உலகமே செல்ஃபி உலகமாகி விட்டது. மார்கெட்டுக்கு போனா செல்ஃபி.. பிக்னிக் போனா செல்ஃபி..
பார்ட்டிக்கு போனா செல்ஃபி.. பீச்சுக்கு போனா செல்ஃபி.. இன்னும் டெட் பாடி பார்க்க போன இடத்துலதான் நம்மவர்கள் செல்ஃபி எடுக்காம இருக்காங்க ..! அந்த அளவுக்கு உலகம் முழுவதும் செல்ஃபி மயம்!
ஆம், 2014 ஆம் ஆண்டு அப்படி ஒரு செல்ஃபி ஜுரம் அனைவரையும் தொற்றி கொண்டுவிட்டது. அப்படிப்பட்ட செல்ஃபி மக்களுக்காகவே வரவிருக்கிறது மைக்ரோமேக்ஸின் புதிய மொபைல் "மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் செல்ஃபி !"
பார்ட்டிக்கு போனா செல்ஃபி.. பீச்சுக்கு போனா செல்ஃபி.. இன்னும் டெட் பாடி பார்க்க போன இடத்துலதான் நம்மவர்கள் செல்ஃபி எடுக்காம இருக்காங்க ..! அந்த அளவுக்கு உலகம் முழுவதும் செல்ஃபி மயம்!
ஆம், 2014 ஆம் ஆண்டு அப்படி ஒரு செல்ஃபி ஜுரம் அனைவரையும் தொற்றி கொண்டுவிட்டது. அப்படிப்பட்ட செல்ஃபி மக்களுக்காகவே வரவிருக்கிறது மைக்ரோமேக்ஸின் புதிய மொபைல் "மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் செல்ஃபி !"
சோனி சென்சார்கள் மற்றும் LED பிளாஷ்-வுடன் கூடிய 13மெகா பிக்சல் திறன் கொண்ட முன் பக்க காமிராவும், பின் பக்க காமிராவும் கொண்டுள்ளது.
4.7 இன்ஜ் தொடு திரையுடன் கார்னிங் கொரில்லா க்ளாஸ்-வுடன் கூடிய IPS HD (720x1280p) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் 16.7 மில்லியன் கலர்கள் காண முடியும்.
2ஜிபி ரேம்-வுடன் 1.7GHZ Tru octa கோர் பிராசசரை கொண்டு இயங்குகிறது. ஆண்டிராய்டு கிட்கேட் 4.4 வெர்ஷனில் இயங்குகிறது.
இந்த மொபைலில் இரண்டு சிம்களை இயக்கலாம். ஆனால் நானோ சிம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். 16 ஜிபி போன் மெமரியை கொண்டுள்ளது. 32 ஜிபி வரை மெமரி கார்டு-ஐ ஏற்றுக் கொள்கிறது.
Mystic Blue மற்றும் Angelic White ஆகிய நிறங்களில் இந்த போன் வெளி வருகிறது. லெதர் பேக் பினிஷ் கொண்டுள்ளது.
நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் தரப்பட்டுள்ளன. இதன் பேட்டரி 2300 mAh திறனும் கொண்டது.
போட்டியாளர்கள்: ஏற்கனவே மார்க்கெட்டில் உள்ள செல்ஃபி மொபைல்களான HTC டிசயர் 820, ஒப்போ என்1, ஒப்போ என்1 மினி, என்3 ஆகியவை இதற்கு போட்டியாக அமையும்.
இந்த மொபைலின் விலை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை என மைக்ரோமேக்ஸின் சி.இ.ஓ வினீத் தனிஜா தெரிவித்துள்ளார். இந்த மொபைல் வரும் ஜனவரி மாதம் 2ஆம் வாரத்திலிருந்து அனைத்து கடைகள் மற்றும் ஆன்லைன் சைட்களிலும் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
தனி சிறப்புகள்:
செல்ஃபி கேமிரா 13 மெகா பிக்சல்
இன் பில்ட் கேமரா ப்யூட்டி டூல்ஸ்
-Eye enhancement
-Face slimming
-Skin smoothening
-Remove oils and fade
-Removes dark circles
-Make up
-Mascara
-Eye shadow
-blush
-lip gloss
இனிமேல் எல்லாரும் செல்ஃபியா எடுத்து தள்ள போறாங்க..!
லெட்ஸ் டேக் செல்ஃபி மக்களே..
- ஜி.கே.தினேஷ் (மாணவப் பத்திரிகையாளர்)
"மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் செல்ஃபி !" - புதிய மொபைல்
உ லகமே செல்ஃபி உலகமாகி விட்டது. மார்கெட்டுக்கு போனா செல்ஃபி.. பிக்னிக் போனா செல்ஃபி.. பார்ட்டிக்கு போனா செல்ஃபி.. பீச்சுக்கு போனா செல்ஃப...
Post a Comment