை
5. கலையுணர்வு கை
6. பரிபூரணமான கை
7. கலவையான கை
இத்தகைய கைகளின் தன்மைகளையும், அவற்றை உடையவர்களின் குணாதிசயங்களையும் அடுத்த இதழில் பார்ப்போம்.
தொடரும்...
-vikatan-
பஞ்சாங்குலி சாஸ்திரம்

'உன் எதிர்காலம் உன் கையில்தான்’ என்று பெரியவர்கள் சொல்வார்கள். 'உன் கைரேகையும், அது காட்டும் வழியில் உள்ள உழைப்பும்தான் உன் உய...

திருப்பதி ஏழுமலையானுக்கு மலர் யாகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், நேற்று புஷ்ப யாகம் நடந்தது. அதையொட்டி, சுவாமிக்கு 8 டன் எடையுள்ள சாமந்தி, ரோஜா, சம்பங்கி, மருவம், தவனம் உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் இந்த யாகத்திற்கு பயன்படுத்தப்பட்டன.
ஒவ்வொரு நிற மலரைக் கொண்டு அர்ச்சனை செய்யும்போதும், அதற்கேற்ப மந்திரம் முழங்கப்பட்டது. மாலை 5 மணி வரை (சுமார் 4 மணி நேரம்) இந்த புஷ்ப யாகம் நீடித்தது. சுவாமிகளின் பாதத்தில் தொடங்கிய மலர் அர்ச்சனை, கழுத்து வரை மலர்கள் நிறையும் அளவிற்கு நடந்தது.
புயல், மழை, வெள்ளம், பூகம்பம், நிலச்சரிவு, கடல் சீற்றம் போன்ற இயற்கை பேரழிவுகளில் இருந்து உலகத்தை காப்பாற்ற வேண்டும் என்று, இறைவனை வேண்டிக் கொள்வதே, இந்த யாகத்தின் நோக்கமாகும்.
யாகம் முடிந்த பின்னர், சுவாமிக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது.



திருப்பதி ஏழுமலையானுக்கு மலர் யாகம்

திருப்பதி ஏழுமலையானுக்கு மலர் யாகம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில், நேற்று புஷ்ப யாகம் நடந்தது. அதையொட்டி, சுவாமிக்கு 8 டன் எடையுள்ள சாமந...

நீண்ட நாட்களாக இணையத்தில் நான் தேடிக்கொண்டிருந்த கோவில் இது! தகவல் தந்த நண்பர்க ளுக்கு நன்றி!
கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்; வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு பூஜை செய்து கரை திரும்பும் பக்தர்கள்
குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக். இங்கு கடலுக்குள் உள்ளது உலகச் சிறப்பு மிக்க நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம். இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை கடல் உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. பாண்டவர்கள் வழிபட்டதன் நினைவாக... இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.
இந்த ஆலயத்தின் கல் கொடிமர் (சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் உடையது) இதுவரை வீசிய புயல்களினால் சேதமடை யாமல் உள்ளது. தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டம் இந்த கொடி மரத்தின் உச்சியைத் தொடும்.
பின் மெல்ல மெல்ல கடலின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்து இருபுறமும் கடல் விலகி சிவனை வணங்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரைநோக்கித் திரும்புகின்றனர்.
கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்; வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு

நீண்ட நாட்களாக இணையத்தில் நான் தேடிக்கொண்டிருந்த கோவில் இது! தகவல் தந்த நண்பர்க ளுக்கு நன்றி! கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்; வழி...

108 திவ்ய தேசங்களில் முதன்மையாக திகழ்வது ஸ்ரீரங்கம். இந்த ஸ்தலத்தில் உற்சவத்திற்கு பஞ்சமில்லை. ஆனால், எத்தனை பண்டிகைகளும், உற்சவங்களும் வந்தாலும் சம்ப்ரோக்ஷனம் (கும்பாபிஷேகம்) போல வருமா?
ஆம்! பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கத்தில் சம்ப்ரோக்ஷனம் நடக்கப்போகிறது. இதன் முதற்கட்டமாக கோயிலை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மதில் சுவர்கள், கோவில் கோபுரங்கள், கற்சிலைகள், சிற்பங்கள் முதலியவை சீர்செய்து புதுமையாகவும், அதே சமயம் அதன் பழமை மாறாமலும் புது பொலிவு அளிக்கப்படுகிறது.
மதில் சுவர்களும், கோபுரங்களும் பல வருடங்களாக வலிமையுடன் நின்று வந்தன. ஸ்ரீரங்கத்தை சுற்றி உள்ள மதில்களும், கோபுரங்களும் எண்ணற்றவை. ஆனால் இன்று இயற்கை சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் தனது பொலிவையும், வலிமையும் இழந்து விட்டது. மேலும், மதில் சுவர்களில் பெரும்பாலானவை வலுவிழந்து விட்டதால், அவைகள் மறுபடியும் உயரக் கட்டப்படுகிறது. இந்த மதில் சுவர் சீரமைப்பிற்காக ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக தலை நிமிர்ந்து அனைவரையும் வரவேற்கும் கோபுரம். 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்பது ஆன்றோர் வாக்கு. அதை மெய்யாக்க கோபுரங்கள் செப்பனிடப்பட்டு, அதில் மண்டியுள்ள அழுக்கு, குப்பைகளை அப்புறப்படுத்தி, உடந்த சிலைகள் சரி செய்யப்பட்டு, புதியதாக வண்ணம் பூசப்படுகிறது.
பெரும்பாலான பணிகள் முடிந்து விட்ட நிலையில், இன்னும் வண்ணம் பூசும் பணி மட்டும் நடைபெற உள்ளது. இதையடுத்து, 2015 இறுதி அல்லது 2016 தொடக்கத்தில் சம்ப்ரோக்ஷனம் (கும்பாபிஷேகம்) நடைபெறும் என கூறப்படுகிறுது. இந்த பணிகளின் அனைத்து மேற்பார்வையும் கோவில் அறங்காவலர் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் தலைமையில் டி.வி.எஸ்ஸிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.

மு.கோதாஸ்ரீ
(மாணவ பத்திரிகையாளர்)

படங்கள்: தே. தீட்ஷித்
-vikatan-
கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் ஸ்ரீரங்கம்!

108 திவ்ய தேசங்களில் முதன்மையாக திகழ்வது ஸ்ரீரங்கம். இந்த ஸ்தலத்தில் உற்சவத்திற்கு பஞ்சமில்லை. ஆனால், எத்தனை பண்டிகைகளும், உற்சவங்களும் வந...

மரத்தடியில் மட்டும் பெய்யும் மழை ! நெல்லை மாவட்டம் அத்ரி மலையில் ஒரு அதிசய மரம் .

