Ads (728x90)

Showing posts with label இன்றொரு தகவல். Show all posts

ம்பிக்கை மிகுந்த தகவல் பரிமாற்றத்தில் தற்போது மிக முக்கிய இடத்தில் இருப்பது, ‘மெயில்’ என்று சொல்லப்படும் மின்னஞ்சல்.

இதில் நம் விருப்பத்திற்கு ஏற்ப நமது பெயரில் மெயில் ஐடியை உருவாக் கிக்கொள்ளலாம் என்பது நாம் அறிந்ததே. ஆனால், டொமைனையும் நீங்கள் விரும்பும் வண்ணம் அமைத்துக்கொள்ளலாம் என்பதே, Mail.com  சேவையின் சிறப்பம்சம்!

Mail.com என்பது ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் போன்றவற்றுக்கு அடுத்தபடியாக மிக அதிகமானோர் பயன்படுத்தும் மின்னஞ்சல் கணக்கு. மற்ற மின்னஞ்சல் கணக்குகளைப் போலவே எல்லாவிதமான வசதிகளையும் கொண்டுள்ள இதன் கூடுதல் பிளஸ்... வழக்கமான  மின்னஞ்சல் முகவரி போன்று நாம் கொடுக்கும் மெயில் ஐடியுடன்.. yourname@gmail.com, yourname@yahoo.com, yourname@ymail.com என்று இல்லாமல் yourname@mail.com, yourname@email.com, yourname@post.com, yourname@photographer.net, yourname@engineer.com போன்ற 200க்கும் அதிகமான டொமைன்களையும் தேர்வுக்குத் தருகிறது.

இதன் மூலமாக நாம் விரும்பும் அல்லது நம் பணியை எடுத்துச் சொல்லும் வகையிலான டொமைனை தேர்வு செய்துகொள்ளலாம். 

www.mail.com என்ற வலைதள முகவரியில் உள்ள Get your free email account  அல்லது free email என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, கேட்கப் படும் தகவல்களை கொடுத்து, இனி விரும்பும் டொமைனில் இமெயில் கணக்கை உருவாகிக்கொள்ளுங்கள்!

 இதன் கூடுதல் சிறப்பு...


* அன்லிமிட்டட் மெயில் ஸ்டோரேஜ்
* எளிதில் நினைவில் கொள்ளும் வண்ணம் மின்னஞ்சல் முகவரி உருவாக்கும் வசதி.
* மிக எளிதாக பயன்படுத்தும் வண்ணமாக எளிய அமைப்பு.
* வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு.

- சா.வடிவரசு
இமெயில் ஐடியில் டொமைன் உங்கள் சாய்ஸ்!

ந ம்பிக்கை மிகுந்த தகவல் பரிமாற்றத்தில் தற்போது மிக முக்கிய இடத்தில் இருப்பது, ‘மெயில்’ என்று சொல்லப்படும் மின்னஞ்சல். இதில் நம் விருப்பத...

ண்டித மதன் மோகன் மாளவியா இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்காற்றிய முக்கிய ஆளுமைகளில் ஒருவர். இந்து தேசியத்தை முன்னிறுத்தி ஹிந்து மகாசபையைத் துவங்கி வைத்தவர். பாகவத சொற்பொழிவுகள் நிகழ்த்தும் குடும்பத்தில் பிறந்த அவர், சம்ஸ்கிருத மொழியில் தேர்ச்சி பெற்றதோடு நில்லாமல் ஆங்கிலக் கல்வியையும் பெற்றார். பின்னர் அரசாங்கத்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில், இந்தியர்களுக்குச் சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்று அவர் ஆற்றிய உரை பரவலான கவனத்தை ஈர்த்தது. காங்கிரசின் முக்கிய முகங்களில் ஒருவராக அவர் மாறுவதற்கான வாய்ப்புகளை அது வழங்கியது. ஹிந்துஸ்தான் இதழின் ஆசிரியராக ஆனவர், அதற்குப் பின்னர்ச் சட்டம் பயின்றுவிட்டு திரும்பினார்.

காசியில் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் கனவு கண்டார். பல லட்சம் ரூபாய் நிதியை அலைந்து திரிந்து திரட்டினார். அன்னிபெசன்ட்டும் மத்திய இந்துப் பள்ளி ஒன்றை ஆரம்பிக்கும் கனவில் இருந்தார். இரண்டு கனவுகளையும் இணைத்து தனியார் முயற்சியில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வி தரும் நிலையமாகப் பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தை நிர்மாணித்தார்கள்.

காந்தியடிகளின் ஒத்துழையாமை போரில் பங்கு பெற்றுச் செயல்பட்டாலும், இஸ்லாமியர்களை இணைத்துக்கொண்டு பணியாற்றும் கிலாபத் இயக்கத்துக்கு எதிராக அவர் இருந்தார். செளரி சௌரா சம்பவத்தால் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபொழுது, அந்தக் காவல் நிலைய எரிப்புச் சம்பவத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை வாதாடி அவர் மீட்டார்.


ஆங்கிலேய அரசு சட்டசபைகளுக்குள் இந்தியர்களுக்கு இடம் வழங்க ஆரம்பித்த பொழுது அதில் மாளவியாவும் இடம் பெற்றார். உருதுவைப் போலச் சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட ஹிந்தியையும் நீதிமன்றங்களில் பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துப் போராட்டங்கள் நடைபெற்ற பொழுது அதில் இவர் பங்குகொண்டார். அது அப்போராட்டங்களுக்கு அரசியல் சாயம் பூசியது.
 காங்கிரசின் சட்டசபைக்குள் நுழைவதில்லை என்கிற காங்கிரசின் முடிவை மறுத்து 1923 சுயராஜ்யக்கட்சியைச் சித்தரஞ்சன்தாஸ், மோதிலால் நேரு ஆகியோருடன் மாளவியாயும் இணைந்து ஆரம்பித்தார். அடுத்து வந்த தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை ஐக்கிய மாகாணங்கள், வங்கத்தில் பெற்றார்கள். கிலாபத் இயக்கத்தினரும் முனிசிபல் தேர்தல்களில் சுயராஜ்யக் கட்சியில் இணைந்து வென்றிருந்தார்கள்.

காந்தி-அம்பேத்கர் இடையே பூனா ஒப்பந்தம் கையெழுத்து ஆவதில் முக்கியப் பங்காற்றினார் அவர். உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு நானூறுக்கும் மேற்பட்ட நபர்களோடு சிறை சென்றார் அவர். அதே வருடம், 'இந்தியப் பொருட்களை மட்டும் வாங்குங்கள்', என்கிற திட்டத்தை முன்னெடுத்தார். அதே போல ஒடுக்கப்பட்ட மக்களை மீண்டும் இந்து மதத்துக்குள் சேர்க்க அவர்களுக்கு மந்திர தீட்சை கொடுத்து அவர்களின் ஜாதி போய்விட்டதாக அறிவித்தார் அவர். கலாராம் ஆலயத்துக்குள் இருநூறு தலித்துகள் நுழையும் நிகழ்வை முன்னின்று அவரே நடத்தினார்.

1934-ல் சைமன் கமிஷனுக்குப் போட்டியாக இஸ்லாமிய தலைவர்கள் டெல்லி பரிந்துரைகளைக் கொண்டு வந்தார்கள். அதில் சிந்தை தனி மாகாணம் ஆக்குதல், வட கிழக்கு மாகாணத்தைத் தனி மாகாணமாக நடத்துதல், மூன்றில் ஒரு பங்கு இடங்கள் இஸ்லாமியர்களுக்கு மத்திய சட்டசபையில் ஒதுக்குதல், இஸ்லாமியர் பெரும்பான்மையாக இருக்கும் பஞ்சாப் மற்றும் வங்காள மாகாணங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு என்று அவர்களின் கோரிக்கைகள் நீண்டன.

இதையெல்லாம் சேர்த்துக்கொண்டு கூடவே தனித் தொகுதிகள் உள்ளிட்ட இன்ன பிற கோரிக்கைகளையும் இணைத்துக்கொண்டு ஜின்னா பதினான்கு புள்ளி அறிக்கையை உருவாக்கினார். இதற்கு இணையாகக் காங்கிரசின் சார்பாக நேரு கமிட்டி அறிக்கை வந்தது. மேலே இருந்த டெல்லி பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு ஒரே ஒரு நிபந்தனை விதித்தது நேரு அறிக்கை. தனித்தொகுதிகளை லீக் விட்டுவிட வேண்டும் என்பதுதான் அது! ஜின்னா அதற்கு இசைந்தாலும் கட்சிக்குள் இருந்த மதவாதிகள் அதை ஏற்க மறுத்தார்கள்.

இன்னொரு புறம் ஹிந்து மகா சபை, சீக்கிய லீக் ஆகியனவும் முஸ்லீம்களுக்கு விட்டுக்கொடுக்கிறார்கள் என்று எதிர்க்க ஆரம்பித்தார்கள். மும்பை காங்கிரஸ் 1934-ல் கூடியது, "காங்கிரஸ் எல்லா மதத்தவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற கட்சியாகவே திகழ்கிறது. நாங்கள் தனித்தொகுதிகளை ஏற்கவும் இல்லை, நிராகரிக்கவும் இல்லை." என்றது.
மாளவியா கடுப்பாகி, இது இஸ்லாமியர்களை ஊக்குவிக்கும் போக்கில் இருக்கிறது என்று தேசிய கட்சியை அதே வருடத்தில் ஆரம்பித்துத் தேர்தலில் நின்று, வெறும் பன்னிரெண்டு இடங்களில் தன் கட்சியை வெல்ல வைத்தார்.
பிரிட்டிஷ் அரசு பல்வேறு தரப்பு கோரிக்கைகளை நிறைவேற்றியது மற்றும் உடல்நலமின்மை ஆகியவற்றால் தீவிர அரசியலில் இருந்து அவர் விலகினார்.

தற்போது இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்து உள்ளது.
- பூ.கொ.சரவணன்
பண்டித மதன் மோகன் மாளவியா - சிறப்பு பகிர்வு

ப ண்டித மதன் மோகன் மாளவியா இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்காற்றிய முக்கிய ஆளுமைகளில் ஒருவர். இந்து தேசியத்தை முன்னிறுத்தி ஹிந்து மகா...

