Ads (728x90)

Showing posts with label AutoMobile. Show all posts

எலெக்ட்ரிக் பஸ் தயாரிப்பில் அசோக் லேலாண்ட்

இங்கிலாந்தில் இயங்கி வரும் எலெக்ட்ரிக் பஸ்களை போன்றே இந்தியாவிலும் தயாரித்து இயக்க அசோக் லேலாண்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இங்கிலாந்தில் அந்த நாட்டின் அரசின் நிதி உதவியுடன் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒப்டாரே பேருந்துகளை மின்சாரத்தால் இஅயங்கும் விதத்தில் வடிவமைத்து வெற்றியும் கண்டுள்ளது. அதே போன்ற தொழில்நுட்பங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு இந்தியாவிலேயே இந்த பேருந்துகளை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ள அசோக் லேலாண்ட். அடுத்த வருடம் ஜனவரி 22ம் தேதி டெல்லியில் நடைபெறும் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படும் என்று இந்நிற்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த பேருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலையை ராஜஸ்தானின் அல்வாரிலும், தமிழ்நாட்டின் திருச்சியிலும் நிறுவ திட்டமிட்டுள்ளதாக அசோக் லேலாண்ட் தெரிவித்துள்ளது.
இந்த இடங்களில் பேருந்து தயாரிப்புக்கு ஏற்ற அனைத்து வசதிகளும் உள்ளன. மேலும் ஏற்கெனவே மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்ற கண்காட்சியில் இந்த பேருந்துகளை அசோக் லேலாண்ட் அறிமுகப்படுத்திருப்பதால் இந்தியாவிலும் இதற்கு வரவேற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
எலெக்ட்ரிக் பஸ் தயாரிப்பில் அசோக் லேலாண்ட்

எலெக்ட்ரிக் பஸ் தயாரிப்பில் அசோக் லேலாண்ட் இங்கிலாந்தில் இயங்கி வரும் எலெக்ட்ரிக் பஸ்களை போன்றே இந்தியாவிலும் தயாரித்து இயக்க அசோக் லேலா...


வாகனங்களின் சீரான ஓட்டத்துக்கு முக்கியப் பங்கு வகிப்பவை, டயர்கள். டயர்களில் பல வகைகள் உள்ளன. உங்கள் கார்/பைக்கின் செக்மென்ட், நீங்கள் பயணிக்கும் இடத்தின் தன்மை, உங்கள் பயணம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பொறுத்து, தேவைப்படும் டயர்களை நீங்களே உங்கள் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம். இப்போது ட்யூப்லெஸ் டயர்கள் ஃபேமஸாகி விட்டன. சாதாரண ஸ்கூட்டர்களில்கூட ட்யூப்லெஸ் டயர்கள் வந்துவிட்டன. கார், பைக் நிறுவனங்களும் இதைத்தான் பரிந்துரைக்கின்றன. ஆனால், இதை எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியாது. டயர்களில் எத்தனை வகை என்பதைப் பார்ப்போமா?

பெர்ஃபாமென்ஸ் அல்லது சம்மர் டயர்


அதிவேகமான அல்லது பெர்ஃபாமென்ஸ் கார்களுக்காக இந்த டயர் தயாரிக்கப்படுகிறது. சாதாரண கம்யூட்டிங் ரைடிங்கைவிட, ‘இன்னும் கொஞ்சம் பெட்டரா, ஹார்டரா இருக்கணும்’ என்று விரும்புபவர்களுக்கான சாய்ஸ், இந்த சம்மர் டயர். இவை ஸ்லிம் அண்டு ஸ்லீக் டிஸைனில்தான் வடிவமைக்கப்படுகின்றன. சாஃப்ட்டான ரப்பர் கலவையால் செய்யப்படுவதால், இவை எடை குறைவாக இருக்கும். இதிலுள்ள ட்ரெட் டிஸைன்கள், ஒரே திசையில் சாய்வாக வடிவமைக்கப்பட்டிருப்பதால், வேகமாகச் செல்லும்போது, ஈரமான சாலைகளில் தண்ணீரை பம்ப் செய்து சுலபமாக வெளியேற்றும். மேலும், இவை அகலமாகவும் இருப்பதால், கிரிப் அதிகமாகக் கிடைக்கும்; ஆனால், காருக்குள் அதிக சத்தம் கேட்பதைத் தவிர்க்க முடியாது. ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் போன்ற கார்களில் இருப்பவை பெர்ஃபாமென்ஸ் டயர்கள்தான்.

ஆல் சீஸன் டயர்


பெரும்பான்மையான சின்ன கார்கள், செடான்களில் இந்த ஆல் சீஸன் டயர்களைக் காணலாம். பெர்ஃபாமென்ஸ், கிரிப், நீண்ட வாழ்நாள் தன்மை என்று எல்லாவற்றையும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த வகை டயர்களில் வெளிச்சத்தம் குறைவாக இருக்கும். கடினமான ரப்பர் கலவையால் உருவாக்கப்படுவதால், இந்த டயர்களில் கார்னரிங் மற்றும் கிரிப் குறைவாக இருக்கும். ஆனால், நீண்ட நாள் உழைக்கும் தன்மை கொண்டவை.

