தமிழ்நாடு முழுவதும் பஸ் போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று காலையில் டிரைவர்–கண்டக்டர்கள் மறியலில் ஈடுபட்டு பஸ்களை இயக்க விடாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசினர். வேலைக்கு இடைஞ்சல் செய்யாதீர்கள். போராட்டம் நடத்துவதாக இருந்தால் ஓரமாக நின்று ஆர்ப்பாட்டம் நடத்துங்கள் மற்றவர்கள் பணி செய்வதை தடுக்க கூடாது என்றனர். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது.
இன்று நிலவிய அசாதாரணநிலை பற்றி போக்குவரத்து கழக அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது.
போக்குவரத்து கழக ஊழியர்கள், டெப்போ முன்பு மறியலில் ஈடுபட்டதால் சென்னை பல்லவன் பணிமனை, அண்ணாநகர், பெரம்பூர், திருவான்மியூர், பஸ் டெப்போக்களில் இருந்து பஸ்கள் வெளியே செல்வதில் சிரமம் ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்களை எடுக்க தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பஸ்களை இயக்க தேவையான டிரைவர்–கண்டக்டர்கள் எங்களிடம் அதிகமாகவே உள்ளனர். எனவே போராட்டம் நடத்துபவர்கள் மக்களுக்கு இடைஞ்சல் இன்றி ஓரமாக நடத்த வேண்டும்.
பஸ்களை இயக்க விடாமல் மறியல் செய்தால் கண்டிப்பாக தேவையான நடவடிக்கைகளை சட்டப்படி மேற்கொள்வோம்.
பஸ்கள் மீது கல்வீசுபவர்கள், பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பவர்களை கைது செய்து ரிமாண்ட் செய்யவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதிகாரி கூறினார்.

வழக்கம்போல் இயக்கப்படும் பஸ்களை மறித்தால் கடும் நடவடிக்கை: அரசு அதிகாரி எச்சரிக்கை
தமிழ்நாடு முழுவதும் பஸ் போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று காலையில் டிரைவர்–கண்டக்டர்கள் மறியலில் ஈடுபட்டு பஸ்களை இயக்க விடாமல் மறியல் ...
Post a Comment