Ads (728x90)

Showing posts with label அரசியல் கட்டுரைகள். Show all posts

சாயம் போவது புதுத்துணியில் மட்டுமல்ல; சில பெரிய மனிதர்களின் வாழ்க்கையிலும் அவ்வப்போது நடப்பதுதான். வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் பெற்ற ஜெயலலிதாவின் விவகாரத்திலும் பலர் அம்பலப்பட்டுப் போனார்கள். அதில் நான்கு பேரைப் பற்றி மட்டும் இங்கே:

ராம் ஜெத்மலானி!
இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் முதல் 10 பேரில் ஒருவர். அவரது ஒரு மணிநேர வாதத்துக்கான பைசா எவ்வளவு என்பது அவருக்கும் வாதிக்கும் மட்டுமே தெரியும். உச்ச நீதிமன்றத்தில்தான் தினமும் வலம் வருவார். பிரேமானந்தாவுக்காக புதுக்கோட்டை சப் கோர்ட்டுக்கும் இறங்கி வந்தவர். அவர்தான் ஜெயலலிதாவுக்கு தண்டனை தரப்பட்டதுமே, 'இது தவறான தீர்ப்பு’ என்று அறிக்கைவிட்டு, அதன் மூலமாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீது வாதாடும் வாய்ப்பைப் பெற்றார். இதே ராம் ஜெத்மலானிதான், ஜெயலலிதா மற்றும் அவரது சகாக்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட மூன்று தனி நீதிமன்றங்களைக் காப்பாற்றுவதற்குப் பெரும் முயற்சி எடுத்தவர் என்பது முந்தைய வரலாறு.
ராம் ஜெத்மலானியின் நெருங்கிய நண்பரின் மகள் நளினி கேரா. இவர் ராம் ஜெத்மலானியின் அதிகாரபூர்வமான வரலாற்றை எழுதி இருக்கிறார். ஏராளமான ரகசியத் தகவல்கள் உள்ளடக்கிய புத்தகம் அது.
1998-ம் ஆண்டு அமைந்த பி.ஜே.பி கூட்டணியில் அ.தி.மு.க-வும் இடம்பெற்றது. அப்போது பி.ஜே.பி-யில் இருந்த ராம் ஜெத்மலானி தனக்காக சட்டத் துறை அமைச்சர் பொறுப்பைக் கேட்டார். ஆனால், அதை தம்பிதுரைக்கு வாங்கிக் கொண்டார் ஜெயலலிதா. ''அப்போது ராம் ஜெத்மலானிக்கு சட்டத் துறை அமைச்சகம் கிடைக்காமல் போனதற்கு ஜெயலலிதாதான் காரணமா என்று தெரியாது. அந்தப் பதவியை தன்னுடைய கட்சி உறுப்பினரான தம்பிதுரைக்கு ஜெ. கேட்டார். அவர் மீது எண்ணற்ற ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவர் கைது செய்யப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேலே சிறையில் வைக்கப்பட்டிருந்தார். தன்னுடைய நலன்களைக் காக்கக் கூடிய ஒருவரை அமைச்சரவையில் தலைமைப் பொறுப்புக்குக் கொண்டுவர விரும்பினார்'' என்று நளினி கேரா எழுதுகிறார்.
இதன்பிறகு ஜெயலலிதா - ராம் ஜெத்மலானி மோதல் தொடர்கிறது. கூட்டணியில் அங்கம் வகித்தாலும் மத்திய அமைச்சர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக வைத்தார் ஜெயலலிதா. அதில் ஜெத்மலானியும் அடக்கம். 'ஃபெரா’ விதிகளை மீறி ராம் ஜெத்மலானி இரண்டு லட்சம் டாலர் அளவுக்கு சொத்து சேர்த்ததாகவும் அதனை அமலாக்கத் துறை விசாரித்ததாகவும் அவரைப் பதவியைவிட்டு நீக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.
அப்போது ராம் ஜெத்மலானி, 'சில பேர் சிறையைவிட்டு வெளியே வரும்போது பணிவு மற்றும் நற்குணம் கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள். மேலும் சிலர் ஆணவம் மற்றும் பொறுப்பின்மை கொண்டவர்களாக மாறி நல்லவற்றையும் தீயவற்றையும் வேறுபடுத்த முடியாமல் செயல்படுகிறார்கள். என்னைப் பற்றி இப்படி ஓர் அறிக்கை வெளியிட ஜெயலலிதா யார்? என்னுடைய சுய கௌரவத்தைத் தாக்க அவர் யார்?'' என்று பெங்களூரில் நடந்த கூட்டத்தில் பகிரங்கமாகக் கேட்டார்.
மத்திய சட்ட அமைச்சராக இருந்த தம்பிதுரை, தமிழகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களை ரத்து செய்தார். அப்போது மத்திய அமைச்சர் ராம் ஜெத்மலானி என்ன செய்தார் என்பதும் இந்தப் புத்தகத்தில் வருகிறது: ''இதற்கு எதிராக ராம் கடுமையான எதிர்வினை ஆற்றினார். ஒரு கூட்டாளிக்காக நீதித் துறையின் அதிகாரத்தைக் குறைப்பது தவறு என்றார். அட்டர்னி ஜெனரல் சொராப்ஜி அதைத் தடுத்திருக்க முடியும். ஆனால், அவர் தடுக்காமல் போனதற்கு அவருக்கென்று சொந்தக் காரணங்கள் இருந்தன’ என்று ராம் உறுதியாக நம்பினார். தி.மு.க அரசை கலைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையை பிரதமர் ஏற்கக் கூடாது என்று ராம் தீவிரமாக வாஜ்பாய்க்கு வலியுறுத்தினார். அ.தி.மு.க-வைக் கூட்டணியைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் சொன்னார். மே 14 அன்று மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது ராமின் முந்தைய முடிவு சரி என்பதை நிரூபித்தது'' என்கிறது அந்தப் புத்தகம்.
அதாவது ஜெயலலிதா மீதான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களைக் காப்பாற்றுவதற்காக பி.ஜே.பி அரசாங்கத்தில் பகீரத பிரயத்தனங்கள் செய்த ராம் ஜெத்மலானிதான் 15 ஆண்டுகளில் பெரும் பல்டி அடித்துவிட்டார்.
ஃபாலி நாரிமன்!
முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீதான 48 வழக்குகளை விசாரிக்க 1997-ம் ஆண்டு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நீதிபதிகள் வி.ராதாகிருஷ்ணன், எஸ்.சம்பந்தம், பி.அன்பழகன் ஆகிய மூன்று பேர் தலைமையில் மூன்று நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. விசாரணை தொடங்கியது. 98-ம் ஆண்டு மத்தியில் பி.ஜே.பி ஆட்சி அமைந்தது. அந்த அரசில் அ.தி.மு.க இடம்பெற்றது. தம்பிதுரை சட்ட அமைச்சராக ஆனார். இப்படிப்பட்ட தனி நீதிமன்றங்கள் அமைக்கும் அதிகாரம் மாநில அரசுக்குக் கிடையாது என்று சொல்லி ஓர் உத்தரவை பிறப்பித்தார். தனி நீதிமன்றங்களில் பரபரப்பாக விசாரிக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் வழக்கமான நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டன. அப்படியானால் விசாரணைகள் காலதாமதம் ஆகும் என்பதுதான் இதன் நோக்கம். 98-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் நாள் இந்த உத்தரவு போடப்பட்டது. இந்த உத்தரவை தி.மு.க தலைமையிலான அரசு எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதாடியவர்தான் ஃபாலி நாரிமன்.
இதற்கு மத்தியில், தங்களை வழக்குகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா உள்ளிட்ட 14 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் போனார் ஜெயலலிதா. வழக்கு போட்டது சரிதான் என்று அன்றைய தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடியவர் ஃபாலி நாரிமன். அப்போது தம்பிதுரையின் உத்தரவைக் கடுமையாக விமர்சித்து ஃபாலி நாரிமன் வாதிட்டார்.
''மத்திய அரசு இப்படிப்பட்ட உத்தரவை பிறப்பிக்கும் முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலை பெறவில்லை. எனவே, இது சட்டவிரோதமானது. மேலும், தனி நீதிமன்றத்தில் ஏற்கெனவே நிலுவையில் உள்ள ஜெயலலிதாவின் வழக்குகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது'' என்று நாரிமன் வாதிட்டார். இந்த வழக்கில்தான் நீதிபதிகள் ஜி.டி.நானாவதி, எஸ்.பி.குர்துகர் மிகக் கடுமையான தீர்ப்பினைக் கொடுத்தார்கள்.
