சண்டிகர்: ஹரியானா சாமியார் ராம்பால்
கைதுக்குப் பிறகு வெளிவந்துகொண்டு இருக்கும் அவரின் ஆஸ்ரம ரகசியங்கள்
ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகையாக அதிர்ச்சியூட்டுகின்றன.
வாழ்க்கையின் அர்த்தத்தை கண்டுபிடித்து, மனிதர்களை
நெறிப்படுத்தி 'மனிதமே நம் மதம்!' என்று கூறி, மக்களிடையே ஆதரவைத் திரட்டி
வைத்திருந்த சாமியார் ராம்பால், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது
உண்மையான ஆன்மீகவாதிகளிடமும் பக்தர்களிடமும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் கைது செய்யப்பட்ட சாமியார்களின்
நடவடிக்கைகளுக்குக் கொஞ்சமும் ராம்பால் சளைத்தவர் இல்லை என்று காட்டுகிறது
அவரின் ஆஸ்ரமம் குறித்து காவல்துறையினர் வெளியிட்டு வரும் தகவல்கள்.
ஹரியானா மாநிலம் ஹிசார் அருகே பர்வாலாவில் சாமியார் ராம்பால் ஆசிரமம் அமைத்து ஏராளமான பெண் சீடர்கள் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் தங்கி தீவிர ஆன்மீக பிரசாரம் செய்து வந்தார்.

இந்து,முஸ்லீம்,சீக்கியம்,கிறிஸ்துவம் என அனைத்து
மதத்தையும் தாண்டி மனிதம் மட்டுமே நமது மதம் என்ற இவரின் ஆன்மீக
பிரசாரத்திற்கு ஆதரவாளர்கள் நாள்தோறும் அதிகரிக்கத் தொடங்கினர். இதனால்
தனது 12 ஏக்கர் பிரமாண்ட ஆஸ்ரமத்தையும் தன்னையும் பாதுகாக்க தனியாக
பாதுகாப்பு படை அமைத்து தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தார்.
இங்கு ஏராளமான முறைகேடுகளும், சட்ட மீறல்களும் நடந்தன.
இறுதியாக 2006ஆம் ஆண்டு ஆசிரமத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை கொலை தொடர்பாக
ராம்பால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது மேலும் பல
வழக்குகள் நிலுவையிலும் உள்ளன.
நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகததால் போலீசார் ஆசிரமத்துக்குள் புகுந்து சாமியார் ராம்பாலை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாருக்கும் ராம்பால் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் 6 பேர் பலியானார்கள். பின்னர் கைதான சாமியார் ராம்பால் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ராம்பால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது சத்வோக் ஆசிரமத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
அப்போது ஏராளமான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 3 ரிவால்வர்கள், 19 ஏர்கன் துப்பாக்கிகள், 2 டபுள் பேரல் துப்பாக்கிகள், 2 ரைபிள்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளும், ஆயுதங்களும்,பெட்ரோல் குண்டுகளும் சிக்கின.
இது தவிர மிளகாய் தூள் நிரப்பிய குண்டுகள், அமிலம் நிரப்பட்ட சிரஞ்சிகள், ஹெல்மெட்டுகள், கைத்தடிகள், 20 ஜோடி கறுப்பு உடைகள், 800 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 டீசல் டேங்க் ஆகியவையும் இருந்தன.
மேலும் ராம்பாலின் படுக்கை அறையையொட்டியுள்ள அறையில் சோதனையிட்ட போது கர்ப்ப சோதனை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு மிளகாய் பொடி, பல்வேறு வகையான மாத்திரைகள், குஷன் மெத்தைகள், ராட்சத மெத்தைகள் போன்றவைகளும் இருந்தன.
மூடப்பட்டிருந்த ஒரு குளியல் அறையில் பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை போலீசார் மீட்டு மருத்துவ மனையில் சேர்த்தனர். இவர் மத்திய பிரதேச மாநிலம் அசோக் நகரை சேர்ந்த பிஜ்லேஷ் என்பது தெரியவந்தது.
மேலும் ராம்பாலுடன் மாவோயிஸ்ட் தலைவர் ஒருவரும் தங்கி இருந்தார். அவரும் ராம்பாலுடன் கைது செய்யப்பட்டார். எனவே ராம்பாலுக்கும் மாவோயிஸ்டுகளுக்குமான தொடர்பு பற்றி விசாரணை நடத்துவதற்காக சத்தீஷ்கர் மாநில போலீஸ் உதவியை ஹரியானா மாநில போலீசார் நாடியுள்ளனர்.இதனால் ராம்பால் விவகாரத்தில் இன்னும் பரபரப்பு கூடியுள்ளது.

தொடர்ந்து அம்பலமாகும் சாமியார் ராம்பால் ஆஸ்ரம ரகசியங்கள்!
சண்டிகர்: ஹரியானா சாமியார் ராம்பால் கைதுக்குப் பிறகு வெளிவந்துகொண்டு இருக்கும் அவரின் ஆஸ்ரம ரகசியங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகையாக அதிர்...
Post a Comment