அத்ரி முனிவர் வழிபட்ட சிவாலய ஸ்தலமான அத்ரிமலையில் உள்ள பாலை மரம் என்கிற ஒரு அரிய வகை மரத்தில் பங்குனி மாதத்தின் கடைசி 5 நட்கள் சித்திரையின் முதல் 5 நாட்கள் என இந்த 10 நாட்களுக்குள் 2 நாட்கள் மட்டும் மரத்தின் நிறத்தை ஒத்த பல்லாயிரக்கணக்கான வண்டுகள்( நம் கண்களுக்கு தெரியாது) கிளைகளில் கூடி தங்கள் உடம்பிலிருந்து சுரபிகள் வழியாக நீரை போன்ற திரவங்களை தெரித்தடிக்கும் . நம் பார்வைக்கு , மரத்தடியில் மட்டும் மழை பெய்வது போலத் தோன்றும் , ஆகையால் இந்த மரத்திற்கு அமிர்தவர்ஷிணி என்ற மற்றொரு பெயரும் உண்டு .

மரத்தடியில் மட்டும் பெய்யும் மழை ! நெல்லை மாவட்டம் அத்ரி மலையில் ஒரு அதிசய மரம் .

மரத்தடியில் மட்டும் பெய்யும் மழை ! நெல்லை மாவட்டம் அத்ரி மலையில் ஒரு அதிசய மரம் . அத்ரி முனிவர் வழிபட்ட சிவாலய ஸ்தலமான அத்ரிமலையில் ...

திருச்சிக்கு அருகே நாச்சிக்குறிச்சி என்ற கிராமத்தில் மதவாயி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தெற்கு பிரகாரத்தில் நாகர்கள் சன்னிதி இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள், ராகு கால நேரத்தில் இங்குள்ள நாகர்களை வழிபட்டு பயன்பெறுகின்றனர்.

தவிர நாகதோஷம் உள்ளவர்கள் நாகர் கற்சிலைகளை வாங்கி வந்து, இந்த சன்னிதியின் முன்னே வைத்து விட்டுச் செல்கின்றனர். இப்படிச் சேர்ந்த சிலைகள் ஆலயத்தில் தனி இடத்தில் நிறைய உள்ளன. அடுத்து நாகப்ப சுவாமியின் சன்னிதி உள்ளது.

விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்களை இந்த சன்னிதிக்கு அழைத்து வர, அவர்களை பாதித்த விஷ பாதிப்பு வெகுவாகக் குறையும் என்கின்றனர் பக்தர்கள். இந்த ஊரில் பாம்பு யாரையும் தீண்டுவதில்லை. வீட்டினுள், குடிசையுனுள் ஏதாவது பாம்பு புகுந்து விட்டால் யாரும் அதை அடிப்பதில்லை.

ஒரு காலி குடத்தை அந்தப் பாம்பின் அருகே சாய்த்து வைக்கிறார்கள். பாம்பு அந்த குடத்தினுள் புகுந்து கொள்ளும். பின்னர் அந்தக் குடத்தை மூடி, பாம்பை கொண்டு வந்து ஆலயத்தில் விட்டு விடுகின்றனர். இந்த நாகப்ப சுவாமி பல நூறு குடும்பங்களுக்கு குல தெய்வமாக விளங்குகிறார்.

இந்த குலமக்கள் பலர் வெளிநாட்டில் வசிக்கின்றனர். தாய்நாடு வரும் அவர்கள் தவறாது இங்கு வந்து, தங்கள் குலதெய்வத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, புத்தாடை அணிவித்து பொங்கல் வைத்து படைத்து மனநிம்மதியோடு இல்லம் திரும்புவது வாடிக்கையான சம்பவம்.
நாகதோஷம் போக்கும் மதவாயி அம்மன்

திருச்சிக்கு அருகே நாச்சிக்குறிச்சி என்ற கிராமத்தில் மதவாயி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தெற்கு பிரகாரத்தில் நாகர்கள் சன்னிதி இருக...

விரதம் இருக்கும்போது  அணிய வேண்டிய ஆடை

திருமணப்பொருட்கள் வாங்கும் வரிசையில் முதலில் இடம் பெறுவது மஞ்சள் தான். காரணம் அது ஒரு மங்களப்பொருளாகக் கருதப்படுகிறது. எந்த பூஜையை நாம் செய்தாலும் மஞ்சள் பிள்ளையாரை வைத்து மலரும், குங்குமமும் வைத்து பூஜை செய்வது வழக்கம்.

இலையில் விழுந்தால் அரிசி. தலையில் விழுந்தால் அட்சதை. அப்படிப்பட்ட அட்சதை முனை முறியாத அரிசியில் மஞ்சள் தடவித் தூவுவது ஆகும். சுமங்கலி பெண்கள் வீட்டிற்று வந்தால் வெற்றிலை, பாக்கு, குங்குமத்தோடு மஞ்சளும் கொடுப்பார்கள்.

இங்ஙனம் செய்வதன் மூலம் நாம் செய்த பாவங்கள் விலகுவதாக நம்புகிறார்கள். நீண்ட ஆயுளும், ஐஸ்வர்யமும், ஆரோக்கியமும் பெற மஞ்சள் வண்ணத்தை பார்க்கும் பொருள்களில் உபயோகப்படுத்துவது வழக்கம். விரத காலங்களில் மஞ்சள் ஆடை அணிந்தால் குடும்பத்தில் மங்கலங்கள் நடைபெறும்.
விரதம் இருக்கும்போது அணிய வேண்டிய ஆடை

விரதம் இருக்கும்போது  அணிய வேண்டிய ஆடை திருமணப்பொருட்கள் வாங்கும் வரிசையில் முதலில் இடம் பெறுவது மஞ்சள் தான். காரணம் அது ஒரு மங்களப்பொருள...

