Ads (728x90)

Showing posts with label சினிமா செய்திகள். Show all posts


நடிகர் : வைபவ் நடிகை : சோனம் ப்ரீத் பாஜ்வா இயக்குனர் : கார்த்திக் ஜி கிரிஷ் இசை : நடராஜன் சங்கரன் ஓளிப்பதிவு : தினேஷ் கிருஷ்ணன்

ஒரு கிராமத்தில் 5 சிறுவர்கள் பள்ளியில் படித்து வருகிறார்கள். இதில் ஒருவன் நாயகன் வைபவ். இந்த 5 சிறுவர்களும் கடைசி பெஞ்சில் உட்கார்ந்துக் கொண்டு அரட்டை அடித்துக் கொண்டு நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றார்கள். அந்த கிராமத்தில் கெத்தாக வாழ்ந்து வரும் ரோபோ சங்கரை இவர்களுக்கு ரோல் மாடலாக நினைத்து வருகிறார்கள்.

 ஒருநாள் ரோபோ சங்கர் தாடி வைத்து சோகமாக இருக்கிறார். அப்போது ஒருவர் ஏன் இப்படி இருக்கிறாய்? என்று கேட்க, அதற்கு ரோபோ சங்கர், கல்யாணம் செய்ததால் நான் நல்ல நண்பர்களை இழந்து விட்டேன். நண்பர்களை இழக்க கூடாது என்றால் கல்யாணம் செய்யக் கூடாது என்று கூறுகிறார். இதை கேட்கும் சிறுவர்கள், நாமும் பிரிந்து விடக்கூடாது என்பதால் கல்யாணம் செய்யப்போவதில்லை என்று அனைவரும் சத்தியம் செய்துகொள்கிறார்கள். ஆனால், வைபவ் மட்டும் சத்தியம் செய்ய மறுக்கிறார். பின்னர் நண்பர்கள் எல்லாம் வைபவை வலுக்கட்டாயமாக சத்தியம் செய்ய வைக்கிறார்கள். பள்ளி படிப்பை முடித்து விட்டு கல்லூரி செல்கிறார்கள்.

 அங்கு வைபவ் ஒரு பெண்ணை காதலிக்க முயற்சி செய்கிறார். அதை நண்பர்கள் கெடுத்து விடுகிறார்கள். இதன்பிறகு வைபவ் சென்னைக்கு சென்று ஒரு பெண்ணை காதலித்து ஊர் சுற்ற வேண்டும் என்று எண்ணுகிறார். இதற்காக நண்பர்களிடம் பொய் சொல்லிவிட்டு சென்னைக்கு செல்கிறார். சென்னையில் விடிவி கணேஷ் வீட்டில் தங்குகிறார் வைபவ். வேலை செய்து வரும் விடிவி கணேஷ், பெண்களுடன் ஜாலியாக பழகி வருகிறார். இதனால் ஒரு பெண்ணுடன் பழக வேண்டும் என்று கணேஷிடம் ஐடியா கேட்கிறார் வைபவ். அதற்கு அவர் பப்பிற்கு சென்றால் அங்கு நிறைய பெண்கள் வருவார்கள். அவர்களில் ஒரு பெண்ணை நீ தேர்ந்தெடுக்கலாம் என்று கூறுகிறார். அதன்படி வைபவ்வும் பப்பிற்கு செல்கிறார். அங்கு பெண்களுடன் வந்தால் தான் உள்ளே அனுமதி என்று கூறுகிறார்கள்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பப்பின் வாசலில் நிற்கிறார். அப்போது நாயகி சோனம் பாஜ்வாவை பார்க்கிறார். அவரும் தனியாக வருவதால் அவரிடம் பேசி இருவரும் பப்பிற்கு செல்கிறார்கள். அங்கு இருவரும் மது அருந்திவிட்டு ஜாலியாக இருக்கிறார்கள். அப்போது சோனம் பாஜ்வாவிடம் பேசி அவருடைய போன் நம்பர் மற்றும் வீட்டின் விலாசத்தையும் பெற்றுக் கொள்கிறார். மறுநாள் சோனம் பாஜ்வாவை தேடி அவரது வீட்டிற்கு செல்கிறார் வைபவ். அங்கு அவரை யார் என்றே தெரியாது என்று கூறுகிறார் சோனம். முதல் நாள் நடந்த விஷயங்களை ஞாபகபடுத்த முயற்சி செய்கிறார். சோனம் பாஜ்வா போதையில் இருந்ததால் யார் என்று தெரியாது என்று கூறி அவரை அனுப்புகிறார். ஆனால், சோனம் பாஜ்வாவை காதலித்தே தீர வேண்டும் என்று முடிவு செய்து அவர் பின்னாலேயே அலைகிறார். இதனால் கடுப்பாகிறார் சோனம். இதற்கு முடிவு கட்ட வேண்டும் எண்ணி வைபவிடம் பேசுகிறார். அதற்கு வைபவ் என்னிடம் 2 நாட்கள் பழகிப்பாருங்கள் என்று கூறி இருவரும் பழக ஆரம்பிக்கிறார்கள்.

