அடிமாடுகளாக
விற்கப்படுகின்ற நாட்டு மாடுகளை தடுத்து, அவர்கள் கேட்கும் விலைகொடுத்து
வாங்கிவந்து, தனது கோசாலையில் பராமரித்து வருகிறார் திருப்பூர் மாவட்டம்
காங்கேயம் பகுதியைச்சேர்ந்த இளைஞர் வி.சிவக்குமார்.
"எம்.பி.ஏ.படிக்க அமெரிக்கா போனவன். படிச்சு முடிச்சு பட்டத்தை வாங்கியதும் அங்கேயே ஒரு வேலையில சேர்ந்து செட்டில் ஆயிட்டேன். 18 வருஷம் அமெரிக்காவில் இருந்தேன். அங்கு இருக்கிற போது, கூட வேலை பார்க்கிறவங்களுக்கு எல்லாம் கிளைமேட் சேன்ச், குடிநீர் மாற்றம் போன்றவைகளினால் ஏதாவது உடல் நல பிரச்னை வந்து போயிட்டிருக்கும். ஆனா, எனக்கு மட்டும் சிறு ஜலதோஷம் கூட வந்தது கிடையாது. இது ஏன்? என்று யோசித்தபோதுதான் அதற்கான விடை கிடைத்தது. அதுதான் நாட்டு மாடு.

நான் பிறந்தது முதல், அமெரிக்கா போகும்வரை தினம் தோறும்
நான் குடித்து வந்தது நாட்டு மாட்டுப்பால், உணவில் சேர்த்து நாட்டு மாட்டு
மோர், பருப்பு சாதத்தில் பிசைஞ்சு சாப்பிட்டது நாட்டு மாட்டு நெய். வேறு
மாடுப்பாலை என் கண்ணுல கூட காட்டியதில்லை என் குடும்பத்தினர். பல வருஷமா
நான்குடிச்சு வளர்ந்த நாட்டு மாட்டுப்பால்தான் நான் நோய் எதிர்ப்பு
சக்தியுடன் விளங்கியதுக்கு காரணம் என்பதை என் வாழ்வில் நடந்த பல விஷயங்கள்
உணர்த்திச்சு.
அதே சமயம், எனக்கு திருமணம் முடிஞ்சு குழந்தையும் பிறந்தது. நம்மளப்போலவே நம்ம குழந்தையும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்கணும். அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலம் முக்கியம். அதுக்கு நாட்டு பசும்பால் அவசியம். ஆனா, அதற்கான வாய்ப்பு அமெரிக்காவில் இல்லை. அதுக்கு ஒரே வழி சொந்த மண்ணுக்கு திரும்புவதுதான். அதை என் மனைவி திவ்யாவிடம் சொன்னேன். அவரும் அதை மனம் உவந்து ஏற்றுக்கொண்டார்.
18 வருஷ அமெரிக்கா வாழ்க்கையை விட்டுட்டு,
சொந்தமண்ணுக்கு வந்தோம். சிறுவயது முதல் நாட்டு மாட்டுப்பால் குடித்து
வளர்ந்த என்னைபோலவே எனது இரண்டரை வயது மகன் தியான் நமச்சிவாயாவும்
காங்கேயம் நாட்டுப்பசும்பால் தினமும் குடிக்கிறான். இப்ப எங்க குடும்ப பால்
தேவைக்காக 7 நாட்டுப்பசு வெச்சு கறக்கிறோம். சரி..நமக்கு மட்டுமே
நாடுப்பசும்பால் கிடைச்சா போதுமா? மற்றவங்களும் அதை பயன்படுத்தணும் என்கிற
எண்ணத்தில் கோசாலை ஒண்ணை காங்கேயம் பக்கமுள்ள காடையூரில் ஆரம்பிச்சேன்.
லாரி ஏறி போக இருந்த நாட்டுமாடுகளையும், கப்பலேறிப்போக
இருந்த கன்னுக்குட்டிகளையும் விலைகொடுத்து மீட்டு கொண்டுவந்து
கோசாலையில்வைத்து பராமரித்து, அவைகளை நல்ல முறையில் வளர்த்த விரும்பும்
ஆர்வமுள்ளவர்களுக்கும், நாட்டு மாட்டின் மகிமை தெரிந்த ‘ஜீரோபட்ஜெட்’
விவசாயிகளுக்கும் அசல் விலைக்கே கொடுத்து வர்றேன். இதுவரைக்கும் மீட்டுவந்த
நாட்டுமாடுகளை 137 பேருக்கு கொடுத்துள்ளேன். இப்ப கோசாலையில 34 மாடுகள்
இருக்கு.
இதுபோக, கல்லூரிகள், ரோட்டரி மற்றும் ல்யன்ஸ் கிளப்புகள், தொழில் வர்த்தக சபைகள் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து நாட்டுமாட்டின் மகிமை குறித்த கருத்தரங்குகளில் பேசிவருகிறேன். அவைகளின் பெருமை சொல்லும் 1000க்கும் மேற்பட்ட விளக்கப்படங்களையும் (பவர் பாயின்ட்) திரையிட்டு விளக்கிபேசியும் வருகிறேன்.
‘வீட்டுக்கு ஒரு நாட்டு மாடு.......வியாதிக்கு பூட்டுப்போடு’’ என்கிற கொள்கையுடன் நாட்டுமாடு குறித்த பிரசாரத்தை நாடு முழுதும் எடுத்து செல்ல இருக்கிறேன் என்ற சிவக்குமார்‘ ஆயுர்‘ என்கிற பெயரில் மருத்துவம் சம்பத்தப்பட்ட நிறுவனம் ஒன்றை அங்குள்ள சில நண்பர்களுடன் இணைந்து நடத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டுமாடுகளின் மகிமை குறித்து அறிந்த டாக்டர் ராவ் மற்றும் அவரது மனைவி உமா ஆகிய அமெரிக்க வாழ் இந்தியத்தம்பதியர் வர்ஷா, விருஷா என்ற பெயரிட்டு இரண்டு நாட்டுமாடுகளை இவர் கோசாலையில் வளர்த்து வருகிறார்கள்.

அந்த மாடுகளை படம் எடுத்து அவ்வப்போது அவர்கள்
பார்வைக்கு அனுப்பிவரும் சிவக்குமார், நாட்டு மாடுகளிலிருந்து அர்க், சோப்,
பல்பொடி, ஊதுவர்த்தி ஆகிய மதிப்புக்கூட்டிய பொருட்கள் தயாரிக்கும்
பயிற்சியையும் விவசாயிகளுக்கு கொடுத்துவருகிறார்.
-;ஜி.பழனிச்சாமி
-;ஜி.பழனிச்சாமி
-விகடன்-
அடிமாடுகளை மீட்கும் 'அமெரிக்க' இளைஞர்!
அ டிமாடுகளாக விற்கப்படுகின்ற நாட்டு மாடுகளை தடுத்து, அவர்கள் கேட்கும் விலைகொடுத்து வாங்கிவந்து, தனது கோசாலையில் பராமரித்து வருகிறார் தி...
Post a Comment