ந்திர கிரகணத்தைப் புண்ணிய கால மாகக் கொண்டாடச் சொல்கிறது தர்ம சாஸ்திரம். முறையாகத் தனது கிரணத்தை (கதிர்களை) வாரி இறைக்கும் சந்திரனுக்கு, மறைவு ஏற்படுகிறது. அவனது கட மைக்கு இடையூறு. கண்ணில் திமிரம் (சதைப் பட லம்) மறைப்பதால், பார்வை தடைப்படும். வந்து கொண்டிருந்த கிரணம் திடீரென்று நின்று விடுவதால், அங்கு அசாதாரணமான சூழல் உருவாகும். அதன் விளைவு விபரீதமாகவும் மாறலாம். நல்ல கோடையில் திடீர் மழையும், நல்ல மழைக் காலத்தில் திடீர் வெப்பமும், எதிர் விளைவுக்குக் காரணமாகலாம். அந்த வேளையில், மற்ற செயல்பாடுகளிலிருந்து விடுபட்டு மனத்தை ஆன்மிக வழியில் திருப்பி விட்டால், எந்த இடையூறும் நம்மை பாதிக்காது.
‘மனதுக்கும் சந்திரனுக்கும் சம்பந்தம் உண்டு’ என்று வேதம் கூறும். ‘விராட புருஷனின் மனதிலிருந்து சந்திரன் தோன்றினான்’ என்ற தகவல் வேதத்தில் இருக்கிறது (சந்திரமா மனஸோ ஜாத:). ஜோதிட நூல்க ளும், மனதுக்கும் சந்திரனுக்கும் தொடர்பு இருப்பதை ஊர்ஜிதம் செய்கின்றன.
சந்திரன் தனது கலைகளை இழந்து சூரியனோடு சேர்ந்திருக்கும் வேளையில்- அதாவது அமாவாசை காலத்தில் மனநோய் வலுப்பெறுவது கண்கூடு. தர்ச (அமாவாசை) காலத்தில் ஆன்மிக விஷயங்களைச் செயல்படுத்தும்படி தர்ம சாஸ்திரம் வற்புறுத்தும். அமாவாசை தர்ப்பணமும் அதில் அடங்கும். தர்சத் தையும் பௌர்ணமியையும் வேள்விக் காலமாக வேதம் சொல்லும். இரு கண்கள் போல் திகழும் சூரிய- சந்திரர்களது செயல்பாடுகளுக்கு ஏற்படும் தடங்கல், சூழ்நிலையை மாற்றுவதால் அந்த வேளையில் நமது பாதுகாப்புக்கு ஆன்மிகச் செயல்பாடு உகந்தது என்பது தர்ம சாஸ்திரத்தின் அறிவுரை. முன்னோரை வழிபடுதல், மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில் இருத்தல், உயர்ந்த மந்திரங்களை மனதில் அசை போடுதல். ‘நமசிவாய’ என்பதும் ‘நாராயணாய’ என்ப தும் வேத மந்திரங்கள். அதை மனனம் செய்தல், ஏழை எளிய மக்களுக்குக் கொடை அளித்தல் போன்றவற்றில் மனம் ஈடுபடும்போது இடையூறிலிருந்து மனம் வெளி வந்து விடும். புண்ணியமும் உண்டு.
கிரகணத்தை ‘அலப்ய யோகம்’ _ அதாவது நல்ல காரியங்களைச் செயல்படுத்த மிக அரிய சந்தர்ப்பம் என்று தர்ம சாஸ்திரம் குறிப்பிடும். ‘எனக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. தீட்டுப் பட்டிருக்கிறது. என்னால் இந்த நல்ல காரியத்தில் ஈடுபட முடியாது!’ என்று எண்ண வேண் டாம். அவர்களும் இதை நடைமுறைப்படுத்தலாம் என்று விதிவிலக்கு அளிக்கிறது தர்ம சாஸ்திரம். கிரகண காலம் போனால் வராது. இது மனம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இந்தக் காலத்தில் முன்னோரது தர்ப்பணத்தைச் செயல்படுத்த அனுமதிக்கிறது தர்ம சாஸ்திரம். குளிக்கா விட்டா லும் காலைக் கடனை காலத்தில் செய்ய நிர்ப்பந்திப்பது போல் இதையும் விடாமல் காலத்தி லேயே செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறது. சாதாரண வேளையில் செய்யும் கொடைகள் குறிப்பிட்ட பலனை மட்டும் அளிக்கும். ஆனால், கிரகண காலத்தில் செய்யும் கொடை ஆயி ரம் மடங்கு பலன் அளிக்கும். தான- தர்மங்களுக்கு உகந்த வேளையாக அந்த நேரத்தைப் பார்க்கிறது தர்ம சாஸ்திரம். சந்திரன் பூமியில் நுழைகிறான் (பூச்சாயாம் ஸ்வக்ரஹணே ப்ரவிசதீந்து:) என்று ஜோதிடம் கூறும். பூமி, சந்திரனை மறைத்து விடுகிறது என்று பொருள். ராகு, சந்திரனை மறைக்கிறான் அல்லது விழுங்குகிறான் என்று புராணம் கூறும். எது எப்படி இருந்தாலும் மறைவது கண்கூடு. மறைவு அவர்களுக்கும், நமக்கும் இடையூறு. அது விலக நமது செயல்பாடுகள் திருப்பி விடப்பட வேண்டும்.
உடல் தூய்மைக்குக் கிரகணம் துவங்கும் வேளையில் குளிக்க வேண்டும். உள்ளத் தூய்மைக்கு ஆன்மிக விஷயங் களில் மனதை நுழைக்க வேண்டும். கிரகணம் முடிவுற்ற பிற கும் சிறப்பு நீராடல் தேவை. அப்போதுதான் நமது கடமை முழுமை பெறுகிறது. சிறுவர் முதல் முதியோர் வரை கிர கண காலத்தைக் கொண்டாடலாம். உடல் ஆரோக்கியம் இருப்பவர்கள் ஆரம்பத்திலும், முடிவிலும் நீராடுவது சிறப் பானது. குழந்தைகள், உடல்நலம் குன்றியவர்கள், கர்ப் பிணிகள் - ஆகியோருக்கு இதில் விதிவிலக்கு உண்டு.
மப்பும் மந்தாரமும் இருக்கும் சூழல், நமது வயிற்றில் இருக்கும் உணவு செரிப்பதைத் தாமதப்படுத்தும். அந்த வேளையில் தேவையான ஆதவனின் கிரணங்கள் பரவாத தால், வயிற்றில் இருக்கும் பித்த நீர் சுணக்கமுற்று, செயல்படுவது தடைப்படும் என்று ஆயுர்வேதம் கூறும். நீருண்ட மேகங்கள் அண்டை வெளியில் அப்பியிருக்கும் வேளையில், பேதிக்கு மருந்து கொடுக்கக் கூடாது என்று சொல்லும் ஆயுர்வேதம். ‘கிரகணத்தின் தாக்கம், இயல்பான உடல் செயல்பாட்டுக்குக் குந்தகம் ஏற்படுத்தும்’ என்பது ஆயுர்வேதத்தின் கணிப்பு. எனவே, அந்த வேளையில் உண வைத் தவிர்க்கும்படி வற்புறுத்துகிறது தர்ம சாஸ்திரம்.
கிரகண வேளையில் நாம் ஈடுபடும் ஆன்மிக அலுவல்களுக்கு குந்தகம் விளையாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக கிரகணம் ஆரம்பமாவதற்கு சில மணிகள் முன்பே உணவை முடித்துவிட வேண்டும் என்று பரிந்துரைக்கும் தர்ம சாஸ்திரம். உணவு நிரம்பியிருந்தால் சிறுநீர் கழித்தல், சோம்பல், தூக்கம், சுணக்கம் போன்றவை நம்மை அலைக்கழிக்கும். அவற் றைத் தவிர்க்க உணவுக் கட்டுப்பாடு அவசியம் என்று எண்ணுகிறது தர்ம சாஸ்திரம்.
தற்கால மருத்துவர்கள், நம் உடல் நலத்தைப் பேணிக் காக்க தியானம் செய்யவும், யோகக் கலையில் ஈடுபடவும், சூரிய நமஸ்காரம் செய்ய வும், உணவுக் கட்டுப்பாடு வேண்டும் என்று பரிந்துரை செய்கிறார்கள். அதையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம். நடைபயணமாக ஆலயம் செல்ல வேண்டும், ஆலயத்தை வலம் வர வேண்டும் என்ற ஆன்மிக அறிவுரையை அலட்சியம் செய்தவர்கள், மருத்துவரின் பரிந்துரைப்படி தற்போது இரண்டு கி.மீ. தூரம் காலையிலும், மாலையிலும் நடை பயில்கிறார்கள்.
நம் முன்னோர் தேவையில்லாத ஒன்றை அறிமுகம் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை நம்மிடம் ஏற்பட வேண்டும். அதற்கு ஆண்டவன் அருள் புரிய வேண்டும். ஆதவ னிடமிருந்து சூடான கதிர்களைப் பெற்று, அதைக் குளிரச் செய்து நம்மைக் குளிர வைக்கிறான் சந்திரன். சூரிய கிரணங்களின் வெப்பத்தால் நீர் நிலைகளை குடிப்பதற்கும், குளிப்பதற்கும் உகந்த வகையில் தனது கதிர்க ளால் மாசற்றதாக மாற்றி அமைப்பவன் சந்திரன். செடி- கொடிகளில் தனது கிரணங்க ளால் மருத்துவ குணத்தைத் தோற்றி வைப்பவன் என்ற தகவலை தலை அசைத்து விஞ்ஞானமும் வரவேற்கும். உலகத்தின் தலைவன் சந்திரன். அவனுக்கு ஒன்று என்றால் நாம் செயல்பட வேண்டாமா?