ஒரு வழக்கறிஞர் யாருக்கு வேண்டுமானாலும் வாதாடலாம். அவருக்கு அந்த உரிமை இருக்கிறது. ஆனால், ஒரே வழக்கில் எதிரும்புதிருமாக வெவ்வேறு காலகட்டத்தில் வாதாடுவது தார்மீக நெறியா? தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பிலும் ஆஜரான நாரிமன், அந்தத் துறை தாக்கல் செய்த வழக்கில் தண்டனை பெற்றவருக்காகவும் வாதாடுவது எத்தகைய முன்னுதாரணம்? தனது மகன் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும்போது அதே நீதிமன்றத்தில் அப்பா வாதாடுவது தார்மீக மரபும் அல்லவே.  ஃபாலி நாரிமன் காட்டியது பழுதான பாதை அல்லவா?
சோ!
குன்ஹாவின் தீர்ப்பைக் கேட்டு அதிகமாகக் கொதித்துப் போனவர் சோ. 'இது இறுதியான முடிவல்ல. அவருடைய அரசியல் வாழ்க்கையே ஒரு பெரும் சோதனைக்கு உள்ளாகிவிட்டதுபோல் நினைக்க அவசியமில்லை. அவருக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கக்கூடிய வாய்ப்புதான் உள்ளது’ என்று சோ எழுதி உள்ளார். 91-95 காலக்கட்ட அரசு பற்றிய எந்த விமர்சனத்தையும் அவர் வைக்கவில்லை. 'இந்தச் சூழ்நிலையை கருணாநிதி பயன்படுத்திக்கொள்ளக் கூடாது’ என்றும் சோ கவலைப்பட்டுள்ளார்.  1996 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சியின் ஊழல் முறைகேடுகளை வெளிச்சப்படுத்தி அதனை கருணாநிதி பயன்படுத்திக்கொள்ள வழிவகுத்தவரே இந்த சோ-தான்.
''கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் நாம் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்கிறோம். அதை எல்லாம் மக்களிடம் முறையாக எடுத்துச் சொல்லவில்லை'' என்று ஜெயலலிதா சொல்லியதைக் குறிப்பிட்டு வாசகர் ஒருவர் கேள்வி கேட்டபோது, 'ஜெயலலிதாவுக்கு இந்த மனக்குறை தேவை இல்லை. அந்த சாதனையைத்தான் பல வழக்குகள் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றனவே'' (துக்ளக் 13.8.97 - பக் 14) என்று பதிலளித்தார் சோ.
மத்திய பி.ஜே.பி ஆட்சி இந்த வழக்குகளை முடக்கும் நடவடிக்கையை எடுத்தபோது, ''ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் தாமதப்படுத்துவதற்கு உதவி செய்வது என்று தீர்மானித்து பி.ஜே.பி செயல்படுகிறது. இனி ஊழலைப் பற்றி பி.ஜே.பி பேசுவது நகைச்சுவைக்கு மட்டுமே பயன்படும் என்ற நிலைகூட வந்துவிடும் போலிருக்கிறது'' (துக்ளக் 20.1.99 - பக்.8) என்று பாய்ந்தவர் சோ.
ஜெயலலிதாவைக் குறிவைத்து சோ எழுதிவருவதைப் பார்த்து ஒரு வாசகர், ''ஜெயலலிதாவின் ஊழல் மட்டும் உங்கள் கண்களை ஏன் உறுத்துகிறது?'' என்று கேள்வி கேட்டபோது, ''தி.மு.க ஊழலில் இருந்து இந்திரா காந்தி ஊழல் உள்பட ஜெயலலிதா, லாலு பிரசாத் ஊழல் வரை எல்லா ஊழல்களும் உறுத்தத்தான் செய்கின்றன. இந்த உறுத்தல்களை துக்ளக் விவரித்துத்தான் வந்திருக்கிறது. உறுத்தல்கள் வளர்ந்து ஜெயலலிதா ஊழல் நோயாக முற்றிவிட்டது. அதனால்தான் கவலை அதிகம்'' என்று (10.2.99 - துக்ளக் பக்-15) விளக்கம் அளித்தவர் சோ.
''ஊழல் ஒரு குற்றமே அல்ல என்று நினைக்கும் அளவுக்குப் பெருந்தன்மை காட்டியவர் ஜெயலலிதா'' (27.1.99 துக்ளக் - பக்-8) என்று குற்றம் சாட்டியவரும் சோ-தான். இப்படி 1995 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் அவர் எழுதிய தலையங்கம், கேள்வி பதில், நினைத்தேன் எழுதுகிறேன், அட்டைப்பட கார்ட்டூன் என்று எடுத்துப் போட்டாலே பல பக்கங்கள் போகும். ஆனால், சோ இன்று இந்த வழக்கை அரசியல் ரீதியாக மட்டும் பார்ப்பது ஏனோ?
சுப்பிரமணியன் சுவாமி!
முன்னால் சொன்ன மூவரும் எதிர்ப்பக்கமாக இருந்து ஆதரவாய் மாறியவர்கள் என்றால், சுப்பிரமணியன் சுவாமி ஆதரவாய் இருந்து எதிர்ப்பாய் ஆனவர். ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும்போதே அவர் மீது வழக்குப் போடவேண்டும் என்று அன்றைய ஆளுநர் சென்னா ரெட்டியிடம் மனு கொடுத்து அனுமதி பெற்றவர் சுப்பிரமணியன் சுவாமிதான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால், அதில் சுவாமி உறுதியோடு இருந்தாரா?
1996-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்தது. தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. 96 செப்டம்பர் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க சார்பில் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க சார்பில் ஜெயக்குமார், ஜனதா கட்சி சார்பில் சந்திரலேகா ஆகியோர் போட்டியிட்டார்கள். திடீரென ஜெயக்குமாரை வாபஸ் வாங்கச் சொல்லிவிட்டு சந்திரலேகாவை ஆதரித்தார் ஜெயலலிதா. ''இது ஜெயலலிதாவின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. ஜெயலலிதாவை நான் என்றுமே தனிப்பட்ட முறையில் தாக்கியது இல்லை'' என்று சொல்லி ஏற்றுக்கொண்டவர் சுவாமி. சந்திரலேகாவுக்கு ஆசிட் தழும்பு மறையவில்லை. சுவாமிக்கு கோர்ட் காட்சிகள் மறந்திருக்காது. ஆனால், எல்லாம் மறைத்து அந்த ஆதரவை ஏற்றுக்கொண்டார்.
சுவாமி எந்த புகார்களைக் கொடுத்தாரோ அதே புகார்களை வைத்து சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கும் முயற்சிகள் நடந்துவரும்போது, அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு சுவாமியும் சந்திரலேகாவும் போனார்கள். சந்திரலேகாவின் 50-வது பிறந்தநாளுக்கு (1997 ஜூலை 25) ஜெயலலிதா சார்பில் பொக்கே-யை சத்தியமூர்த்தியும் டி.எம்.செல்வகணபதியும் கொண்டுவந்து கொடுத்தார்கள். சுவாமியின் 58-வது பிறந்தநாளுக்கு (1997 செப்டம்பர்) வாழ்த்துச் சொல்ல அவர் அலுவலகத்துக்கே ஜெயலலிதா வந்தார். 98-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் மதுரை தொகுதியில் நின்று வென்ற சுவாமிக்கு நிதி அமைச்சர் பதவி தரவேண்டும் என்று கேட்டவர் ஜெயலலிதா. வாஜ்பாய்தான் அதற்கு உடன்படவில்லை.
ஜெயலலிதா மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டபோது, ''ஜெயலலிதா மீது தமிழக அரசு தொடுத்திருக்கும் வழக்குகள் பழிவாங்கும் நோக்கம் கொண்டவை. தமிழக அரசு கூடுதல் நீதிபதிகளை நியமித்தது தவறு. ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிபதிகளை நியமிக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை'' என்று அறிக்கை வெளியிட்டவர் சுவாமி. ஜெயலலிதாவுக்காகத்தான் டெல்லியில் டீ பார்ட்டி நடத்தி இன்று தன்னுடைய பரம்பரை எதிரியாகக் காட்டிக்கொள்ளும் சோனியாவை அதற்கு அழைத்து வந்தவரும் சுவாமி.
''ஒரு காலத்தில் ஜெயலலிதாவுக்கு தண்ணி காட்டிய நீங்கள், இப்போது ஜெயலலிதாவிடம் சரணடைந்திருப்பது எதைக் காட்டுகிறது?'' என்று கேட்டபோது, ''சாணக்கிய நீதியையும் பகவத் கீதையையும் நீங்கள் படிக்க வேண்டும்'' என்று அறிவுரை சொன்னார் சுவாமி.
கிருஷ்ண பரமாத்மாவை இதைவிட வேறுயாரும் கிண்டலடித்திருக்க முடியாது!
-vikatan-
சாயம் வெளுக்கிறது... சரித்திரம் சிரிக்கிறது! 4 ஆண்டு தண்டனையும் 4 பேரும்!