சமையல் கேஸ் மானியத்தை வங்கிக் கணக்கில் பெறுவது எப்படி?
சமையல் எரிவாயு மானியத்தை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு என்னென்ன நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பதுபற்றி, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாகப்பெறும் திட்டம், இந்தியாவில் 54 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 1-ந்தேதியில் இருந்து இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நேரடி மானியத்தைப் பெறுவதற்காக அடுத்த ஆண்டு 2015-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிவரை வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை தவறவிட்டால், எரிவாயுக்கான நேரடி மானியத்தை பெறமுடியாமல் போய்விட வாய்ப்புள்ளது.
மானியத் திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால், எரிவாயு இணைப்பு உள்ளவர்களுக்கு, அவர்களின் பெயரில் வங்கிக்கணக்கு இருக்கவேண்டும். அவர்கள் முழு தொகை செலுத்தி எரிவாயு வாங்கினாலும், மத்திய அரசு அளிக்கும் மானியத்தொகை, அந்த வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுவிடும்.
அந்த வகையில் எரிவாயுக்கான மானியத்தை இதன்மூலம் வாடிக்கையாளர் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் சேர்ந்ததில் இருந்து மானியத்தொகை கிடைக்கத் தொடங்கிவிடும். எரிவாயு சிலிண்டரை வாங்கிய 3 அல்லது 4 நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் மானியத்தொகை வந்து சேர்ந்துவிடும்.
எரிவாயுக்கான நேரடி மானிய திட்டத்தில் இதில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் முறை எளிதானதுதான்.
யார் பெயரில் சிலிண்டர் இருக்கிறதோ, அவர் தனது எரிவாயு சிலிண்டர் முகவரை அணுகவேண்டும். தன்னிடமுள்ள ஆதார் எண் மற்றும் வங்கிக்கணக்கு எண்ணை குறிப்பிட்டு, அவர் கொடுக்கும் படிவம்-1 மற்றும் படிவம்-2 ஆகியவற்றை பூர்த்தி செய்யவேண்டும். படிவம்-1-ஐ வங்கியிலும், படிவம்-2-ஐ முகவரிடமும் வழங்கவேண்டும்.
ஆதார் அட்டை அல்லது எண் இல்லை என்றால், வங்கிக்கணக்கு புத்தகத்தை காட்டி முகவரிடம் இருந்து படிவம்-3 மற்றும் படிவம்-4 ஆகியவற்றை வாங்கி பூர்த்தி செய்யவேண்டும். பின்னர் படிவம்-3-ஐ வங்கியிலும், படிவம்-4-ஐ முகவரிடமும் கொடுக்கவேண்டும்.
வங்கியில் படிவம் செலுத்தப்பட்டது என்பதற்கு அத்தாட்சியாக, படிவத்தின் கடைசி பகுதியை கிழித்து, அதில் வங்கி முத்திரையை பதித்தும், கையெழுத்திட்டும் வழங்குவார்கள். அதை பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த நடைமுறைகள் மூலம் எரிவாயுக்கான நேரடி மானியத்திட்டத்தில் சேர்ந்துவிடலாம். அதன்பின்னர் எப்போதும்போல் பணத்தை செலுத்தி சிலிண்டரை வாங்கிக்கொள்ளலாம். அதற்கான மானியத்தொகை வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.என்று கூறப்படுகிறது.



சமையல் கேஸ் மானியத்தை வங்கிக் கணக்கில் பெறுவது எப்படி?

சமையல் கேஸ் மானியத்தை வங்கிக் கணக்கில் பெறுவது எப்படி? சமையல் எரிவாயு மானியத்தை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு என்னென்ன நடைமுறைகளை பின்பற...

1,500 சதுர அடியில் ஆண்டு முழுக்க காய்கறி… மிரட்டும் மாடித்தோட்ட வெள்ளாமை!
‘எங்களுக்கும் வயல்வெளிகளில் உழைக்கத்தான் ஆசை. ஆனால், எங்கே உழைப்பது என்றுதான் தெரியவில்லை’ நிலமற்றவர்களின் இந்தக் குரல், சிற்றிதழ் ஒன்றில் பதிவாகி இருந்தது. இதேபோல… ‘எங்களுக்கும் விவசாயம் செய்ய ஆசைதான்… ஆனால், எங்கே போய் விதைப்பது?’ என்கிற ஆதங்கம், விவசாய ஆர்வமுள்ள நகர்ப்புறவாசிகளிடம் நிறையவே இருக்கிறது. இவர் களுக்கெல்லாம் வழிகாட்டுவது போல… வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், சமையலறைத் தோட்டம் என்று பலரும் காய்கறி உற்பத்தியில் கலக்கிக் கொண்டுள்ளனர்!
ஈரோடு, திண்டல், காரப்பாறை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், மாடித்தோட்டத்தில் வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கிறார். அம்மா சரஸ்வதி, மனைவி கல்பனா சகிதம் மாடித்தோட்டப் பராமரிப்பிலிருந்தவரைச் சந்தித்தபோது… தகுந்த இடைவெளியில் வரிசையாக அணிவகுத்து நின்ற தொட்டிச் செடிகளை வருடியபடியே பேசினார்.
”எனக்குச் சொந்த ஊர் சத்தியமங்கலம். படிச்சு முடிச்சு அமெரிக்காவுல ஐ.டி. கம்பெனியில வேலை பார்த்தேன். பிறகு, ஈரோடு வந்து இந்த இடத்துல வீடு கட்டி குடியிருக்கேன். கம்ப்யூட்டர் சம்பந்தமான பயிற்சி நிறுவனத்தை வீட்டுலயே நடத் திட்டுருக்கேன். ரெண்டு வருஷமா மாடியில தோட்டம் அமைச்சு காய்கறி, கீரை, மூலிகைனு வளர்த்துட்டிருக்கேன்.
ஆரம்பத்துல எட்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற மார்க்கெட்டுக்கு போய்தான் காய்களை வாங்கிட்டு வருவோம். சில நேரத்துல நாம விரும்புற காய்களைவிட, கிடைக்கற காய்களைத்தான் வாங்க வேண்டி யிருக்கும். விலையும் கட்டுப்படியா இருக்காது. இந்த சமயத்துலதான், மாடித்தோட்ட ஆசை வந்துச்சு. தங்கைகளோட வீட்டுல மாடித்தோட்டம் போட்டிருக்காங்க. அதை யெல்லாம் பாத்துட்டு வந்து, இயற்கை முறையில வீட்டுத்தோட்டம் அமைச் சுட்டோம்” என்று முன்னுரை கொடுத்த சிவக்குமார், தோட்ட அமைப்பு முறைகளை விளக்கினார்.
”மொத்தம் 1,500 சதுர அடியில தோட்டம் இருக்கு. 600 சதுர அடி பரப்புல நிழல் வலைப் பந்தல் போட்டிருக்கோம். மாடித் தோட்டம் அமைக்கறதுக்கு முதல்கட்டமா, காலி டப்பா, டின்கள், பழைய பக்கெட்டுக்கள், கிரீஸ் டப்பாக்கள், மண்தொட்டிகள்னு பயன்பாடு முடிஞ்ச பொருட்களா சேகரிச் சோம். 150 சட்டி செம்மண், 30 மூட்டை தேங்காய் மஞ்சி ரெண்டையும் சரிசமமா கலந்து, தண்ணீர் தெளிச்சு கலக்கி, நிழல்ல காய வெச்சு… அதுல நாலு சட்டி, ஒரு கிலோ சாணம், அரை கிலோ ஆட்டு எரு, கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு கலந்து, தொட்டிகள்ல நிரப்பி செடிகளை நட்டு வெச்சோம்” என்று தொழில்நுட்பங்களோடு சொன்னார்.
தரை சேதமாவதில்லை!
மகனைத் தொடர்ந்த சரஸ்வதி, ”சிறுசு, நடுத்தரம், பெருசுனு 350 தொட்டிகள்ல செடிகளை வளர்க்கிறோம். மொட்டை மாடியில மழைநீர்ச் சேமிப்புத் தொட்டியும் அமைச்சுருக்கோம். அதுல சேகரமாகற தண்ணி, வீட்டுக் கழிவு நீர் ரெண்டையும்தான் செடிகளுக்கு ஊத்து றோம். வீட்டுக்கு வாங்கற லாரி தண்ணியையும் ஊத்துவோம். நீளமான மரப்பலகைய வெச்சு, அது மேல தொட்டிகளை வெக்கறதால, தரை ஈரமாகி சேதாரம் ஆகற தில்லை. ஒவ்வொரு செடியோட வளர்ச்சியைப் பொறுத்து, தொட்டிகளோட உயரத்தை அமைச்சுக் கணும். காலையில ஒரு மணி நேரம் சாயங் காலம் ரெண்டு மணி நேரம் மாடித் தோட்டத்துல குடும்பத்தோட வேலை பார்க்கிறோம். சாயங்காலம் எங்க வீட்டுக் குட்டிகளும் தோட்ட வேலையை ஆர்வமா செய்றாங்க. முழுக்க இயற்கை இடுபொருட் களையே பயன்படுத்துறோம்.
களைகள் முளைச்சா, அப்பப்போ எடுத்துடுவோம். கொடிப்பயிர்கள் படர்றதுக் காக ரீப்பர் குச்சிகளை தொட்டிக்குள்ள பதிச்சுருக்கோம். அறுவடை முடிஞ்ச தொட் டில செடிகளைப் பிடுங்கி அப்புறப்படுத்திட்டு, தொட்டி மண்ணை சுத்தமான தரையில் கொட்டி வெயில்ல காய விடுவோம். தொட்டியையும் சுத்தமாக கழுவி உலர வெச்சுட்டு, காய வெச்ச மண்ணை நிரப்பி, ஒரு கிலோ மண்புழு உரம், ஒரு கிலோ எரு, ஒரு கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு எல்லாத்தையும் போட்டு புதுசா செடிகளை நடுவோம். இங்க, மூலிகைச் செடிக அதிகமா இருக்கறதால, பூச்சிகள் வர்றதில்லை. அதையும் மீறி வர்ற பூச்சிகளை, நீம் மருந்து அடிச்சு விரட்டிடுவோம்’’ என்றார்.
இங்க இல்லாததே இல்லீங்க..!
மாமியாரைத் தொடர்ந்த கல்பனா, ”தக்காளி, கத்திரி, முள்ளங்கி, பீட்ரூட், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், மிளகாய், வெண்டை, பொரியல்தட்டை, ‘கோழி’ அவரை, கொத்தவரை, ‘பெல்ட்’ அவரை, பீர்க்கன், பாகல், மிதிப்பாகல், சுரைக்காய், அகத்தி, புளிச்சக்கீரை, வல்லாரை, தவசி முருங்கை, மணத்தக்காளி, தூதுவளை, சிறுகீரை, தண்டுக்கீரை, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, இஞ்சி, பூண்டுனு வகை வகையா காய்களை நட்டு வெச்சுருக் கோம். அப்புறம்… அக்ரகாரம், அப்பக்கோவை, ஆடாதொடா, இன்சுலின் (சர்க்கரைக் கொல்லிச் செடி), கற்பூரவல்லி, கானாவாழை, சிறியாநங்கை, சிறுகுறிஞ்சான், சீந்தல், பிரண்டை, திருநீற்றுப்பச்சிலை, துளசி, தொட்டால்சிணுங்கி, நித்யகல்யாணி, வெற்றிலை, நொச்சி, மென்தால், முசுமுசுக்கை, லெமன் கிராஸ், ஆகாச கருடன், சோற்றுக்கற்றாழைனு மூலிகைகள்; அரளி, ரோஜா, முல்லை, மல்லிகை, செண்டுமல்லி, நந்தியாவட்டை, இட்லிப்பூனு பூச்செடிகள்; பூவாழை, தேன்வாழை மரங்களும் மாடியில இருக்கு. தனியா அசோலாவையும் வளர்க்குறோம்’ என்று பட்டியல் போட்டுக் கொண்டே போக, அசந்து நின்றோம்.
ஆண்டுக்கு 15 ஆயிரம் லாபம்!
நிறைவாகப் பேசிய சிவக்குமார், ”எங்க குடும்பத்துல 5 பேர். எங்களுக்கான காய்கறி தேவையில 70% இந்த மாடியிலேயே கிடைச்சுடுது. அந்த வகையில வருஷத்துக்கு காய்கறிக்காக செலவழிக்கிற 15 ஆயிரம் ரூபாய் எங்களுக்கு மிச்சம். காஸ்மோபாலிடன் சிட்டி, வெளிநாடுனு நல்லா வாழ்ந்தாலும், பரம்பரைத் தொழிலான விவசாயத்தை விட்டுட்டோமேங்கிற வருத்தம் முன்ன இருந்துச்சு. இப்போ அது போயேபோச்சு” என்றார், மகிழ்ச்சியுடன்.
நன்றி - விகடன் ,
1,500 சதுர அடியில் ஆண்டு முழுக்க காய்கறி… மிரட்டும் மாடித்தோட்ட வெள்ளாமை!