 இவர்களின் பழக்கம் காதலாக மாறுகிறது. இந்நிலையில் ஊரில் இருந்து நண்பர்கள் சென்னைக்கு வருகிறார்கள். வைபவ் காதலித்து வருவது அவர்களுக்கு தெரிய வருகிறது. இதனால் கோபமடையும் நண்பர்கள் வைபவ் காதலை பிரிக்க முயற்சி செய்கிறார்கள். கல்யாணம் செய்ய வேண்டாம் என்ற முடிவில் இருக்கும் நண்பர்கள் வைபவின் காதலை பிரித்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை. நாயகன் வைபவ் முழுநீள நகைச்சுவை படத்தில் கதாநாயகன் பொறுப்பேற்று சிறப்பாக நடித்திருக்கிறார். நண்பர்களான கருணா, அர்ஜூனன், வெங்கட் சுந்தர், கார்த்திக் இவர்களுடன் சேர்ந்து லூட்டி அடிக்கும் காட்சிகள் காதலுக்காக அடிவாங்குவதும் இவர் செய்யும் சேட்டைகள் என ரசிக்கும் படி செய்திருக்கிறார். நாயகி சோனம் பாஜ்வா முதல் படத்திலேயே மாடர்ன் பெண்ணாக வலம் வருகிறார். அழகாக வந்து கவர்ச்சி காண்பித்து ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார்.

நண்பர்களாக நடித்திருக்கும் கருணா, அர்ஜூனன், வெங்கட் சுந்தர், கார்த்திக் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். முழு நீள நகைச்சுவை படத்தை கையில் எடுத்துக் கொண்ட இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ், திரைக்கதையின் நீளத்தை குறைத்திருக்கலாம். நல்ல பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார். ஷங்கரின் உதவியாளராக இருந்தவர் என்று பாடல் காட்சிகளில் தெரிகிறது. நடராஜன் சங்கரன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் ‘கப்பல்’ நீண்ட பயணம்.
கப்பல் பட விமர்சனம்

நடிகர் : வைபவ் நடிகை : சோனம் ப்ரீத் பாஜ்வா இயக்குனர் : கார்த்திக் ஜி கிரிஷ் இசை : நடராஜன் சங்கரன் ஓளிப்பதிவு : தினேஷ் கிருஷ்ணன் ஒரு க...

நண்பேன்டா - டப்பாங்குத்து பாடல் ஆடியோ!



நண்பேன்டா - டப்பாங்குத்து பாடல் ஆடியோ!

நண்பேன்டா - டப்பாங்குத்து பாடல் ஆடியோ!  

 கலையுலக பிரம்மா கே.பாலச்சந்தரின் சாதனை பட்டியல்

• கமல், சரிதாவை வைத்து பாலச்சந்தர் தெலுங்கில் இயக்கிய ‘மரோசரித்திரா’ படம் வெற்றிகரமாக ஓடியது. தமிழகத்திலும் இப்படம் பெரிய வரவேற்பை பெற்றதால் தமிழில் அதை எடுக்கவில்லை. இந்தியில் ‘ஏக் துஜே கேலியே’ என்ற பெயரில் அதை ரீமேக் செய்தார். கமல், ரதி நடித்தனர்.

இப்படம் வெளியாகி இந்தி பட உலகையே கலக்கியது. இந்தி பட உலகில் ராஜ்கபூர் எடுத்த ‘பாபி’ படத்துக்கு பிறகு பெரிய வெற்றியை பெற்ற படமாக இது அமைந்தது. இந்தி பட உலகினர் பாலச்சந்தரை வியந்து பாராட்டினார்கள். மும்பையில் இளைஞர்கள் படத்தை பார்த்து பைத்தியமாகி அங்குள்ள கடற்கரையில் நாயகன், நாயகி பெயரை இருநூறு மீட்டர் தூரம் மணலிலேயே எழுதி வைத்து வியக்க வைத்தனர்.

• அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி அறிமுகமானாலும் அதில் அவருக்கு சிறிய கேரக்டர்தான். ‘மூன்று முடிச்சு’ படம்தான் அவரை பிரபலமாக்கியது. இந்த படத்தில் ரஜினியை ஒப்பந்தம் செய்வதற்கு முன்னால் அவரிடம் பாலச்சந்தர் சிகரெட்டை தூக்கி போட்டு வாயால் பிடிக்கிற பயிற்சியை செய்து கொண்டு வா. அதை சரியாக செய்தால் உனக்கு வாய்ப்பு தருகிறேன் என்று நிபந்தனை விதித்தாராம். ரஜினியும் அப்படியே பயிற்சி எடுத்து நடித்தார். ரஜினியின் அந்த ஸ்டைல் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. பிறகு ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்திலும் அதே சிகரெட் ஸ்டைல் இடம் பெற்றது.

• ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான் ‘ரோஜா’ படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் பாலச்சந்தர். இந்த படத்தை அவரது கவிதாலயா பட நிறுவனம்தான் தயாரித்தது. இயக்குனர்கள் விசு, மவுலி, அமீர்ஜான், இசை யமைப்பாளர்கள் மரகதமணி, சாக்ஸபோன் கலைஞர் கத்ரி போன்றோரும் பாலச்சந்தர் தயாரித்த படங்கள் மூலம்தான் அறிமுகமானவர்கள்.

• சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய பாலச்சந்தர், நமது இளைய சமுதாயத்தினர் அதிகமாக மது அருந்துவதாக படங்களில் காட்டுகிறார்கள். இந்த போக்கு அபாயகரமானது. நாம் இதை மாற்ற வேண்டும். படங்களில் இளைஞர்கள் மது அருந்தும் காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்றார். பாலசந்தர் விடுத்த கடைசி வேண்டுகோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கலையுலக பிரம்மா கே.பாலச்சந்தரின் சாதனை பட்டியல்

 கலையுலக பிரம்மா கே.பாலச்சந்தரின் சாதனை பட்டியல் • கமல், சரிதாவை வைத்து பாலச்சந்தர் தெலுங்கில் இயக்கிய ‘மரோசரித்திரா’ படம் வெற்றிகரமாக...

