ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்து ரிலீஸூக்குக் காத்திருக்கும் படம் ‘ஐ’ . மிக பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ள ‘ஐ’ படத்தின் வெளியீடு எப்போது என்ற கேள்விக்கு இப்போதுவரை சரியான பதில் கிடைத்தபாடில்லை.
படத்தின் டீஸர் , பாடல்கள் என அனைத்தும் தற்போது வரை ஹிட்டடித்து வருகிறது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அனிருத் பாடிய மெர்சலாயிட்டேன் பாடல் பட்டிதொட்டி எங்கும் மெகா ஹிட்.
இந்த பாடல் காட்சிக்காக மொத்த குழுவும் சற்று அதிகமாகவே உழைத்திருக்கிறார்களாம். ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் பல கிராபிக்ஸ் காட்சிகள் இந்தப் பாட்டில் உள்ளதாம்.
உதாரணமாக எமி ஜாக்சன், மீன் போன்றும், டச் போன் போன்றும், மோட்டார் சைக்கிள் போன்றும் உருமாறும் கிராஃபிக்ஸ் காட்சிகளை பார்த்து ரசிகர்களே நிச்சயம் மெர்சல் ஆவார்களாம்.
'' இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் இயக்குநர் உட்பட அனைவரும் தீவிரமாக உழைக்கின்றனர். அவசரப்பட்டு நான் ரிலீஸ் செய்வது சரியாக இருக்காது. பணத்துக்காக என்றால் எப்போதோ வெளியிட்டு இருப்பேன்.
நான் மிகப்பெரிய சினிமா ரசிகன், என்னைப்போல் இன்னும் நூறாயிரம் பேர் தமிழ் சினிமாவை ரசிக்க வேண்டும். ’ஐ’ படத்தில் அனைவரது உழைப்பும் இருக்கிறது. மிக விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளேன் '' என ரிலீஸ் குறித்து கூறியுள்ளார் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
மெய்சிலிர்க்க வைக்கும் மெர்சலாயிட்டேன் பாடல் !
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்து ரிலீஸூக்குக் காத்திருக்கும் படம் ‘ஐ’ . மிக பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ள ‘ஐ’ பட...
Post a Comment