1,500 சதுர அடியில் ஆண்டு முழுக்க காய்கறி… மிரட்டும் மாடித்தோட்ட வெள்ளாமை! ‘எங்களுக்கும் வயல்வெளிகளில் உழைக்கத்தான் ஆசை. ஆனால், எங்கே உழ...

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .
(((இதை படிக்க 5து நிமிடம் ஒதுக்குங்கள்))) !
நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று
அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449 புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து,"பரிபாடல்,முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன்"அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில் "தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில் "கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் "அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!!தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே !முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் !நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம் ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் !தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் இதனை
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது . (((இதை படிக்க 5து நிமிடம் ஒதுக்குங்கள்))) ! நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 2...

நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் இரகசிய தருணங்களைப் படம் பிடித்து ரசிப்பவர்களா..?!
Very Sorry.. உங்களின் மானம் இப்போது உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கலாம்.
அது எப்படி… என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?” என்று யோசிக்கிறீர்களா..?! அந்த புதிருக்கான விடையின் பெயர் ‘ரெக்கவரி சாஃப்ட்வேர் (recovery software) .
அண்ணாநகரில் செல்போன் கடை வைத்திருக்கும் மூர்த்தி விரிவாகச் சொல்கிறார்.
”செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை.
அதுவும் தங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள் Delete செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் அதைப் பார்க்க முடியும் என்கிற விஷயமே புதுசாகத்தான் இருக்கும்.
அந்த விஷயம் தெரியாமல்தான் பலர் ஆர்வக் கோளாறில் தங்களின் படுக்கை அறைக் காட்சிகளை செல்போனிலும், டிஜிட்டல் கேமராவிலும் பதிவு செய்து ரசிக்கிறார்கள்.
பின்னர் Delete செய்துவிடுகிறார்கள்.
ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் என்றாவது ஒருநாள் பழுதடையும். அப்போது அதை சரிபண்ண கடைகளில் கொடுக்க வேண்டி வரும். அங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது.
சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள் சரிபண்ணி முடித்ததும், ஆர்வக் கோளாறில் ஒவ்வொரு போனிலும் என்னென்ன Delete செய்யப்பட்டிருக்கிறது என்று தேடிப்பார்ப்பார்கள்.
இதற்காக அழிக்கப்பட்ட தகவல்களை திரும்பப் பெறும் வசதி கொண்ட பல ‘ரெக்கவரி சாஃப்ட்வேர்கள் இருக்கின்றன.
இதன் மூலம் திரும்பப் பெறப்படும் வீடியோ மற்றும் போட்டோக்களில் ஏதாவது ஆபாசப் படங்கள் இருந்தால் போதும், உடனே அதை இணையத்தில் விற்றுவிடுவார்கள்.
இந்த மாதிரியான ‘ஹோம் மேட் செக்ஸ் வீடியோக்கள் எனப்படும் சம்பந்தப்பட்டவர்களே எடுக்கும் படங்களுக்கு வெளிநாட்டவர்களிடம் ஏக கிராக்கி என்பதால் இந்த அயோக்கியத்தனத்தை பல கடைக்காரர்கள் துணிந்து செய்கிறார்கள் என்கிறார்.
இதைத் தவிர்க்க என்ன செய்வது?
முக்கியமாக படுக்கை அறைக்கு செல்போனையோ, கேமராவையோ கொண்டு செல்லாதீர்கள்.
காதலனோ, கணவனோ, மாமனோ மச்சானோ.. படம் எடுக்க ஆண்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் பெண்கள் சம்மதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
இது ஒருவகையான ஆபத்து என்றால், இன்னொரு ஆபத்தும் இதில் இருக்கிறது.
அது இன்று உயிருக்குயிராய் காதலிக்கும் கணவன் மனைவியோ, காதலர்களோ நாளை சூழ்நிலை காரணமாக பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்ய நேரிடலாம்.
ஆனால்… ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் ஆண்கள், பெண்களைப் பழிவாங்க முடிவு செய்து, முன்பு எடுத்த அந்தரங்கப் படங்களை இண்டர்நெட்டில் பரப்பி விடுகிறார்கள்.
அதேபோல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்களுடன் ‘வெப்கேமில் பேசும் பெண்களும், கணவர் ஆசைப்படுகிறார் என்பதற்காக கேமரா முன் தங்களின் அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள்.
கம்ப்யூட்டரில் அது பதிவு செய்யப்படலாம்.
அந்த கம்ப்யூட்டர்கள் ஒருநாள் பழுதடைந்து சரி செய்ய அனுப்பும் போது அங்கிருந்து அது இணையத்துக்கு பரவக்கூடும். ஜாக்கிரதை!
ஒரு ஆபாச தளத்தில் ஒரு பெண்ணின் விடியோ வெளியானால் போதும்…
உலகம் முழுக்க அது பரவி விடும்.
அப்புறம் அந்தப் பெண்கள் வெளியே தலைகாட்ட முடியாது.
அசிங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.
இப்போது செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் கேமராக்களின் வரவால் ஒவ்வொருவரும் கேமராமேனாகி விட்டார்கள்.
பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.
கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு நுண்ணிய கேமராக்கள் வந்து விட்டன.
தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகளின் ட்ரையல் ரூம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் முன் ஒருமுறை சுற்றி நோட்டமிடுங்கள்…!
Via - கதம்பம்
நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் இரகசிய தருணங்களைப் படம் பிடித்து ரசிப்பவர்களா..?!

நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் இரகசிய தருணங்களைப் படம் பிடித்து ரசிப்பவர்களா..?! Very Sorry.. உங்களின் மானம் இப்போது உலகம்...

3D- குழந்தைகளின் கண்பார்வையை பறிக்கும் 
நீங்க 3டி பிரியரா.. அப்போ உங்களுக்கே உங்களுக்குத்தான் இந்தக் கட்டுரை.

இப்போது எங்கு பார்த்தாலும் 3டி வெர்ஷன் என்கிற அளவிற்கு 3டி மோகம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அவதார் படத்திற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்த ஹாலிவுட்காரர்கள் கூட 3டி மோகம் கொண்டு ஸ்பைடர் மேன், அயர்ன் மேன் சீரியஸ்களை 3டியில் ரிலீஸ் செய்தார்கள். அதுவே ஓவர்டோஸ் ஆகி 3டி டிவியையே டிவி கம்பெனிகள் அறிமுகம் செய்யும் அளவிற்கு வந்துவிட்டது.

இந்நிலையில் ‘3டி பார்க்காதீங்க’ என்று அபயக்குரல் எழுப்பியிருக்கிறது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மக்கள் ஆரோக்கிய கண்காணிப்பு இயக்கமான ’அன்செஸ்’. குழந்தைகளின் கண்களில் 3டி படங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றி, ஆய்வு செய்த பின் அன்செஸ் குழந்தைகளுக்கு 3டி வேண்டாம் என்று பரிந்துரை செய்திருக்கிறது.
சரி 3டி என்பது என்ன?

ஒரு 3டி படத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களை நம் கண்கள் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும். அதன் பின்னர்தான் நமது மூளை அதனை ஒரே படமாக புரிந்துகொள்ளும். இப்படித்தான் 3டி படங்களைப் பார்த்து நாம் கிரகித்துக்கொள்கிறோம். ஆறு வயதுக்கு குறைவான குழந்தைகளின் கண்கள் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்காது. எனவே அவர்கள் 3டி பார்க்கும்போது, அவர்களின் கண்கள் அதிக சிரமப்படும். அதனால் அவர்களின் பார்வைத்திறனே பாதிக்கப்படலாம் என்கிறது அன்செஸ்.

13 வயதில்தான் குழந்தைகளின் கண்கள் முழு வளர்ச்சி அடைந்திருக்கும் என்பதால், அதுவரை குழந்தைகளை 3டி படம் பார்க்க பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் இந்த அமைப்பு பரிந்துரைக்கிறது.

பெரியவர்களை விட 3டி எபெக்ட் குழந்தைகளைத்தான் அதிகம் ஈர்க்கிறது என்பதால் வீடியோ கேம்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் இப்போது 3டி-யில் விளையாட்டுகளை அறிமுகப்படுத்துவதையும் கவலையோடு பதிவு செய்திருக்கிறது இந்த நிறுவனம். இந்த நிறுவனம் மட்டுமல்ல, உலகம் முழுக்க அவ்வப்போது 3டிக்கு எதிரான குரல்கள் சமீபகாலமாக ஒலிக்க ஆரம்பித்திருகின்றன. இத்தாலியில் குழந்தைகள் 3டி படங்கள் பார்க்க கட்டுப்பாடுகளே உண்டு. நின்டென்டோ என்ற வீடியோ கேம் நிறுவனம் 2010ல் ஒரு புதிய 3டி விளையாட்டை அறிமுகப்படுத்தியபோது, ‘ஆறு வயதுக்கும் குறைவான குழந்தைகள் அவற்றைப் பயன்படுத்தினால் அவர்களின் பார்வைத்திறன் பாதிக்கப்படலாம்’ என எச்சரித்திருந்தது.

எனவே 3டி-யிடம் இருந்து உங்கள் வீட்டு குழந்தைகளை தள்ளியே இருக்கச் செய்யுங்கள்!
3D- குழந்தைகளின் கண்பார்வையை பறிக்கும்

3D- குழந்தைகளின் கண்பார்வையை பறிக்கும்  நீ ங்க 3டி பிரியரா.. அப்போ உங்களுக்கே உங்களுக்குத்தான் இந்தக் கட்டுரை. இப்போது எங்கு பார்த்தாலும...