சிம்பு , யுவன் கூட்டணி என்றாலே எப்போதும் அப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்படையும். 'மன்மதன்’, ‘வல்லவன்’, ‘ சிலம்பாட்டம்’ என இவர்கள் இருவரின் கூட்டணி அமைந்த பாடல்கள் மெகா ஹிட்டானது நாமறிந்ததே.
தற்போது ’இது நம்ம ஆளு’ படத்தில் இந்த கூட்டணியின் மேஜிக்கை மீண்டும் கொண்டுவந்துள்ளனர்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடிக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. இப்படத்தின் மூலம் சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

தற்போது இப்படத்தில் புதிதாக யுவன் குரலில் ஒரு பாடலை நேற்று இரவு பதிவு செய்துள்ளார் குறளரசன்.
இது குறித்து தனது ட்விட்டர் தளத்தில் மிகவும் முக்கியமான நபர் ’இது நம்ம ஆளு’ படத்திற்காக பாடியுள்ளார். நெருங்கிய நண்பர், சிறந்த மனிதர், மேலும் எங்களது கூட்டணி எப்போதும் தோல்வியடையாது . அவருதான் நம்ம யுவன் . என சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பாடல் பதிவில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
குறளரசன் இசையில் யுவன் பாடல்!

சிம்பு , யுவன் கூட்டணி என்றாலே எப்போதும் அப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்படையும். 'மன்மதன்’, ‘வல்லவன்’, ‘ சிலம்பாட்...

ஆர்யா–நயன்தாரா நடித்த ராஜாராணி படத்தை டைரக்டு செய்து பிரபலமானார் அட்லி.

இவருக்கும் நடிகை பிரியாவுக்கும் காதல் மலர்ந்தது. பிரியா கனாகாணும் காலங்கள். டி.வி. தொடரில் நடித்தார். சூர்யாவுடன் ‘சிங்கம்’, ‘சிங்கம்–2’, கார்த்தியின் ‘நான் மகான் அல்ல’ படங்களில் நடித்து உள்ளார்.

அட்லி–பிரியா இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர். இதற்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதித்தனர்.
நடிகை பிரியாவை மணந்தார் டைரக்டர் அட்லி
அட்லி–பிரியா திருமணம் இன்று காலை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடந்தது. டைரக்டர் சங்கர் தாலியை ஆசீர்வதித்து கொடுக்க அட்லி மணப்பெண் பிரியா கழுத்தில் கட்டினார்.

திரையுலகினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர்கள் சிவகார்த்திகேயன், நந்தா, நாசர், டைரக்டர்கள் பாலா, சசிகுமார், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ஏ.எம்.ரத்தினம், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்பட பலர் நேரில் வாழ்த்தினார்கள்.

திருமண வரவேற்பு இன்று மாலை நடக்கிறது.
நடிகை பிரியாவை மணந்தார் டைரக்டர் அட்லி

ஆர்யா–நயன்தாரா நடித்த ராஜாராணி படத்தை டைரக்டு செய்து பிரபலமானார் அட்லி. இவருக்கும் நடிகை பிரியாவுக்கும் காதல் மலர்ந்தது. பிரியா கனாகாணும் ...

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ஹாரர் படம் ’6 - 5 = 2 ‘ படத்தின் டிரெய்லர்!
உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ஹாரர் படம் ’6 - 5 = 2 ‘ படத்தின் டிரெய்லர்!

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ஹாரர் படம் ’6 - 5 = 2 ‘ படத்தின் டிரெய்லர்!


 

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா திரைப்பட விமர்சனம்
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் சூரி கதாநாயகனாகவும் விமல்காமெடியன்ஆகவும் நடித்திருக்கும்படம் .ஓஇல்லை விமல் கதாநாயகனாகவும் ,சூரி காமெடியன்ஆகவும் நடித்திருக்கும் படம்.
படத்தில் கதை ஒரு வரியில் கூறனும் என்றால் சுமாரான  காமெடி படம் . படத்தில் சூரி ,விமல்இருவரும்ஒரேஊரில் சிறுவயதில்இருந்துஒன்றாக இருக்கும்  ஊர் காரர்கள் .இருவரும் சென்னையில் வேலை பார்கிறார்கள் .லீவுக்கு ஊருக்கு வரும் "சூரி " ஒரு பணக்கார பெண்ணை பார்த்து காதல் வசப்பட்டுவிடுகிறார் .அந்த காதல் ஜோடிக்கு உதவி செய்யும் விமல் அந்த பெண்ணிடம் 2௦ ரூபாய்க்கு கூட வழி இல்லாதவன் என்று கூறி அவனது நிலையை கூறி காதலை பிரித்து விடுகிறார் .காதலியுடன் சென்னைக்கு வர நினைத்த சூரிக்கு விமலுடன் சென்னைக்கு வருகிறார் .ரயிலில் வரும் பொழுது விமல் பிரியாஆனந்த்  சந்திக்கிறார் .அவரை பார்த்தவுடன் காதலும் செய்கிறார் .ஒரு நிறுத்தத்தில் ஆப் பிராந்திகாக ரயிலை விட்டு இறங்கி ரயிலை பிடிக்க ஓடிவருவதை பார்த்த விமல் அதிர்ச்சி அடைகிறார் .பிறகு தான் அவர் ஒரு டாக்டர்  ரயிலில் பிரசவத்திற்காக போராடும் பெண்ணிற்கு மருந்துகள் இல்லை என்பதால் இதை பயன்படுத்துகிறார் என்று புரிகிறது.

