தைராய்டு பிரச்னை பெரும்பா லும் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. அதுவும்
இளம்பெண்களை இந்த தைராய்டு பாடாய்படுத்துகிறது. இதை விரட்ட சில
விளக்கங்கள். கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு
சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும்
பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கமே இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை
பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது. தைராய்டு பெண்களின் தலையாய
பிரச்னையாக மாறி வருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே
பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும் நோய்க்கிருமிகளால்
தாக்கப்படுவதில்லை. அயோடின் குறைவே இதற்கு காரணம். தைராய்டு
பாதிக்கப்பட்டால் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப்போகலாம். சில பெண்கள்
குறைந்த வயதிலேயே பருவடையும் நிலையும் ஏற்படும். இந்த நோய் எல்லா வயது
பெண்களையும் பாதிக்கிறது. ரத்த தைராக்சின் ஹார்மோன் குறைந்த அளவு
இருப்பதால் நோய் பாதிப்பு உண்டாகிறது. உடல் பருமன் அதிகரிப்பு, உடல்
சோர்வடைதல், அதிக தூக்கம், முடி உதிர்தல், குளிர் தாங்க முடியாத தன்மை,
இதயத்துடிப்பு குறைந்து கொண்டே போவது, மாதவிடாய் அதிகமாக உள்ள நிலை,
ஞாபகசக்தி குறைதல், சருமம் வறட்சியாக காணப்படுதல் ஆகியவை இதன்
அறிகுறியாகும். இந்த நோய் உள்ளவர்கள், பொதுவாக தைராக்சின் மாத்திரையை
வாழ்நாள் முழுவதும் உட்கொள்ள வேண்டும். ஆண்டிற்கு ஒருமுறை ரத்த
பரிசோதனையின் முலம் தைராக்சின் அளவை அறிய வேண்டும்.
பொதுவாக தைராய்டு சுரப்பி பெரிதாவதை ‘காய்டர்‘ என்று அழைக்கப்படுகிறது. பல காரணங்களால் இந்த கட்டி ஏற்படுகிறது. 5 முதல் 10 சதவீதம் பெண்களிடம் காணப்படுகிறது. தைராய்டு கட்டிகள் புற்றுநோய் (அ) புற்றுநோய் இல்லாத கட்டிகளாக உருவாகிறது. புற்றுநோய் இல்லாத கட்டிகள் மெதுவாக பெரிதாகும். இதனால் இதர உடல் உறுப்புகளையும் பாதிக்கும் அபாயம் ஏற்படலாம். இதை கண்டுபிடிக்க அல்ட்ரா ஸ்கேன் மற்றும் திசுப்பரிசோதனை ஆகியவற்றின் மூலம் தைராய்டு கட்டியின் தன்மையை எளிதில் கண்டறியலாம். பாரா தைராய்டு நாளமில்லா சுரப்பி: நமது உடலில் மொத்தம் 4 பாரா தைராய்டு சுரப்பிகள் உள்ளன. இந்த சுரப்பிகள் தைராய்டு சுரப்பியின் பின்புற கழுத்தில் உள்ளது. இந்த சுரப்பிகள் பாரா தைராய்டு ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் ரத்தத்தில் கால்சியம் அளவினை கட்டுப்படுத்தும். சரியான அளவு கால்சியம் ரத்தத்தில் இருப்பது மிகவும் அவசியமானது. இதில் ஏற்படும் சிறு மாற்றங்களினால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடலில் பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கு கால்சியத்தின் அளவு மிக முக்கிய பங்களிக்கிறது, முக்கியமாக நரம்பு, தசை, இருதய செயல்பாடுகளுக்கு கால்சியம் மிகவும் அவசியமானது. உடலில் 99 சதவீதம் கால்சியம் எலும்பில்தான் உள்ளது. அறிகுறிகள்: தைராய்டு சுரப்பி குறைவாக இருக்கும் பெண்களுக்கு தொடக்கத்தில் மாத விலக்கில் மாற்றம் ஏற்படலாம். (அதிகமாக அல்லது குறைவாக இருக்கும்) இளம்பெண்களுக்கு கருமுட்டையில் நீர் கட்டிகள் (பாலி சிஸ்டிக் ஓவரியன் டிஸஸ்) இருக்கலாம்.
சில பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு பிறகு தைராய்டு சுரப்பி குறைவாக இருக்கும். குழந்தை பிறப்புக்கு பிறகு உடல் குண்டாகி, முகம் பருமனாகிவிடும். கைகளில் வீக்கம், கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்படலாம். கை, கால்கள் உளைச்சல், மூட்டுவலி, ஞாபக மறதி, மனச்சோர்வு அதிகமாகும். சிலருக்கு குரல் மாறும். எச்சில் விழுங்கும்போது வலி ஏற்படும். சருமம் வறண்டு பொலிவு இழந்து காணப்படும். கரு முட்டைகள் சரியாக வளர்ச்சியடையாது. உடல் பருமன் காரணமாக குழந்தை பிறப்பு தடுக்கும். சாப்பிடக்கூடியவை தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்ய வேண்டுமென்றால் அயோடின், செலினியம் மிக முக்கியமாகும். செலினியம் அதிகம் உள்ள உணவு வகைகளான இறைச்சி, மீன், காளான், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் ஆகியவையும் அவசியம். உணவில் பசலைக்கீரை, எள், பூண்டு ஆகியவை சேர்த்து சாப்பிடுவது நல்லது. உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும்போது தண்ணீரை வடித்து விட்டு பயன்படுத்தலாம்.
முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும். சிகிச்சை: தைராய்டால் ஏற்படும் குரல் பிரச்னைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உடல் சோர்வின்போது, அகில் கட்டையை பொடி செய்து அதை நெருப்பில் தூவி வரும் புகையை முகரலாம். அசோக மரப்பட்டையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு குணமாகும். தூதுவளைக் கீரைச்சாறு 30 மிலி அளவில் தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கரையும். தும்பை இலையை அரைத்து கழுத்துப் பகுதியில் பற்று போட்டால் கழலைகள் குணமாகும்.

தைராய்டு பிரச்னை தீர்க்கும் கீரைகள்-Thyroid problem solving greens
தைராய்டு பிரச்னை பெரும்பா லும் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. அதுவும் இளம்பெண்களை இந்த தைராய்டு பாடாய்படுத்துகிறது. இதை விரட்ட சில விளக்கங...
Post a Comment