சென்னை ரயில்களில் வந்த அந்தப் பெட்டிகளைப் பார்த்தபோது, அதிகாரிகள் அதிர்ந்துபோனார்கள். முடை நாற்றம் எடுக்க... அழுகிய நிலையில் இருந்தது இறைச்சி. அடுத்தடுத்த நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த சரக்கு ரயில் பெட்டிகளைச் சோதித்தபோது மேலும் பல பெட்டிகள் சிக்கின. இப்படிக் கைப்பற்றப்பட்ட இறைச்சியின் மொத்த அளவு எவ்வளவு தெரியுமா? ஒன்றரை டன். எங்கிருந்து வருகிறது இந்த இறைச்சி என்பதுகுறித்து அதிகாரிகளுக்கு இதுவரை துல்லியமாகத் தெரியவில்லை. ஆனால், அது எங்கே போகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்து இருக்கிறது... உங்களுடைய வயிறு! 
ஆமாம். தமிழகத்தில் ஆட்டிறைச்சியின் விலை 400 ரூபாயைத் தாண்டிவிட்டது. வெளி மாநிலங்களில் இருந்து அது 200 ரூபாய்க்குள் கிடைத்தால் லாபம்தானே? இந்த லாப வெறிதான் சாலையோர உணவகங்களில் இருந்து பெரிய உணவு நிறுவனங்கள் வரை இதுபோன்ற சட்டத்துக்குப் புறம்பான, சுகாதாரமற்ற இறைச்சியை வாங்க வைக்கிறது.
''வெளிமாநிலங்களில் இருந்து வரும் இறைச்சியைத் தினமும் சோதனை செய்ய முடியாது. திடீர் சோதனை நடத்தி கெட்டுப்போன இறைச்சிகளைக் கைப்பற்றி அழிக்கிறோம். இதுபோன்ற இறைச்சியை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது என்று அசைவ உணவு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சென்னையைப் பொறுத்த அளவில் தினமும் 1,650-க்கும் மேற்பட்ட ஆடு மாடுகள் கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்குப் பிறகு, சுகாதாரமான முறையில் வெட்டப்படுகின்றன. இவற்றின் இறைச்சி விற்கப்படுவதற்குத் தகுதியானவை எனச் சான்றிதழை நாங்கள் அளிக்கிறோம். மக்கள் நம்பகமான கடைகளில் இறைச்சியை வாங்குவது நல்லது'' என்று சொல்கிறார் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர்.
இறைச்சி சாப்பிடும்போது நம்மை நாமே எப்படி பாதுகாத்துக்கொள்ளவது என்பதுகுறித்து பொதுநலம் மற்றும் அறுவைசிகிச்சை நிபுணர் கே.விவேகானந்தனிடம் கேட்டோம்.
'பொதுவாக, ஆட்டுத்தொட்டியில் வெட்டப்படும் இறைச்சியை நான்கு மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும். அதற்கு மேல் பதப்படுத்தாமல் வைத்திருந்தால், இறைச்சி அழுக ஆரம்பித்துவிடும். குளிர்பதனப் பெட்டிகளில் மைனஸ் 15 முதல் மைனஸ் 18 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு இறைச்சியை ஒரு வாரம் வரை வைத்துப் பயன்படுத்தலாம். பொதுவாக, ஆடு மாடு உடலில் கிளாடீரியம், ஸ்டப்லா காகஸ், எக்கினோ காகஸ், ஈகோலி, ஆஸ்காரிஸ் போன்ற ஏராளமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. ஆடு மாடு இறந்ததும் இவை அதிக அளவில் பல்கிப் பெருகி அதைச் சிதைக்க ஆரம்பிக்கின்றன. இதனால், இறைச்சி அழுக ஆரம்பிக்கிறது. மேலும், பூஞ்சைத் தொற்றும் ஏற்படலாம்.
எனவே, கால்நடைகளை வெட்டிய அடுத்த சில மணி நேரங்களில் சமைத்துச் சாப்பிடுவதுதான் நோய்க் கிருமிகளைத் தவிர்க்க ஒரே வழி. கெட்டுப்போன இறைச்சியில் உள்ள கிருமிகள் மனித உடலுக்குள் செல்லும்போது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். ரத்தக் குழாய்கள் வழியே சென்று மூளையைப் பாதிக்கும். ஹைடாடிட் என்ற ஒட்டுண்ணியானது கல்லீரலுக்குச் சென்று அங்கு கட்டியை உருவாக்கும். நுரையீரலை அடையும் கிருமிகள் சுவாசப் பிரச்னை, இடைவிடாத இருமல், சளி போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். தசைகளில் தங்கும் கிருமிகள் தீராத வலியை ஏற்படுத்தும். இதுதவிர, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவையும் ஏற்படலாம். பாதுகாப்பு இல்லாத இறைச்சியை ஈக்கள் மொய்க்கும்போது காலரா போன்ற நோய்கள் ஏற்படும்'' என்றார்.
கறிக் குழம்பைக் காரசாரமாக வைப்பதும் சாப்பிடுவதும் மட்டும் கலை அல்ல; நல்ல கறியாகப் பார்த்து வாங்குவதும் கலைதான். என்ன சொல்கிறீர்கள்?
 பாதுகாப்பான இறைச்சியை எப்படிப் பார்த்து வாங்குவது? ஆறு விஷயங்களைக் கவனியுங்கள் என்கிறார் சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த இறைச்சிக் கடைக்காரர் இனாயதுல்லா.
கவனிக்க வேண்டிய ஆறு விஷயங்கள்
1. நீங்கள் செல்லும் இறைச்சிக் கடை தினந்தோறும் திறக்கக் கூடியதா?
2. அந்தக் கடைக்கு அரசு உரிமம் உள்ளதா?
3. கடையில் சுத்தமான சூழல் உள்ளதா?
4. இறைச்சி பக்கத்தில் நிற்கும்போது மொஞ்சை (கவுச்சி) வாடை அடிக்கக் கூடாது.
5. இறைச்சி நிறம் மிகவும் சிவப்பாகவோ, மிக அதிகம் வெளுத்துப்போயோ இருக்கக் கூடாது. இறைச்சி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.
6. கறியைத் தொட்டுப் பார்த்தால் ஜில் என இருக்கக் கூடாது. அப்படி 'ஜில்’ என இருந்தால் அது குளிர்பதனப் பெட்டியில் வைத்த முந்தைய நாள் இறைச்சியாக இருக்கலாம்.

பாதுகாப்பான இறைச்சியை எப்படிப் பார்த்து வாங்குவது? Seeing how the meat is safe to buy?

செ ன்னை ரயில்களில் வந்த அந்தப் பெட்டிகளைப் பார்த்தபோது, அதிகாரிகள் அதிர்ந்துபோனார்கள். முடை நாற்றம் எடுக்க... அழுகிய நிலையில் இருந்தது இ...

தெரிந்துக்கொள்வோம்.

பெண்கள் மற்றும் ஆண்களின் ஏழு பருவங்கள் :-

பெண்களின் ஏழு பருவங்கள்:-
* 1 வயது முதல் 8 வயது வரை - பேதை
* 9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை
* 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை
* 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை
* 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை
* 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை
* 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்

ஆண்களின் ஏழு பருவங்கள்:-

* 1 வயது முதல் 7 வயது வரையிலான பருவம் - பாலன்
* 8 வயது முதல் முதல் 10 வயது வரையிலான பருவம் – மீளி
* 11 வயது முதல் 14 வயது வரையிலான பருவம் – மறவோன்
*15 வயதிற்குண்டான பருவம் – திறவோன்
*16 வயதிற்குண்டான பருவம் – விடலை
*17 வயது முதல் 30 வரையிலான பருவம் - காளை
* 30 வயதுக்கு மேலான பருவம் - முதுமகன்.
பெண்கள் மற்றும் ஆண்களின் ஏழு பருவங்கள்

தெரிந்துக்கொள்வோம். பெண்கள் மற்றும் ஆண்களின் ஏழு பருவங்கள் :- பெண்களின் ஏழு பருவங்கள்:- * 1 வயது முதல் 8 வயது வரை - பேதை * 9 வயது ம...

திருவானைக்காவலில் பிறந்து, உலக அறிவியல் அறிஞர்கள் பட்டியலில் இடம்பிடித்த அற்புதத் தமிழர், சர் சி.வி.ராமன். அவரிடம் படிக்க பத்து பாடங்கள்

எங்கிருந்தும் சாதிக்கலாம் 

படிப்பில் படு சுட்டி. ஆங்கிலத்திலும் இயற்பியலிலும் தங்கப் பதக்கம் பெற்றவர். மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்ல நினைத்தார். ஆனால், இவருடைய உடல்நிலை அதற்கு ஏற்றதாக இல்லை. வெளிநாடு செல்ல மருத்துவர்கள் இவருக்கு ‘உடல்நிலை தகுதிச் சான்று’ அளிக்கவில்லை. எனவே இந்தியாவில் இருந்தபடியே அறிவியலில் பல்வேறு சாதனைகள் செய்து, நோபல் பரிசை வென்றார் ராமன்.


வாசிப்பை நேசி!

அப்பாவின் அலமாரியில் இருந்து எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை எடுத்து, ஓயாமல் வாசிப்பார். மூன்று நூல்கள் அவரை மிகவும் ஈர்த்தன. எட்வின் அர்னால்டின் ஆசிய ஜோதி, யூக்லிட் எழுதிய ‘The elements’மற்றும் ஹெர்மான் ஹெல்ம்ஹோல்ட்ஸ் எழுதிய ‘The Sensations of Tone’ஆகிய நூல்களே அவை. வெவ்வேறு துறைகளில் ஆர்வம் இருந்ததால், அறிவியலில் அவரின் ஆய்வுகளும் பல்வேறு துறைகள் சார்ந்து இருந்தன.

பிடித்ததில் பிணைந்திடு!

இந்தியாவில் அறிவியல் வேலைவாய்ப்புகள் குறைவாகவே இருந்த காலத்தில், கொல்கத்தா சென்று நிதித் துறையில் வேலை பார்த்தார். கிடைத்த சொற்ப வருமானத்தில், பெரும்பாலான பணத்தை, ஆய்வுகள் செய்யவே பயன்படுத்திக்கொண்டார். ஒருநாள், ‘பவ்பஜார்’ எனும் பகுதியின் வழியாகச் சென்றபோது, ‘இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம்’ என்ற பெயர் பலகையைப் பார்த்தார். அன்று முதல், மாலை நேரங்களில் அங்கே ஆய்வுகள் செய்தார். பிறகு, நிதித் துறை வேலையை முழுவதும் துறந்துவிட்டு, முழு நேர ஆய்வுகளில் ஈடுபட்டார்.

சிக்கனம் செய்!

அப்போதெல்லாம் அறிவியல் ஆய்வகத்துக்கான முக்கியக் கருவிகளை வெளிநாட்டில் இருந்துதான் வாங்குவார்கள். ஆனால், ராமன் அதிலும் சிக்கனமானவர். ஹெளராவில் இருக்கும் மார்க்கெட்டில் இருந்து பொருட்களை வாங்கி, ஆய்வுக்கான கருவிகளைத் தானே தயாரிப்பார். ராமன் விளைவுக்கான பெரும்பாலான ஆய்வுகளை 300 ரூபாயில் முடித்து விட்டார் ராமன். இறுதியில், ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி தேவைப்பட்டபோது, ‘இதை மட்டும் வாங்கித் தாருங்கள்’ என்று பிர்லாவுக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கருவியைக் கொண்டு முழுமையாக ஆய்வுகளை முடித்தார்.

உலகை உற்றுக் கவனி!

