அன்று நடந்தது என்ன ? எவ்வாறு கொல்லப்பட்டார் சு.ப தமிழ் செல்வன்: திடுக்கிடும் தகவல் இதோ !
நவம்பர் மாதம் 2ம் திகதி 2007ம் ஆண்டு , தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு சோகமான நாள் ! நிதியப் புன்னகை என்று அனைவராலும் அழைக்கப்பட்ட , தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர், சு.ப தமிழ்ச் செல்வன் கொல்லப்பட்ட நாள் ! அன்று அதிகாலை 6.00 மணிக்கு என்ன நடந்தது இதோ ஒரு பதிவு !
சு.ப தமிழ்ச் செல்வன் கொல்லப்படுவதற்கு சில, வாரங்களுக்கு முன்னர் தான் புலிகளால் நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல் ஒன்று இடம்பெற்று இருந்தது. அனுராதபுரம் வான் தளம் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதல் சிங்களத்தை நிலை குலையச் செய்தது. இதனால் இதற்கு பழிவாங்கவேண்டும் என்று, கோட்டபாய காத்துக்கொண்டு இருந்துள்ளார். இதேவேளை புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சுப தமிழ்ச் செல்வன் அடிக்கடி, சென்று வரும் அலுவலகம் ஒன்றுக்கு அருகாமையில், பாதிரியார் ஒருவர் தங்கி இருந்துள்ளார். இவர் கொழும்பில் இருந்து வந்து அவ்விடத்தில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. விமான தாக்குதல் நடைபெற்ற பின்னர் அவர் அவ்விடத்தில் இல்லையென்றும் தப்பிச் சென்றுவிட்டார் என்றும் புலிகள் தரப்பால் அன்று அதிர்வு இணையத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இதேவேளை இந்த விமானத் தாக்குதல் நடைபெற்ற அன்றைய தினம் அதிகாலை, பலாலியில் இருந்து ஒரு ஆளில்லா விமானம் ஏவப்பட்டுள்ளது. அது கிளிநொச்சி வான் பரப்பில் வட்டமிட்டவண்ணம் இருந்துள்ளது. ஓசை படாமல் வானில் நின்ற விமானத்தை எவரும் கவனிக்கவில்லை. ஒரு கறுப்பு நிற பஜோரோ வாகனம் மற்றும் ஒரு பிக்கப் வாகனம் என இரண்டு வாகனங்கள், முல்லைத்தீவில் இருந்து புறப்பட்டு கிளிநொச்சி நோக்கி வருவதை ஆளில்லா உளவு விமானம் வீடியோவாக பலாளி விமானத்தளத்திற்கு அனுப்பியுள்ளது. அதனைப் பார்த்த அதிகாரிகள் அதில் நிச்சயம் ஒரு புலிகளின் தலைவர் இருக்கவேண்டும் என்று நினைத்து விட்டார்கள். வாகனத்தை தாக்கி அழிக்கும், அதி சக்தி வாய்ந்த விமானங்கள் இலங்கையிடம் அப்போது இருக்கவில்லை.
மேலும் பலாலி விமானப்படை தளத்தில் இருந்து, விமானம் புறப்பட்டு வருமுன்னரே புலிகளது வாகனம் செல்லவேண்டிய இடத்தை சென்றடைந்துவிடும். இன் நிலையில் வாகம் எங்கே சென்று தரித்து நிற்கிறது என்பதனை துல்லியமாக அவதானித்த, சிங்கள படையினர் அந்த வீட்டை தாக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள். ஏற்கனவே பறப்பில் இருந்த ஆளில்லா விமானத்தை மீண்டும் பலாலிக்கு வரவளைத்துவிட்டு, துல்லியமாக ஆட்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வேறு ஒரு ஆளில்லா விமானத்தை அப்பகுதிக்கு பலாலிக்கு ஏவியுள்ளார்கள். அந்த ஆளில்லா விமானம், அப்பகுதிக்கு சென்று வட்டமிட ஆரம்பித்தவேளை, "பங்கர் பேஸ்டர்" எனப்படும் பதுங்கு குழியை தாக்கி அழிக்கும் ஏவுகணை பொருத்தப்பட்ட விமானத்தை அனுப்பியுள்ளது சிங்களம். இந்த விமானங்கள் சு.ப தமிழ்ச் செல்வன் அவர்கள் இருந்த வீட்டை நேரடியாகச் சென்று தாக்கவில்லை. மாறாக வானில் பெரும் சத்தத்தோடு வட்டமிட ஆரம்பித்தது.