பிறகு என்ன மகிழ்ச்சியுடன் காதல் கொள்கிறார் விமல் .விமல் பத்தாம் வகுப்பை தாண்டாதவர் ,அவர் எப்படி டாக்டரை திருமணம் செய்யமுடியும் என்பதை இடியாப்ப சிக்கலுடன் சொல்லும் படம்தான்   ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
 ஒரு ஊர்ல ரெண்டு ராஜா திரைப்பட ஆல்பம்
http://tamilgoogletamil.blogspot.in/2014/11/blog-post_98.html
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா திரைப்பட விமர்சனம்

  ஒரு ஊர்ல ரெண்டு ராஜா திரைப்பட விமர்சனம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் சூரி கதாநாயகனாகவும் விமல்காமெடியன்ஆகவும் நடித்திருக்கும்படம் ....

"காதலில் சொதப்புவது எப்படி" பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் "மாரி" ...
 MAARI  First Look Poster

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் "மாரி" ... First Look Poster

"காதலில் சொதப்புவது எப்படி" பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் "மாரி" ...  MAARI  First Look Poster

அனிருத் இசையில் ஆக்கோ படத்தின் எனக்கென யாரும் இல்லையே பாடல் டீஸர்!
அனிருத் இசையில் ஆக்கோ படத்தின் எனக்கென யாரும் இல்லையே பாடல் டீஸர்!

அனிருத் இசையில் ஆக்கோ படத்தின் எனக்கென யாரும் இல்லையே பாடல் டீஸர்!