ஆகையால், சந்திர கிரகணத்தன்று அவனது உயர்வுக்காகவும் நமது நன்மைக்காகவும், தர்ம சாஸ்திரத்தின் பரிந்துரையைப் பின்பற்றுவோம்!
சந்திர கிரகணம்... என்ன விசேஷம்?

ச ந்திர கிரகணத்தைப் புண்ணிய கால மாகக் கொண்டாடச் சொல்கிறது தர்ம சாஸ்திரம். முறையாகத் தனது கிரணத்தை (கதிர்களை) வாரி இறைக்கும் சந்திரனுக்...


திருப்பதி : திருமலை ஏழுமலையான் தரிசனம், நாளை, 10 மணிநேரம் ரத்து செய்யப்பட உள்ளது. நாளை 8ம் தேதி, மாலை 4:45 மணி முதல், இரவு 7:05 மணி வரை, சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. கிரகணம் துவங்குவதற்கு, 6 மணிநேரம் முன், திருமலை, ஏழுமலையான் கோவில் நடையை சாத்துவது வழக்கம். அதனால், புதன்கிழமை காலை, 10:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை, ஏழுமலையான் கோவில் மூடப்படும். 
                      
அன்று காலை, 6:30 மணி முதல், 9:30 மணி வரை, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். சந்திர கிரகணம் முடிந்த பின், இரவு 8:00 மணிக்கு, கோவில் திறக்கப்பட்டு சுத்தம் செய்து, பூஜைகள் நடத்தப்படும். அதன்பின், இரவு 10:30 மணி முதல் நள்ளிரவு வரை, பக்தர்கள் தர்ம தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். அன்றைய தினம், வி.ஐ.பி., பிரேக் தரிசனம், ஆர்ஜித சேவைகள், மூத்த குடிமக்கள் தரிசனம், 300 ரூபாய் விரைவு தரிசனம், 50 ரூபாய் சுதர்சன தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

தினமலர்
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் நாளை 10 மணி நேரம் ரத்து!

திருப்பதி : திருமலை ஏழுமலையான் தரிசனம், நாளை, 10 மணிநேரம் ரத்து செய்யப்பட உள்ளது. நாளை 8ம் தேதி, மாலை 4:45 மணி முதல், இரவு 7:05 மணி வரை, ...


முருகக் கடவுளுக்கு கந்தன், குமாரன், வேலன், சரவண பவன், ஆறுமுகம் குகன், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கிறது. எப்படி முருகனுக்கு மட்டும் இத்தனை பெயர்கள் என்று நமக்குள் பல கேள்விகள் எழலாம். ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சில காரணங்கள் இருக்கிறது. ஒரு சில பெயர்களுக்கு மட்டுமாவது அதற்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்ளலாமே? முருகன்: முருகு என்றால் அழகு என்பார்கள்.

இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது. ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது. மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு என்றாயிற்று.இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும் என்றும் சொல்கிறார்கள். சரவண பவன் சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவன்.

சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன். என்றும் பொருள்படும். ச என்றால் மங்களம், ர என்றால் ஒளி கொடை, வ என்றால் சாத்துவீகம், ந என்றால் போர், பவன் என்றால் உதித்தவன் என்கிற பொருளில் மங்களம்,ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்றும் கூறுவர். சகரம் என்றால் உண்மை, ரகரம் என்றால் விஷய நீக்கம், அகரம் என்றால் நித்யதிருப்தி, ணக்ரம் என்றால் நிர்விடயமம், பகரம் பாவ நீக்கம் வகரம் என்றால் ஆன்ம் இயற்கை குணம் என்றும் கூறுவார்கள். ஆறுமுகம் சிவ பெருமானுக்குள்ள ஐந்து முகங்களுடன் அதோமுகம் சேர்ந்து ஆறுமுகங்களானதால் ஆறுமுகம் எனும் பெயர் வந்தது.

சிவத்திற்குரிய தற்புருடம், அகோரம், வாமதேவம், சக்தியோஜதம், ஈசானம் என்ற ஐந்து முகங்கள். இத்துடன் சக்தியின் அதோமுகமும் சேர்ந்தது. முருகன் சிவ ஸ்வரூபமாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் சேர்ந்து விளங்குகிறான் என்பதையே இது உணர்த்துகிறது. திரு, புகழ், ஞானம், வைராக்கியம், வீரியம், ஐஸ்வர்யம் என்பவைதான் ஆறுமுகங்கள் என்று சொல்பவர்களும் உண்டு. குகன் மனமாகிய குகையில் இருப்பவன். தகராகாசத்தில் வசிப்பவன். அடியார் மனக் கோவிலில் தங்கிடுபவன். குமாரன் கு எனும் அறியாமையாகிய மனப்பிணியை மாறன் அழிப்பதால் குமாரன் ஆனான் என்பார்கள். ஒரு சிலர் கு என்றால் அறுவறுப்பு, மாரன் என்றால் நாசம் செய்பவன் என்றும் பொருள் சொல்கிறார்கள்.

 கந்தன் கந்து என்றால் நடுவில் இருப்பது. சிவனுக்கும் உமையாளுக்கும் நடுவில் இருப்பதால் கந்தன் என்கிற பெயர் ஏற்பட்டது. ஸ்கந்தம் என்றால் தோள் என்ற அர்த்தமும் உண்டு. இதற்கு வலிமையுடையவன் என்றும் சொல்கிறார்கள். விசாகன் விசாகன் என்றால் பட்சியின் மேல் சஞ்சரிப்பவன் என்று பொருள். வி-பட்சி, சாகன்-சஞ்சரிப்பவன் மயில் பட்சியை வாகனமாகக் கொண்டவன். முருகனுக்கு வாகனமாகவும், கொடியாகவும் இருப்பவை மயிலும், சேவலும். இவை இறைவனிடம் காட்டும் ஒப்பற்ற கருணையைக் குறிக்கிறது. விசாக நட்சத்திரத்தில் பிறந்தவன். ஆறு விண்மீன்களைக் கொண்டது விசாகம். முன் மூன்றும் பின் மூன்றும் கொண்டு விளங்குவது. முன் மூன்றின் நடுவில் உள்ளது ஒளி மிக்கது.