மெடிட்டரேனியன் கடல் (Mediterranean Sea) என்று சொல்லப்படும் நடுநிலக் கடல் வழியாகப் பயணம் சென்றபோது, ‘கடல் மற்றும் வானம் நீல நிறமாக இருப்பது ஏன்?’ என்று யோசித்ததின் விளைவாக எழுந்ததே, ராமன் விளைவு. கப்பல் பயணத்திலும் சுற்றி இருப்பனவற்றைக் கவனித்துக்கொண்டு இருந்தார் ராமன்.

நம்பிக்கையோடு முன்னேறு!

இயற்பியலாளர் ஆர்தர் காம்ப்டன், எக்ஸ் கதிர்கள் சிதறலைப் பற்றி ஆய்வுசெய்து, நோபல் பரிசு பெற்றதாக இவரின் மாணவர் சொன்னார். ‘அது, கண்களுக்குப் புலப்படும் ஒளியிலும் இருப்பதற்கு சாத்தியம் உண்டல்லவா?’ என யோசித்தார். அந்தப் பாதையில் நம்பிக்கையோடு ஆய்வுகள் செய்து சாதித்தார்.

கற்றல் முடிவில்லாதது!

ராமன், ஏதேனும் ஆய்வுகளைத் தன்னுடைய மாணவர்களோடு இணைந்து வெளியிட்டாலும் அதில் அவர்களின் பெயரையே முன்னிலைப்படுத்தி வெளியிடுவார். ”அறிவியலைக் கற்பது என்பது, சூத்திரங்களையும் தரவுகளையும் கற்பது அல்ல, படிப்படியாகக் கேள்விகள் கேட்டு அறிந்துகொள்வதே” என்பார். அப்படியே பாடம் நடத்தி, மாணவர்களுக்கும் வழிகாட்டினார்.

பகுத்து அறி!

”கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஒருமுறை கேட்டபோது, அந்தக் கேள்வியை அவர் தவிர்த்தார். மீண்டும் கேட்கவே, ”கடவுள் இருக்கிறார் என்றால், டெலஸ்கோப்பை வைத்துக்கொண்டு பிரபஞ்சம் முழுக்கத் தேடு. வெறும் யூகங்களை வைத்துக்கொண்டு நேரத்தை வீணாக்காதே” என்றார் ராமன்.

துணிவு கொள்!

ஆங்கிலேய அரசு, அவரை நோபல் பரிசு வாங்கவிடாமல் தடுக்க நினைத்தது. அவருக்கு வர வேண்டிய தந்தியை மூன்று முறை தடுக்கவும் செய்தது. பிறகு தடைகளை மீறி அது, அவர் கைக்குப் போய்ச் சேர்ந்தது. ‘ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது’ என்று எச்சரித்தே நோபல் பரிசு வாங்க அவரை அனுப்பினார்கள். அங்கே சென்றவர், ”ஆங்கிலேயரின் அடிமைப்படுத்தலைத் தொடர்ந்து எதிர்க்கும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு, இந்த விருது சமர்ப்பணம்’ என்று கம்பீரமாக ஆரம்பித்தே தன்னுடைய உரையை வழங்கினார் ராமன்.

உனக்குள்ளே ஒரு விஞ்ஞானி!

”ஐந்து வயதில் இருந்தே பிள்ளைகளை விஞ்ஞானிகளாக நடத்த வேண்டும். அவர்களின் கேள்விகளை மதித்து, பதில் சொல்ல வேண்டும். அவர்கள் கற்றல் அனுபவம், புத்தகங்களோடு தேங்காமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அறிவியலில் நாம் ஒளிர முடியும்” என்றார் ராமன். அவர், ராமன் விளைவைக் கண்டுபிடித்த நாளே, நம் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

ராமன் விளைவு என்றால் என்ன ? :

ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering] அல்லது ராமன் விளைவு [Raman Effect] என அழைக்கப்படுகிறது; இவ்வாறு சிதறும் ஒளி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது எனவும் கண்டார். அவை

படுகதிருக்குச் சமமான அலைநீளமுள்ள முதன்மை அல்லது ராலே வரி;(ஆற்றல் இழப்பு இல்லை )
முதன்மை வரியைவிட அதிக அலைநீளமுள்ள ஸ்டோக்சு வரிகள்;(ஆற்றல்இழப்பு )
முதன்மை வரியைவிட குறைவான அலைநீளமுள்ள எதிர் ஸ்டோக்சு வரிகள்;(ஆற்றல் அதிகரிப்பு )

நோபல் பரிசை அறிவியல் துறையில் பெற்ற முதல் ஆசியர் என்கிற பெருமை அவரை வந்து சேர்ந்தது ;ஜூலை மாதமே நோபல் பரிசு தனக்குத்தான் என உறுதியாக நம்பி டிக்கெட் எல்லாம் புக் செய்தார் ராமன்.
பெட்ரோலிய வேதித் தொழில், மருந்தாக்கத் தொழில் ,சட்டத்துக்கு புறம்பாக போதை மருந்துகளை எடுத்துச்செல்ல பயன்படும் உறைகளைச் சிதைவுறுத்தாமலேயே அவ்வகையான மருந்துகளை இனம் காணல்,அணுக்கருக் கழிவுகளை தொலைவிலிருந்து ஆய்வுசெய்தல் ஆகியவற்றில் ராமன் விளைவு பயன்படுகிறது. இவரது மேற்பார்வையில் இந்திய அறிவியல் கழகம் சிறப்பான அமைப்பாக உருவெடுத்தது.

- பூ.கொ.சரவணன்
நவ.:7 இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமன் பிறந்த தின சிறப்பு பகிர்வு!

திருவானைக்காவலில் பிறந்து, உலக அறிவியல் அறிஞர்கள் பட்டியலில் இடம்பிடித்த அற்புதத் தமிழர், சர் சி.வி.ராமன். அவரிடம் படிக்க பத்து பாடங்கள்...


நண்பர்கள் கவனத்திற்கு !! Microsoft Office இலவசம் !! - Download Link For Android & Iphone Below

#Iphone-Ipad மற்றும் Android டிவைஸ்களுக்கு இலவசம் !!

இந்த மென்பொருளை பயன்படுத்தி Word, Excel and PowerPoint ஆகிய கோப்புகளை மொபைல் மற்றும் டப்ளேட் டிவைஸ்களில் பயன்படுத்தலாம் இலவசமாக ...

#முடிந்த அளவு உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும் ...

For IPhone - Ipad Users Download Here - https://itunes.apple.com/us/app/microsoft-office-mobile/id541164041?mt=8

For Android Users : Download Here - https://play.google.com/store/apps/details?id=com.microsoft.office.officehub&rdid=com.microsoft.office.officehub

Office users will now be able to create and edit documents in Word, Excel and PowerPoint on iPhone, iPad and Android devices at no cost.

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t49912-microsoft-office-download-link-for-android-iphone-below#ixzz3IR4EnGKF
Under Creative Commons License: Attribution
நண்பர்கள் கவனத்திற்கு !! Microsoft Office இலவசம் !! - Download Link For Android & Iphone Below

நண்பர்கள் கவனத்திற்கு !! Microsoft Office இலவசம் !! - Download Link For Android & Iphone Below #Iphone-Ipad மற்றும் Android டிவைஸ்களு...

தாய் மார்களே உங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் போது நீங்கள் கோபப்பட கூடாதாம்-
ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்,,!
கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை
கூட ஏற்படுத்துகிறதாம்.

எனவே தாய்மார்கள் பாலூட்டும் போது அமைதியான சூழ்நிலையில் தாய்ப்பாலுட்ட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கோபம் என்பது ஒரு உணர்வு.
எரிச்சல், மனக்கடுப்பு, வருத்தம், சீற்றம், ஆத்திரம், ஆவேசம், பெரும்சினம் இவை எல்லாம் கோபத்தின் பெருவகைகள்.
கோபம் என்பது ஒரு சில இடங்களில் அவசியம்தான்
அதேசமயம் எதற்கெடுத்தாலும் கோபம், எப்போதும் கோபம் என்று இருக்கக் கூடாது.
கோபம் ஏற்படும் போது மனதை அமைதியாக வைத்திருக்க பழகவேண்டும்.
கோபம் வரக்கூடாது.
வந்தாலும்கூட நீண்ட நேரம் இருக்கக் கூடாது.
அவ்வாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
கோபம் உடனே மறைந்து விட வேண்டும்.
திரும்ப திரும்ப பேசியதைப் பேசி கேட்பவரையும் கோபத்தின்
உச்சிக்கு கொண்டு சென்று தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடாது.
கோபம் உடலில் பல கெடுதல்களை ஏற்படுத்துகிறது.
கோபத்தோடு தன் குழந்தைக்கு தாய்பால் அந்த கோப உணர்ச்சியானது பாலையே நஞ்சாக்கிவிடுமாம்.
கோபத்தினால் நம்முடைய சக்தி வீணாகிறது.
நரம்பு மண்டலம் முழுவதும் சீர்குலைகிறது.
உடல் பதறுகிறது.
உடலில் சோர்வு ஏற்படுகிறது.
மறுபடியும் உடல் தன்னிலைக்கு வர பல மணி நேரங்கள் ஆகின்றன.
எனவே உங்கள் உடலை நோய்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவும்.
தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கவும் கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
கோபம் வரும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் நம்முடைய மூச்சுக்காற்றை கவனிக்க வேண்டும்.
மூச்சு உள்ளே போவதையும், வெளியே வருவதையும் சில நிமிடங்கள் கவனித்து வந்தீர்களானால் கோபம் வராது வந்தாலும் அடங்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.
அதேபோல் கோபத்தை கட்டுப்படுத்த தியானம் சிறந்த வழி என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
தாய் மார்களே உங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் போது நீங்கள் கோபப்பட கூடாதாம்-

தாய் மார்களே உங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் போது நீங்கள் கோபப்பட கூடாதாம்- ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்,,! கோபத்தின் உச்சத்தில் ...

இந்தியாவில ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு காலத்துல ஸ்டேட்டஸ் சிம்பிளா கருதபட்ட வாஷிங் மெஷின் என்னும் துணி துவைக்கும் எந்திரம் இன்று ஒரு அத்திவாசியமான பொருளாகி போனது தான் உண்மை.
ஆயினும் இது 13 ஆயிரம் ரூவாயிலிருந்து 90,000 ரூபாய் வரை வெவேறு மாடல்களில் கிடைக்கும் இந்த வாஷிங் மெஷின் இன்னும் பல பேருக்கு எட்டாக்கனியாக போனது என்னமோ உண்மை.
இனிமேல் அந்த கவலை வேண்டாம் -
1500 ரூபாய்க்கு அதுவும் நம்ம இந்தியாவிலே கண்டுபிடித்து தயாரிக்கவும் செய்து விட்டார்கள்.

