சேரனின் C2H - டைம் டு சேஞ்ச் நேத்து ரிலீஸ் ஆன புதுப்பட டிவிடி இருக்கு சார்! 5.1 ஒரிஜினல்னா குடு இல்லான்னா எடத்த காலி பண்ணுப்பா!! ...
கப்பல் பட விமர்சனம்
நடிகர் : வைபவ் நடிகை : சோனம் ப்ரீத் பாஜ்வா இயக்குனர் : கார்த்திக் ஜி கிரிஷ் இசை : நடராஜன் சங்கரன் ஓளிப்பதிவு : தினேஷ் கிருஷ்ணன்
ஒரு கிராமத்தில் 5 சிறுவர்கள் பள்ளியில் படித்து வருகிறார்கள். இதில் ஒருவன் நாயகன் வைபவ். இந்த 5 சிறுவர்களும் கடைசி பெஞ்சில் உட்கார்ந்துக் கொண்டு அரட்டை அடித்துக் கொண்டு நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றார்கள். அந்த கிராமத்தில் கெத்தாக வாழ்ந்து வரும் ரோபோ சங்கரை இவர்களுக்கு ரோல் மாடலாக நினைத்து வருகிறார்கள்.
ஒருநாள் ரோபோ சங்கர் தாடி வைத்து சோகமாக இருக்கிறார். அப்போது ஒருவர் ஏன் இப்படி இருக்கிறாய்? என்று கேட்க, அதற்கு ரோபோ சங்கர், கல்யாணம் செய்ததால் நான் நல்ல நண்பர்களை இழந்து விட்டேன். நண்பர்களை இழக்க கூடாது என்றால் கல்யாணம் செய்யக் கூடாது என்று கூறுகிறார். இதை கேட்கும் சிறுவர்கள், நாமும் பிரிந்து விடக்கூடாது என்பதால் கல்யாணம் செய்யப்போவதில்லை என்று அனைவரும் சத்தியம் செய்துகொள்கிறார்கள். ஆனால், வைபவ் மட்டும் சத்தியம் செய்ய மறுக்கிறார். பின்னர் நண்பர்கள் எல்லாம் வைபவை வலுக்கட்டாயமாக சத்தியம் செய்ய வைக்கிறார்கள். பள்ளி படிப்பை முடித்து விட்டு கல்லூரி செல்கிறார்கள்.
அங்கு வைபவ் ஒரு பெண்ணை காதலிக்க முயற்சி செய்கிறார். அதை நண்பர்கள் கெடுத்து விடுகிறார்கள். இதன்பிறகு வைபவ் சென்னைக்கு சென்று ஒரு பெண்ணை காதலித்து ஊர் சுற்ற வேண்டும் என்று எண்ணுகிறார். இதற்காக நண்பர்களிடம் பொய் சொல்லிவிட்டு சென்னைக்கு செல்கிறார். சென்னையில் விடிவி கணேஷ் வீட்டில் தங்குகிறார் வைபவ். வேலை செய்து வரும் விடிவி கணேஷ், பெண்களுடன் ஜாலியாக பழகி வருகிறார். இதனால் ஒரு பெண்ணுடன் பழக வேண்டும் என்று கணேஷிடம் ஐடியா கேட்கிறார் வைபவ். அதற்கு அவர் பப்பிற்கு சென்றால் அங்கு நிறைய பெண்கள் வருவார்கள். அவர்களில் ஒரு பெண்ணை நீ தேர்ந்தெடுக்கலாம் என்று கூறுகிறார். அதன்படி வைபவ்வும் பப்பிற்கு செல்கிறார். அங்கு பெண்களுடன் வந்தால் தான் உள்ளே அனுமதி என்று கூறுகிறார்கள்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பப்பின் வாசலில் நிற்கிறார். அப்போது நாயகி சோனம் பாஜ்வாவை பார்க்கிறார். அவரும் தனியாக வருவதால் அவரிடம் பேசி இருவரும் பப்பிற்கு செல்கிறார்கள். அங்கு இருவரும் மது அருந்திவிட்டு ஜாலியாக