சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கிரானைட்
முறைகேடுகளை விசாரிக்கவுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு துப்பாக்கி
ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க டி.ஜி.பி. அசோக்குமார்
உத்தரவிடப்பட்டுள்ளார்.
கனிமவள முறைகேடுகளை விசாரிக்க உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்து கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு), தென் மண்டல ஐ.ஜி., சென்னை மற்றும் மதுரை போலீஸ் கமிஷனர், மதுரை சரக டி.ஐ.ஜி., மதுரை போலீஸ் சூப்பிரண்டு, பாதுகாப்புப்பிரிவு சூப்பிரண்டு ஆகியோருக்கு டி.ஜி.பி. கடிதம் எழுதி உள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு காவல் துறை தலைமையகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், ''ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்குள்ள அச்சுறுத்தல் காரணமாக அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், அவருக்குத் தேவையான வசதிகளை நான்கு நாட்களுக்குள் மாநில அரசு செய்து தர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 28 ஆம் தேதியன்று உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தின் பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் ஒருவரை உடனடியாக நியமிக்க சென்னை மாநகர காவல் துறைக்கு உத்தரவிடப்படுகிறது. மேலும், சென்னைக்கு வெளியே சகாயம் செல்ல நினைக்கும்போது, அவர் தனக்கான பயணத் திட்டத்தை மாநகர காவல் ஆணையகரத்தில் முன்பே தெரிவித்து, பாதுகாப்புக்கான ஏற்பாட்டைக் கோரலாம். சாலை வழியாகப் பயணிக்கும்போதும் அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: டி.ஜி.பி. உத்தரவு
சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கிரானைட் முறைகேடுகளை விசாரிக்கவுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்ப...
Post a Comment