இதில் இன்னொரு நல்ல விஷயம் இந்த வாஷிங் மெஷின் ஒரே இடத்தில் வைக்காமல் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லும் வகையில் அமைக்கபட்ட ஒரு கண்டுப்பிடிப்பு.
சில வீட்டில் வாஷிங் மெஷின் இருந்தாலும் ரன்னிங் வாட்டர் எனப்படும் பைப் மூலமாக தண்ணீர் வசதி இல்லாமல் வாஷிங் மெஷினை உபயோகப்படுத்த முடியாமல் இருக்கும் கட்டடத்தில் இதற்கு அது தேவையில்லை -
ஒரு பக்கெட் இருந்தா போதும்
படத்தை பாருங்கள் -
வெகு சீக்கிரம் உங்க வீட்ல பட்ஜெட் வாஷிங் மெஷின் வருதுங்க,
சின்ன குடும்பம் மற்றூம் பேச்சலர்களுக்கு பெரிய வரப்பிரசாதம்.
LOW BUDGET வாஷிங் மெஷின்-LOW BUDGET Washing Machine
LOW BUDGET வாஷிங் மெஷின்-LOW BUDGET Washing Machine

இந்தியாவில ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு காலத்துல ஸ்டேட்டஸ் சிம்பிளா கருதபட்ட வாஷிங் மெஷின் என்னும் துணி துவைக்கும் எந்திரம் இன்று ஒரு அத்த...

ரோட்டைச் சேர்ந்த சுரேஷ்பாபு மற்றும் சரவணமூர்த்தி ஆகியோர் கர்நாடக மாநிலத்தில் உள்ள 6ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட குகைகள், கோவில்கள் அதிகம் உள்ள பாதாமி,  பட்டாடக்கல்லு, அய்ஹோலேவுக்கு ஆன்மிக சுற்றுப்பயணம் சென்று வந்த தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்கள்.
    
''கர்நாடக மாநிலம் முழுக்கவே பல்வேறு சிற்பக்கலைகள், குகைகள் கொண்ட கோவில்கள் மிக அதிகம். இதில் சாளுக்கிய மன்னர்களின் ராஜ்யத்தின் தலைநகரமான பாதாமி, பட்டாடக்கல்லு, அய்ஹோலே போன்ற ஊர்கள் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. இவை அனைத்தும் 5 முதல் 8ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை.

பாதாமி (பதாமி)

முதலில் நாங்கள் சென்றது பாதாமி (பதாமி). திராவிடர் கலை நுட்பத்துடன் கட்டப்பட்ட குகை கோவில்கள் கொண்ட நகரம். இந்த சிறு நகரம் முழுக்க பாதாம் நிறத்தில் கரடுமுரடான sandstone பாறைகள் நிறைந்து இருப்பதால் இந்த ஊருக்கு பாதாமி என்று பெயர் வந்ததாக கூறுகிறார்கள். பதாமி என்றும் கூறுகிறார்கள்.

இந்த குகை கோவில் சிற்பங்கள், சாளுக்கிய மன்னன், புலிகேசி-1 கி.பி.543ஆம் ஆண்டு பாதாமிக்கு தலைநகரத்தை மாற்றியபோது அமைக்கப்பட்டுள்ளன. இந்த குகை கோவில்களை அவர்கள் உருவாக்கியது, இயற்கையாகவே தென்னகத்தில் இருந்து படை எடுத்து வந்த பல்லவ நாட்டு எதிரிகளிடம் இருந்து காத்து கொள்ள அமைந்தது சிறப்பாகும்.
மிகப்பெரிய sandstone மலையை, குடைந்து சிற்பங்களை அமைத்துள்ளது மிக அற்புதம். இதில் sandstone என்பது சற்று sensitive ஆன கற்களாகும். இதை சற்று வேகமாகவோ, தவறாகவோ செதுக்கினால், கல் இரண்டாக உடைந்து போக வாய்ப்புகள் அதிகம். இவ்வளவு சிக்கல்கள் இருந்தும் அங்கிருக்கும் சிற்பங்கள், தூண்கள் மற்றும் குடைந்தெடுத்த குகைக்குள் அமைக்கப்பட்டிருப்பது மிக அழகு. மொத்தம் 4 குகை கோவில்கள் அருகருகே இருக்கின்றது.

கீழே ஒரு அகஸ்தியர் தீர்த்தக்குளமும், அதில் பழங்கால புத்தநாதர் கோவிலும் அமைந்திருக்கின்றன. இதை மேலிருந்து பார்த்தால், பச்சை நிற குளத்தில் இருப்பது மிக அழகாக இருக்கின்றது. குகைக்கு மேலே 18ஆம் நூற்றாண்டுகளில் திப்பு சுல்தான் அமைத்த கோட்டை இருக்கின்றது.
இந்த ஊருக்குள் நுழையும் போதே அங்கிருக்கும் பிரம்மாண்ட பாறைகள், சந்து சந்தாக குறுகிய பாதைகள் கொண்ட தெருக்கள், மிக பழமையான வீடுகள், பழங்கால கிராம வாழ்க்கை இவற்றையெல்லாம் பார்க்கும் போது நமது எண்ணங்கள், கற்பனைகள் பின்னோக்கி  பயனிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பட்டாடக்கல்லு

இது பதாமியிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. பட்டாபிஷேக கல் என்பதையே பட்டாடக்கல்லு என்றழைக்கப்படுகின்றது. இங்கே தான் அரசர்களுக்கு பட்டாபிஷேகம், முடி சூட்டு விழா நடந்திருப்பதால் இந்த பெயர் அமைந்ததாக கூறுகிறார்கள்.
இங்கு ஒரே இடத்தில் 8 கோவில்கள் அமைந்துள்ளன. பதாமியில் உள்ள சிற்பக்கலையை போல, அவர்களுக்கு அடுத்து வந்த அரச தலைமுறைகள், எப்படி புதுமையை புகுத்தியிருக்கின்றார்கள் என்பதற்கு இந்த கோவில்களே சான்று. இந்த கோவில்கள் தென்னிந்திய திராவிட முறையிலும், வட இந்திய நகர் முறையிலும் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த கோவிலை சாலுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்யனின் மனைவிகள் (சகோதரிகள்) இருவரும் சேர்ந்து கி.பி 745ல், போரில் வெற்றி பெற்றதற்கு கெளரவிப்பதற்காக கட்டியதாக கூறுகின்றனர்.

இந்த இடம் பதாமியை விட வேறுபட்டு அமைந்திருந்தது. ஒரு பக்கம் நமது கோவில் கோபுரங்களை போலவும், மறு பக்கம் ஒரிசாவில் உள்ள கோவில்களை போலவும் ஒரு சேர அமைந்திருந்தது மிக அழகாக இருந்தது. உறுதியான தூண்களும், அதில் அமைந்திருக்கின்ற சிற்பங்கள் ராமாயண, மகாபாரத புராணங்களை எடுத்துரைப்பதாக இருக்கிறது.
மற்றொரு தூணில், ஒரு பெண் தனது காதலனுக்கு கடிதம் எழுதியதற்காக யானையின் காலடியில் தூக்கி வீசியெறிப்பட்ட சம்பவத்தையும் வடிவமைத்துள்ளனர். அதே சமயம், கன்னட மொழியின் எழுத்து வடிவிலும் சுவர்களில் செதுக்கியுள்ளனர். அதில் போர் காலங்களில் இக்கோவில்கள் கட்டப்பட்டதற்காக சன்மானங்களாக தரப்பட்ட தாசிகளை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.

இந்த கோவிலுக்கு முன்னே மிகப்பெரிய நந்தி சிலை ஒன்று கருப்பு கிரானைட் கல்லில் உள்ளது. பல படையெடுப்புகள், கொள்ளைகளுக்கு பிறகு இன்னமும் பளபளப்பாக அழகாக இருப்பது இந்த நந்தி சிலையின் சிறப்பு. இவற்றை பார்க்கும் போது, அந்தக்காலங்களில் கலையும், மூர்க்கத்தனங்களும் ஒரு சேர அமைந்திருப்பதை சிற்பங்களின் மூலம் அறியலாம்.
அய்ஹோலே

இது பட்டாடக்கல்லிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இது சாலுக்கிய மன்னர்களின் முதல் தலைநகரமாகும். அதற்கு சான்றாக இந்த ஊரை சுற்றியும் 100க்கும் மேற்பட்ட கோவில்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

இங்குள்ள 100 கோவில்களையும் பார்க்க முடியாது என்பதால் முக்கியமான துர்கா கோவிலை மட்டும் பார்க்க சென்றோம். இந்த கோவில் சிறியதாக இருந்தாலும், இதன் வடிவம் அரை வட்ட வடிவமாக (semi circular shape) இருந்தது அழகு. இந்த கோவிலில் உள்ளே கற்கலாலேயே மேல் தூண்களும், மேல் சுவற்றில் உள்ள கற்சிற்பங்களும் அழகு.
இந்த ஊர்கள் 30 கி.மீ. சுற்றலவில் இருக்கின்றன. இந்த இடங்கள் பெங்களூருவிலிருந்து 513 கி.மீ. தூரத்தில் உள்ளன. பதாமியிலிருந்து ஹம்பிக்கு (பெங்களூர் வழி) கிட்டதட்ட 120 கி.மீ. தூரம். பெங்களூரிலிருந்து ஒரு ரயில் பதாமிக்கு செல்கிறது. இவ்விடங்களை வாகனங்கள் இருந்தால் நாமே சென்று பார்த்து வரலாம்.
இந்த ஊர்களுக்கு செல்லும் போது பதாமியில் மட்டுமே தங்க முடியும். மற்ற இரண்டு ஊர்களில் எந்த வசதியும் இல்லை. உணவகங்கள் கூட பதாமியில் மட்டும் தான் உள்ளது. விடுதிகளை பொறுத்தவரையில் இரண்டு மூன்று இருக்கின்றன. ஒரு சில பெரிய ஹோட்டல்களும் இருக்கின்றன. இங்கே கொசுக்களை விட கோவில்களே அதிகம்.''
ஆன்மிகத்தோடு சேர்ந்த சுற்றுலா ஆரோக்கியமானது. பாதாமி போன்ற நகரங்கள் இந்தியாவில் எத்தனையோ இருக்கிறது. அங்குள்ள நம் முன்னோர்களின் கட்டடக்கலையை இதுபோன்ற ஆன்மிக சுற்றுலாவால் வளர்ப்பது நமது கடமை.
-இ.லோகேஷ்வரி
-விகடன்-
அசர வைக்கும் குகைக்கோவில்கள்! The cave temples surprise!

ஈ ரோட்டைச் சேர்ந்த சுரேஷ்பாபு மற்றும் சரவணமூர்த்தி ஆகியோர் கர்நாடக மாநிலத்தில் உள்ள 6ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட குகைகள், கோவில்கள் அத...

றிவியல் வளர்ச்சியில் எத்தனை புதுப்புது விஷயங்களை நாம் அறிந்துகொண்டாலும் இயற்கை நமக்கு தரும் விஷயங்கள் அலாதியானவை. எக்காலத்திலும் அதன் பிரமிப்பு நம்மை விட்டு அகலாது. அப்படி சில இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளும்போது நமக்கே ஆச்சர்யம் ஏற்படும்.
அவற்றில் சில கீழே..

லேக் ரெட்பா


ஆப்ரிக்க கண்டத்தில் இருக்கும் செனகல் நாட்டில் பிரபலமானது இந்த பிங்க் ஏரி. பொதுவாக தண்ணீருக்கு நிறமே கிடையாது ஆனால் இந்த ஏரியின் இந்த இளஞ்சிவப்பு நிறத்திற்கான காரணம்? கடலின் நீல நிறந்திற்கு வானத்தின் நீல நிறம் காரணமாக இருப்பது போல இதற்கும் ஒரு காரணம் உள்ளது.
ஏரியில் 'துனாலியல்லா சாலிணா' என்ற நுண்ணுயிரிகள் அதிகம் அவை சூரிய ஒளியினாலும் நீரின் உப்புத்தன்மையை சமாளிப்பதற்காகவும் ஒரு திரவத்தை சுரப்பதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. ஏரியன் உப்புத்தன்மை அதிகம் உள்ள காரணத்தால் இதில் நம் உடல் மூழ்காமல் மிதக்குமாம். அட... ஆச்சர்யம்தான்!