சாயம் போவது புதுத்துணியில் மட்டுமல்ல; சில பெரிய மனிதர்களின் வாழ்க்கையிலும் அவ்வப்போது நடப்பதுதான். வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்...

புரட்சித்தலைவி அம்மா உடனடியாக விடுதலையாக சில வழிகள் !



தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட வல்லுனர்கள் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.

1. ஒரு மாநில முதல் அமைச்சரை கீழமை நீதிமன்ற நீதிபதி சர்வாதிகாரத்தனமாக கைது செய்தது செல்லாது என கவர்னர் அறிவிக்க வேண்டும். இதற்கு தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னரிடம் சபாநாயகர் முறையிட வேண்டும். கவர்னர் ஆனையிட்டால் உடனடியாக பெங்களூர் சிறையில் இருந்து செயலலிதா விடுதலையாவார்.

2. ஜெயலலிதா மீதான தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் கவர்னருக்கு உள்ளது. இதற்காக தமிழக சட்டசபை கவர்னருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இதனால் செயலலிதாவுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியும். உடனடியாக செயலலிதா மீண்டும் முதல் அமைச்சராக முடியும்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை கவர்னர் மதிக்காமல் இருப்பது, பயன்படுத்தாமல் இருப்பது தான் இன்னும் விசித்திரமாக உள்ளது. இதை அதிமுக சட்ட வல்லுனர்கள் ஏன் பயன்படுத்த தயங்குகிறார்கள் என்பதும் புரியாத புதிராக உள்ளது.

ஒரு மாநில முதல் அமைச்சருக்கு கீழமை நீதிமன்ற நீதிபதி தண்டனை அறிவிப்பது தவறில்லை. ஆனால் அவரை தண்டிக்கும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லை. அதை கவர்னர் தான் செய்ய வேண்டும். இந்த விடயத்தை சட்ட வல்லுனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நன்றி : தமிழ் மலர்

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t49285-topic#ixzz3FKGkzWL3
Under Creative Commons License: Attribution
புரட்சித்தலைவி அம்மா உடனடியாக விடுதலையாக சில வழிகள் !

புரட்சித்தலைவி அம்மா உடனடியாக விடுதலையாக சில வழிகள் ! தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலா...