இருக்கிறார்கள். அப்போது சோனம் பாஜ்வாவிடம் பேசி அவருடைய போன் நம்பர் மற்றும் வீட்டின் விலாசத்தையும் பெற்றுக் கொள்கிறார். மறுநாள் சோனம் பாஜ்வாவை தேடி அவரது வீட்டிற்கு செல்கிறார் வைபவ். அங்கு அவரை யார் என்றே தெரியாது என்று கூறுகிறார் சோனம். முதல் நாள் நடந்த விஷயங்களை ஞாபகபடுத்த முயற்சி செய்கிறார். சோனம் பாஜ்வா போதையில் இருந்ததால் யார் என்று தெரியாது என்று கூறி அவரை அனுப்புகிறார். ஆனால், சோனம் பாஜ்வாவை காதலித்தே தீர வேண்டும் என்று முடிவு செய்து அவர் பின்னாலேயே அலைகிறார். இதனால் கடுப்பாகிறார் சோனம். இதற்கு முடிவு கட்ட வேண்டும் எண்ணி வைபவிடம் பேசுகிறார். அதற்கு வைபவ் என்னிடம் 2 நாட்கள் பழகிப்பாருங்கள் என்று கூறி இருவரும் பழக ஆரம்பிக்கிறார்கள்.
இவர்களின் பழக்கம் காதலாக மாறுகிறது. இந்நிலையில் ஊரில் இருந்து நண்பர்கள் சென்னைக்கு வருகிறார்கள். வைபவ் காதலித்து வருவது அவர்களுக்கு தெரிய வருகிறது. இதனால் கோபமடையும் நண்பர்கள் வைபவ் காதலை பிரிக்க முயற்சி செய்கிறார்கள். கல்யாணம் செய்ய வேண்டாம் என்ற முடிவில் இருக்கும் நண்பர்கள் வைபவின் காதலை பிரித்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை. நாயகன் வைபவ் முழுநீள நகைச்சுவை படத்தில் கதாநாயகன் பொறுப்பேற்று சிறப்பாக நடித்திருக்கிறார். நண்பர்களான கருணா, அர்ஜூனன், வெங்கட் சுந்தர், கார்த்திக் இவர்களுடன் சேர்ந்து லூட்டி அடிக்கும் காட்சிகள் காதலுக்காக அடிவாங்குவதும் இவர் செய்யும் சேட்டைகள் என ரசிக்கும் படி செய்திருக்கிறார். நாயகி சோனம் பாஜ்வா முதல் படத்திலேயே மாடர்ன் பெண்ணாக வலம் வருகிறார். அழகாக வந்து கவர்ச்சி காண்பித்து ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார்.
நண்பர்களாக நடித்திருக்கும் கருணா, அர்ஜூனன், வெங்கட் சுந்தர், கார்த்திக் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். முழு நீள நகைச்சுவை படத்தை கையில் எடுத்துக் கொண்ட இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ், திரைக்கதையின் நீளத்தை குறைத்திருக்கலாம். நல்ல பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார். ஷங்கரின் உதவியாளராக இருந்தவர் என்று பாடல் காட்சிகளில் தெரிகிறது. நடராஜன் சங்கரன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் ‘கப்பல்’ நீண்ட பயணம்.
நடிகர் : வைபவ் நடிகை : சோனம் ப்ரீத் பாஜ்வா இயக்குனர் : கார்த்திக் ஜி கிரிஷ் இசை : நடராஜன் சங்கரன் ஓளிப்பதிவு : தினேஷ் கிருஷ்ணன் ஒரு க...
ஆயிரம் வாரங்கள் தாண்டிய காதல்!
