இந்தியாவின் காஷ்மீர் மற்றும் இமாச்சலபிரதேச பகுதிகளில் சீன ராணுவம்
அடிக்கடி ஊடுருவி வருகிறது. இதுவரை தரைவழியாக நடந்து வந்த ஊடுருவல்
சம்பவங்கள் தற்போது நீர் வழியாகவும் நடக்க தொடங்கியுள்ளது. அதன்படி
எல்லையில் அமைந்துள்ள பாங்காங் ஏரி வழியாக சீன ராணுவம் சமீபத்தில் ஊடுருவிய
சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது.
காஷ்மீரின் லடாக் அருகே கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 350 மீட்டர் உயரத்தில், இமயமலை பகுதியில் இந்த ஏரி அமைந்துள்ளது. சுமார் 135 கி.மீ. நீளமும், 5 கி.மீ. அகலமும் கொண்டு பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரியில், 45 கி.மீ. பகுதி இந்தியாவிலும், மீதமுள்ள 90 கி.மீ. பகுதி திபெத், சீன பகுதிகளிலும் உள்ளது. ஏரியின் இந்திய பகுதியில் இந்தோ -திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அதிநவீன படகுகளுடன் ரோந்து பணிகளை கவனித்து வருகின்றனர். இந்த ஏரி வழியாக கடந்த மாதம் 22-ந் தேதி சீன ராணுவம் இந்திய பகுதிக்குள் திடீரென ஊடுருவியது. உடனே இதை கண்டுபிடித்த இந்தோ-திபெத் எல்லைப்பாதுகாப்பு வீரர்கள், அந்த ஏரியில் உண்மையான எல்லைக்கட்டுப்பாடு கோடாக கருதப்படும் பகுதியில் சீன வீரர்களை இடைமறித்தனர்.
பின்னர் சீன வீரர்களை ஒரு அங்குலம் கூட முன்னோக்கி நகர இந்திய வீரர்கள் அனுமதிக்கவில்லை. அதேநேரத்தில் ஏரியின் மேற்குகரை பகுதியில் சாலை வழியாகவும் சீன வீரர்கள் இந்தியப்பகுதிக்குள் நுழைந்தனர். அங்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்தோ-திபெத் வீரர்கள், ‘இது எங்கள் பகுதி’ என குறிக்கும் பேனர்களை அசைத்து சீன வீரர்களை நிறுத்தினர். இதனால் எல்லையில் பதற்றம் உருவானது. பின்னர் இந்த அத்துமீறல் தொடர்பாக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்தது. இதைத்தொடர்ந்து இரு பகுதிகளில் இருந்தும் சீன வீரர்கள் திரும்பி சென்றனர்.

காஷ்மீரில் சாலை மற்றும் ஏரி வழியாக சீன ராணுவ ஊடுருவலை தடுத்து நிறுத்திய இந்திய வீரர்கள்
இந்தியாவின் காஷ்மீர் மற்றும் இமாச்சலபிரதேச பகுதிகளில் சீன ராணுவம் அடிக்கடி ஊடுருவி வருகிறது. இதுவரை தரைவழியாக நடந்து வந்த ஊடுருவல் சம்பவங...
Post a Comment