17 ஆண்டுகளைத் தாண்டியும் தடதடத்துக்கொண்டிருந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அதிரடியாக முடித்துவைத்துவிட்டார். வழக்கு கடந்துவந்த 17 ஆண்டுகளைப் பற்றிய பருந்துப் பார்வை இது...
1. முட்டாள்கள் தின காமெடி!
1995, ஏப்ரல் 1...
அப்போதைய, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி, ஒருசில பத்திரிகையாளர்களை சென்னையில் தனது அலுவலகத்துக்கு வரவழைத்திருந்தார். சுவாமியின் வழக்கமான அரசியல் செய்தியாக இருக்கும் எனச் சென்றவர்களுக்குக் காத்திருந்தது, இந்தியாவுக்கான ஸ்கூப் நியூஸ்!  ''தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீது வழக்குத் தொடர, தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி அளித்துவிட்டார்'' என்ற பகீர் தகவலை சர்வசாதாரணமாகச் சொன்னார் சுவாமி. செய்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தாலும், சுவாமி ஏதேனும் காமெடி செய்கிறாரா என அந்தப் பத்திரிகையாளர்களுக்குச் சந்தேகம். 'இன்று முட்டாள்கள் தினம். அதனால் சுவாமி நம்மை ஏமாற்றுகிறார்’ என்று ஒரு நிருபர் கமென்ட் அடிக்க, ஆளுநர் சென்னாரெட்டி கையெழுத்திட்ட அனுமதிக் கடிதத்தின் நகலை அனைவருக்கும் வழங்கினார் சுவாமி.
2. 'மூன்றே மாதங்களில் முடிக்கலாம்!’
''இந்திய அரசியல் சட்ட வரலாற்றில், முதலமைச்சர் மீதான ஊழல் குற்றங்களை விசாரிக்க, மாநில ஆளுநர் அனுமதி கொடுத்தது இதுதான் முதல்முறை. லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்படி நான் தொடரப்போகும் இந்த வழக்கில், சட்டரீதியான நடைமுறைகள்படி தாமதம் ஏற்பட வாய்ப்பு இல்லை. நடைமுறை தாமதங்களையும் தவிர்க்கத்தான் சிறப்பு நீதிமன்றமும் சிறப்பு நீதிபதியும் வேண்டும் என்கிறேன். ஜெயலலிதா மட்டும் வழக்கு நடைமுறைகளுக்கு இசைந்தால், மூன்றே மாதங்களில் வழக்கை முடித்துவிடலாம்!'' என்று அப்போது கூறினார் சுப்ரமணியன் சுவாமி.
3. ஜெயலலிதாவின் முதல் ரியாக்ஷன்!
'ஜெயலலிதா மீது வழக்கு போடலாம்’ என ஆளுநர் சென்னாரெட்டி அனுமதியளித்த கடிதத்தின் நகல், சுவாமி பேட்டியளித்த நாள் அன்று மதியம் 12.30 மணிக்கு போயஸ் கார்டன் ஃபேக்ஸ் மெஷினில் வந்து விழுந்தது. அதைப் படித்ததும் ஆத்திரம், இயலாமை, வெறுப்பு... என நிதானம் இழந்த நிலையில், அப்போது தனக்கு எதிரே நின்றுகொண்டிருந்த அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமியை விளாசித்தள்ளினார் ஜெயலலிதா. 'நீங்கள் இத்தனை பேர் இருந்தும் என்ன பிரயோஜனம்? நான் எல்லாவற்றையும் உதறிவிட்டு எங்கேயாவது போகிறேன்!’ எனக் கடுகடுத்தார்!  
4. 'ராஜினாமா பெஸ்ட்!’
முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனைத் தொடர்புகொண்டு, 'ஆளுநர் சென்னா ரெட்டி, சுப்ரமணியன் சுவாமிக்கு அளித்த அனுமதியை ரத்துசெய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்போகிறேன். இதில் உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்டார்.
முழு விவரத்தையும் பொறுமையாகக் கேட்ட ஆர்.வி, 'அது மிகப் பெரிய விபரீதமாக முடியும். வழக்குத் தொடுத்தால், அதுபற்றிய செய்திகள் தினமும் விவாதிக்கப்படும். உங்கள் மீது 'ஊழல்வாதி’ என்ற பிம்பம் படியும். எனவே, இப்போதே நீங்கள் பதவியை ராஜினாமா செய்து, வேறு ஒருவரை முதல்வராக அமர்த்திவிட்டு, வழக்கை முழுமூச்சாக எதிர்கொள்ளுங்கள்’ என்றார். ஆனால், அதைச் செய்யவில்லை ஜெயலலிதா!
5. மலையெனக் குவிந்த புகார்கள்!
1995, ஏப்ரல் 15-ம் தேதி தி.மு.க சார்பில், 'தமிழகத்தில் ஊழல்கள் பெருகிவிட்டன’ எனச் சொல்லி 539 பக்கங்கள்கொண்ட அறிக்கை அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அளிக்கப்பட்டது. அவர்களைத் தொடர்ந்து வாழப்பாடி ராமமூர்த்தி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோரும் ஆளுக்கு ஓர் அறிக்கையை ஆளுநரிடம் கொடுத்தனர். ம.தி.மு.க சார்பிலும் ஊழல் பட்டியல் தரப்பட்டது. சுவாமி கிள்ளிய திரிக்கு, மற்ற அனைத்துக் கட்சிகளும் வெடிமருந்துகளைக் குவித்தன!
6. அரசியலில் இது சாதாரணம் அல்ல!
'தமிழக முதலமைச்சரான தன் மீது வழக்குத் தொடுக்க ஆளுநர் அளித்த அனுமதிக்குத் தடை விதிக்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்தார் நீதிபதி சிவராஜ் பாட்டீல். ஜெ. தரப்பு வழக்குரைஞர் பராசரன், 'முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியின் காரணமாக இப்படி ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அதை ரத்துசெய்ய வேண்டும்’ என்றார்.
நீதிபதி சிவராஜ் பாட்டீல், 'இது மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. எனவே, டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றுகிறேன்!’ என உத்தரவிட்டார்.
7. சுவாமி மீது தாக்குதல் சுனாமி!
1995, ஏப்ரல் 20 அன்று ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்துக்கு வரும் சுப்ரமணியன் சுவாமி மீது தாக்குதல் நடத்த சிலர் திரண்டனர். சுவாமி வரவும் கற்கள், சைக்கிள் செயின், அழுகிய முட்டை, அறுந்த செருப்புகள் ஆகியவை நீதிமன்ற வளாகத்தில் பறந்துகொண்டே இருந்தன. அந்த சமயம், முன்பு மதுரையில் நடந்த ஒரு கூட்டத்தில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை அவதூறாகத் திட்டியதாகச் சொல்லி வழக்குப் பதிவுசெய்த மதுரை போலீஸ், சுவாமியைக் கைதுசெய்ய சென்னை வந்து காத்திருந்தது. அவர்களிடமும் சிக்காமல் தப்பினார் சுவாமி. இந்த அத்தனை எதிர்ப்புகளில் இருந்தும் தப்பி நீதிமன்றத்துக்குள் வந்தார் சுவாமி. 'ஆளுநரின் உத்தரவை ரத்துசெய்ய முடியாது’ என உத்தரவிட்டது உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச்!
8. தி.மு.க ஆட்சியில் விறுவிறு வேகம்!
1996-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க மாபெரும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வர, சென்னை சிங்காரவேலர் மாளிகையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, வேகம் பிடித்தது ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு. 'முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார். அதுபற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என வழக்குத் தொடர்ந்தார் சுவாமி. நீதிபதி சம்பந்தம், விசாரணைக்கு உத்தரவிட்டார். நீதிமன்றம் நல்லம்ம நாயுடு தலைமையில் தனிப் படை அமைத்து உத்தரவிட்டது.
9. சிறையில் ஜெ... கார்டனுக்குள் போலீஸ்!
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் முதல் குற்றவாளியாக ஜெயலலிதா, இரண்டாவது குற்றவாளியாக சசிகலா, மூன்றாவது குற்றவாளியாக வளர்ப்பு மகன் சுதாகரன், நான்காவது குற்றவாளியாக இளவரசி ஆகியோரைச் சேர்த்து, 1996 செப்டம்பர் 18 அன்று முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. அதன்பிறகே 5.5.1997-ல் நீதிபதி சம்பந்தம், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் விசாரணையைத் தொடங்கினார்.
அப்போது தி.மு.க அரசு தொடர்ந்த பல வழக்குகளில் ஒன்றான கலர் டி.வி ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் இருந்தார் ஜெயலலிதா. அந்தச் சமயம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் போயஸ் கார்டனுக்குள் நுழைந்தனர்.
10. மாறியது காட்சி!
டான்சி வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, 2001-ம் ஆண்டு நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல். ஆனாலும், நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவற்றை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது. தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற, அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா முதலமைச்சர் ஆனது செல்லாது என சுரீர் தீர்ப்பளித்தது. ஜெயலலிதாவின் பதவி பறிபோக, ஓ.பன்னீர் செல்வம் தமிழக முதலமைச்சர் ஆனார். பிறகு டான்சி வழக்கில் இருந்து விடுதலை பெற்று, மீண்டும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார்.    
11. வழக்கு பெங்களூருவுக்கு பார்சல்!
'தி.மு.க ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கில் வாக்குமூலம் அளித்த சாட்சிகளில் 76 பேர், இப்போது தங்கள் தரப்பை மாற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அத்துடன் லஞ்ச ஒழிப்புத் துறையும் முதலமைச்சர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் துறையாக இருக்கிறது. அதனால் வழக்கை தமிழகத்தில் நடத்தினால், நியாயம் கிடைக்காது. அதிகாரிகள் தைரியமாகச் செயல்பட முடியாது. எனவே, வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்!’ என தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 2003, நவம்பர் 18-அன்று, வழக்கை பெங்களூருக்கு மாற்றி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
12. வழக்கைத் தரவில்லை தமிழகம்!
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற சிறப்பு நீதிபதியாக பச்சாபுரே நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் அப்போது ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க ஆட்சி. அதனால் வழக்கை சென்னையில் இருந்து விடுவிக்க தாமதம் ஆனது. 10 மாதங்கள் கழித்தே, வழக்கின் தமிழ் ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு அளித்தார்கள்.
13. எரிச்சல் ஆன நீதிபதிகள்!
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார் ஜெயலலிதா. 'கடந்த ஆறு மாதங்களாக நான் தினம் தினம் வந்துவிட்டு உட்கார்ந்துவிட்டுப் போகிறேன். நான் தனிமைச் சிறையில் இருப்பதைப்போல் உணர்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இனியும் வராவிட்டால், நான் அதைக் காரணம்காட்டியே தீர்ப்பைச் சொல்வேன்’ எனக் கடுகடு எச்சரிக்கை விடுத்தார் நீதிபதி பச்சாபுரே. அவர் ஓய்வுபெற, மல்லிகார்ஜூனையா புதிய நீதிபதியாகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவரிடமும் இதே இழுத்தடிப்புகள் தொடர்ந்தன.
14. லண்டன் சிக்கல்!
சொத்துக்குவிப்பு வழக்கோடு லண்டன் ஹோட்டல் வழக்கு ஒன்றும் இணைக்கப்பட்டு இருந்தது. அந்த வழக்கின் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாததால், வழக்கு இழுக்கப்பட்டது. தி.மு.க ஆட்சிக் காலத்தில் லண்டன் வழக்கு இதிலிருந்து பிரிக்கப்பட்டது. ஆனால், லண்டன் சொத்துக்குவிப்பு வழக்கையும் பெங்களூரு வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என ஜெயலலிதா தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய, அந்த மனு மீதான தீர்ப்பு வரும்வரை பெங்களூரு வழக்கு விசாரிக்கப்படவில்லை. இறுதியில் உச்ச நீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கை மட்டும் விசாரித்தால் போதும் என உத்தரவிட்டது. இடையில் நான்கு ஆண்டுகள் உருண்டோடியிருந்தன!
15. உச்சந்தலையில் கொட்டிய உச்ச நீதிமன்றம்!