க்ரேட் ப்ளூ ஹோல்

பெலிசு நாட்டின் கடல் பரப்பில் உள்ளது இந்த நீர்மூழ்கி புதைகுழி. சாதாரணமாக தரையில் இருக்கும் புதைக் குழியைக் கவனித்துவிட்டால் சுதாரித்துக் கொள்ளலாம். கடலில் உற்சாகமாக நீந்திக் கொண்டிருக்கும் போது திடீர் என 300 அடி சுற்றளவிற்கு கடலின் ஆழம் அதிகரித்திருந்தால். அதுதான் இந்த 'க்ரேட் ப்ளூ ஹோல்'.
407 அடி ஆழம்,  அதாவது ஐந்து பனைமர உயரத்திற்கு இருக்கும் ஒரு குழி. இந்த ஆபத்தில் விளையாடவும் சில சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவது இதில் வியப்பான விஷயம். பல பயணிகள் வந்து இந்தக் குழியில் ஸ்கூபா டைவிங் செய்து சாகச சாம்பியன்களாக திகழ்கின்றனர்.

தர்வாசா

தர்வாசா என்றால் துருக்மெனிய மொழியில் கதவு என்று பொருள். இது துருக்மெனிஸ்தான் நாட்டின் காராக்கும் பாலைவனத்தின் நடுவே அமையப் பெற்றுள்ள ஒரு கிராமம். இங்கு இயற்கை எரிவாயு அதிகமாக இருப்பதை அறிந்த புவியியல் நிபுணர்கள் 1971-ம் ஆண்டு துளைக்கத் துவங்கினார்கள். அப்போது திடீரென நிலப்பகுதி தகர்ந்து விழ, 230 அடி விட்டத்திற்கு துவாரம் உருவானது. நச்சுப்புகை பரவாமல் இருக்க வேண்டும் என்று அதில் தீயைப் பற்ற வைத்தார்கள் நிபுணர்கள், சில மணிநேரத்தில் அணைந்துவிடும் என நினைத்த அந்தத் தீ இன்னும் அணையாமல் எரிந்து கொண்டே இருக்கிறதாம்.
அந்த கிராமத்து வாசிகள் இந்த துவாரத்தை 'Door to Hell' (மரணத்தின் வாசல்) என்று அழைக்கின்றனர்.

சாந்த் பௌரி

ஜெய்பூரிலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அபாநேரி கிராமம். அங்கு இருக்கும் ஷர்ஷத் மாதா கோவிலைச் சேர்ந்த கிணறுதான் இந்த சாந்த் பௌரி. சரியாக 3,500 படிகட்டுகள் கொண்ட கிணறு இது. 20 அடிக்கு தண்ணீர் சேமித்துவைக்கும் அளவு நேர்த்தியுடன் கட்டப்பட்ட இந்தக் கிணறு 1,000 வருடம் பழமையானது.
சாதாரணமாக நிலவும் வெப்பநிலையைவிட 5 முதல் 6 டிகிரி வரை குறைவான வெப்பநிலையில் இருக்கும் இந்த கிணற்றங்கறையில், அதிக வெப்பமான நாட்களில் உள்ளூர்வாசிகள் கூடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

 - பா.ஜான்ஸன்

-vikatan-
நீரில் மிதக்கலாம்...நீந்திக் களிக்கலாம்: இயற்கையின் அதிசயங்கள்!

அ றிவியல் வளர்ச்சியில் எத்தனை புதுப்புது விஷயங்களை நாம் அறிந்துகொண்டாலும் இயற்கை நமக்கு தரும் விஷயங்கள் அலாதியானவை. எக்காலத்திலும் அதன் ப...

நீண்ட நாட்களாக இணையத்தில் நான் தேடிக்கொண்டிருந்த கோவில் இது! தகவல் தந்த நண்பர்க ளுக்கு நன்றி!
கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்; வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு பூஜை செய்து கரை திரும்பும் பக்தர்கள்
குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக். இங்கு கடலுக்குள் உள்ளது உலகச் சிறப்பு மிக்க நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம். இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை கடல் உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. பாண்டவர்கள் வழிபட்டதன் நினைவாக... இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.
இந்த ஆலயத்தின் கல் கொடிமர் (சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் உடையது) இதுவரை வீசிய புயல்களினால் சேதமடை யாமல் உள்ளது. தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டம் இந்த கொடி மரத்தின் உச்சியைத் தொடும்.
பின் மெல்ல மெல்ல கடலின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்து இருபுறமும் கடல் விலகி சிவனை வணங்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரைநோக்கித் திரும்புகின்றனர்.
கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்; வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு

நீண்ட நாட்களாக இணையத்தில் நான் தேடிக்கொண்டிருந்த கோவில் இது! தகவல் தந்த நண்பர்க ளுக்கு நன்றி! கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்; வழி...

 பளிச்... பளிச்...
வனப்பகுதியை ஒட்டிய  நிலங்களுக்கு ஏற்றது.
விற்பனைக்குக் கவலையில்லை.
காய்கறிகள், நெல், வாழை, தென்னை... என சந்தையில் எப்போதும் கிராக்கி இருக்கும் பலவிதமான பயிர்கள் இருந்தாலும்... மூலிகைப் பயிர்கள் சிலவற்றுக்கும் நிலையான சந்தை இருக்கத்தான் செய்கிறது. விவரமறிந்த விவசாயிகள்... துளசி, வெட்டிவேர், செங்காந்தல், கோலியஸ்... போன்ற மூலிகைப் பயிர்களைத் தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறார்கள். இத்தகையப் பயிர்கள், பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையிலேயே சாகுபடி செய்யப்பட்டு வருவதால், விற்பனை பற்றிய கவலையும் இல்லை. அந்த வகையில் 'கோலியஸ்' என்று அழைக்கப்படும், மருந்து கூர்க்கன் கிழங்கை சாகுபடி செய்து வருகிறார், திருவண்ணாமலை மாவட்டம், மருத்துவம்பாடி கிராமத்தைச் சேர்ந்த நாராயணமூர்த்தி.
விலங்குகள் தொல்லை... இல்லவே இல்லை!
காலை வேளையன்றில் தோட்டம் தேடிச் சென்ற நம்மை அன்போடு வரவேற்ற, நாராயணமூர்த்தி, ''நான் விவசாயக் குடும்பத்தைச் சேந்தவன்தான். சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல பரிச்சயம் உண்டு. ஐ.டி.ஐ. முடிச்சுட்டு பத்து வருஷம் வேலை பார்த்தேன். அதுல எனக்கு வருமானம் சரியா இல்லாததால, குடும்பத்துக்குச் சொந்தமா இருந்த பத்து ஏக்கர் நிலத்துல விவசாயத்தை ஆரம்பிச்சேன்.
அஞ்சு ஏக்கர் நிலம், மலையடிவாரத்துல இருக்கு. இதுல... கரும்பு, கடலைனு எந்தப் பயிர் செஞ்சாலும், காட்டுப்பன்னிங்க வந்து அழிச்சுடும். அதுகள்ட்ட இருந்து எப்படி வெள்ளாமையைக் காப்பாத்துறதுனு பலர்கிட்டயும் யோசனை கேட்டப்போதான், 'கோலியஸ் கிழங்கைப் போட்டா ஆடு, மாடு, பன்றி மாதிரியான விலங்குகள் தொல்லை இருக்காது’னு சொன்னாங்க. அதுபத்தி விசாரிச்சு, தனியார் கம்பெனி மூலமா விதைத் தண்டு வாங்கிட்டு வந்து நடவு செஞ்சேன்.
ஒப்பந்த முறை சாகுபடி!
'மூலிகைப் பயிர்... எப்படி வருமோ?’னு கொஞ்சம் சந்தேகம் இருந்ததால, ஒரு ஏக்கர்ல மட்டும் சோதனை முயற்சியா போட்டேன். ஆறு மாசத்துல 6 டன் மகசூல் கிடைச்சுது. 35 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைச்சுது. அதுலிருந்து ஆறு வருஷமா தொடர்ந்து சாகுபடி செய்றேன். ஒரு கம்பெனிகிட்ட ஒப்பந்தம் போட்டிருக்கறதால, விற்பனையில பிரச்னை இல்லை. சந்தை நிலவரம் ஏற்ற இறக்கமா இருந்தாலும்... ஒப்பந்தம் போட்டபடி எனக்கு விலை கிடைச்சுடுது'' என்றவர், சாகுபடிப் பாடத்தை நடத்த ஆரம்பித்தார்.
ஆவணி, ஐப்பசி பட்டங்கள் ஏற்றவை!
'கோலியஸ் கிழங்கின் சாகுபடிக் காலம்,  6 மாதங்கள். வடிகால் வசதியுள்ள செம்மண் மற்றும் இருமண் பாங்கான நிலங்கள் ஏற்றவை. ஆவணி மற்றும் ஐப்பசி பட்டங்களில் சாகுபடி செய்யலாம். இந்தப் பட்டங்களில் சாகுபடி செய்தால்... மழையால் பாதிக்கப்படாது.
ஏக்கருக்கு 18 ஆயிரம் விதைத்தண்டு!
கோலியஸ் நடவு செய்ய, ஏக்கருக்கு10 டன் என்கிற கணக்கில் நிலத்தில் எருவைப் போட்டு உழுது, புழுதியாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு, அடியுரமாக 250 கிலோ ஜிப்சம், 100 கிலோ காம்ப்ளக்ஸ், 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 5 கிலோ குருணை மருந்து ஆகியவற்றை கலந்து நிலத்தில் தூவி உழவு செய்ய வேண்டும். பிறகு, ஓர் அடி இடைவெளியில், இரண்டடி பார் ஓட்ட வேண்டும். 10 லிட்டர் தண்ணீரில், 50 கிராம் அசோஸ்பைரில்லத்தை கலந்து, அதில் விதைத்தண்டுகளை நனைத்து, ஒன்றே கால் அடிக்கு ஒரு விதைத்தண்டு வீதம் நடவு செய்யவேண்டும். ஏக்கருக்கு 18 ஆயிரம் விதைத்தண்டுகள் தேவைப்படும்.  
2 முறை மட்டும்தான் களை எடுக்க வேண்டும்!
நடவு செய்யும் போது தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு நடவு செய்து, 3-ம் நாளில் உயிர் தண்ணீர் கட்டவேண்டும். அதன் பிறகு, வாரம் ஒரு தண்ணீர் கட்டினால் போதும். 10-ம் நாளில் வேர் பிடித்து வளர ஆரம்பிக்கும். 25 மற்றும் 40-ம் நாளில் களை எடுக்க வேண்டும். கையோடு... காம்ப்ளக்ஸ், சூப்பர்- பாஸ்பேட், பொட்டாஷ் ஆகிய உரங்களில் தலா 50 கிலோ வீதம் கலந்து, ஒவ்வொரு செடியின் அடிப்பகுதியிலும் கையளவு வைத்து, மண் அணைக்க வேண்டும். அதன்பிறகு, களை எடுக்கக் கூடாது. அப்படி எடுத்தால்... கிழங்குகள் வெட்டுப்பட்டு விடும்.
நடவு செய்த 60, 90, 120 மற்றும் 150-ம் நாட்களில்... 50 கிலோ பொட்டாஷை, பாசனத் தண்ணீரில் கரைத்துவிட வேண்டும். 90-ம் நாளுக்கு மேல் நூற்புழுக்கள் மற்றும் வேறு ஏதாவது பூச்சிகளின் தாக்குதல் இருந்தால், பூச்சிக் கொல்லிகளைத் தெளிக்க வேண்டும்.
180-ம் நாளில் அறுவடை!
45-ம் நாளுக்கு மேல் பக்க வேர்கள் வளர்ந்து, 60-ம் நாளுக்கு மேல், கிழங்காக மாற ஆரம்பிக்கும். 165 முதல் 180 நாட்களுக்குள் அறுவடைக்குத் தயாராகி விடும். தரையில் இருந்து அரையடி அளவு விட்டு, மீதம் இருக்கும் தழைப் பகுதிகளை அறுத்து அப்புறப்படுத்த வேண்டும். பிறகு, மாட்டு ஏர் அல்லது டிராக்டரில் கொக்கிக் கலப்பை மூலம் உழவு செய்து, கிழங்குடன் இருக்கும் அடித்தண்டைச் சேகரித்து, கிழங்கு மற்றும் அடித்தண்டு ஆகியவற்றை தனித்தனியாகப் பிரித்து எடுக்க வேண்டும்.'
ஏக்கருக்கு  ஒரு லட்சம்!
நிறைவாக... மகசூல் மற்றும் வருமானம் பற்றி பேசிய நாராயணமூர்த்தி, ''ஒவ்வொரு செடியிலயும், அரை கிலோ முதல் ஒண்ணரை கிலோ வரை கிழங்குகள் கிடைக்கும். ஏக்கருக்கு சராசரியா 8 டன் கிழங்கு மகசூலா கிடைக்கும். கூடவே 2 டன் அளவுக்கு அடித்தண்டும் கிடைக்கும். ஒரு டன் கிழங்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம், 8 டன் கிழங்குக்கு 96 ஆயிரம் ரூபாயும்; ஒரு டன் 2 ஆயிரம் ரூபாய் வீதம் 2 டன் அடித்தண்டுக்கு 4,000 ரூபாயும் கிடைக்கும். மொத்தம் 1 லட்சம் ரூபாய். இதுல செலவு போக, 77 ஆயிரத்து 500 ரூபாய் லாபமா கிடைக்கும்'' என்று கணக்கு வழக்குகளைப் போட்டுப் பார்த்துச் சொன்னார் சந்தோஷமாக!