இதன் சத்தத்தைக் கேட்ட அனைவரும் எழுந்து சென்று, வீட்டிற்கு அருகில் உள்ள பதுங்கு குழியில் இறங்கிக்கொண்டார்கள். புலிகளால் வடிவமைக்கப்பட்ட பதுங்கு குழி அது. மிகவும் பாதுகாப்பானதும் கொங்கிரீட்டால் கட்டப்பட்டும் இருந்தது. ஆனால் பங்கர் பேஸ்டர் குண்டுகளுக்கு எந்த ஒரு சக்திவாய்ந்த பதுங்கு குழியும் தாக்குப் பிடிக்காது என்பதே உண்மையாகும். குண்டு உள்ளே சென்று வெடிக்கா விட்டால் கூட , பெரும்பாலும் இக் குண்டைப் பாவித்தால், பதுங்கு குழி மூடப்பட்டு விடும். அதனால் மூச்சு திணறியே இறக்கவும் நேரிடலாம். வீட்டில் உள்ள அனைவரும் பதுங்கு குழிக்குள் இறங்குவதை ஆளில்லா விமானம் மூலம் அவதானித்த படையினர், அந்த பதுங்கு குழி மீது தாக்குதல் நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட பங்கர் பேஸ்டர் குண்டுகள் அந்தப் பதுங்கு குழியதை குறிவைத்து தாக்கப்பட்டது.
ஐயோ அண்ணா ! தமிழ்ச் செல்வன் அண்ணா இருந்த பதுங்கு குழிமேல் குண்டைப் போட்டு விட்டார்கள். பதுங்கு குழி மூடப்பட்டு விட்டது. தோண்டிக்கொண்டு இருக்கிறோம் என்று சமாதானச் செயலகத்தில் இருந்து அதிர்வின் ஆசிரியருக்கு தகவல் வந்தது. அடுத்து சில நிமிடத்தில் வந்த தொலைபேசி அழைப்பில் சு.ப தமிழ் செலவன் அண்ணா இறந்துவிட்டார் என்று கூறினார்கள். அதே நேரம் உணர்வாளர் வைகோ, நெடுமாறன் ஐயா, போன்றவர்கள் அழைப்பை விடுத்து இச்செய்தி உண்மையா என்று கேட்டு தொலைபேசியூடாகவே கதறி அழுதார்கள். திமுக கட்சி தலைவர் கலைஞர் கருணாநிதியே ஒரு கணம் ஆடி விட்டார். என்ன தான் அவருக்கு புலிகள் மேல் காழ்ப்புணர்வு இருந்தாலும் சு.ப தமிழ்ச் செல்வன் அவர்கள் மீது கலைஞருக்கு ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்தது. இவர்கள் இருவரும் ஒரு தடவை தொலைபேசியூடாகப் பேசியும் உள்ளார்கள். தமிழீழத்திலும் , தமிழகத்திலும் , மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் பெரும் சோகம் ஆட்கொண்டது. சமாதான காலத்தில் பல ஆயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் வன்னி சென்று அவரைப் பார்த்துப் பேசி பழகியுள்ளார்கள்.
அவர்கள் அனைவரும் தமது சொந்த அண்ணாவை இழந்தது போல ஒரு சோகத்தில் ஆழ்ந்துகொண்டார்கள். சிலர் புலிகளின் வீழ்ச்சிக் காலம் ஆரம்பமாகிவிட்டது என்று எதிர்வு கூறினார்கள். ஆனால் எதற்கும் கலங்கிப்போகாத தேசிய தலைவர் அன்றைய தினம், வீரவணக்கத்தை தெரிவித்து மக்களை சாந்தப்படுத்தினார். அவர் வார்த்தைகள் தமிழர்களுக்கு புத்துயிர் ஊட்டியது ! தாம் ஒரு புலிகளின் தலைவரை கொல்லப்போகிறோம் என்று தெரியும், ஆனால் அது சு.ப தமிழ்ச் செல்வன் தான் என்று எங்களுக்கு தெரியாது என்று சிங்களப் படையினர் தெரிவித்தார்கள். ஆனால் இவர்கள் திட்டமிட்டு தான் சு.ப தமிழ்ச் செல்வனைக் கொன்றார்கள் என்று பலர் இன்னும் கூறிவருகிறார்கள். மேல் சொல்லப்பட்ட சில குறிப்புகள் படையினர், 2012ம் ஆண்டு வெளியிட்ட புத்தகம் ஒன்றில் இருந்து பெறப்பட்ட தகவல் ஆகும். இந்த ஆப்பரேஷனைச் செய்த படையதிகாரி ஒருவர் ஓய்வுபெற்றபின்னர் எழுதிய நூல் அதுவாகும்.
எவ்வாறு கொல்லப்பட்டார் சு.ப தமிழ் செல்வன்: திடுக்கிடும் தகவல் இதோ !
அன்று நடந்தது என்ன ? எவ்வாறு கொல்லப்பட்டார் சு.ப தமிழ் செல்வன்: திடுக்கிடும் தகவல் இதோ ! நவம்பர் மாதம் 2ம் திகதி 2007ம் ஆண்டு , தமிழீழ வ...
Post a Comment