சொத்துக்குவிப்பு வழக்கின் குற்றப்பத்திரிகையை எதிர்த்து ஒரு வழக்கு, 'இந்த வழக்கு விசாரணை முழுவதும் சட்ட விரோதம். எனவே, இத்துடன் விசாரணையை நிறுத்த வேண்டும்’ எனக் கோரி ஒரு வழக்கு,  வழக்கின் ஆவணங்கள் தமிழில் வேண்டும் எனக் கோரிக்கை என, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் மனுக்கள் மேல் மனுக்கள் போட்டார் ஜெயலலிதா. தீவிர விசாரணைக்குப் பிறகு பல மனுக்களைத் தள்ளுபடிசெய்த உச்ச நீதிமன்றம், ஒவ்வொரு சமயமும் ஜெயலலிதா தரப்பைக் கண்டித்தது.
இடையில், தமிழகத்தில் தி.மு.க ஆட்சி மாறி 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது!
16. பெங்களூருலேயே பல்டி விளையாட்டு!
2013 ஜனவரி 17 அன்று, சொத்துக்குவிப்பு வழக்கின் அரசு வழக்குரைஞர் ஆச்சாரியா பதவி விலகினார். நீதிபதி மல்லிகார்ஜூனையா ஓய்வுபெற்று, புதிய நீதிபதியாக பாலகிருஷ்ணா பொறுப்புக்கு வந்தார். அரசு வழக்குரைஞராக பவானி சிங் பொறுப்பெடுத்துக்கொண்டார். அந்தச் சமயம் வழக்கின் காட்சிகள் மாறின. பவானி சிங்கின் அணுகுமுறை ஜெயலலிதா தரப்புக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி, அவரை மாற்ற வேண்டும் என கர்நாடக அரசுக்கு பேராசிரியர் க.அன்பழகன் கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட கர்நாடக அரசு அவரை மாற்றியது. பவானி சிங் மாற்றத்தை எதிர்த்து, ஜெயலலிதா தரப்பு உச்ச நீதிமன்றம் சென்றது. பவானி சிங்கே அரசுத் தரப்பு வழக்கறிஞராக நீடிக்கட்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்தச் சமயம்தான் நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா பொறுப்பு எடுத்துக்கொண்டார்.
17. மிஸ்டர் ஸ்ட்ரிக்ட் மாஸ்டர்!
பொறுப்பை கையில் எடுத்ததில் இருந்து கறாரான மாஸ்டராகத்தான் நீதிபதி குன்ஹா இருந்தார். வழக்கை விரைவுபடுத்தி முடிக்க நினைக்கிறார் குன்ஹா என்றதும், புதிய அஸ்திரத்தை எடுத்தார்கள். இந்த வழக்கில் 32 நிறுவனங்கள் உள்ளன. இவர்கள் தனித் தனியாக மனு போட்டார்கள். 'எங்கள் நிறுவனத்தை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். அதுவரை சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையை நிறுத்த வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்கள். '17 ஆண்டுகளாக இந்த வழக்கு நடக்கிறது. இதுவரை தூங்கினீர்களா?’ என்று கேட்டு எல்லா மனுக்களையும் குன்ஹா டிஸ்மிஸ் செய்தார். அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தார். அந்த அளவுக்கு கறார் காட்டியதால்தான், குன்ஹாவால் தீர்ப்பு தேதியை அறிவிக்க முடிந்தது.
மைக்கேல் டி.குன்ஹா நீதிபதியாக வந்த பிறகு, ஜெயலலிதா பெங்களூருக்கு வரவே இல்லை. தீர்ப்பு தரப்பட்ட 2014, செப்டம்பர் 27 அன்றுதான் நீதிபதி குன்ஹா, ஜெயலலிதாவை முதன்முறையாக நேரில் பார்த்தார்.
அந்த முதல் சந்திப்பே மறக்க முடியாததாக மாறிவிட்டது இருவருக்கும்!
17 ஆண்டுகள்... அதிர்வலைகள்!

17  ஆண்டுகளைத் தாண்டியும் தடதடத்துக்கொண்டிருந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அதிரடியாக முடித்து...

திகைக்க வைக்கும் செக்ஸ் கொடுமைகள்

அதிர்ச்சியானது.. கவலைக்குரியது.. அனைவரும் அறிந்துகொண்டு விழிப்புணர்வு அடைய வேண்டியது.. என்ன விஷயம் தெரியுமா?

- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை என்ற கொடுமை!

* 53 சதவீத குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

* பாதிக்கப்படுபவைகளில் பெண் குழந்தைகளைவிட, ஆண் குழந்தைகளின் சதவீதம் அதிகம்.

* பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப குழந்தைகளைவிட மேல்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகம்.

* ஒன்று முதல் 18 வயது வரை உள்ளவர்கள் இந்த பாதிப்பு பட்டியலில் இடம்பிடிக்கிறார்கள்.

* 5 முதல் 12 வயது வரை பாதிப்பின் உச்சம். பாதிக்கப்பட்டவைகளில் 40 சதவீதம் இந்த வயதுதான். 30 சதவீதம் பேர் 13-14 வயதினர்.

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்கிற வர்கள், பீடோபீலியா (Peadophilea) என்ற வக்கிர புத்தி கொண்டவர்கள். இது ஒரு மனநோயாகவும் கருதப்படுகிறது. சிறுவர்- சிறுமியர்கள் மூலம் இன்பமடையும் வக்கிரவாதிகள் மேலைநாடுகளில் அதிகம். `சைல்டு செக்ஸ் டூரிசம்’ என்ற பெயரில் அவர்களை சில சமூக விரோத அமைப்புகள் ஆசிய நாடுகளுக்கு அழைத்து வருகின்றன. முன்பு தாய்லாந்து போன்ற நாடுகளில் கால்பாதித்த இந்த பாதகர்கள் இப்போது இந்தியாவில் ஒடிசா, கோவா, மகாபலிபுரம் போன்ற இடங்களுக்கு ரகசி யமாக வந்து `ஆசைகளை’ தீர்த்துவிட்டு போகி றார்கள்.

இது தொடர்பான சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பாலியல் தொழிலில் ஈடுபடுகிறவர்களில் 15 சதவீதத்தினர் 15 வயதிற்கும் குறைவானவர்களாக இருக்கி றார்கள். 25 சதவீதத்தினர் 16 முதல் 18 வயதிற்கு உள்பட்டவர்கள். 2005-ம் ஆண்டு இந்தியாவில் 44,476 குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார் கள். அவைகளில் 11,008 குழந்தைகள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இவர்கள் பாலியலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

- குழந்தைகளை எளிதாக ஏமாற்ற முடியும்.
– குழந்தைகள் காட்டிக்கொடுக்காது.
– குழந்தைகளுக்கு விளைவுகளை புரியத்தெரியாது. எதிர்ப்பு தெரிவிக்காது.
– தனக்கு ஏற்பட்ட பாதிப்பை குழந்தைகளுக்கு விளக்கத் தெரியாது. விளக்கினாலும் பெற்றோர் அதை நம்பமாட்டார்கள்.
– வயதானவர்கள் குழந்தைகளிடம் கொஞ்சும் பாவனையில் வக்கிர செயலில் ஈடுபடும் போது, பெற்றோருக்கு சந்தேகம் வராது.
– ஆண்மை அதிகரிக்கும், ஆயுள் நீடிக்கும் போன்ற மூட நம்பிக்கைகள்.

இப்படிப்பட்ட பல காரணங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித் துக்கொண்டே போகிறது. கற்பனைக்கு எட்டாதவிதத்தில்கூட குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

குழந்தைகளுக்கு நன்கு தெரிந்த உறவினர்கள் அல்லது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்கிறவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், வேலைக்காரர்கள், அம்மாவின்- அப்பாவின் நண்பர்களாக வந்து போகிறவர்கள்…. போன்றவர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். புதிய நபர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவு.