''வெள்ளக்காரன் நாட்டைவிட்டு போனப்ப, 'உங்க நாட்ல உள்ள எல்லா வளத்தையும் நாங்க  சுரண்டிட்டோம். இனி சுதந்திரத்தை வாங்கி என்னய்யா பண்ணப்போறீங்க?’னு கேட்டானுங்களாம். 'எல்லாத்தையும் சுரண்டிட்டீங்கனு தெரியும். ஆனால் உங்க யாராலும் திருட முடியாத ஒரு சக்தி இங்க இருக்கு. ஒரு மனுஷன் தடுமாறி விழுந்தா தாங்கிப்பிடிக்க இன்னொரு மனுஷன் இருக்கான்கிற மனிதாபிமானம் அது. என் தேசத்தில் இருந்து அதை யாராலும் திருட முடியாது’னு சொன்னாராம் காந்திஜி. இன்னைக்கு அந்த மனிதாபிமானம் எங்கே இருக்குங்கிற கேள்வியும் அதுக்கான பதிலும்தான் இந்த 'கிட்ணா’!'' - குறிப்பு எடுத்த தாள்களும், விரித்துவைத்த புத்தகங் களுமாகச் சூழ்ந்திருக்கும் அறையில் அமர்ந்திருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. ''இது என் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம்'' என்கிறார்.
'' 'கிட்ணா’ என்ன கதை?''
''எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி எழுதிய 'கீதாரி’ நாவல்தான் இதன் மூலக்கதை. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 'நாடோடிகள்’ படப்பிடிப்பு சமயத்தில்தான் இந்த நாவலைப் படிச்சேன். இதுவரை எந்தவொரு நாவலைப் படிக்கும்போதும் அழுதது கிடையாது. ஆனால் இதைப் படிக்கும்போது என்னையறியாமல் அழுதேன். அதற்கு, அந்த நாவல் பேசிய மனிதாபிமானம்தான் காரணம். சகோதரி தமிழ்ச்செல்வியிடம் முறையாக அனுமதி வாங்கி, அதில் சினிமாவுக்கான விஷயங்களைச் சேர்த்தேன். 'கிட்ணா’ உருவானான்.''
''அப்படி என்ன கதை இது?''
''காட்டுக்குள் வாழும் மனிதர்களிடம் இருக்கக்கூடிய ஈரம், ஊருக்குள் வாழும் மனிதர்களிடம் இருக்கிறதா? அப்படி என்றால், யார் ஊருக்குள் வாழ வேண்டியவர்கள், யார் காட்டுக்குள் வாழவேண்டியவர்கள் என்ற கேள்விகள்தான் கதை. கிட்ணா பேசும் வசனங்கள்ல இருந்து ஒண்ணே ஒண்ணு சொல்றேன். 'நீ செஞ்ச பாவமும் புண்ணியமும் உன் தலைக்கு மேல அடிச்சிட்டுக் கிடக்குது. பாவத்தை புண்ணியம் ஜெயிச்சிடுச்சுன்னா... நீ தப்பிச்ச. புண்ணியத்தை பாவம் ஜெயிச்சிடுச்சுன்னா... உனக்குள் சாத்தான் வந்துடுவான். அதனால முடிஞ்சவரைக்கும் நல்லது செஞ்சிடுங்கடா.’ இதை நீங்க சப்டைட்டில் பண்ணினா பைபிள் வாசகம் மாதிரியே இருக்கும். அதனால் 'கிட்ணா’ என்ற தலைப்புக்குக் கீழே 'குட் ஷெப்பர்டு’னு சப் டைட்டில் போட்டிருக்கேன்.''
''நாவலை மையமாக வைத்தே மொத்த ஸ்கிரிப்டையும் எழுதிட்டீங்களா?''
''இல்லை, நிறைய உழைப்பு தேவைப்பட்டது. அந்த மனிதர்களைத் தேடிப் போனபோது, அவங்க இப்பவும் அப்படியே இருப்பது தெரிஞ்சது. 'சாப்பிட்டீங்களா, நீச்சத் தண்ணி குடிக்கிறீகளா?’னு கேக்குறாங்க. தங்கள்கிட்ட இருக்கிற கொஞ்சம் உணவையும் மத்தவங்களோடு பகிர்ந்துக்க நினைக்கிறாங்க. ஆடுகள்தான் அவர்களின் உலகம், சொத்து... எல்லாம். அதனால, புல், பூண்டைக்கூட மதிக்கிறாங்க. நமக்கு இந்த உலகில் வாழ எவ்வளவு உரிமை உண்டோ, அதே உரிமை மற்ற ஜீவராசிகளுக்கும் உண்டுனு சொல்றாங்க. அவங்க வெச்சிருக்கும் வேல்கம்பு பற்றி ஒரு தகவல் கிடைச்சது. அது, ஆடுகளுக்குத் தேவையான இலைதழைகளை வெட்ட, தங்களைப் பாதுகாக்க, ஆடுகளைக் காவல் காக்க என அவங்களுக்கு அந்த வேல்கம்புதான் சாமி. கல்யாணம் காட்சி என வரும்போது, 'ஆடுகளைப் பாத்துக்கப்பா, கல்யாணத்தை முடிச்சிட்டு வர்றேன்’னு சொல்லிட்டுப் போக முடியாது. அதனால, மாப்பிள்ளை கையில் உள்ள வேல்கம்பை வாங்கிட்டுப் போய் வெச்சு தாலி கட்டச் சொல்வாங்களாம். அதாவது அந்தக் கம்பு அவனுக்கு சமம். அதை பெண்ணின் அருகே வைத்து, கணவனாகப் பாவித்து, நெருங்கிய உறவுப் பெண் ஒருத்தி தாலி கட்டுவாங்களாம். இது ஐதீகம். இப்படியான பல தகவல்கள்.
'கிட்ணா’வா நான். என் மனைவியா தன்ஷிகா. 'சாட்டை’ மஹிமா, அகிலா கிஷோர், சூரி, கஞ்சா கருப்புனு ஒன்பது கேரக்டர்ஸ். எல்லாமே கனமானவை. இதில் ஹீரோ என தனியாக யாரும் கிடையாது. கதை ஒரு சில நேரத்தில் சிலரை முன்னிறுத்தும். அந்த நேரத்தில் அவங்க ஸ்கோர் பண்ணிக்க வேண்டியதுதான்!''
''முக்கியமான பதிவு என்கிறீர்கள். அப்படி இருக்கையில் இயக்கி நடிப்பது சிரமமாகத் தெரியவில்லையா?''
''28 வயதில் தொடங்கி 68 வயதில் முடியும் 40 ஆண்டு கால வாழ்க்கையைப் பதிவு பண்றேன். எனக்குத் தெரிந்தவரை இதை எடுத்து முடிக்க ஒரு வருஷம் தேவைப்படும். ஒவ்வொரு பகுதியா எடுத்து, உடல், மனம் இரண்டை யும் மாற்றினால்தான், அடுத்த பகுதிக்குப் போக முடியும். சசி தந்த நடிப்பு வாய்ப்புகளும், சமீபத்தில் 'வேலையில்லா பட்டதாரி’ படத்துக்கான வரவேற்பும்தான் 'நம்மால் இதைப் பண்ண முடியும்’கிற நம்பிக்கையைத் தந்தது. 'கிட்ணா’வா மாறுவதுனு முடிவு பண்ணி இறங்கிட்டேன்.''
''உங்கள் நண்பர் குருவின் குடும்பத்தைச் தேடிச்சென்று பார்த்தது, விகடனில் கட்டுரையா வந்தபோது செம ரெஸ்பான்ஸ் கிடைச்சது. அதன் பிறகான நெகிழ்ச்சி சம்பவங்கள் உண்டா?''
''அந்தக் கட்டுரை இளைஞர்கள் நிறையப் பேரைத் தேடிப்போகவெச்ச அதே அளவு முதியவர்களையும் நிறையப் பாதிச்சிருக்கு. 'நான் ஏதோ ஒரு ஏக்கத்தில் போயிட்டு வந்துட்டேனே தவிர, அந்த வரவேற்பு எனக்கே பெரிய வியப்புதான். ஒரு சிக்னலில் நின்ன என் கார் கண்ணாடியை வயசான ஒரு அம்மா தட்டி, ரெண்டு கையாலும் என் தலையைத் தடவி நெட்டி முறிச்சு... 'விகடன்’ல படிச்சேன்யா. எனக்கு தினமும் காலையில் அந்தம்மா முகம்தான் கண்ணு முன்னால் வருது. அவங்க நல்லா இருக்காங்கங்கிறதே சந்தோஷமா இருக்கு. நீ நல்லா இருக்கணும்யா’னு சொன்னாங்க. நம்ம ஆபீஸுக்குக் கீழ ஒரு பெரியவர் இருப்பார். தினமும் வழியில் பார்ப்பேன். அவர் சொன்னார்... 'நீ தினம் வருவ போவ... சினிமாக்காரன்தானேனு நினைச்சிட்டு இருந்தேன். விகடன்ல அந்தக் கட்டுரையைப் படிச்சப் பிறகு, ஒரே ஒரு தடவை இப்ப உனக்குக் கைகொடுக்கணும்னு தோணுதுப்பா’னு கண்கள் கலங்கிப்போய் எனக்குக் கைகொடுத்தார். இந்த மாதிரி நிறைய மனிதர்கள்... நிறைய அனுபவங்கள்!''
''இப்ப குரு குடும்பம் எப்படி இருக்கு?''
''நான் அவங்களைப் பார்க்கச் சென்றபோது, என் கையில் இருந்ததை அவங்க வாங்க மறுத்தாலும் திணிச்சுட்டு வந்தேன். ஆனா, அதன் பிறகு ஆடுகளும் பசுமாடுகளும் அந்த வீட்டை நோக்கிப் போனபோது, 'நீ வந்து பாத்ததே போதும்யா. நீயும் என் புள்ளைனு சொல்லிட்டீல, அதான் நீ இருக்கீல்ல. இதெல்லாம் எதுக்குயா? என்னையைக் கடங்காரன் ஆக்கிடாத’னு சொன்னாங்க. அப்ப அவங்க வெச்ச ஒரே ஒரு கோரிக்கை, 'என் பேரனை மட்டும் எப்படியாச்சும் ஐ.ஏ.எஸ் ஆக்கிவிட்ரு’ என்பதுதான். விகடன்ல கட்டுரை வந்த அடுத்த நாளே, சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் இருந்து போன். 'நண்பா, விகடன்ல படிச்சேன். அவருக்கான புத்தகங்கள், தங்குறதுக்கான விஷயங்களை நீங்க பாத்துக்கங்க. அவர் படிப்புக்கான ஃபீஸ் எதுவுமே கட்ட வேண்டாம். நான் சேர்த்துக்கிறேன்’னு சொன்னார் சங்கர். இங்க எவ்வளவு நல்ல மனிதர்கள் இருக்காங்க. இப்ப அந்தத் தம்பி மூணு மாசமா படிச்சிட்டு இருக்கார். 'நீ குரூப்-4 பாஸ் பண்றியா, ஐ.ஏ.எஸ் ஆகுறியா?’ங்குறது உன் கையில்தான் இருக்கு. எவ்வளவு அவகாசம் வேணும்னாலும் எடுத்துக்க... படி. உனக்குத் தேவையானது எல்லாத்தையும் செஞ்சு தர்றேன்’னு சொல்லியிருக்கேன். படிச்சிட்டு இருக்கார். குருவின் ஆசி அவரை ஐ.ஏ.எஸ் ஆக்கிடும்னு நம்பிக்கை இருக்கு!''
-vikatan-
"நீச்சத் தண்ணி குடிக்கிறீகளா?”- இயக்குநர் சமுத்திரக்கனி

