சாம்பிளுக்கு...
* சலூன் கடைக்காரர் மீசையை அட்ஜஸ்ட் செய்யும்போது இடது அல்லது வலதுபுறமாகக் கண்ணைத் திருப்பிக்கொள்வது. ரெண்டுமே இல்லையெனில் கண்களை மூடிக்கொள்வது.
* சினிமா பார்க்கும்போது 'குறியீடு'களைக் கண்டுபிடிப்பது.
* பெண்களுக்கு மெசேஜ் அனுப்பும்போது 'hi'க்கு பக்கத்தில் மூன்று புள்ளிகள் வைப்பது.
* வேட்பாளர்கள் ஓட்டுக்குப் பணம் கொடுப்பது, மக்கள் அதை வாங்குவது.
* திருமணத்துக்குப் பரிசாகத் தர கடிகாரம் வாங்குவது.
* கல்யாணம், காதுகுத்து, கருமாதி எல்லாத்துக்கும் 'சரக்கு' கேட்பது.
* பஸ், ரயில் எதில் பயணித்தாலும் ஜன்னல் சீட்டுக்குத் துண்டு போடுவது.
* முக்கியமாக... போன்காலோ, மெசேஜோ வரவில்லையென்றாலும் நிமிடத்துக்கு ஒருமுறை மொபைலைப் பார்த்துக்கொள்வது.
இப்படி இன்னும் பல இருக்கு பாஸ்!
- கே.ஜி.மணிகண்டன்
-vikatan-
மனிதனுடைய அனிச்சைச் செயல்களில் கீழ்கண்டவற்றையும் கட்டாயம் சேர்த்துக்கொள்ளலாம்! அந்த அளவுக்கு வளர்ந்துவிட்டது மனிதர்களின் 'அனிச்சைச் ...
Post a Comment