பயணங்கள், திருவிழா, திருமணவிழாக்களில் உருவாகும் மக்கள் நெருக்கடியை பயன் படுத்தி குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு தருபவர்கள் உண்டு. குழந்தை தொழி லாளர்கள், தெருவோரக் குழந்தைகள் இந்த பாதிப்பிற்கு உள்ளாகுவது சாதாரண விஷய மாக மாறிக்கொண்டிருக்கிறது. குழந்தை இல்லங்கள், அனாதை ஆசிரமங்கள், ஒருசில பள்ளிக்கூடங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

பாலியல் பலாத்காரத்தால் குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. முதலா வதாக அவர்களுக்கு பால்வினை நோய்கள் உண்டாவதை குறிப்பிடலாம். குழந்தைகளின் `உறுப்பு’ பகுதியில் புண்களோ, கட்டிகளோ, சீழ் வடிதலோ இருந்தாலும் குழந்தையின் தாய்க்கு அது பால்வினை நோயின் அடையாளம் என்ற சந்தேகம் வருவதில்லை. ஒருசில மருத்துவர்களும் அது பால்வினை நோயின் அறிகுறி என்பதை உணராமல், வேறு விதமான சிகிச்சைகள் கொடுத்துவிடுவதும் உண்டு.

நன்றாக தெரிந்தவர்களால் குழந்தைகளுக்கு பாலியல் பாதிப்பு ஏற்படும்போது, அவை களின் உடலில் காயங்களோ, சிராய்ப்புகளோ இருப்பதில்லை. அதனால் பெற்றோரோ, மருத் துவர் றகளோ குழந்தை பலாத்காரத்திற்கு உட்பட்டிருக்கிறது என்று முதலில் நினைப்ப தில்லை. அப்படியே நினைத்து விசாரித்தாலும் குழந்தையால் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை கூறமுடியாது.

வெளிநபர்களால் பாதிப்பு ஏற்படும்போது காயம், சிராய்ப்பு, உறுப்பு பகுதியில் ரத்தம் வடிதல் போன்றவை காணப்படும். அவசரத்திலும், பயத்துடனும் அந்த பாதகர்கள் செயல்படுவதால் குழந்தைகள் காயம் அடைந்துவிடுகின்றன.

பலாத்காரத்திற்கு உள்பட்ட குழந்தைகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப் படுகின்றன. பால்வினை நோய் மற்றும் காயங்களை சிகிச்சையால் குணப்படுத்திவிடலாம். ஆனால் மனநிலை பாதிப்பால் பிற்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். வயதுக்கு மீறிய பாலியல் மாற்றங்கள், மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை, எதைக் கண்டாலும்- யாரைக் கண்டாலும் பயம், தனிமை மீது விருப்பம், உணவில் நாட்டமின்மை, போதை மருந்துகளுக்கு அடிமையாகுதல், வீட்டை விட்டு ஓடுதல், படிப்பில் ஆர்வமின்மை, பாலியல் தொழில் ஆர்வம் போன்றவை முக்கியமான எதிர்கால பாதிப்புகளாகும்.

மக்கள் விழிப்புணர்வு கொண்டால் மட்டுமே இந்த பாதகத்தை தடுக்கவோ, குறைக்கவோ முடியும். சமூகத்தின் அடிப்படையில் இருந்து இந்த பணியை தொடங்கவேண்டும். பள்ளி கள், கல்லூரிகள், மருத்துவ துறை, தன்னார்வ அமைப்புகள், அரசு அமைப்புகள் ஆகிய அனைத்தும் இணைந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டும். தங்கள் தம்பி, தங்கை களை காத்து கண்காணிக்க மூத்த குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். குழந்தைகளின் உடலில் எந்தெந்த பகுதிகளில் தொட்டால் அது நல்ல தொடுதல் என்றும்- எந்தெந்த பகுதிகளில் தொட்டால் அது தவறான அணுகுமுறை என்றும் சொல்லித்தர வேண்டும். இதை சரியாக சொல்லித்தர அம்மாக்களாலே முடியும்.

மற்றவர்களின் பிரச்சினைக்குரிய செயல்கள் பற்றியோ, பிரச்சினைக்குரிய நபர்கள் பற்றியோ குழந்தைகள் கூறினால் அதை அலட்சியப்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும். குழந்தைகளின் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பார்த்து டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். யாரையும் நம்பி குழந்தைகளை விட்டுச்செல்லக்கூடாது. பொது இடங்களில் குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளவேண்டும். இந்த பாதகத்தில் ஈடுபடு கிறவர்கள் நீதியின் முன்னே நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் ஒரு தனிநபர் பிரச்சினையோ, பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்து பிரச்சினையோ இல்லை. இது சமூக பிரச்சினை. அதனால் எல்லோரும் ஒன்றுபட்டு, ஒத்துழைத்து இதை தடுக்கவேண்டும்.

கட்டுரை: டாக்டர் என்.உஸ்மான் M.D., D.V., Ph.D., 
(பாலியல் நோய் நிபுணர் மற்றும்
உலக சுகாதார நிறுவன ஆலோசகர்) சென்னை.

நன்றி செந்தில்வயல்.கொம்
திகைக்க வைக்கும் செக்ஸ் கொடுமைகள்

திகைக்க வைக்கும் செக்ஸ் கொடுமைகள் அதிர்ச்சியானது.. கவலைக்குரியது.. அனைவரும் அறிந்துகொண்டு விழிப்புணர்வு அடைய வேண்டியது.. என்ன விஷயம் தெரி...

என்ன தொடர்பு
இந்த சேதி தெரியுமா?
-------------------------------------
1991 மே 21-ம் நாள் நடந்த குண்டுவெடிப்பில் ராஜீவ்காந்தி இறந்துபோகிறார். தேர்தலில் ஜெ அமோக வெற்றி. முதல்வராகிறார்.அப்போது சுப்ரமணியசாமிக்கும் ஜெ-வுக்கு ஏழாம் பொருத்தமாகிவிடுகிறது. சாமி மீது வழக்குபோட்டு, டெல்லி வரை விரட்டியபடியே இருக்கிறார். இருவருக்கும் பெரும் மோதலாகி நிற்கிறது. பதிலுக்கு பழிதீர்க்க நினைத்த சு.சாமி ஜெயலலிதா மீது இரண்டு ஏவுகனைகளை வீசினார்.
ஒன்று ராஜீவ்காந்தி படுகொலையில் ஜெயலலிதாவிற்கு பங்கு இருக்கிறது. கூட்டணி கட்சி தலைவர் வரும்போது இவர் திட்டமிட்டு அங்கே இருக்காமல் வேறு இடத்திற்கு சென்றது ஏன். அங்கிருந்தபடி ராஜீவ்காந்தி வந்துவிட்டாரா. எங்கு இருக்கிறார். எங்கு செல்கிறார் என கலெக்டரிடம் விசாரித்துக்கொண்டேயிருந்தார். அது ஏன்.ஏதோ ரகசியம் அவருக்கு தெரிந்திருக்கிறது. அவருக்கும் தொடர்பிருக்கிறது. எனவே அவரையும் இந்த வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும் என ஜெயின் கமிஷனில் மனுத்தாக்கல் செய்தார். முதல்வராக இருந்த ஜெ அந்த கமிஷன் கூண்டில் நிற்க வேண்டும். அலைய வேண்டும். சிக்க வேண்டும் என்பது சாமியின் திட்டம்.
அந்த நேரத்தில் ஜெ-விற்கு ஆதரவாக களம் இறங்கியவர்தான் ராம்ஜெத் மலானி. சுப்ரமணியசாமிக்கு எதிராக ஜெயலலிதாவிற்கு ஆதரவாக ஜெயின் கமிஷன் முன் நேர்நின்று நாள் கணக்கில் வாதாடினார். வழக்கு உடைந்துகொண்டே வந்தது.இறுதியில் ஜெயலலிதா அதிலிருந்து விடுவிக்கப்பட்டார். சு.சாமியின் குற்றச்சாட்டு படுத்துக்கொண்டது. இந்த வழக்கில் அன்று அதிமுக-வில் இருந்த செல்வகணபதி, காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுசாமி இருவரின் பங்கு பெரிய அளவில் உதவியாக இருந்தது.
சு.சாமி வீசிய இரண்டாவது ஏவுகனைதான் இந்த ‘வருவாய்க்கு மீறிய சொத்து குவிப்பு’ வழக்கு. அன்று தமிழக ஆளுநராக இருந்த சென்னா ரெட்டியிடம் ஆதாரத்தோடு புகார் அளித்தார். அதைத்தான் பிறகு 1996-ல் ஆட்சியில் அமர்ந்த தி.மு.க. கையில் எடுத்தது. அதுதான் கடந்த 27-ம் தேதி பெங்களூரு கோர்ட்டில் ஜெ-விற்கு நான்காண்டு சிறை தண்டனை என்று தீர்ப்பானது. ப100 கோடி அபராதம். பத்தாண்டு தேர்தலில் போட்டியிட தடை என்றாகி நிற்கிறது.
காலச்சக்கரம் மீண்டும் சுழல்கிறது. இருபதாண்டுகளுக்கு பின்னால் இப்போது மீண்டும் ராம்ஜெத் மலானி களம் குதித்துள்ளார். ஜெ-விற்கு எதிரான இந்த தீர்ப்பு ஏற்புடையதல்ல நானே வாதாடுவேன் என்கிறார். விரைவில் வெளியில் கொண்டு வருவேன் என்கிறார்.
பார்க்கலாம்
என்ன தொடர்பு இந்த சேதி தெரியுமா?