''வெ ள்ளக்காரன் நாட்டைவிட்டு போனப்ப, 'உங்க நாட்ல உள்ள எல்லா வளத்தையும் நாங்க  சுரண்டிட்டோம். இனி சுதந்திரத்தை வாங்கி என்னய்...

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்து ரிலீஸூக்குக்  காத்திருக்கும் படம் ‘ஐ’ . மிக பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ள ‘ஐ’ படத்தின் வெளியீடு எப்போது என்ற கேள்விக்கு இப்போதுவரை சரியான பதில் கிடைத்தபாடில்லை.
படத்தின் டீஸர் , பாடல்கள் என அனைத்தும் தற்போது வரை ஹிட்டடித்து வருகிறது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அனிருத் பாடிய மெர்சலாயிட்டேன் பாடல் பட்டிதொட்டி எங்கும் மெகா ஹிட்.
இந்த பாடல் காட்சிக்காக மொத்த குழுவும் சற்று அதிகமாகவே உழைத்திருக்கிறார்களாம். ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் பல கிராபிக்ஸ் காட்சிகள் இந்தப் பாட்டில் உள்ளதாம்.
உதாரணமாக எமி ஜாக்சன், மீன் போன்றும், டச் போன் போன்றும், மோட்டார் சைக்கிள் போன்றும் உருமாறும் கிராஃபிக்ஸ் காட்சிகளை பார்த்து ரசிகர்களே நிச்சயம் மெர்சல் ஆவார்களாம்.
'' இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் இயக்குநர் உட்பட அனைவரும் தீவிரமாக உழைக்கின்றனர். அவசரப்பட்டு நான் ரிலீஸ் செய்வது சரியாக இருக்காது. பணத்துக்காக என்றால் எப்போதோ வெளியிட்டு இருப்பேன்.
நான் மிகப்பெரிய சினிமா ரசிகன், என்னைப்போல் இன்னும் நூறாயிரம் பேர் தமிழ் சினிமாவை ரசிக்க வேண்டும். ’ஐ’ படத்தில் அனைவரது உழைப்பும் இருக்கிறது. மிக விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளேன் ''  என ரிலீஸ் குறித்து கூறியுள்ளார் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
மெய்சிலிர்க்க வைக்கும் மெர்சலாயிட்டேன் பாடல் !

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்து ரிலீஸூக்குக்  காத்திருக்கும் படம் ‘ஐ’ . மிக பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ள ‘ஐ’ பட...

நெருங்கி வா முத்தமிடாதே - கலிகாலம் பாடல் வீடியோ!

நெருங்கி வா முத்தமிடாதே - கலிகாலம் பாடல் வீடியோ!

நெருங்கி வா முத்தமிடாதே - கலிகாலம் பாடல் வீடியோ!

