"நாங்கள் கடைச் சாப்பாடே சாப்பிடுறதில்லை. வீட்டுச் சாப்பாடுதான். எப்படி
இது வந்தது என்று தெரியவில்லை" என்றார் ஐயா. அம்மாவும் ஒத்துப் பாடினா.
அவர்கள் வீட்டிலிருந்து மூன்று பேருக்கு ஒரே நாளில் வயிற்றோட்டமும் வாந்தியும் வந்திருந்தது.
"உணவில் கிருமி தொற்றியதால்தான் வந்திருக்கு. கடையில் வாங்கிச் சாப்பிட்டீர்களா" என்று கேள்வி கேட்டதற்குத்தான் அந்த மறுமொழி வந்தது.
பொதுவாக வீட்டில் தயாரிக்கும்போது உணவில் கிருமி தொற்றுவதற்கான சாத்தியம் குறைவு.
காரணம் என்ன?
அம்மா, அக்கா சில தருணங்களில் அப்பா உணவு தயாரித்திருப்பார். தங்கள் வீட்டு விடயம் என்பதால் அக்கறையோடு மிகவும் சுத்தமாகத் தயாரித்திருப்பார்கள். ஆனால் கடைச் சாப்பாடு அப்படியல்ல. தயாரிப்பதே பலராக இருந்திருக்கும். அது சாப்பாட்டு மேசைக்கு வருவதற்கிடையில் பல கைகள் மாறியிருக்கும். பல கரண்டிகள் உணவினுள் தவண்டிருக்கும்.
அதே நேரம் வீட்டில் சமைத்தால் கிருமி தொற்றாது என்றும் சொல்ல முடியாது. வீட்டிலும் பல வழிகளில் கிருமிகள் உணவில் தொற்றலாம். சமைக்கும்போது, சமைத்ததைப் பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும்போது, கரண்டியிலிருந்து, குளிர்சாதனப் வைப்பதற்கு முன்பு எனப் பல வழிகளில் கிருமிகள் பரவ வாய்ப்புகள் உண்டு.
நீண்ட நேரம் பேசியும் இவர்களது உணவில் கிருமி தொற்றியத்தற்கான காரணம் பிடிபடவில்லை.
கடைசியில்தான் ஒரு பலகைதான் காரணம் என்பது புரிந்தது. அதுவும் ஒரே ஒரு பலகையாக இருந்ததுதான் காரணமாகும். இரண்டாக இருந்திருந்தால் சிலவேளை தப்பியிருக்க வாய்ப்புண்டு.
சமையலறையில் சுத்தம்
சமையலறையும் பாத்திரங்களும் சுத்தமாக இருந்தால்தான் உணவு மாசடையாது இருக்கும். சமைப்பவர், பரிமாறுபவர்களும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
சமையலறைத் தூய்மையில் வெட்டும் பலகையின் (Cutting board) சுத்தத்திற்கு முக்கிய இடம் உண்டு. அவற்றை உரிய முறையில் கழுவி கிருமி நீக்கம் செய்து உபயோகிப்பதை வழமையாகச் செய்ய வேண்டும்.
இல்லையேல் நோய்களை உண்டாக்கக் கூடிய E. Coli and Salmonella போன்ற கிருமிகள் அதில் தங்கியிருந்து நோய்களைப் பரப்பக் கூடும்.
வெட்டும் பலகையைச் சுத்தம் செய்வது
அவற்றைச் சுத்தம் செய்ய வேண்டிய முறைகள் அவை எவற்றால் ஆனவை என்பதைப் பொறுத்தது.
கிளாஸ் அல்லது பிளாஸ்டிக் ஆகியவற்றாலான வெட்டும் பலகைகளை சுத்தம் செய்வது இலகு. சோப் போட்டுக் கழுவலாம். அல்லது கிருமி நாசினி (detergent) கலந்தவற்றால் சுத்தம் செய்யலாம். வசதி உள்ளவர்கள் பாத்திரங்கழவி (dishwasher) மெசினில் இட்டுக் கழுவலாம்.
ஆனால் மரப்பலகையினாலான வெட்டும் பலகைகளை பாத்திரங்கழவி மெசினில் போட்டுக் கழுவுவது நல்லதல்ல. அவ்வாறு செய்தால் பலகையில் வெடிப்புகள் அல்லது பொருக்குகள் ஏற்படலாம். இதனால் வெட்டிய உணவின் துகள்கள் அவற்றினைடையே ஒழிந்து கிடந்து கிருமிகள் பெருகி வளரச் செய்யும். அதேபோல தண்ணீரில் ஊறவிட்டுக் கழுவினாலும் பலகை வீங்கி வெடித்து அதற்குள் கிருமிகள் பெருகி வளர இடம் அளிக்கும்.
குறைந்தது இரண்டு வெட்டும் பலகைகளைகளையாவது சமையலறையில் வைத்திருக்க வேண்டும்.
இறைச்சி மீன் போன்றவற்றை வெட்டுவதற்கு ஒன்று. காய்கறி பழவகைகள் போன்றவற்றை வெட்டுவதற்கு மற்றொன்று. ஒன்றிலுள்ள மாசு மற்றதற்கு பரவாது தடுப்பதை இதனால் தடுக்க முடியும். மாமிச உணவுகளில் கிருமி தொற்றுவதற்கும் பெருகுவதற்குமான சாத்;தியம் மிகமிக அதிகம். மாமிச உணவிற்குப் பயன்படுத்திய அதே வெட்டும் பலகையில் காய்கறி பழங்களை வைத்து வெட்டினால் அந்த விசக் கிருமிகள் இவற்றிற்குப் பரவிவிடும்.