என்ன தொடர்பு இந்த சேதி தெரியுமா? ------------------------------------- 1991 மே 21-ம் நாள் நடந்த குண்டுவெடிப்பில் ராஜீவ்காந்தி இறந்துபோக...

53 கோடியே 60 லட்சம் ரூபாய் முறைகேடாக சம்பாதிக்கப்பட்டது! கணக்குச் சொன்ன நீதிபதி குன்ஹா!

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் 'ஆபரேட்டிவ் போர்ஷன்’ என்று சொல்லப்படும் தீர்ப்பின் சாராம்சத்தை நீதிபதி குன்ஹா இப்படித்தான் தொடங்கினார்...

''66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கில் 53 (53,60,49,954 ரூபாய்) கோடி ரூபாய் வருமானம் முறைகேடான வழிகளில் சம்பாதிக்கப்பட்டுள்ளது என்பது இந்த வழக்கில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது.  இந்த வழக்கின் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு உள்ளவர், பொது ஊழியராகப் பொறுப்பில் இருந்த காலத்தில், இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். வருமானத்துக்கு
அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது. அவருடைய இந்தச் செயல் ஊழல் தடுப்புச் சட்டம் 13 (i)(e)-ன் படி தண்டனைக்குரிய குற்றம். முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளவர், இரண்டாவது (சசிகலா),  மூன்றாவது ( சுதாகரன்), நான்காவது (இளவரசி) குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்களுடன் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுபட்டு குற்றம் புரிந்துள்ளதும் நிரூபணமாகி உள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு 120 (b)-ன் படி 'கூட்டுச்சதி (criminal conspiracy)’  செய்தல் குற்றமாகும்.
இந்த வழக்கில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு உள்ளவர்கள், முதல் குற்றவாளி செய்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இந்தியத் தண்டனைச் சட்டம் 109-ன் படி 'குற்றத்துக்கு உடந்தை (aiding and abet)’  என்பதும் குற்றமாகிறது. எனவே, நான்கு பேரும் குற்றவாளிகள் என்று இந்த நீதிமன்றம் அறிவிக்கிறது. ஒவ்வொருவருக்குமான தண்டனை விவரங்களைப் பிறகு அறிவிக்கிறேன். நீங்கள் ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லலாம்.''- நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா இப்படி வாசித்து முடித்ததும் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரோடு அவர்களுடைய வழக்கறிஞர்களின் முகமும் இருண்டு போனது. அப்போது நேரம் 11.30 மணி!
அப்போதே ஜெயலலிதாவின் காரில் இருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டது. அந்த ஒரு நிகழ்வே நீதிமன்ற அறைக்கு வெளியில் நின்றுகொண்டிருந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு நிலைமையை உணர்த்திவிட்டது. அனைவரும் சோகத்தில் மரத்தடியில் அமர்ந்துவிட்டனர்.
மீண்டும் வாதங்கள்!
மாலையில் நீதிபதி குன்ஹா தண்டனை விவரத்தை வாசித்தார். ''குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்குத் தண்டனையாக ஒவ்வொருவருக்கும் தலா நான்கு வருடங்கள் சிறைத் தண்டனை அளிக்கிறேன். அதுபோல, முதல் குற்றவாளிக்கு அபராதத் தொகையாக 100 கோடி ரூபாய் விதிக்கிறேன். வழக்குத் தொடரப்பட்டபோது வழக்கில் தவறான வழிகளில் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தோடு இணைக்கப்பட்ட சொத்து மதிப்பு 66 கோடி ரூபாய். அது அரசாங்க மதிப்பீட்டின்படி கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது அதன் மதிப்பு 5 மடங்காக அதிகரித்துள்ளது. எனவே, அபராதத் தொகை அதற்கேற்றவாறு கணக்கிடப்பட்டு நூறு கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் குற்றவாளி, இந்த அபராதத்தைக் கட்டாத நிலையில் கூடுதலாக ஒரு வருடம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். அதுபோல, மற்ற குற்றவாளிகள் தங்களது அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஆறுமாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்'' என்று முடித்தார்.
'பல லட்சம் கோடி ரூபாய் ஊழல்களை மிகச் சாதாரணமாகச் சாதித்துவிடும் எந்த அரசியல்வாதிக்கும் இதுவரை 100 கோடி ரூபாய் அபராதம்’ என்று விதிக்கப்பட்டது இல்லை. இத்தனை பெரிய தொகையை அபராதமாகச் செலுத்த அறிவுறுத்தப்பட்ட முதல் அரசியல்வாதி, முதல் முதலமைச்சர் ஜெயலலிதாதான்.
''இப்போது இந்த அபராதம் பற்றி தவறான தகவல்கள் வருகின்றன. அதாவது, ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட 66 கோடி ரூபாய் சொத்துகள் போக, மீதம் 34 கோடி ரூபாய் மட்டும் அபராதமாக செலுத்தினால் போதும் என்று சொல்கின்றனர். ஆனால், தீர்ப்பில் நீதிபதி அப்படிச் சொல்லவில்லை. 100 கோடி ரூபாய் அபராதம் என்பது தனியானது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஏனென்றால், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் அனைத்தும் அரசாங்கத்தினுடையவை. ஒருவர் முதலமைச்சராக இருக்கும்போது அவருடைய வருமானத்தைத் தாண்டி அவருக்குக் கொடுக்கப்படும் அன்பளிப்புகள் மற்றும் வருவாய்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கருவூலத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி ஜெயலலிதாவின் வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்டு இருந்த சொத்துகள் அனைத்தும் அரசாங்கக் கருவூலத்தில் சேர்க்கப்படும். அது தவிர்த்து, தனியாக 100 கோடி ரூபாயை அபராதமாக ஜெயலலிதா கட்ட வேண்டும். அதுவும் முறையான கணக்கு வழக்கு காட்டப்பட்ட பணத்தில் கட்ட வேண்டும். அந்த அபராதத்தைச் செலுத்தி அதற்கான ரசீதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே அவர் மேல்முறையீட்டுக்கோ அல்லது ஜாமீன் கேட்டோ விண்ணப்பிக்க முடியும்'' என்று நீதித்துறை வல்லுநர்கள் சொல்கிறார்கள்.
மேல் முறையீடும் அப்பீலும்!
இந்த வழக்கில் மேல்முறையீடும் (அப்பீல்) ஜாமீனும் தனித்தனியாகக் கிடையாது. மேல்முறையீடு செய்யும்போது, 'நான் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்கிறேன். எனக்கு ஜாமீனும் வழங்க வேண்டும்’ என்று மனுச்செய்ய வேண்டும். ஆனால், தீர்ப்பின் நகல் இவர்கள் கையில் கிடைக்கும் வரை அவர்கள் மேல்முறையீடு செய்ய முடியாது. மேலும் மேல்முறையீடு செய்யும்போது அவர்கள் அபராதத் தொகையைச் செலுத்தி அதற்கான ரசீதை இணைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்த மனு விசாரணைக்கே ஏற்றுக்கொள்ளப்படும். இந்தத் தொகை அதிகம் என்றும் கட்டுவதில் சிரமம் என்றும் சொன்னால், அதற்காகத் தனியாக கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். அதில், தீர்ப்பு வரும் வரை சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடுக்கும் ஜாமீனுக்கும் விண்ணப்பிக்க முடியாது.
வழக்குச் செலவை யார் கொடுப்பது?
சொத்துக் குவிப்பு வழக்கை தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு மாற்றியது முதல், அந்த வழக்கை நடத்த இதுவரை 5 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. அந்தச் செலவை கர்நாடக அரசுக்கு தமிழக அரசு கொடுக்க வேண்டும். அந்தத் தொகையை தமிழக அரசு கட்டத் தவறினால், ஜெயலலிதா 1991-க்கு முன்பாக தனக்கு இருந்ததாகக் காட்டியுள்ள சொத்துகளை விற்று அந்த ஐந்து கோடியைக் கட்ட வேண்டும்.
போயஸ் கார்டன்!
போயஸ் கார்டன் வீட்டுக்கு ஏதாவது பிரச்னை வருமா? என்ற சந்தேகம் கிளப்பப்படுகிறது. ''அந்த வீடு ஜெயலலிதா முதன்முறையாக முதலமைச்சராவதற்கு முன்பாகக் கட்டப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு அவர் அந்த வீட்டில் கூடுதலாகக் கட்டப்பட்ட பகுதிகள், செய்யப்பட்ட ஆடம்பர வேலைப்பாடுகள், அலங்காரப் பொருட்கள் அரசுடைமையாகும்'' என்று சொல்லப்படுகிறது.
காவல் துறையிடம் ஜெயலலிதாவின் கார்!
ஜெயலலிதாவுக்கு பரப்பன அக்ரஹாரா சிறையில் மருத்துவர்கள் உடல் நிலையை பரிசோதித்தனர். அப்போது அவருக்கு ரத்த அழுத்தம் சீரற்ற நிலையில் இருந்தது. அதற்கான சிகிச்சை அளித்தனர். அரை மணி நேரத்தில் ரத்த அழுத்தம் சீரானது. அதன்பிறகு, நான்கு பேரையும் சிறைக்கு அனுப்ப நீதிபதி குன்ஹா உத்தரவு பிறப்பித்தார்.
சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு இருப்பதால், அவரை அவர்கள் பொறுப்பில் இருந்து தங்கள் கஸ்டடியில் எடுப்பதற்குள் கர்நாடக மாநில காவலர்களுக்குப் பெரும்பாடாகிவிட்டது.  இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள தேசிய பாதுகாப்புப் படையினர், 'எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால்தான், நாங்கள் அவரை அனுப்புவோம்’ என்றனர். இதில் டென்ஷனான கர்நாடக மாநில போலீஸார், 'நீதிமன்ற உத்தரவைக் கேட்டீர்கள் அல்லவா? மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவுடன் அவர் பதவி உட்பட அவருக்குரிய சலுகைகள் அனைத்தையும் இழந்தவராகிறார். நாங்கள் எழுத்துப்பூர்வமாக கொடுப்பதற்கு எந்த அவசியமும் இல்லை’ என்றனர். அதன்பிறகு ஜெயலலிதாவை கர்நாடக காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
அதன் பிறகு, ஜெயலலிதாவின் காரில் அவரை அழைத்துச் சென்று பரப்பன அக்ரஹாரா சிறையில், எண் 7402 அறைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மணி சரியாக இரவு 8.20.
- ஜோ.ஸ்டாலின்
படம்: ரமேஷ் கந்தசாமி
-vikatan-
53 கோடியே 60 லட்சம் ரூபாய் முறைகேடாக சம்பாதிக்கப்பட்டது! கணக்குச் சொன்ன நீதிபதி குன்ஹா!