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா -திரைவிமர்சனம்


ஒரு ஊர்ல ரெண்டு ராஜா இந்த படம் நடிகர் விமலுக்கு ஒரு முக்கியமான படம் .விமல் இதற்கு முன் நடித்த படங்கள் கமர்சியலாக பெரிய அளவில் வெற்றி அடையவில்லை .ஆகையால் இந்த படத்தை அவர் ஆவலுடன் வெற்றிபெரும் என்று எண்ணுகிறார் .ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தின் இயக்குனர் கண்ணன் .அவர் இயக்கிய முந்திய படங்களானகண்டேன் காதலை, சேட்டை போன்ற படங்களை இயக்கியவர் .தற்போது இயக்கும் படம் தான் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா.
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் விமல் ,சூரி ஆகியோரின் காமெடியும் ,விமல் ,பிரியா ஆனந்த் ஆகியோரின்ரொமான்சும் படத்தின் பலம் .படத்தின் கதை என்பது ஒரு இடத்திற்காக இரண்டு நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போடுவது நகைச்சுவையாக  இருக்கும் படம் தான் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா

ஒரு ஊர்ல ரெண்டு ராஜாபடத்திற்குமுன்னணி இசைஅமைப்பாளர் D.இமான் அவர்கள் இசைஅமைகிறார் .ஒரு ஊர்ல ரெண்டு ராஜாஅக்டோபர் 2தேதி ரிலீஸ்ஆகிறது

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா  ஆல்பம்




















கண்டேன் காதலை, சேட்டை
கண்டேன் காதலை, சேட்டை
கண்டேன் காதலை, சேட்டை
கண்டேன் காதலை, சேட்டை
கண்டேன் காதலை, சேட்டை
கண்டேன் காதலை, சேட்டை
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா -திரைவிமர்சனம்

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா -திரைவிமர்சனம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா இந்த படம் நடிகர் விமலுக்கு ஒரு முக்கியமான படம் .விமல் இதற்கு முன் நடித்த படங்கள...

 வன்மம் - பாடட்டா பாடட்டா- பாடல் டீஸர்!

வன்மம் - பாடட்டா பாடட்டா- பாடல் டீஸர்!

  வன்மம் - பாடட்டா பாடட்டா- பாடல் டீஸர்!

Linga Teaser official announcement!-லிங்கா டீசர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 Super Star fans began yesterday evening to social websites.Linga Teaser official announcement!-The teaser of the film has been set because someone has started the Linga.It is now one of the official announcement.The teaser of the film will come out in the evening, "he said in Linga film's Facebook page.



சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் நேற்று மாலை பொழுதிலிருந்தே சமூக வலைத்தளங்களில் ட்ரண்டு செய்ய ஆரம்பித்து விட்டனர். ஏனெனில் லிங்கா படத்தின் டீசர் நேற்றே வருகிறது என யாரோ கிளப்பி விட்டார்கள்.தற்போது இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வந்துள்ளது. இதில் ’கண்டிப்பாக படத்தின் டீசர் இன்று மாலை வெளிவரும்’ என லிங்கா படத்தின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
Linga Teaser official announcement!-லிங்கா டீசர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Linga Teaser official announcement!-லிங்கா டீசர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   Super Star fans began yesterday evening to social web...

கத்தி திரைப்பட நாயகன் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் படத்தைத் தயாரித்த லைக்கா நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கத்தி திரைப்படத்தின் இறுதிகட்ட காட்சிகளின் போது 2ஜி அலைக்கற்றை ஊழல் பற்றிய வசனம் இடம்பெற்றிருந்தது. 2ஜி வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது ஊழல் நடந்ததாக வசனம் இடம்பெற்றது பற்றி அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது குறித்து ராமசுப்பிரமணியன் என்பவர் இன்று சென்னை நீதிமன்றத்தில் செய்திருந்த மனுவில், “2ஜி அலைக்கற்றை வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும் போது அதில் ஈடுபட்ட அனைவரும் ஊழல் செய்தவர்களே என்று எப்படி அந்தத் திரைப்படம் கருத்து கூற முடியும்?
அந்தக் குறிப்பிட்ட வசனம் அனைவரையும் மோசமாக சித்தரித்துள்ளது. அவர்களது மரியாதைக்குக் களங்கம் விளைவித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவைப் பதிவு செய்த அனுமதித்த நீதிமன்றம், இதன் மீதான விசாரணையை நவம்பர் 11-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
2ஜி-யை விமர்சித்த 'கத்தி': விஜய், முருகதாஸ் மீது அவதூறு வழக்கு

கத்தி திரைப்பட நாயகன் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் படத்தைத் தயாரித்த லைக்கா நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கத...


நடிகர் : ஷாருக்கான்நடிகை : தீபிகா படுகோனேஇயக்குனர் : ஃபரா கான்இசை : விஷால் தட்லானிஓளிப்பதிவு : மனுஷ் நந்தன் ஜாக்கி ஷெராப் ஒரு வைர வியாபாரி. இவர் வைத்திருக்கும் வைரத்தை எல்லாம் பாதுகாப்பாக வைப்பதற்காக சேப்டி லாக்கர் ஒன்று தேவைப்படுகிறது. இதற்காக ஷாருக்கானின் தந்தை அனுபம் கெரிடம் சேப்டி லாக்கர் செய்யும் படி சொல்கிறார். இவரும் தரமான சேப்டி லாக்கர் ஒன்றை செய்ய, அதில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான வைரத்தை வைக்கிறார் ஜாக்கி ஷெராப்.

இந்த சேப்டி லாக்கரை அனுபம் கெர் தனது கை ரேகையை வைத்து மட்டுமே திறக்கும் வகையில் செய்திருந்தார். லாக்கரை ஜாக்கி ஷெராப்பிடம் ஒப்படைக்கும்போது, உங்களின் கை ரேகையை பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார். ஆனால் ஜாக்கி ஷெராப், அனுபம் கெருக்கு மயக்க மருந்து கொடுத்ததுடன், லாக்கரில் உள்ள 100 கோடி வைரத்தையும் திருடி விட்டதாக பழி சுமத்தி அவரை ஜெயில் அடைத்து விடுகிறார்.