ஆறுமுகனின் முகங்கள் முன் மூன்றும் பின் மூன்றுமாக இருப்பது விசாகத்தின் வடிவே என்றும் சொல்வார்கள். வேலன் வேலன் என்பது வெற்றியத் தருகிற வேலைக் கையில் ஏந்தியதால் வந்த பெயர். முருகனுக்கு அடையாளமும் இந்த வேல்தான். குருநாதன் பிரம்மவித்யா மரபுகளை விளக்கும் ஆசிரியன். சிவனுக்கும் அகஸ்தியருக்கும், நந்திதேவருக்கும் உபதேசித்தவன் என்பதால் குருநாதன் ஆனார். சுப்பிரமணியம் சு என்றால் ஆனந்தம். பிரஹ்ம்-பரவஸ்துந்ய- அதனின்றும் பிரகாசிப்பது முருகன். இன்பமும் ஒளியும் வடிவாக உடையவன் என்பது இதன் அர்த்தம். புருவ மத்திய (ஆக்ஞை) ஸ்தானத்தில் ஆறு பட்டையாக உருட்சி மணியாக, பிரகாசம் பொருந்திய ஜோதிமணியாக விளங்குவதால் சுப்பிரமணியன். மேலும் விசுத்தி என்கிற ஸ்தானத்தில் ஆறுதலையுடைய நாடியாக அசையப் பெற்றிருப்பதற்கும் சுப்பிரமணியம் என்று பெயர்.

ஆறு ஆதாரங்களை சண்முகம் என்றும் ஆறுதலாகிய உள்ளமே சுப்பிரமணியம் என்றும் சொல்லப்படுகிறது. வேறு சில பெயர்கள் கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் கார்த்திகேயன் என்றும், அப்பெண்களுக்கு வாகுலை என்ற மற்றொரு பெயர் உண்டென்பதால் வாகுலேயன் என்றும் ஆண்டிக் கோலத்தில் ஞானப்பழமாக விளங்குவதால் பழநி என்றும் தனது அடியவர்களை உற்ற வேளையில் வந்து காக்கும் சிறப்பால் வேளைக்காரன் என்றும் சிவன், சக்தி, திருமால் மூவரையும் இணைக்கும் தெய்வமாக இருப்பதால் மால் முருகன் என்றும் பெயர்கள் வழங்கப்படுகிறது. இது தவிர இன்னும் எத்தனையோ பெயர்கள் முருகனுக்கு வழங்கப்படுகிறது. இந்த முருகக் கடவுள் தமிழர்களால் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. -\====================================== -சித்ரா பலவேசம்
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?

முருகக் கடவுளுக்கு கந்தன், குமாரன், வேலன், சரவண பவன், ஆறுமுகம் குகன், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கிறது. எப்படி முருகன...

திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விருச்சிக இராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த பெயர்ச்சியில், தளர்ச்சியை விட சற்று வளர்ச்சியே தருவார் சனி பகவான். குரு பகவானின் நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தில் சனி அமரப்போவதால், அசுபத்தை விட சுபமே நடக்கும்.

பொதுவாக ஜென்ம சனி, ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி உள்ளவர்கள் அதாவது மேஷ இராசி, சிம்ம இராசி, துலா இராசி, விருச்சிக இராசி, தனுசு இராசி ஆகிய இராசிகளில் பிறந்தவர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சியால் நேரம் சாதகமாக இல்லை என்று கூறுவார்கள். அதை கேட்டு கவலைப்பட வேண்டாம், பயம் வேண்டாம். ஏன் என்றால், சனி அமர்வது குருவின் சாரத்தில். இதனால் துன்பத்தை விட இன்பத்தையே கொடுக்கும். பல துறைகள் பெரும் முன்னேற்றம் அடையும். ஆனால் கட்டுமான துறை, I.T துறை மட்டும் சற்று பின்னடைவை சந்திக்கும்.
செவ்வாய் வீட்டில் சனி அமர்வதால், அண்டைநாடுகளுடன் இருக்கும் பிரச்னை தீர்க்க வைக்கும். வாகன விபத்துக்கள் சற்று ஏற்பட வாய்ப்புண்டு. பெரும் அளவில் மழை உண்டு. சிலநாடுகளில் கடல் கொந்தளிப்பு உண்டாகும். உலகில் சில பாகங்களில் போராட்டம், கிளர்ச்சி ஏற்படலாம். இந்த சனி பெயர்ச்சியால் தங்கம், வெள்ளி விலை கூடும். எண்ணெய், இரும்பு விலை குறையும். விருச்சிகத்தில் சனி அமர்ந்து ரிஷப இராசியை பார்வை செய்வதால், பெண்களுக்கு சற்று யோகமான நேரம் இது. பொதுவாக இந்த சனிபெயர்ச்சியால் வளர்ச்சி அதிகரிக்கும்.

சரி, இனி ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் சனிபெயர்ச்சி எப்படி இருக்கும்? சாதகமா-பாதகமா? என்பதையும், அத்துடன் ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் என்னென்ன சனிபெயர்ச்சி பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

கணித்தவர்கள் :- Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

 

மேஷ இராசி 


மேஷ இராசி அன்பர்களே – 02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 8-ம் இடத்திற்கு வரப்போகிறார். அஷ்டம சனியாக வரும் அவர், இனி உங்கள் கஷ்டங்களை போக்க போகிறார். “அஷ்டம சனி வந்தால் அவஸ்தை” என்று பலர் கூறுவார்கள். ஆனால் என்னை பொருத்தவரையில் அவர் (சனி) குருவின் பலத்தால், அதாவது விசாக நட்சத்திரத்தில் வரப்போவதால், அஷ்டமசனியின் பாதிப்பு வராது. இராசிக்கு 09-12-க்குரியவனின் ஆதிக்கத்தில் வருவதால், விரயங்கள் தீரும். கடன் குறையும். பாக்கியம் சேரும். உழைப்பு அதிகம் இருக்கும். யாத்திரை-தெய்வ தரிசனம் கிட்டும். குடும்பத்தில் சுபகாரியம், திருமணம் நடக்கும். சனி 2-ம் இடம், 5-ம் இடம், 10-ம் இடங்களை பார்வை செய்வதால், பேச்சில் கவனமும், நிதானமும் தேவை. வீண் செலவுகளை நீங்கள்தான் திட்டமிட்டு குறைக்க வேண்டும். பூர்வீக சொத்தில் சில பிரச்னைகள் வந்தாலும் தீரும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கவனம் தேவை. தடைப்பட்ட கல்வி தொடரும். வேலை வாய்ப்பும், பெற்றோரின் ஆதரவும் கிடைக்கும். வழக்கு தொல்லை விடுதலை ஆகும். வீடு, மனை, வாகனம் அமையும். அரசாங்க ஆதரவு கிட்டும். சொந்த தொழில் துவங்க வாய்ப்பும் அமையும். பொதுவாக, அஷ்டம சனி ஆட்டி படைக்காது கவலை வேண்டாம். உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிக்கிழமை தோறும் காக்கைக்கு எள் சாதம் வைக்க வேண்டும். சனிப்பெயர்ச்சி அன்றோ அல்லது உங்களின் பிறந்தநாள் அன்றோ நீல வர்ண வஸ்திரத்தை ஒருவருக்காவது தானம் செய்யுங்கள். ஸ்ரீ சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!