- கே.ஜி.மணிகண்டன்
ஒ ரு திரைப்படத்தை குறைந்த அளவு திரையரங்குகளில் திரையிட்டு, ஓடும் நாட்களின் அடிப்படையில் வெற்றியைக் கணித்தது ஒரு காலம். அதிக திரையரங்குக...
'லிங்கா' டிக்கெட் முன்பதிவில் புதிய சாதனை!
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'லிங்கா'. 'லிங்கா' ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 1...
காடு - திரை விமர்சனம்
கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியை தன்னகத்தே கொண்ட தருமபுரி மாவட்டத்தின் மலைகிராமம் ஒன்றில் நடக்கிறது கதை. வேலுவும்(விதார்த்) அவனத...
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா திரைப்பட விமர்சனம்

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா திரைப்பட விமர்சனம்
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் சூரி கதாநாயகனாகவும் விமல்காமெடியன்ஆகவும் நடித்திருக்கும்படம் .ஓஇல்லை விமல் கதாநாயகனாகவும் ,சூரி காமெடியன்ஆகவும் நடித்திருக்கும் படம்.
படத்தில் கதை ஒரு வரியில் கூறனும் என்றால் சுமாரான காமெடி படம் . படத்தில் சூரி ,விமல்இருவரும்ஒரேஊரில் சிறுவயதில்இருந்துஒன்றாக இருக்கும் ஊர் காரர்கள் .இருவரும் சென்னையில் வேலை பார்கிறார்கள் .லீவுக்கு ஊருக்கு வரும் "சூரி " ஒரு பணக்கார பெண்ணை பார்த்து காதல் வசப்பட்டுவிடுகிறார் .அந்த காதல் ஜோடிக்கு உதவி செய்யும் விமல் அந்த பெண்ணிடம் 2௦ ரூபாய்க்கு கூட வழி இல்லாதவன் என்று கூறி அவனது நிலையை கூறி காதலை பிரித்து விடுகிறார் .காதலியுடன் சென்னைக்கு வர நினைத்த சூரிக்கு விமலுடன் சென்னைக்கு வருகிறார் .ரயிலில் வரும் பொழுது விமல் பிரியாஆனந்த் சந்திக்கிறார் .அவரை பார்த்தவுடன் காதலும் செய்கிறார் .ஒரு நிறுத்தத்தில் ஆப் பிராந்திகாக ரயிலை விட்டு இறங்கி ரயிலை பிடிக்க ஓடிவருவதை பார்த்த விமல் அதிர்ச்சி அடைகிறார் .பிறகு தான் அவர் ஒரு டாக்டர் ரயிலில் பிரசவத்திற்காக போராடும் பெண்ணிற்கு மருந்துகள் இல்லை என்பதால் இதை பயன்படுத்துகிறார் என்று புரிகிறது.
பிறகு என்ன மகிழ்ச்சியுடன் காதல் கொள்கிறார் விமல் .விமல் பத்தாம் வகுப்பை தாண்டாதவர் ,அவர் எப்படி டாக்டரை திருமணம் செய்யமுடியும் என்பதை இடியாப்ப சிக்கலுடன் சொல்லும் படம்தான் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா திரைப்பட ஆல்பம்
http://tamilgoogletamil.blogspot.in/2014/11/blog-post_98.html
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா திரைப்பட விமர்சனம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் சூரி கதாநாயகனாகவும் விமல்காமெடியன்ஆகவும் நடித்திருக்கும்படம் ....
24 லட்சம் பேர் பார்த்த 'Zid' டிரெய்லர்!24 million people watched the 'Zid' trailer!
24 லட்சம் பேர் பார்த்த 'Zid' டிரெய்லர்! 24 million people watched the 'Zid' trailer !
அனிருத் இசையில் ஆக்கோ படத்தின் எனக்கென யாரும் இல்லையே பாடல் டீஸர்!
அனிருத் இசையில் ஆக்கோ படத்தின் எனக்கென யாரும் இல்லையே பாடல் டீஸர்!
