சக்தி பீடத்தலங்கள் வரிசையில் இரண்டாவதாக அமைந்து விளங்குவது மதுரை
பதியாகும். இம்மதுரைத் தலம், மந்திரிணி பீடத்தலமாகும்.
வைகை ஆற்றின் கரையிலுள்ள மதுரைத்தலம் இவ்வுலகில் வாழும் போதே வீடு பேறு
(சீவன் முத்தி) அளிக்கும் சிறப்புடையதாகும். ஆகையால் இத்தலத்திற்குச் சீவன்
முத்திபுரம் என்னும் பெயரும் உண்டு.
இதற்குக் காரணம், மீனாட்சி அம்மையாருடன் சுந்தரேசுவரர் கோவில் கொண்டு எழுந்தருளித் திகழ்வதுதான். சக்திக்கு முக்கியத்துவமுடைய தலங்களுள் மதுரை குறிப்பிடத்தக்க பெருமையும் சிறப்பும் உடையது. மதுரையே மீனாட்சி, மீனாட்சியே மதுரை என்று கூறும் அளவிற்கு இத்தலத்தில் அன்னை மீனாட்சி முக்கியத்துவமும் சிறப்பும் கொண்டு விளங்குகின்றாள்.
அன்னை மீனாட்சியின் நிழலிலேயே சுந்தரேசுவரர் இங்குத் திகழ்கின்றார். எனவேதான் இத்தலத்துத் கோவிலுக்கு மீனாட்சி சுந்தரரேசுவரர் கோவில் என்னும் திருப்பெயர் அமைந்தது. மீனாட்சி என்னும் திருப்பெயர், மீன்போன்ற கண்களையுடையவள் என்னும் பொருளைக் குறிப்பது. மீன+அட்சி-மீனாட்சி.
மீனம்-மீன்,அட்சம்-கண், அட்சி-கண்ணையுடைவள். மீன், தன் முட்டைகளைக் கண்ணால் பார்த்து நின்று, அக்கண்பார்வைத் திறனால் அம்முட்டைகளினின்று குஞ்சுகளைத் தோன்றச் செய்து காப்பாற்றும் இயல்புடையது. அவ்வாறே அன்னை மீனாட்சியும் உலகத்து உயிர்களையெல்லாம் தன் அருள்கனிந்த கடைக்கண் பார்வைத் திறத்தால் பாதுகாத்து அருளுகின்றாள்.
அன்னை மீனாட்சி, தன் கணவனைச் செல்வம், அரசு முதலிய வாழ்வில் உயர்த்தும் மனைவியாக குணவதியாக விளங்குவதோடுன்றி, தன் குழந்தைகளாகிய உலக உயிர்களுக்கெல்லாம் ஆக்கத்தை -செல்வச் செழிப்பை அருளுபவளாகவும் திகழ்கின்றாள். எனவே தான் பசுமை நிறத் (செல்வச்செழிப்பு) திருமேனியளாக, பசுங்கிளி ஏந்தியபடி காட்சியருளுகின்றாள்.
இந்திரன், தனக்கு நேர்ந்த கொலைப் பாவத்தைப் போக்கி கொள்ள பல தலங்களுக்கு சென்று வரும்போது கடம்ப மரங்கள் செறிந்து விளங்கியதால் கடம்பவனம் என்னும் பெயர் பெற்ற இத்தலத்தில் ஓர் லிங்கத்தை கண்டு அதனை வழிபடவே, பாவம் நீங்கியது. அவன் இந்திர விமானத்துடன் கூடிய இதனால் கோவிலை கட்டுவித்தான் என்று கூறுவர்.
இக்கோவில் உள்ளே எட்டு கோபுரங்களும், இரண்டு விமானங்களும் உள்ளது. வலப்புறம் அன்னை மீனாட்சி கோவிலும், இடப்புறம் சுவாமி கோவிலும் அமைந்துள்ளன. இத்தலம் சக்திக்கு முக்கியத்தவம் உடைய தலமாதலின் அன்னை மீனாட்சியை முதலில் தரிசித்து, பின்னர் சுவாமி கோவிலுக்கு சென்று வழிபட வேண்டியது முறையாகும்.
கருவறையில் நடுநாயகமாக அன்னை மீனாட்சி அம்மையார் கருணை நோக்குடனும், இரண்டு கரங்களுடனும் திருக்காட்சியருளுகின்றாள். அங்கயற்கண்ணி அடிக்கமலங்கள் போற்றி வணங்கி வழிபடுதல் வேண்டும்.
மீனாட்சியம்மனை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களுடன் கூடிய வாழ்க்கை, கல்யாண பாக்கியம், குழந்தை பாக்கியம் அமைகின்றன. வேண்டும் வரமெல்லாம் அருளும் அன்னையாக மீனாட்சி விளங்குகிறாள். இறைவன் சொக்கநாதரை வணங்கினால் மனதுக்கு அமைதியும், நிம்மதியான முக்தியும் கிடைக்கும்.

சக்திக்கு முக்கியத்துவமுடைய தலம்
சக்தி பீடத்தலங்கள் வரிசையில் இரண்டாவதாக அமைந்து விளங்குவது மதுரை பதியாகும். இம்மதுரைத் தலம், மந்திரிணி பீடத்தலமாகும். வைகை ஆற்றின் கரையி...
Post a Comment