 ரிஷப இராசி 


ரிஷப இராசி அன்பர்களே - 02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு, 7-ம் இடத்திற்கு அதாவது சப்தம ஸ்தானத்திற்கு வரப்போகிறார். பொதுவாக சப்தம ஸ்தானம், ரிஷப இராசிக்கு யோக ஸ்தானம். 10-க்குரிய சனி, 7-ல் வருவது எதிர்பாரா யோகத்தை தரும். ரிஷப இராசிக்கு தர்ம-கர்மாதிபதியான சனி பகவான் யோகத்தையே செய்யும், கெடுதல் செய்யாது. இராசிக்கு 8-11-க்குரியவன் ஆதிக்கத்தில் வருவதால் திருமணம், எதிர்பாரா ஐஸ்வரியம், லாட்டரி, ஷேர் மார்கெட்டில் கணிசமான அளவு பண வரவை கொடுக்கும். கூட்டாளிகளால் நன்மை, லாபம் உண்டு. ஜென்மத்தை, பாக்கிய ஸ்தானத்தை, சுகஸ்தானத்தை அதாவது உங்கள் இராசியையும், 9-ம் இடம், 4-ம் இடத்தையும் சனி பார்வை செய்வதால், சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. கல்வித்துறையில் கவனம் தேவை. பிரயாணம் செய்யும்போது நிதானம் தேவை. உணவு விஷயத்தில் கவனம் தேவை. பழைய கடன்கள் தீரும். மேல்படிப்பு தொடர வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பு வரும். புதிய நண்பர்களின் உதவியால் தொழில் துவங்கும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் கிட்டும். பொதுவாக சப்தம சனி வெற்றியை கொடுக்கும். உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிக்கிழமை அன்றோ அல்லது உங்கள் நட்சத்திரம் வரும் நாளிலோ ஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். சனிக்கிழமையில் கருப்பு அல்லது நீல வர்ணத்தில் ஆடை அணிய வேண்டும். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!


மிதுன இராசி 


மிதுன இராசி அன்பர்களே - 02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 6-ம் இடத்திற்கு வருகிறார். பொதுவாக இராசிக்கு 3,6,11-ல் சனி அமர்ந்தால் இராஜயோகம்தான். இது ஜோதிட விதி. 7-10-க்குரிய குருவின் ஆதிக்கத்தில் வருவதால், தொழில்துறையில் முன்னேற்றம் காணப்படும். எதிர்பாரா கூட்டாளியின் உதவி கிடைக்கும். உத்தியோகம் இல்லாதவர்களுக்கு உத்தியோகமும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் வரலாம். 8-க்குரியவன், 6-ம் இடத்தில் அமர்ந்ததால் வழக்கில் வெற்றி கொடுக்கும். விரோதங்கள் மறையும். உடல்நலம் பெறும். சொத்துக்கள் வாங்கச் செய்யும். 8-ம் இடத்தை, 12-ம் இடத்தை, 3-ம் இடத்தை பார்வை செய்வதால், வீண் பிரச்னைகள் வரத்தான் செய்யும். மரத்தில் பழம் இருந்தால் கல் எறியத்தான் செய்வார்கள். நீங்கள் பொறுமையை கடைபிடியுங்கள். தேவையற்ற விரயங்கள் செய்யாதீர்கள். சகோதர, சகோதரி வசம் வீண் விவாதம் வேண்டாம். மேல்அதிகாரி வசம் பணிவு தேவை. சுபநிகழ்ச்சிகள் இனிதாக நடைப்பெறும். தடைப்பட்ட திருமணம் நடக்கும். நினைத்த காரியத்தை நடத்தி தந்து, மறைந்த சனி நிறைந்து கொடுப்பார். உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! விநாயகப்பெருமானை வணங்குங்கள். சனிக்கிழமை அன்று சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றி வணங்குங்கள். உங்கள் நட்சத்திரம் வரும் நாட்களில் தயிர் சாதமோ அல்லது புளியோதரை சாதமோ தானம் செய்யுங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்! 


கடக இராசி 


கடக இராசி அன்பர்களே - 02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 5-ம் இடத்தில் அமரப்போகிறார். 6-9-க்குரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் வருவதால், இத்தனை மாதங்களாக செய்த சோதனை போதும், இனி இவர்கள் சாதனை செய்ய வேண்டும் என்று தீர்மானித்து சனி பகவான் நன்மைகளை செய்யப்போகிறார். வெளிநாட்டு வியபாரம், வெளிநாட்டு பயணம், பிள்ளைகளுக்கு திருமணம் ஆகியவற்றை செய்து வைப்பார். உறவினர்கள் வருகை அதிகரிக்கும். புதிய வாகனம், வீடு-மனை வாங்கும் காலமிது. உயர்கல்வி வரும். தடைப்பட்ட தொழில் துவங்கும். நோய்நொடி நீங்கும். பொதுவாக, பஞ்சம சனி நன்மைகளை செய்வார். 2-ம் இடம், 7-ம் இடம், 11-ம் இடத்தை பார்வை செய்வதால், முன்கோபத்தை குறைத்துக்கொள்ளுங்கள் கூட்டாளி வசம் கவனம் தேவை. வழக்கு விஷயத்தில் எதிராளியிடம் சுமுகமாக பேசி சாதகமாக்கி கொள்ளுங்கள். தூர பயணம் செய்யும்போது, உடல்நலனில் கவனம் தேவை. மற்றவர்கள் ஆலோசனையை பொறுமையாக கேளுங்கள். பெற்றோர் உதவி கிடைக்கும். அரசாங்க ஆதரவில் காரியங்கள் நன்மையாக முடியும். சனிபகவான் சாதகமாக வழி நடத்துவார். உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிக்கிழமையில் வாசனை மலர்களை பெருமாளுக்கு அணிவித்து வணங்குங்கள். நெய்தீபம் ஏற்றுங்கள். புளிச் சாதம் தானம் செய்யுங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்! 


சிம்ம இராசி 


சிம்ம இராசி அன்பர்களே - 02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 4-ம் இடத்தில் அதாவது விருச்சிகத்தில் வந்து அமரப்போகிறார். பொதுவாக 4-ம் இடத்தில் சனி அமர்ந்தால், “அர்தாஷ்டம சனி” என்பார்கள். அர்தாஷ்டம சனி நன்மை செய்யாது என்றும் கூறுவார்கள். அது உங்கள் இராசியை பொறுத்தவரையில் இந்த நேரத்தில் அவ்வளவு உண்மையில்லை. காரணம், 5-8-க்குரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் வருவதால், அர்தாஷ்டம சனியாக இருந்தாலும், ஆனந்தத்தை அள்ளி கொடுக்க போகிறார். ஆம். பஞ்சமாதிபதி காலில் வருவதால், கஷ்டங்கள் கடலில் கரைந்தது போல் ஆகும். தொட்டது துலங்கும். பகைவர்கள் அடங்கி விடுவார்கள். கடன், நொய்நொடி அறவே தீரும். பழைய வீடு, புதியதாய் பொலிவு பெரும். கல்விதடை நீங்கும். உத்தியோகம், சொந்ததொழில் அமையச்செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டு. ஜென்மத்தையும், 6-ம் இடத்தையும், 10-ம் இடத்தையும் சனி பார்வை செய்வதால், தேவையற்ற கடன் வேண்டாம். யாரிடத்திலும் விரோதம் வளர்க்க வேண்டாம். அகலகால் வைத்து ஆடம்பர செலவு செய்ய வேண்டாம். சுகஸ்தான சனி சுகமான வாழ்வை தருவார். உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிக்கிழமை தோறும் காக்கைக்கு எள் சாதம் வையுங்கள். சனிஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்குங்கள். சனிக்கிழமையில் நீலம் அல்லது கருப்பு வர்ணத்தில் ஆடை அணியுங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்! 