"நீச்சத் தண்ணி குடிக்கிறீகளா?”- இயக்குநர் சமுத்திரக்கனி
''வெ ள்ளக்காரன் நாட்டைவிட்டு போனப்ப, 'உங்க நாட்ல உள்ள எல்லா வளத்தையும் நாங்க சுரண்டிட்டோம். இனி சுதந்திரத்தை வாங்கி என்னய்...
மெய்சிலிர்க்க வைக்கும் மெர்சலாயிட்டேன் பாடல் !
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்து ரிலீஸூக்குக் காத்திருக்கும் படம் ‘ஐ’ . மிக பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ள ‘ஐ’ பட...
நெருங்கி வா முத்தமிடாதே - கலிகாலம் பாடல் வீடியோ!
நெருங்கி வா முத்தமிடாதே - கலிகாலம் பாடல் வீடியோ!
நெருங்கி வா முத்தமிடாதே - கலிகாலம் பாடல் வீடியோ!
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா -திரைவிமர்சனம்
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா -திரைவிமர்சனம்
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா இந்த படம் நடிகர் விமலுக்கு ஒரு முக்கியமான படம் .விமல் இதற்கு முன் நடித்த படங்கள் கமர்சியலாக பெரிய அளவில் வெற்றி அடையவில்லை .ஆகையால் இந்த படத்தை அவர் ஆவலுடன் வெற்றிபெரும் என்று எண்ணுகிறார் .ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தின் இயக்குனர் கண்ணன் .அவர் இயக்கிய முந்திய படங்களானகண்டேன் காதலை, சேட்டை போன்ற படங்களை இயக்கியவர் .தற்போது இயக்கும் படம் தான் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா.
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் விமல் ,சூரி ஆகியோரின் காமெடியும் ,விமல் ,பிரியா ஆனந்த் ஆகியோரின்ரொமான்சும் படத்தின் பலம் .படத்தின் கதை என்பது ஒரு இடத்திற்காக இரண்டு நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போடுவது நகைச்சுவையாக இருக்கும் படம் தான் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
ஒரு ஊர்ல ரெண்டு ராஜாபடத்திற்குமுன்னணி இசைஅமைப்பாளர் D.இமான் அவர்கள் இசைஅமைகிறார் .ஒரு ஊர்ல ரெண்டு ராஜாஅக்டோபர் 2தேதி ரிலீஸ்ஆகிறது
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆல்பம்
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா -திரைவிமர்சனம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா இந்த படம் நடிகர் விமலுக்கு ஒரு முக்கியமான படம் .விமல் இதற்கு முன் நடித்த படங்கள...
Linga Teaser official announcement!-லிங்கா டீசர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Linga Teaser official announcement!-லிங்கா டீசர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Super Star fans began yesterday evening to social websites.Linga Teaser official announcement!-The teaser of the film has been set because someone has started the Linga.It is now one of the official announcement.The teaser of the film will come out in the evening, "he said in Linga film's Facebook page.சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் நேற்று மாலை பொழுதிலிருந்தே சமூக வலைத்தளங்களில் ட்ரண்டு செய்ய ஆரம்பித்து விட்டனர். ஏனெனில் லிங்கா படத்தின் டீசர் நேற்றே வருகிறது என யாரோ கிளப்பி விட்டார்கள்.தற்போது இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வந்துள்ளது. இதில் ’கண்டிப்பாக படத்தின் டீசர் இன்று மாலை வெளிவரும்’ என லிங்கா படத்தின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
Linga Teaser official announcement!-லிங்கா டீசர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! Super Star fans began yesterday evening to social web...
