Ads (728x90)

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளி மற்றும் கல்லூரிக்குள் புகுந்த தெரிக்-இ-தலிபான் இயக்க தீவிரவாதிகள் பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் 132 பள்ளி குழந்தைகள் உள்பட 145 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல குழந்தைகள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூரமான நிகழ்வை பாகிஸ்தானை சேர்ந்த சிறுமி மலாலா கடுமையாக கண்டித்துள்ளார்.

இது குறித்து மலாலா கூறியுள்ளதாவது;

இது முற்றிலும் முட்டாள்தனமான செயல். அப்பாவி பள்ளி குழந்தைகளை இதுவரை இப்படி யாரும் பயமுறுத்தியதில்லை. இப்படிப்பட்ட தாக்குதல் சம்பவங்களால் நாம் ஒரு போதும் வீழ்ந்துவிடமாட்டோம். இந்த தருணத்தில் பலியான சகோதர, சகோதரிகளுக்கு உலகம் முழுவதிலும் உள்ள மக்களுடன் சேர்ந்து எனது அஞ்சலியை செலுத்துகின்றேன். இந்த தீவிரவாத செயலை எதிர்த்து போராடும் அரசுக்கும், ராணுவ வீரர்களுக்கும் அனைவரும் ஒருங்கிணைந்து ஆதரவு தரவேண்டும் என்று மலாலா கூறியுள்ளார்.

இதனிடையே சில தினங்களுக்கு முன் மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கியதற்கு பழி தீர்க்கும் விதமாக தான் பெஷாவர் பள்ளியில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t50594-topic#ixzz3MDDO9hu5 
Under Creative Commons License: Attribution
பாகிஸ்தானில் பள்ளி குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: மலாலா கண்டனம்

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளி மற்றும் கல்லூரிக்குள் புகுந்த தெரிக்-இ-தலிபான் இயக்க தீவிரவாதிகள் பள்ளியில் இருந்த குழந்தைகள் ...

Post a Comment