கன்னி இராசி 


கன்னி இராசி அன்பர்களே - 02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 3-ம் இடத்திற்கு வருகிறார். 4-7-க்குரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் வெகு பிரமாதமாக வரப்போகிறார். அன்றுடன் “ஏழரை சனி” விடுதலை ஆகிறது. கூண்டு பறவை போல் சிக்கி இருந்த நீங்கள், இனி சுதந்திரமாக இருப்பீர்கள். கீர்த்தி ஸ்தானத்தில் வருவதால், மண்ணை தொட்டாலும் பொன்னாகும். திருமண தடை நீங்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மகப்பேறு இல்லாதவர்களுக்கு மகப்பேறு உண்டாகும். வெளிநாட்டில் சிலருக்கு வேலை வாய்ப்பு அமையும். நசிந்த தொழில் பெருக வாய்ப்பு வரும். குடும்ப சச்சரவு தீரும். தடைபட்ட கட்டடவேலை இனி துவங்கும். 5-ம் இடம், 9-ம் இடம், 12-ம் இடங்களை சனி பார்வை செய்வதால், பூர்வீக சொத்தில் வழக்கு பிரச்னை வரலாம். சொத்து வாங்கும் பொழுது முழு கவனம் தேவை. ஜாமீன் விஷயமாக இருந்தால் தவிர்க்கவும். பெரியவர்களிடம் அடங்கி போவது நன்மை தரும். அவர்கள் வசம் தர்க்கம் செய்ய வேண்டாம். மனைவியால் யோகம் உண்டு. தடைப்பட்ட கல்வி தொடரும். அயல்நாட்டு வியபாரத்தில் அதிக லாபம் கிட்டும். கீர்த்தி சனி, வசந்த காற்று வீசச் செய்வார். உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! திங்கள்தோறும் சிவபெருமானுக்கு வில்வஇலையை சமர்பித்து வணங்குங்கள். அதேபோல சனிக்கிழமையில் பெருமாளுக்கு துளசிஇலையை சமர்பிக்கவும். ஊனமுற்ற முதியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். சனிஸ்வர பகவானுக்கு நீலம் அல்லது கருப்பு வர்ணத்தில் வஸ்திரம் அணிவியுங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும். 


துலா இராசி 


துலா இராசி அன்பர்களே - 02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 2-ம் இடமான தன ஸ்தானத்தில் பெயர்ச்சியாகி வருகிறார். ஏழரை நாட்டு சனியாக இருந்தாலும் கவலை வேண்டாம். 3-6-க்குரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் அமரப்போவதாலும், 2-ம் இடத்து சனியை கடகத்தில் இருக்கும் குரு பார்வை செய்வதாலும், பாதகம் அவ்வளவாக இருக்காது. 4-5-க்குரிய, அதாவது சுகாதிபதி, பூர்வ புண்ணியாதிபதி சனி நன்மையே செய்வார். பூர்வீக சொத்தில் வழக்கு இருந்தால் தீர்வு கிடைக்கும். கல்வி தடை நீங்கும். மேலதிகாரி உதவி கிடைக்கும். அரசாங்க உதவியும் கிடைக்கும். வங்கி உதவி கிடைக்கும். பெற்றோர் ஆதரவில் நன்மை தேடி வரும். உடல்நலனில் முன்னேற்றம் தெரியும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். குடும்ப செலவுகளும் கூடுதலாக இருக்கும். 4-ம் இடம், 8-ம் இடம், 11-ம் இடத்தை சனி பார்வை செய்வதால், வாகன பயணத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களுடன் பேசும்போது, பேச்சில் கவனம் தேவை. லாபம் வருகிறது என்று வாரி,வாரி செலவு செய்யக்கூடாது. தேவையில்லா செலவால் மற்றவர்களிடம் கடன் கேட்கும் சூழ்நிலை உண்டாக்கி விடும். கவனமாக செயல்பட்டால், முன்னேற்றத்தை தருவார் தன ஸ்தான சனி. உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! நல்லெண்ணை தானம் செய்யுங்கள். இரும்பு பொருட்களை தானம் செய்யுங்கள். இல்லத்தில் நல்லெண்ணையுடன் நெய் சேர்த்து தீபம் ஏற்றி மனதால் சனிஸ்வர பகவானை வணங்குங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்! 

 

விருச்சிக இராசி 


விருச்சிக இராசி அன்பர்களே – 02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு ஜென்மத்தில் அமரப் போகிறார். “ஐயோ.. ஜென்ம சனியா?” என்று பயப்பட வேண்டாம். 2-5-க்குரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் சனி அமர்கிறார். ஆகவே திருமணம், குழந்தைபேறு என்று குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோக மாற்றம் ஏற்படலாம். சிலர் உத்தியோகம் விட்டு, சொந்த தொழில் ஆரம்பிப்பார்கள். எதிர்பாரா தனலாபம் கிட்டும். கூட்டாளிகளால் தொழில் ஆதாயம் வரும். சிலருக்கு உறவினர்களால் நன்மை உண்டாகும். பட்டப்படிப்பு தொடரும். பட்ட கஷ்டம் தீரும். தொழில் துவங்குவதற்கு சொத்தை அடமானம் வைக்க நேரும். 3-ம் இடம், 7-ம் இடம், 10-ம் இடங்களை சனிப் பார்வை செய்வதால், தேவை இல்லா மனக்குழப்பம் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுக்கும் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி வசம் நிதான பேச்சு அவசியம். உடல்நலனில் கவனம் தேவை. பூர்வீக சொத்தில் வில்லங்கம் இருந்தால் தீர்ந்து, சொத்துக்கள் கைக்கு வரும். நோய்நொடி தீரும். ஜென்ம சனி மென்மையான வாழ்வு தரும். உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! மாதத்தில் ஒரு சனிக்கிழமையில் ஆஞ்சனேயருக்கு வெண்ணை சாத்தி வணங்குங்கள். காக்கைக்கு சனிக்கிழமைதோறும் எள் சாதம் வையுங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்! 