இயற்கை முறை சாகுபடியே சிறந்தது!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலிகைத்துறை பேராசிரியரான ராஜாமணி, 'கோலியஸ்' கிழங்கு பற்றி நம்மிடம் பகிர்ந்த தகவல்கள்:
''கோலியஸ் கிழங்கு, 'லேமினேசியே’ குடும்பத்தைச் சேர்ந்த, இந்திய வகை மூலிகைப்பயிர். குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் இதை உணவாகப் பயன்படுத்துகின்றனர். இதைச் சாகுபடி செய்வதற்கேற்ற தட்பவெப்ப நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது என்பதால், இங்கே 4 ஆயிரம் ஏக்கரில் இந்த கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. கோலியஸ் உற்பத்தியில், இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது. இதிலிருந்து 'ஃபோர்ஸ்கோலின்’ என்கிற எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இது, மேற்கத்திய நாடுகளில் ஆயுர்வேத மருத்துவ முறையில், உடல் எடையைக் குறைக்கப் பயன்படுத்தப்படுகிறது. தவிர, கண் நோய்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
நூற்புழுக்களைத் தடுக்கும் செண்டுமல்லி!
கோலியஸ் என்பது மூலிகைப் பயிர் என்பதால், முழுக்க முழுக்க இயற்கை முறையில் சாகுபடி செய்வதுதான் நல்லது. கோலியஸை கொள்முதல் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களும் அதைத்தான் விரும்புகின்றன. இயற்கை முறையில் சாகுபடி செய்யும்போது ஏக்கருக்கு இரண்டு டன் மண்புழு உரம், 150 கிலோ வேப்பம் பிண்ணாக்கு இட வேண்டும். ஊடுபயிராக செண்டுமல்லி பயிரிட வேண்டும். இப்படிச் செய்தால், நூற்புழுத் தாக்குதலைக் குறைப்பதோடு, செண்டுமல்லி மூலமாகவும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலம் சி.எப்-36 என்ற ரகத்தை வெளியிட்டுள்ளோம். இந்த ரகத்தில் பூச்சி, நோய் தாக்குதல்கள் குறைவதோடு, அதிக மகசூலும் கிடைக்கும்'' என்று சொன்ன ராஜாமணி,
ஒப்பந்தமுறை சாகுபடியில் கவனம்...
''கடந்த ஐந்தாண்டுகளில் காய்ந்த கோலியஸ் கிழங்கு, ஒரு கிலோ 100 முதல் 125 ரூபாய் வரைதான் விற்பனை ஆகியிருக்கிறது. இந்த ஆண்டு, ஒரு கிலோ காய்ந்த கிழங்கு 250 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதன் அடிப்படையில் விவசாயிகள், அறுவடை செய்யப்பட்ட ஒரு கிலோ பச்சைக் கிழங்குக்கு 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கொடுக்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு சாகுபடி செய்வது சிறந்தது. இதுதான் உறுதியான விலை, பயிர் காப்பீடு, மானியம் போன்றவை கிடைக்க உதவியாக இருக்கும்'' என்கிற எச்சரிக்கைத் தகவல்களையும் தந்தார்.
 தொடர்புக்கு,

நாராயணமூர்த்தி,
செல்போன்: 94446-81925
மூலிகைத்துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
தொலைபேசி: 0422-6611365. 
-vikatan-
ஒரு ஏக்கர்... 5 மாதம்... 77 ஆயிரம் லாபம்... கோலியஸ் கிழங்கில் குஷியான வருமானம் ! காசி.வேம்பையன், ரா. ராபின் மார்லர் 77 thousand profit in one acre

  பளிச்... பளிச்... வனப்பகுதியை ஒட்டிய  நிலங்களுக்கு ஏற்றது. விற்பனைக்குக் கவலையில்லை. காய்...

டிசெம்பர் 16 – 22 திகதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பூமியில் இருளில் மூடப்படும் என நாசா அறிவுறுத்தி இருப்பதாக பல தமிழ் ஆங்கில இணையத் தளங்கள்,ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதை பலர் படித்திருப்பீர்கள்.

இவை ஆங்கில ஊடக தலைப்புகள்............
**NASA Confirms Earth Will Go Dark For 6 Days In December 2014. 
**NASA has announced that a multi-day worldwide blackout will occur in December 2014. 
**NASA Says Sun Will be Black 3 Days In Dec 2014 

இது தமிழ்...........

பெரும்பாலான சூரிய புயல்களால், பூமியில் இருந்து ஏவப்படும் செயற்கைக் கோள்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அத்தகைய பயங்கர சூரிய மண்டல புயல் ஒன்று டிசம்பர் மாதம் வீச உள்ளது.
டிசம்பர் மாதம் 16–ந் தேதி அந்த புயல் வீசத் தொடங்கும். 22–ந்தேதி வரை 6 நாட்களுக்கு புயலின் தாக்கம் நீடிக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

கடந்த 250 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்த சூரிய மண்டல புயல் மிகப்பெரியது என்று தெரிய வந்துள்ளது. சூரிய மண்டலத்தில் புயல் வீசும் 6 நாட்களும் வான்வெளியில் தூசிகள், துகள்கள் சுழன்றடிக்கப்பட்டு நிரம்பிவிடும்.

தூசிகள் நிரம்பும் போது வானில் மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக சூரிய ஒளிக்கதிர்கள் பூமிக்கு வர முடியாதபடி, அந்த தூசிகள், துகள்கள் மறைத்துவிடும். இதன் காரணமாக டிசம்பர் 16–ந்தேதி முதல் 22–ந்தேதி வரை இந்த உலகமே இருளில் மூழ்கும் என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

சூரிய மண்டல புயல் பூமி அருகில் வராது. எனவே உலகம் இருளில் மூழ்கினாலும், பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆகையால் சூரிய புயலை நினைத்து மக்கள் பயப்பட வேண்டியது இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சூரிய மண்டல புயலால் ஏற்படும் தூசி, துகள்கள் 220 மணி நேரத்துக்கு வானத்தை அடைத்துவிட்டது போல மாற்றிவிடும். அதற்கு ஏற்ப மக்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்று நாசா வேண்டுகோள் விடுத்துள்ளது.

…..............இது தமிழ் இணையத்தளம் ஒன்று வெளியிட்ட செய்தி. அத்துடன் அவர்கள் அதை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளும்படி அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்............

இதோ அவர்கள் பார்த்த காணொளி விடியோ.
இந்தக் காணொளியில் இருப்பவர், NASA administrator Charles F. Bolden, Jr. 



மேலே உள்ள காணொளியை நன்கு உற்று கேட்டுப் பாருங்கள். அதில் எங்கும் சூரியப் புயல் பற்றியோ இருளில் மூழ்குவது பற்றியோ அவர் குறிப்பிடப்படவில்லை.

ஆனால் அவர் சொன்னது திரித்து சொல்லப்படுகிறது.......

Charles Bolden who is the head of NASA has asked the public to remain calm when the world enters three days of darkness. NASA as well as ESA have made this announcement where apparently the world will enter total darkness for three days, starting on December 21, as a consequence of a solar storm. 

This storm is the largest of the last 50 years and will last 72 hours. 

NASA recommends to not panic and to ensure that you have sufficient candles and food in stock. It is also recommended to have enough medicine in case this is necessary. 

According to NASA this is a natural phenomenon and is not the end of the world. It is simply a solar storm and the planets will align and cover the sun. 

ஆனால் இப்படியான பொய்யான செய்திகளுக்கு நாசா என்ன சொல்கிறது?

NASA has not made any official statements regarding this six-day period of darkness descending on Earth.

The good news is that this means the world will not be falling into darkness for six days in December. The bad news is that people aren't very good at separating what's real from what's not, liking and sharing the story thousands of times since it first came out on Oct. 25.



மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t49804-16-22#ixzz3HpdyE2pi 
Under Creative Commons License: Attribution
டிசெம்பர் 16 - 22 ஆறு நாட்கள் பூமி இருளில் மூழ்குகிறது. December 16 - 22 sinks in the darkness of the earth in six days.

டிசெம்பர் 16 – 22 திகதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பூமியில் இருளில் மூடப்படும் என நாசா அறிவுறுத்தி இருப்பதாக பல தமிழ் ஆங்கில இணையத் தளங்கள்...