53 கோடியே 60 லட்சம் ரூபாய் முறைகேடாக சம்பாதிக்கப்பட்டது! கணக்குச் சொன்ன நீதிபதி குன்ஹா! ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட தீர்ப்பி...

ஆட்சியில் இருக்கும் போது ஜெயலலிதாவிற்கு தீர்ப்பு வழங்கியது சரியா பிழையா .........

சட்டரீதியில் சரியாக காரணம் சொல்லபட்டாலும்
அது தவறே காரணம் பல கோடி மக்களால் முதல் அமைச்சராக ஜெயலலிதா தெரிவு செய்யபட்டவர் அதுக்கும் இது இன்று நேற்று நடந்த சம்பவம் இல்லை இற்றைக்கு 18 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம்
இதட்கிடைபட்ட காலத்தில் ஜெயலலிதா பதவியில் இல்லாமல் இருந்திருக்கிறார்( தேர்தலில் தோல்வியை சந்தித்தகாலத்தில்)இந்த காலபகுதியில் இவருடைய தீர்ப்பை வழங்கி இருக்கலாம் வழங்கவில்லை
இதில் இருந்து இது முழுக்க முழுக்க சட்டம் தன் கடமையை செய்யவில்லை அரசியல் தன் கடமையை செய்துள்ளது
காரணம் சுப்பிர மணிய சுவாமி தனது சொல்லை ஜெயலலிதா கேட்பதில்லை என்று அடிக்கடி குறைகூறி இதற்கான பலனை அனுபவிப்பார் என்று கூறிவந்தவர்
மற்றும் மோடியுடன் பிரதமர் பதவிக்காக நெருங்கியவர்
இதுகளும் இந்த நிலைக்கு கொன்று போய்விட்டிருக்கலாம்
எது எப்படி இருந்தாலும் இந்த கிறிஸ்தவ நீதிபதி ஒரு நாட்டின் அதிபராக இருக்கும் ஒருவரை சிறைக்கு அனுப்பும் போது எவ்வளவு கலவரம் வரும் என்று தெரியவேண்டும் இதை கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டது அரசியல் நிகல்சிநிரளுக்கு ஏற்பவே இவரும் தீர்ப்பு வழங்கி உள்ளார்
இதன் காராணமாக தமிழ்நாட்டில் 14 ற்கு மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் இதல்லாம் இவருடைய பொறுப்பற்ற தீர்ப்பால் நடை பெறுகின்றது
கொலை செய்பவனை விட கொலைக்கு தூண்டியவனுக்கே தண்டனை கூட வழங்க படவேண்டும் அதன் படி
14 பேரின் கொலையுடன் நேரடியாக சம்மந்த படுகிறார் இந்த நீதிபதி ஆகவே இவருக்கு என்ன தண்டனை .......சட்டம் மக்களை பாதுகாக்க வேண்டுமேதவிர தற்கொலைக்கு தூண்ட கூடாது .............இவரின் தீர்ப்பு பலபேரின் உயிரை பறித்துள்ளது மிக வேதனையே
ஆட்சியில் இருக்கும் போது ஜெயலலிதாவிற்கு தீர்ப்பு வழங்கியது சரியா பிழையா .........

ஆட்சியில் இருக்கும் போது ஜெயலலிதாவிற்கு தீர்ப்பு வழங்கியது  சரியா பிழையா  ......... சட்டரீதியில் சரியாக காரணம் சொல்லபட்டாலும் அது தவறே க...