மதுரை: கனிம வளக் கொள்ளையை விசாரிக்க
நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சகாயத்தை உடனே பணியில் அமர்த்தி, கனிமக்
கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்தி
மதுரையில் இன்று கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது.
மதுரையில் கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக உயர்நீதிமன்றம் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை விசாரணை அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது. இந்த விசாரணைக் குழுவுக்கு அரசு சார்பில் ஒத்துழைப்பு கிடைக்காத நிலையில் விசாரணை பணிகள் தாமதமாகிவருகின்றன.
அதேசமயம் விசாரணை எல்லை குறித்து சகாயம் நீதிமன்றத்திடம் மனு செய்துள்ளார். இந்நிலையில் மதுரையில் செயல்படும் சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் அரசு நடந்துகொள்ள வேண்டும் எனக் கோரி, இன்று பொது மக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை மதுரையில் தொடங்கியது.

கலெக்டர் அலுவலகத்தில் கையெழுத்துப் பெற காவல்துறையினர்
அனுமதிக்கவில்லை. இருப்பினும் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில்
கையெழுத்து வாங்கப்பட்டது.
நம்மிடம் பேசிய இந்த இயக்கத்தின் தலைவர் சோமசுந்தரம்,
“தென் தமிழகத்தில் நடைபெற்ற நடைபெற்று வருகிற கிராணைட் கொள்ளை, கனிமவள
கொள்ளை, மணற்கொள்ளைகளுக்கு முடிவு கட்ட உயர் நிதிமன்றம் அறிவித்தது போல
அவர் விசாரணையை துவக்க வேண்டும்.
இதற்கு அரசு எந்த முட்டுக்கட்டையும் போடக்கூடாது என்பதால் இந்த இயக்கத்தை நடத்துகிறோம்” என்றார்.
-செ.சல்மான்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்
-செ.சல்மான்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்
சகாயத்துக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்!
மதுரை: கனிம வளக் கொள்ளையை விசாரிக்க நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சகாயத்தை உடனே பணியில் அமர்த்தி, கனிமக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எ...
Post a Comment