ஹேப்பி நியூ இயர் விமர்சனம்
நடிகர் : ஷாருக்கான்நடிகை : தீபிகா படுகோனேஇயக்குனர் : ஃபரா கான்இசை : விஷால் தட்லானிஓளிப்பதிவு : மனுஷ் நந்தன் ஜாக்கி ஷெராப் ஒரு வைர வியாபாரி. இவர் வைத்திருக்கும் வைரத்தை எல்லாம் பாதுகாப்பாக வைப்பதற்காக சேப்டி லாக்கர் ஒன்று தேவைப்படுகிறது. இதற்காக ஷாருக்கானின் தந்தை அனுபம் கெரிடம் சேப்டி லாக்கர் செய்யும் படி சொல்கிறார். இவரும் தரமான சேப்டி லாக்கர் ஒன்றை செய்ய, அதில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான வைரத்தை வைக்கிறார் ஜாக்கி ஷெராப்.
இந்த சேப்டி லாக்கரை அனுபம் கெர் தனது கை ரேகையை வைத்து மட்டுமே திறக்கும் வகையில் செய்திருந்தார். லாக்கரை ஜாக்கி ஷெராப்பிடம் ஒப்படைக்கும்போது, உங்களின் கை ரேகையை பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார். ஆனால் ஜாக்கி ஷெராப், அனுபம் கெருக்கு மயக்க மருந்து கொடுத்ததுடன், லாக்கரில் உள்ள 100 கோடி வைரத்தையும் திருடி விட்டதாக பழி சுமத்தி அவரை ஜெயில் அடைத்து விடுகிறார்.
அந்த வைரத்தை ஜாக்கி ஷெராப்பே எடுத்துக் கொண்டு வைரம் தொலைந்து விட்டதாக நாடகம் ஆடி வைரத்திற்கான இன்சூரன்ஸ் பணத்தையும் பெற்றுக் கொண்டு மேலும் பணக்காரராகிறார். இதை அறிந்த ஷாருக்கான் ஜாக்கி ஷெராப்பை பழி வாங்க நினைத்து லாக்கரில் இருக்கும் வைரத்தை கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார். தற்போது வைரங்கள் துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலின் பாதாள அறையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த ஓட்டலின் ஒரு அறை வழியாக அந்த பள்ளத்திற்கு செல்லலாம் என்பதையும் ஷாருக்கான் அறிகிறார்.
இந்நிலையில் அந்த ஹோட்டலில் உலக அளவிலான நடனப்போட்டி நியூ இயர் அன்று நடந்தப்படவுள்ளதை தெரிந்துக் கொள்கிறார் ஷாருக்கான். இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு அந்த வைரத்தை கொள்ளையடிக்க ஷாருக்கான் நினைக்கிறார். இதற்காக அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, சோனு சூட், போமன் இரானி, விவான் ஷா ஆகியோர் கொண்ட ஒரு நடன டீம் ஒன்றை உருவாக்குகிறார். இவர்களின் உதவியால் ஜாக்கி ஷெராப்பின் பாதுகாப்பில் இருக்கும் வைரத்தை கொள்ளையடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
படத்தில் ஷாருக்கான் திருடனாக தோன்றினாலும் வித்தியாசமான கதையால் மற்றப் படங்களில் இருந்து வேறுபடுகிறார். நடனம், காதல், ஆக்ஷன், நகைச்சுவை என அனைத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் தீபிகா படுகோனே அழகு பதுமை. இவரும் நடனம் கவர்ச்சி என ரசிகர்களை கவர்கிறார். அபிஷேக் பச்சன், சோனு சூட், போமன் இரானி, விவான் ஷா, அனுபம் கெர், ஜாக்கி ஷெராப் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
விஷால் தட்லானி இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. மனுஷ் நந்தன் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகளும், பாடல்களும் பிரம்மிக்க வைக்கிறது. விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்து குடும்பத்துடன் ரசிக்கும்படி இயக்கி அதில் இசை, நடனம், சண்டைக் காட்சிகள் என நல்லதொரு பொழுதுபோக்கு படமாக உருவாக்கிய இயக்குனர் ஃபரா கானை பாராட்டலாம். மொத்தத்தில் ‘ஹேப்பி நியூ இயர்’ ரியலி ஹேப்பி.