பாண், கேக் அல்லது ஏனைய சமைத்த உணவுகளை வைத்து வெட்டுவதற்கு மற்றொரு பலகை வைத்திருப்பது மேலும் உசிதமானது.
எப்படியாயினும் ஒரு வகை உணவை வெட்டுவதற்கு பயன்படுத்தும் வெட்டும் பலகையை மற்ற வகை உணவை வெட்டுவதற்கு பயன்படுத்துவது நல்லதல்ல.
வெட்டும் வேலை முடிந்ததும் பலகையை காலம் தாழ்த்தாது உடனடியாகவே சுத்தம் செய்வது அவசியமாகும். சோப் போட்டுக் கழுவுவது நல்லது. சுடு தண்ணிரால் மீண்டும் கழுவது சிறந்ததாகும்.
கத்தி வெட்டு வடுக்கள், வெடிப்பு சிராய்ப்பு போன்ற காயம்பட்ட பழைய பலகைகளை வைத்திருக்க வேண்டாம். உடனடியாகவே கழித்து அகற்றிவிடுங்கள்.
நீரினால் கழுவுவதால் பலகையிலான வெட்டும் பலகையில் நீர் ஊறிப் பழுதடையச் செய்துவிடும். எனவே நீண்ட நேரம் நீரில் ஊறவிடாது கழுவ வேண்டும்.
நீருக்குப் பதிலாக வினிகர் (vinegar) கொண்டு சுத்தம் செய்யலாம். ஒவ்வொரு முறை பயன்படுத்திய பின்னரும் பலகையை வினிகரால் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். பயன்படுத்திய பின்னர் அதிலுள்ள ஈரலிப்புத்தன்மை காய்ந்த பின்னர் வினிகரை மேற்புறத்தில் ஸ்ப்ரே செய்யுங்கள். 10-30 நிமிடங்கள் கழிந்த பின்னர் சுத்தமாகத் துடைத்து எடுங்கள். வினிகரில் உள்ள அசெட்டிக் அமிலமானது E. coli, Salmonella, and Staphylococcus போன்ற கிருமிகளைச் செயலிழக்கச் செய்துவிடும்.
மரத்திலான வெட்டும் பலகையில் துர்மணம் தோன்றாதிருக்க முதலில் சற்று பேக்கிங் பவுடரை தூவிய பின்னர் வினிகர் போட்டு 5 நிமிடங்களின் துடைத்து எடுக்கலாம். அதன் பின்னர் கழுவலாம்.
வினிகருக்குப் பதிலாக ஹைரஜன் பெரோஒட்சைடினாலும் (hydrogen peroxide) சுத்தம் செய்யலாம். வினிகரால் அல்லது ஹைரஜன் பெரோஒட்சைடினால் சுத்தம் செய்வதைவிட இரண்டையும் கொண்டு சுத்தம் செய்வது அதிக பயனுள்ளதாக இருக்கும் எனச் சில ஆய்வுகள் சொல்கின்றன. இரண்டில் ஒன்றை முதலில் ஸ்ப்ரே செய்து 10 நிமிடங்கள் கழிந்த பின்னர் சுத்தமாகத் துடைத்து எடுங்கள். பின்னர் மற்றதையும் அவ்வாறே ஸ்ப்ரே செய்து 10 நிமிடங்களில்; சுத்தமாகத் துடைக்க வேண்டும்.
வினிகர் மற்றும் ஹைரஜன் பெரோஒட்சைடைப் பயன்படுத்துவது ஓரளவு இயற்கை முறையாகும். பெரும்பான கிருமி அகற்றிகளில் உள்ள பாதகமான இராசயனங்கள் இவற்றில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்று அவர்களது வீட்டில் மீன் கறி சமைத்திருந்தார்கள். உணவில் காய்களிகளும் சேர வேண்டும் என்பதால் சலட் செய்;தார்கள். மீன் வெட்டிய பலகையை சரியாகச் சுத்தம் செய்யவில்லை என நினைக்கிறேன். அதே வெட்டும் பலகையில் வைத்தே காய்கறிகளை வெட்டி சலட் தயாரித்ததால் வந்த வினை குடும்பமாகப் பாதித்திருந்தது. உணவு கிருமிகளால் மாசடைந்து நோயை ஏற்படுத்தியிருந்தது.
உணவு மாசடைதல்
உணவு கிருமிகளால் மாசடைந்து நோயை ஏற்படுத்துவதை உணவு நஞ்சாதல் (Food poisoning) எனச் சொல்வார்கள். இதனால் உலகளாவிய ரீதியில் நாளாந்தம் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். சாதாரண வயிற்று வலி முதல் கடுமையான வயிற்றோட்டம் அல்லது மலத்துடன் இரத்தம் சீதம் கலந்து வெளியேறுவது போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். வாந்தி, வயிற்றுப் பிரட்டு, வயிற்று வலி, வயிற்று முறுக்கு, காய்ச்சல், உடல் உளைவு போன்ற பல்வேறு அறிகுறிகள் தோன்றலாம்.
வாந்தி வயிற்றோட்டத்தால் கடுமையான நீரிழப்பு நிலை ஏற்பட்டு நோயாளியை மருத்துமனையில் அனுமதித்து நாளம் ஊடாக நீர் ஏற்றவும் நேரலாம்.
சுமார் 250 வகையான கிருமிகள் இவ்வாறு மாசடைந்த உணவுகள் மூலம் பரவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

வெட்டும் பலகையைச் சுத்தம் செய்வது எப்படி ?
"நாங்கள் கடைச் சாப்பாடே சாப்பிடுறதில்லை. வீட்டுச் சாப்பாடுதான். எப்படி இது வந்தது என்று தெரியவில்லை" என்றார் ஐயா. அம்மாவும் ஒத்...
Post a Comment