108 திவ்ய தேசங்களில் முதன்மையாக திகழ்வது ஸ்ரீரங்கம். இந்த ஸ்தலத்தில் உற்சவத்திற்கு பஞ்சமில்லை. ஆனால், எத்தனை பண்டிகைகளும், உற்சவங்களும் வந்தாலும் சம்ப்ரோக்ஷனம் (கும்பாபிஷேகம்) போல வருமா?
ஆம்! பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கத்தில் சம்ப்ரோக்ஷனம் நடக்கப்போகிறது. இதன் முதற்கட்டமாக கோயிலை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மதில் சுவர்கள், கோவில் கோபுரங்கள், கற்சிலைகள், சிற்பங்கள் முதலியவை சீர்செய்து புதுமையாகவும், அதே சமயம் அதன் பழமை மாறாமலும் புது பொலிவு அளிக்கப்படுகிறது.
மதில் சுவர்களும், கோபுரங்களும் பல வருடங்களாக வலிமையுடன் நின்று வந்தன. ஸ்ரீரங்கத்தை சுற்றி உள்ள மதில்களும், கோபுரங்களும் எண்ணற்றவை. ஆனால் இன்று இயற்கை சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் தனது பொலிவையும், வலிமையும் இழந்து விட்டது. மேலும், மதில் சுவர்களில் பெரும்பாலானவை வலுவிழந்து விட்டதால், அவைகள் மறுபடியும் உயரக் கட்டப்படுகிறது. இந்த மதில் சுவர் சீரமைப்பிற்காக ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக தலை நிமிர்ந்து அனைவரையும் வரவேற்கும் கோபுரம். 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்பது ஆன்றோர் வாக்கு. அதை மெய்யாக்க கோபுரங்கள் செப்பனிடப்பட்டு, அதில் மண்டியுள்ள அழுக்கு, குப்பைகளை அப்புறப்படுத்தி, உடந்த சிலைகள் சரி செய்யப்பட்டு, புதியதாக வண்ணம் பூசப்படுகிறது.
பெரும்பாலான பணிகள் முடிந்து விட்ட நிலையில், இன்னும் வண்ணம் பூசும் பணி மட்டும் நடைபெற உள்ளது. இதையடுத்து, 2015 இறுதி அல்லது 2016 தொடக்கத்தில் சம்ப்ரோக்ஷனம் (கும்பாபிஷேகம்) நடைபெறும் என கூறப்படுகிறுது. இந்த பணிகளின் அனைத்து மேற்பார்வையும் கோவில் அறங்காவலர் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் தலைமையில் டி.வி.எஸ்ஸிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.
மு.கோதாஸ்ரீ
(மாணவ பத்திரிகையாளர்)
படங்கள்: தே. தீட்ஷித்
மு.கோதாஸ்ரீ
(மாணவ பத்திரிகையாளர்)
படங்கள்: தே. தீட்ஷித்
-vikatan-
கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் ஸ்ரீரங்கம்!
108 திவ்ய தேசங்களில் முதன்மையாக திகழ்வது ஸ்ரீரங்கம். இந்த ஸ்தலத்தில் உற்சவத்திற்கு பஞ்சமில்லை. ஆனால், எத்தனை பண்டிகைகளும், உற்சவங்களும் வந...
Post a Comment