நடிகர் : ஷாருக்கான்நடிகை : தீபிகா படுகோனேஇயக்குனர் : ஃபரா கான்இசை : விஷால் தட்லானிஓளிப்பதிவு : மனுஷ் நந்தன் ஜாக்கி ஷெராப் ஒரு வைர வியாபார...
'மாஸ்' போஸ்டர் காப்பி அல்ல: வெங்கட்பிரபு விளக்கம்
இணையத்தில் பலராலும் 'மாஸ்' படத்தின் போஸ்டர் காப்பி என்று கூறிவருவதற்கு இயக்குநர் வெங்கட்பிரபு விளக்கம் அளித்துள்ளார். 'அஞ்சா...
'தல 55' : அஜித்தின் இன்ட்ரோ பாடல்!
'தல 55' : அஜித்தின் இன்ட்ரோ பாடல்! கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'தல 55' படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி...
'பூஜை' - தேவதையைத் தேட தேவையில்லையே பாடல் வீடியோ!
'பூஜை' - தேவதையைத் தேட தேவையில்லையே பாடல் வீடியோ!
ட்விட்டர் டுமீல்! - ராம்கோபால் வர்மாவின் அதிரடி
ட்விட்டர் டுமீல்! - ராம்கோபால் வர்மாவின் அதிரடி
விநாயகரைப் பற்றி விமர்சித்ததால் இந்து அமைப்புகளின் எதிர்ப்பு ஆளானார். பெண்களைப் பற்றி தரக்குறைவாக கருத்து சொல்லி மகளிர் அமைப்புகளின் கடும் சொல்லுக்கு இரையானார். சமீபத்தில் ’சாவித்ரி’ என தெலுங்கில் ஒரு படத்தைத் தயாரிப்பதாக அறிவித்தார். இது தனது பள்ளி பருவத்தில் பார்த்த சாவித்ரி டீச்சரை மனதில் வைத்து உருவான படம் என சொன்னார். இது விடலைகளுக்கு ஏற்படும் விபரீத எண்ணங்களை சொல்லும் கதை என்பது போஸ்டரைப் பார்த்துதான் சமூக அமைப்பாளர்களுக்கு பளிச்சிட்டது.
உடனே ட்விட்டரைத் திறந்த ராம்கோபால் வர்மா, ’மக்கள் ஒரு படத்துக்கு மட்டும் இவர்களுக்கு 100 கோடி ரூபாய் வசூலித்து தருகிறார்கள். இவர்களோ சில லட்சங்களை மக்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்’ என சாடியிருக்கிறார். இப்போது ஒட்டுமொத்த டோலிவுட் இண்டஸ்ட்ரியும் இவர் மேல் கடுப்பில் இருக்கிறது. அடுத்ததாக இவர் என்ன சர்ச்சையை கிளப்பப் போகிறார் என இப்போதே சினிமா துறையில் இருப்பவர்கள் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.
முன்புபோல பிஸியா இல்லாம சும்மா இருக்கிறதால இப்படி ட்விட்டரில் மத்தவங்களை ரிவீட் அடிக்கலாமா வர்மா சார்?!
- ஜியா உல் ஹக்
ட்விட்டர் டுமீல்! - ராம்கோபால் வர்மாவின் அதிரடி சர்ச்சை கருத்துகளால் வில்லனாகி இருக்கிறார் ராம்கோபால் வர்மா. ஒரு மனுஷன் எத்தனை எதி...
ஹேப்பி நியூ இயர் தமிழ் டயலாக் ப்ரமோ!
ஹேப்பி நியூ இயர் தமிழ் டயலாக் ப்ரமோ!
ஹேப்பி நியூ இயர் தமிழ் டயலாக் ப்ரமோ!




































Social Link