இந்த டயர்களில் உள்ள ட்ரெட் டிஸைனால், தண்ணீர் தேங்கி நிற்கும் சாலையில் செல்லும்போது, தண்ணீரை ஓவராக சிதறடிக்கும் என்கிறார்கள். மேடு, பள்ளமான சாலைகள் என்றால், இந்த ஆல் சீஸன் டயர்களுக்குச் சுத்தமாக ஆகாது. சஸ்பென்ஷனைப் பதம் பார்க்கும் வாய்ப்பும் அதிகம். ஈரமான சாலைகளிலும், மோசமான சாலைகளிலும் கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும். விலை குறைவு, நீண்ட நாள் உழைக்கும் தன்மை ஆகியவற்றால், இந்த ஆல் சீஸன் டயர்கள், ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் நல்ல பெயர் எடுத்திருக்கின்றன. இப்போதுள்ள பெரும்பான்மையான ஹேட்ச்பேக், செடான் கார்களில் இருப்பவை ஆல் சீஸன் டயர்கள்தான்.

வெட் வெதர் டயர்


பெர்ஃபாமென்ஸ் டயர்களில் இருப்பது சாஃப்ட்டான ரப்பர் காம்பவுண்ட் என்றால், இந்த வெட் வெதர் டயர்கள், அதைவிட இன்னும் லேசான ரப்பர்  கலவையால் தயாரிக்கப்படுகின்றன.
இந்த ரப்பரின் அசாத்திய தன்மை என்னவென்றால், ஈரமான சாலைகளில் விரைவாக சூடாகி, அந்த இடத்துக்குத் தேவையான கிரிப்பையும், பெர்ஃபாமென்ஸையும் அதிகப்படுத்த உதவுகிறது.

ஸ்நோ மட் அல்லது ஐஸ் (ஸ்பெஷல் வின்ட்டர் டயர்):


இந்த ஸ்பெஷல் வின்ட்டர் டயர்கள், குளிர்காலத்தின்போது பனி படர்ந்த சாலைகளில் எக்ஸ்பெர்ட்டாகச் செயல்படுபவை. உருவத்தில் பெரிதாகவும், சத்தம் ஏற்படுத்தும்படி பெரிய த்ரெட்டுகளாகவும் இதன் வடிவம் இருக்கும். சில எக்ஸ்ட்ரீம் ஸ்நோ டயர்களில், த்ரெட்டுகளின் நடுவில் சின்ன மெட்டல் ஸ்டட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். இவை பனிக்கட்டிகள் மற்றும் சின்னச் சின்ன திட வடிவப் பொருட்களைக் காலி செய்யும் தன்மைகொண்டவை. ஆனால், சாதாரண சாலைகளில் இவை பேரிரைச்சலை ஏற்படுத்தும் என்பதால், பெரும்பான்மையானவர்கள் இதை பயன்படுத்துவது இல்லை.

ஆல் டெரெய்ன் டயர்


பெரும்பான்மையான எஸ்யுவி மற்றும் ட்ரக்குகளில் இருப்பது ஆல் டெரெய்ன் டயர்கள்தான். டயர்களில் பெரிய த்ரெட் இருந்தாலே, சாதாரணச் சாலைகளில் பயணிக்கும்போது சத்தம் அதிகமாக இருக்கும்; கிரிப் குறைவாகவே இருக்கும். ஆனால், சேறு சகதி நிறைந்த ஆஃப் ரோடு ஏரியாவில் கிரிப் அதிகமாகக் கிடைக்கும். இந்த வகை டயர்களில் சாஃப்ட்டாகவும் இல்லாத, கடினமாகவும் இல்லாத ரப்பரால் தயாரிக்கப்படுபவை.

மட் டயர்


ஆல் டெரெய்ன் டயரின் எக்ஸ்ட்ரீம் வடிவம்தான் மட் டயர். ஆல் டெரெய்னைவிட பெரிய அளவில் த்ரெட்டுகள் இருப்பதால், நிச்சயம் இதை சாதாரணச் சாலைகளில் ஓட்டுவதற்கு நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஆனால் சேறு சகதிகள் நிறைந்த ஆஃப் ரோடு பயணங்களில் கொஞ்சம்கூடப் பயப்படத் தேவையில்லை.

- தமிழ்
டயர்களில் எத்தனை வகை?

வாகனங்களின் சீரான ஓட்டத்துக்கு முக்கியப் பங்கு வகிப்பவை, டயர்கள். டயர்களில் பல வகைகள் உள்ளன. உங்கள் கார்/பைக்கின் செக்மென்ட், நீங்கள் பய...