இந்த
வருடம் மோட்டோரோலா நிறுவனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கூகுள்
தேடலிலும் அதிகம் தேடப்பட்டவை பட்டியலில் கூட மோட்டோ ஜி மாடல் முதல்
இடத்தையும், மோட்டோ ஈ நான்காம் இடத்தையும், மோட்டோ எக்ஸ் (gen 1) ஒன்பதாம்
இடத்தையும் பிடித்த சந்தோஷத்தில் உள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
புதிய மோட்டோரோலா X(Gen2)க்கு கூடிய சீக்கிரமே லாலிபாப் ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் என உறுதியளித்துள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
இன்றைய யுகத்தில் மொபைல் பயனாளர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் விஷயம் இரட்டை சிம்கள் கொண்ட வசதி, அதிக பேட்டரி திறன் மற்றும் 4ஜி தொழில்நுட்பம். அடுத்த வருடம் 4ஜி மொபைல்கள் தான் ஆள போகிறது. ஆனால் மோட்டோரோலா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள புதிய மோட்டோரோலா X (Gen2) மொபைலில் இரட்டை சிம் வசதியும் இல்லை, 4ஜி தொழில்நுட்பமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இயங்குதளம்:
ஆண்டிராய்டு ஓஎஸ் கிட்கேட் 4.4
எடை மற்றும் அளவுகள்:
9.97மிமீ தடிமனும், 144கிராம் எடையும் கொண்டது.
பிராசசர்:
2ஜிபி ரேம்-வுடன் கூடிய Snapdragon 801 adreno GPU 330 மற்றும் 2.5GHz கொண்ட பிராசசரை கொண்டு இயங்குகிறது.
ஸ்கிரீன்:
5.2 இன்ஜ் தொடு திரையுடன் கார்னிங் கொரில்லா க்ளாஸ்-வுடன் கூடிய oled டிஸ்பிளேவை (1920x1080) கொண்டுள்ளது.
கேமரா:
LED பிளாஷ்-வுடன் கூடிய 13 மெகா பிக்சல் திறன் கொண்ட பின் பக்க கேமிராவும்,2 மெகா பிக்சல் முன் பக்க கேமிராவும் கொண்டுள்ளது.
நினைவகம்:
16 மற்றும் 32 ஜிபி போன் மெமரியை கொண்டுள்ளது.
பேட்டரி:
இதன் பேட்டரி 2,300mAh திறனும் கொண்டது.
சிம்:
இந்த மொபைலில் ஒரு சிம் மட்டுமே இயக்கலாம். அதுவும் நானோ சிம்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
நிறம்:
வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் இந்த போன் வெளி வருகிறது.
இணைப்பு:
நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் தரப்பட்டுள்ளன.
நிறைகள்:
வட்ட வடிவ ரிங் LED பிளாஷ் டிஸ்ப்ளே நல்ல பேட்டரி சேமிப்பு திறன் துல்லியமான கேமரா
குறைகள்:
மெமரி கார்டு வசதி இல்லை. 4ஜி இல்லை. இரட்டை சிம் வசதி இல்லை. முன் பக்க கேமரா 2 மெகா பிக்சல் மட்டுமே
விலை:
இந்த மொபைல் பிரத்யேகமாக பிளிப்கார்ட் ஆன்லைன் ஸ்டோரில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ₹31,999 ரூபாய். லெதர் பேக் கவர் மற்றும் வுட்டன் பினிஷ் கவர்-வுடன் ₹33,999 ரூபாய்.
- ஜி.கே.தினேஷ்
(மாணவர் பத்திரிகையாளர்)
-vikatan-
புதிய மோட்டோரோலா X (Gen2) மொபைல்
இ ந்த வருடம் மோட்டோரோலா நிறுவனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கூகுள் தேடலிலும் அதிகம் தேடப்பட்டவை பட்டியலில் கூட மோட்டோ ஜி மாடல் ...
Post a Comment