Ads (728x90)

Showing posts with label ஆட்டோமொபைல். Show all posts

ந்தியச் சந்தையில், கவாஸாகியின் விலை குறைந்த பைக்காக விற்பனைக்கு வந்திருக்கிறது Z250. கவாஸாகியின் இந்த லேட்டஸ்ட் பைக்கின் விலை  2.99 லட்ச ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி).


டியூப் டயமண்ட் ஸ்டீல் ஃப்ரேம் மூலம் கட்டமைக்கப்பட்ட Z250, பார்ப்பதற்கு Z800 பைக் மாடலைப்  போல இருக்கிறது. இதன் வீல்பேஸ் 1,400 மிமீ, எடை 168 கிலோ. 17 லிட்டர் பெட்ரோல் டேங்கைக் கொண்டிருக்கிறது. முன்பக்கம் டூயல் செமி-ஃப்ளோட்டிங் 300 மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் 220 மிமீ சிங்கிள் பெட்டல் டிஸ்க் பிரேக்கும் கொண்டிருக்கிறது. 37 மிமீ டெலெஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் முன்பக்கமும், Bottom-Link Uni-Trak சஸ்பென்ஷன் பின்பக்கமும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 


கவாஸாகி  Z250 பைக்கில், 31 hp சக்தியை அளிக்கும் பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு, 4-ஸ்ட்ரோக், 249 சிசி இன்ஜின் உள்ளது. 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது இந்த பைக்.
இந்தியாவில் விற்பனைக்கு வந்தது கவாஸாகி Z250!

இ ந்தியச் சந்தையில், கவாஸாகியின் விலை குறைந்த பைக்காக விற்பனைக்கு வந்திருக்கிறது Z250. கவாஸாகியின் இந்த லேட்டஸ்ட் பைக்கின் விலை  2.99 லட்ச...

இந்தியாவை சேர்ந்த ஹீரோ நிறுவனமும், ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனமும், ஒன்றிணைந்து, 25 ஆண்டுகளுக்கு முன், ஹீரோஹோண்டா என்ற நிறுவனத்தை துவக்கின. இந்தியாவில் மோட்டார் சைக்கிள் விற்பனையில், பெரிய அளவில் புரட்சியை ஏற்படுத்தியது இந்த நிறுவனம். தற்போது, ஹோண்டா நிறுவனத்திடம் இருந்து பிரிந்து, ஹீரோமோட்டோகார்ப் என்ற புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், சிபிஇசட், சிடி100, கிளாமர், ஹங்க், பேஷன், ஸ்பெலன்டர், இக்னியேட்டர் உள்ளிட்ட மாடல்களில், மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து வருகிறது. இதில், ஸ்பெலன்டர் ப்ரோ, பேஷன் ப்ரோ என்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஏற்கனவே விற்பனையில் உள்ளன. இந்த சூழ்நிலையில், தற்போது, இரண்டு புதிய மோட்டார் சைக்கிள்களை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 
Hero Corparation New Bikes

ஸ்பெலன்டர் ப்ரோ கிளாசிக்இந்த பைக், 100 சிசி திறன் கொண்டது. ஏர்கூல்டு போர்ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி, 8.36ps @ 8000rpm; டர்க், 8.05Nm @5,000rpm.இந்த பைக், இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்.
பேஷன் ப்ரோ டிஆர்இந்த பைக்கும், 100 சிசி திறன் கொண்டது தான். இதிலும், ஏர்கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இதன் சக்தி, 7.8ps; டர்க், 8Nm@4,500rpm.இந்த பைக், மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.
-dinamalar-
ஹீரோ மோட்டோ கார்ப்பின் 2 புதிய பைக்குகள் அறிமுகம்

இந்தியாவை சேர்ந்த ஹீரோ நிறுவனமும், ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனமும், ஒன்றிணைந்து, 25 ஆண்டுகளுக்கு முன், ஹீரோஹோண்டா என்ற நிறுவனத்தை துவக்கி...