அந்த வைரத்தை ஜாக்கி ஷெராப்பே எடுத்துக் கொண்டு வைரம் தொலைந்து விட்டதாக நாடகம் ஆடி வைரத்திற்கான இன்சூரன்ஸ் பணத்தையும் பெற்றுக் கொண்டு மேலும் பணக்காரராகிறார். இதை அறிந்த ஷாருக்கான் ஜாக்கி ஷெராப்பை பழி வாங்க நினைத்து லாக்கரில் இருக்கும் வைரத்தை கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார். தற்போது வைரங்கள் துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலின் பாதாள அறையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த ஓட்டலின் ஒரு அறை வழியாக அந்த பள்ளத்திற்கு செல்லலாம் என்பதையும் ஷாருக்கான் அறிகிறார்.

 இந்நிலையில் அந்த ஹோட்டலில் உலக அளவிலான நடனப்போட்டி நியூ இயர் அன்று நடந்தப்படவுள்ளதை தெரிந்துக் கொள்கிறார் ஷாருக்கான். இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு அந்த வைரத்தை கொள்ளையடிக்க ஷாருக்கான் நினைக்கிறார். இதற்காக அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, சோனு சூட், போமன் இரானி, விவான் ஷா ஆகியோர் கொண்ட ஒரு நடன டீம் ஒன்றை உருவாக்குகிறார். இவர்களின் உதவியால் ஜாக்கி ஷெராப்பின் பாதுகாப்பில் இருக்கும் வைரத்தை கொள்ளையடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் ஷாருக்கான் திருடனாக தோன்றினாலும் வித்தியாசமான கதையால் மற்றப் படங்களில் இருந்து வேறுபடுகிறார். நடனம், காதல், ஆக்‌ஷன், நகைச்சுவை என அனைத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் தீபிகா படுகோனே அழகு பதுமை. இவரும் நடனம் கவர்ச்சி என ரசிகர்களை கவர்கிறார். அபிஷேக் பச்சன், சோனு சூட், போமன் இரானி, விவான் ஷா, அனுபம் கெர், ஜாக்கி ஷெராப் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

 விஷால் தட்லானி இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. மனுஷ் நந்தன் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகளும், பாடல்களும் பிரம்மிக்க வைக்கிறது. விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்து குடும்பத்துடன் ரசிக்கும்படி இயக்கி அதில் இசை, நடனம், சண்டைக் காட்சிகள் என நல்லதொரு பொழுதுபோக்கு படமாக உருவாக்கிய இயக்குனர் ஃபரா கானை பாராட்டலாம். மொத்தத்தில் ‘ஹேப்பி நியூ இயர்’ ரியலி ஹேப்பி.
ஹேப்பி நியூ இயர் விமர்சனம்

நடிகர் : ஷாருக்கான்நடிகை : தீபிகா படுகோனேஇயக்குனர் : ஃபரா கான்இசை : விஷால் தட்லானிஓளிப்பதிவு : மனுஷ் நந்தன் ஜாக்கி ஷெராப் ஒரு வைர வியாபார...

இணையத்தில் பலராலும் 'மாஸ்' படத்தின் போஸ்டர் காப்பி என்று கூறிவருவதற்கு இயக்குநர் வெங்கட்பிரபு விளக்கம் அளித்துள்ளார்.
'அஞ்சான்' படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கும் 'மாஸ்' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'மாஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார் இயக்குநர் வெங்கட்பிரபு.
அதன்படி, தீபாவளி அன்று வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வந்த நிலையில், ஹாலிவுட் படத்தின் போஸ்டர் டிசைனைக் காப்பி அடித்துவிட்டார் வெங்கட்பிரபு என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வந்தார்கள். அந்த போஸ்டருடன் 'போர்ன் ஐடென்டி' போஸ்டர் படத்தைச் சேர்த்து காப்பிதான் என பகிரப்பட்டன.
Mass Movie First Look Poster

இந்த நிலையில், இயக்குநர் வெங்கட்பிரபு அளித்துள்ள விளக்கத்தில், " 'மாஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீபாவளி அன்று வெளியிட்டோம். அந்தப் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் பரவலாக பேசப்பட்டது மட்டுமன்றி, ட்ரெண்ட்டும் ஆனது.
ஆனால், ஒரு தரப்பினர் மட்டும் இந்தப் போஸ்டர் பிரபலமான ஹாலிவுட் படத்தின் காப்பி என்று தவறான தகவல்கள் பரப்பி வருகிறார்கள்.
போஸ்டர் காப்பி என்று கூறுபவர்களுக்காக தெரிவிக்கிறேன். அப்படத்தின் போஸ்டர் 'மக்‌ஷாட் (MUGSHOT) என்ற தொழில்நுட்பம் மூலம் உருவாக்கியது. அதன் மூலம் பல ஹாலிவுட் படங்களின் போஸ்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆகவே, தமிழ் சினிமா ரசிகர்கள் காப்பி என்று கூறும் முன் அவற்றை உற்று நோக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
'மாஸ்' போஸ்டர் காப்பி அல்ல: வெங்கட்பிரபு விளக்கம்

இணையத்தில் பலராலும் 'மாஸ்' படத்தின் போஸ்டர் காப்பி என்று கூறிவருவதற்கு இயக்குநர் வெங்கட்பிரபு விளக்கம் அளித்துள்ளார். 'அஞ்சா...

வினய் டபுள் ஆக்‌ஷனில் நடிக்கும் ஆயிரத்தில் இருவர் படத்தின் டீஸர்!
வினய் டபுள் ஆக்‌ஷனில் நடிக்கும் ஆயிரத்தில் இருவர் படத்தின் டீஸர்!

வினய் டபுள் ஆக்‌ஷனில் நடிக்கும் ஆயிரத்தில் இருவர் படத்தின் டீஸர்!