கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'லிங்கா'. 'லிங்கா' ரஜினி பிறந்தநாளான
டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில் 'லிங்கா' டிக்கெட் புக்கிங் சென்னை உள்பட சில நகரங்களில் தொடங்கி உள்ளது.
சென்னையில் உள்ள சத்யம் சினிமா குரூப் தங்களது தியேட்டர்களில்
வெள்ளிகிழமை மட்டும் 89 காட்சிகளில் 'லிங்கா' திரைப்படத்தைத்
திரையிடுகிறது.'லிங்கா' டிக்கெட் புக்கிங் ஆரம்பிப்பதை அறிந்துகொண்ட ரஜினி
ரசிகர்கள் ஒரே நேரத்தில் சத்யம் தளத்தை முற்றுகை இட்டதால் சில மணி நேரங்கள்
சத்யம் இணையதளம் முடங்கியது.
வெள்ளிக்கிழமைக்கான புக்கிங் ஆராம்பித்த ஓரிரண்டு மணிநேரத்திலேயே 89
காட்சிகளுக்கும் டிக்கெட்டுகள் விற்ருத் தீர்ந்தன. மேலும், சனிக்கிழமை
மற்றும் ஞாயற்றுக்கிழமையும் 'லிங்கா' படத்துக்கு சத்யம குழுமம் 89
ஷோ ஒதுக்கியிருக்கிறது. சனி,ஞாயற்றுக்கிழமைக்கும் பெரும்பாலான ஷோக்களுக்கு
டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
சென்னையில் உள்ள மற்றொரு தியேட்டரான தேவி ஒரு நாளைக்கு 15 ஷோ
'லிங்கா' வுக்கு ஒதுக்கியிருக்கிறது .தேவியிலும் அனைத்து டிக்கெட்டுகளும்
தீர்ந்துவிட்டன. தேவியில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் டிக்கெட் புக்கிங் மூலம்
மட்டும் 15 லட்ச ரூபாய் அளவுக்கு வியாபாரம் நடந்துள்ளது. இதே போல சென்னையை
தவிர்த்த மற்ற ஊர்களில் உள்ள தியேட்டர்களிலும் விரைவில் முன்பதிவு தொடங்கி
இருக்கிறார்கள்.
'லிங்கா' திரைப்படத்துக்கு முன்பதிவு முறையில் டிக்கெட்டுகள்
விற்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ள தியேட்டர் உரிமையாளர்கள் முதல் மூன்று
நாட்களுக்குள்ளேயே லாபம் கிடைத்துவிடும் என கணக்கு
போட்டிருக்கிறார்கள்.டிக்கெட் முன்பதிவில் கிடைக்கும் வரவேற்பை அறிந்த
'லிங்கா' படக்குழு 100 கோடி வசூலை ஒரு வாரத்தில் கடந்து விடமுடியும் என
கணித்து இருக்கிறது.
சூப்பர் ஸ்டார்னா சும்மாவா ..!
- பு.விவேக் ஆனந்த்
'லிங்கா' டிக்கெட் முன்பதிவில் புதிய சாதனை!
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'லிங்கா'. 'லிங்கா' ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 1...
Post a Comment