தனுசு இராசி 


தனுசு இராசி அன்பர்களே - 02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 12-ம் இடத்திற்கு வரப்போகிறார். “ஏழரை சனி பிடித்தது” என்று பயம் வேண்டாம். ஜென்ம-சுகாதிபதியான குருவின் ஆதிக்கமான விசாகம் நட்சத்திரத்தில் சனி வருவதால், ஏழரை சனி பாதிப்பு ஒன்றும் செய்யாது. பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். சொத்துக்கள் வாங்கச் செய்யும். வாக்கு பலிதம் உண்டாகும். மனைவியால் யோகம் உண்டு. திருமணம் நடைபெற வாய்ப்பு வரும். குடும்பத்தில் சச்சரவு நீங்கும். வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலையில் சேர வாய்ப்பு வரும். பல நாட்களாக நிலுவையில் இருந்த கடன் தீரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்வீக சொத்து கைக்கு வரும். தொழில் துவங்க வழி பிறக்கும். 2-ம் இடம், 6-ம் இடம், 9-ம் இடங்களை சனி பார்வை செய்வதால், கண்களில் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு கவனிக்கலாம் என்ற எண்ணம் வேண்டாம். சிறு துளி பெரும் வெள்ளம் என்பதுபோல் சிறுசிறு கடன்தான் பெரிய பாதகத்தை கொடுக்கும். பெற்றோர், பெரியோர் பேச்சை காது கொடுத்து கேளுங்கள். அதனால் நன்மை உண்டாகும், திருப்பம் தரும். ஏழரை சனியின் துவக்கமான 12-ம் இட சனி என்று கவலை வேண்டாம். உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிகிழமையில் சனிஸ்வர பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுங்கள். தயிர் சாதத்தை 8 பேருக்காவது கொடுங்கள். நீலம் அல்லது கருப்பு வர்ணத்தில் ஆடை அணியுங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்! 


மகர இராசி 


மகர இராசி அன்பர்களே - 02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 11-ம் இடத்தில் லாப சனியாக வருகிறார். 12-3-க்குரிய குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் அமரப்போகிறார். பொதுவாக 3-6-11-ல் சனி அமர்ந்தாலே இராஜயோகம்தான். இனி நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாகும். ஜென்ம-தனாதிபதி, 11-ல் இருப்பதால் நினைத்தது நடக்கும். கல்வி முன்னேற்றம், தடைபட்ட சுபகாரியங்கள் அத்தனையும் கைக் கூடும். வரன்கள் தேடிவரும். வீடு, மனை வாகனம் அமையும். செல்வந்தர்களின் நட்பும், உதவியும் கிடைக்கும். அயல்நாட்டில் வேலை வாய்ப்பு தேடி வரும். கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்கும். பிரிவினை-சச்சரவு தீரும். ஜென்மத்தையும், 5-ம் இடத்தை, 8-ம் இடத்தையும் சனி பார்வை செய்வதால், உடல்நலனில் அலைச்சல் அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். பெற்றோரின் உடல்நலனில் அக்கரை தேவை. சொத்து வாங்குவதிலும் கவனம் தேவை. வீண் விரோதம் தவிர்க்கவும். ஆடம்பர செலவு குறையுங்கள். நசிந்த தொழில், மீண்டும் புத்துணர்வு பெற வழி பிறக்கும். பிள்ளைகளுக்கு உத்தியோகம், திருமணம் நடக்க நல்ல வாய்ப்பு அமையும். லாப சனி யோக சனியே. உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! ஆஞ்சனேயரை வணங்குங்கள். நீலம் அல்லது கருப்பு வஸ்திரத்தை சனிபகவானுக்கு சனிக்கிழமையில் அணிவித்து வணங்குங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்! 

 

கும்ப இராசி 


கும்ப இராசி அன்பர்களே - 02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 10-ம் இடத்திற்கு வருகிறார். தன-லாபாதிபதியான குருவின் ஆதிக்கமான விசாக நட்சத்திரத்தில் சனி வரப்போவதால், ஒரு தொழிலுக்கு இரண்டு தொழிலாக உயர வாய்ப்பு வரும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும். இதுநாள்வரையில் உங்களை புண்படுத்தியவர்கள் புகழ ஆரம்பிப்பார்கள். இனி என்ன செய்வது? என்று குழப்பத்தில் தவித்த நீங்கள், திட்டமிட்ட வாழ்க்கை வாழ ஆரம்பிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் பண இறுக்கம் நீங்கும். தன, தான்யத்தோடு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். வீடு, மனை வாங்கும் யோகம் உள்ளது. பொதுவாக, பொன்னான நேரமிது. சனி பகவான், 12-ம் இடம், 4-ம் இடம், 7-ம் இடங்களை பார்வை செய்வதால், இனி திட்டமிட்டு வாழுங்கள். கூட்டாளி வசம், குடும்பத்தார் வசமும் அடங்கி போக வேண்டும் என்றில்லை, ஆனால் அனுசரித்து செல்வது நல்லது. ஜாமீன் விஷயத்தை தவிர்த்து விடுங்கள். வாகன பயணங்களில் கவனம் தேவை. கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்னை தீரும். சகோதர ஒற்றுமை வளரும். உயர் அதிகாரியின் உதவி கிடைக்கும். கடன் சுமை தீரும். 10-ம் இட சனி பகவான், நல்ல யோகத்தை தருவார். உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சிவபெருமானையும், பெருமாளையும் வணங்குங்கள். ஈசனுக்கு வில்லஇலையும், பெருமாளுக்கு துளசி இலையும் சமர்பித்து வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்! 


மீன இராசி 


மீன இராசி அன்பர்களே - 02.11.2014 அன்று சனி பகவான் உங்கள் இராசிக்கு 9-ம் இடத்திற்கு வரப்போகிறார். அஷ்டம சனியில் இருந்து விடுதலை பெற்று விட்டீர்கள். இனி முடங்கி கொண்டு இருந்த நீங்கள், சுறுசுறுப்புடன் வீர நடை போடுவீர்கள். மனதில் பட்டதை துணிந்து செய்வீர்கள். இதுவரை இருந்த பயம் பஞ்சு போல் பறந்து விடும். குடும்பத்தில் குதுகலம்தான். பிள்ளைகளுக்கு திருமணம், சுபசெலவுகள் ஏற்படும். 9-ம் இட சனி, உறவினர் வருகையை அதிகரிக்கும். வீடு, மனை, வாகனம் வெகு ஜோராய் அமையும். வேலை இல்லா திண்டாட்டம் தீரும். வேலையில்லா பட்டதாரிகள், வி.ஐ.பி. ஆவார்கள். பொன், பொருள் சேரும். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. 3-ம் இடம், 6-ம் இடம், 11-ம் இடங்களை சனி பார்வை செய்வதால், வீண் விவாதம் வரும். உங்களுக்கு பிடிக்காத விஷயங்களை கண்டு கொள்ளாமல் விடுங்கள். வாதம் செய்ய வேண்டாம். விட்டு கொடுத்தவன் கெட்டதாக சரித்திரம் இல்லை என்பதை புரிந்து செயல்படுங்கள். மனநிம்மதி உண்டாகும். சொத்து விஷயத்திலும், மற்றவர்களுக்கு கடன் கொடுக்கும் விஷயத்திலும் கவனம் தேவை. பொதுவாக பாக்கியத்தில் உள்ள சனி பகவான், சகல பாக்கியங்களையும் வாரி கொடுப்பார். உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்! சனிஸ்வர பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்குங்கள். புளிசாதத்தை மாதத்தில் ஒரு சனிக்கிழமையாவது தானம் கொடுங்கள். விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் வைத்து வணங்குங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும். நல்வாழ்த்துக்கள்! 
சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்

திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விருச்சிக இராசிக்கு...