மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு டீக்கடை முன்பு, ஏராளமான பெண்கள் திரண்டிருந்தனர். இதைப்பார்த்த நாம், என்னவென்று அருகில் சென்று பார்த்தோம்.அங்கு ஒரு போர்டில் 'மற்ற ஊரில் இருந்து கைகுழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு தரமான பால் இலவசமாக வழங்கபடும், இப்படிக்கு R.குணா சுரேஷ்' என எழுதபட்டிருந்தது.
பாலில் கலப்படம், பால் விலை ஏற்றம் என இன்று தமிழ்நாடே போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும்போது, இதை பார்த்ததும் ' அட பரவாயில்லையே, இந்த காலத்தில் இப்படியும் ஒருவரா..?' என்ற வியப்பு மேலிட, குணாசுரேஷை சந்தித்து பேசினோம்.
இங்கும் சில டீக்கடைகளில் பாலில் பலவிதமான கலப்படம் செய்றாங்க. மேலும், பால் கெட்டியா இருப்பதற்காக கிழங்கு மாவு சேர்க்கிறாங்க. அது பெரியவங்களுக்கே ஒத்துக்காது. குழந்தைகளுக்கு எப்படி இருக்கும். எனவே, தான் கைக்குழந்தைகளோடு வருபவர்களுக்கு கலப்படம் இல்லாத தரமான பாலை இலவசமாக வழங்கி வருகிறேன். இதனால் எனக்கு நஷ்டம் ஏற்படவில்லை. இதற்கு எனது தம்பியும் உதவியா இருந்து வருகிறார்'' என்றவர்,
''என்னுடைய இந்த சேவையை கேள்விபட்ட மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட மேயர், தமிழ்நாடு நுகர்வோர் மக்கள் இயக்க மகளிரணி என பலரும் பாராட்டினாங்க. இதுபோன்று எல்லா பேருந்து நிலையங்களிலும் தன்னார்வம் கொண்டவர்கள் செய்ய வேண்டும் என சொல்றாங்க. நான் இதை விளம்பரத்திற்காக செய்யல, இதுல எனக்கு பெரிய மன நிம்மதி கிடைக்குது. நாம போனாலும், நம்ம பேரு நிக்கனும்” என்கிறார்.
இவருக்கு இருக்கும் ஒரே ஆசை முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்பதுதானாம்.
வாழ்த்துக்கள் !
நன்றி -ப.சூரியராஜ்
கைக்குழந்தைகளுக்கு கலப்படமில்லாத இலவச பால் ! மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு டீக்கடை முன்பு, ஏராளமான பெண்கள் திரண்டிர...
Post a Comment