இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி சீனாவின் மற்றொரு நீர்மூழ்கி கப்பல்
இலங்கை வர அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆங்கில நாளேடு ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின் படி, கடந்த செப்டம்பர் மாதம் சீனாவின் நீர்மூழ்கி கப்பலுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் அதை புறந்தள்ளி கொழும்பு துறைமுகத்தில் அக்கப்பல் நுழைய இலங்கை அனுமதி அளித்தது. மகிந்தா ராஜபக்சேவின் சகோதரரான கொத்தாபய ராஜபக்சேவிடம் இது தொடர்பாக இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது மீண்டும் அடுத்த சில நாட்களில் சீன நீர்மூழ்கி கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வர இலங்கை அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது.
பாக் ஜல சந்தி பகுதியில் சீன நீர்மூழ்கி கப்பல் காணப்படுவது பதட்டத்தை உருவாக்கும் என்றும் இந்தியா எச்சரித்திருந்த நிலையில் தொடர்ந்து இந்தியாவை இழிவுபடுத்தும் வகையிலேயே இலங்கை இவ்வாறு செய்லபடுவதாக கருதப்படுகிறது. வியட்நாம் பிரதமர் நுகுயென் டான் டங் இந்தியா வந்து சென்ற பின்பு, சீனா தனது நீர்மூழ்கி கப்பலை இரண்டாவது முறையாக இலங்கைக்குள் அனுப்ப உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் சீனாவின் நீர்மூழ்கி கப்பலுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என இந்தியா தனது கடும் எதிர்ப்பை இம்முறை தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவை சேர்ந்த நாளிதழான "வால்ஸ்டீரீட் ஜோர்னலில்" எழுதப்பட்டுள்ள குறிப்பின்படி, 'சீனாவின் நீர்மூழ்கி கப்பல், தெற்கு ஆசிய பிராந்தியத்தில் கடும் சவாலை அளிக்கக்கூடியது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே சீன இராணுவத்தின் நடமாட்டம் தங்கள் நாட்டில் இல்லை என்று இலங்கை தெரிவித்திருப்பது நம்பகத்தன்மையானதாக இல்லை என்றும் பேசப்படுகிறது. தனது நடவடிக்கைக்கு இலங்கை அரசு ஆதரவு தரவேண்டும் என்பதற்காகவே அந்நாட்டுக்கு மிகப்பெரிய அளவில் நிதியுதவியை சீனா வழங்கிவருகிறது. கடந்த 1971 முதல் 2012 வரை இலங்கைக்கு 5.056 பில்லியன் டாலர் நிதியுதவியை சீனா அளித்துள்ள நிலையில், 2005 முதல் 2012 ஆம் ஆண்டுக்கு இடையே உள்ள 7 வருட காலத்தில் மட்டும் 4.761 பில்லியன் டாலர் நிதியுதவியை வாரி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் இலங்கைக்கு சீனா 2.18 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளது மிகவும் கவனிக்கத்தக்கது. இதன் மூலம் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இலங்கைக்கு நிதியுதவி அளிப்பதில் முதன்மையான நாடாக சீனா இடம்பிடித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில நிலப்பரப்பான லடாக் பகுதியில் உள்ள சுமரில், எல்லை தாண்டி வந்து சீனா தொந்தரவு அளித்து வரும் நிலையில், கடற்பரப்பு வழியாகவும் இந்தியாவுக்கு தொந்தரவு தரும் வகையிலேயே இம்மாதிரியான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் எதிர்ப்பை புறந்தள்ளியது இலங்கை: மீண்டும் சீன நீர்முழ்கி கப்பலுக்கு துறைமுக அனுமதி
இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி சீனாவின் மற்றொரு நீர்மூழ்கி கப்பல் இலங்கை வர அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆங்...
Post a Comment