சென்னை: மதிய உணவுத் திட்டத்தில் கேழ்வரகை சேர்க்க வேண்டும் என வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏழை, பாழைகள் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுதானியங்கள் இன்று பணக்காரர்கள் மத்தியிலும் உலாவர ஆரம்பித்து விட்டன. அரிசி சோறு சாப்பிடுவதுதான் கௌரவம் என்றிருந்த நிலை மாறி, இன்று சிறுதானியங்கள் எங்கு கிடைக்கும் என்று தேடும் நிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். இயற்கை அங்காடிகள், சிறு விவசாய குழுக்கள் மூலமே நகரப் பகுதிகளில் எட்டிப் பார்த்திருந்த சிறுதானியங்களை இன்று கார்ப்பரேட் கம்பெனிகளே கையில் எடுத்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக கேழ்வரகில் செய்யப்பட்ட ராகி பைட்ஸ், ராகி செரல்ஸ் என்ற மேற்கத்திய உணவு பொருட்களை கேழ்வரகில் செய்து அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை, தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.

அப்போது பேசிய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்,
"10 ஆயிரம் வருட வரலாறு கொண்டது சிறுதானியங்கள். நம் நாட்டின் மலைப்
பகுதிகளில் முதலில் பயிர் செய்யப்பட்டதே சிறுதானியங்கள்தான். இதன் தேவையை
உணர்ந்து உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி பொது விநியோக திட்டத்தில்
கேழ்வரகு, தினை, சாமை, கம்பு உள்ளிட்ட சிறுதானியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஊட்டச்சத்து குறித்தான அறிவு நம் அனைவருக்கும் தேவையாக உள்ளது. சமூகத்தில்
பலதரப்பட்ட மக்களும் சிறுதானியங்களின் அவசியத்தை தற்போது உணரத்
துவங்கியுள்ளனர்.
சிறுதானியங்களை சாப்பிடுவது நாம் அனைவரும் பாதுகாப்பான உணவு மற்றும் ஊட்டச்சத்தை நோக்கிய பயணமாக இருக்கும். இதுவே இந்த சமூகத்தை பட்டினியில்லா உலகம் என்ற இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும். கேழ்வரகில் கால்சியம், வைட்டமின் சத்துக்கள் அதிகமாக உள்ளது என்று ஆய்வுகள் சொல்கின்றன. சாகுபடி முறையிலும் 15% வரையில் செலவை குறைக்கக்கூடியது. அனைத்து தட்பவெப்பநிலையிலும் வளரக்கூடியது. இப்போது இந்தியளவில் அதிகமாக பயிர் செய்யப்பட்டு வருகிறது. மதிய உணவு திட்டத்தில் கூட பள்ளி மாணவர்களுக்கு கேழ்வரகை சேர்த்து வழங்கலாம்" என்று பேசினார்.

அவரை தொடர்ந்து பேசிய எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி
மையத்தின் நிர்வாக இயக்குநர் அஜய் பரிதா, "சிறுதானியங்களை வைத்து உணவுச்
சந்தையில் நுழைவது வரவேற்கக்கூடிய ஒரு முயற்சி. இன்று நாம் சாப்பிட்டுக்
கொண்டிருக்கும் காய்கறிகள், அரிசி எல்லாம் அதிக தண்ணீர் செலவிட்டு பயிர்
செய்யக்கூடியவை. தொடர்ந்து ஒரே மாதிரியான பயிர்களை பயிரிட்டு வருவதால்
மண்வளமும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு
சிறுதானியங்கள்தான். வரும் காலங்களில் சிறுதானியங்கள்தான் பயிர் செய்வதில்
முக்கிய இடத்தை பிடிக்கும். ஊட்டச் சத்துக்கள் வரிசையிலும் சிறுதானியங்கள்
முன்னணியில் இருக்கிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய கோட்டாரம் அக்ரோ புட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரசாந்த், "வீட்டிலிருக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்ற உணவு சிறுதானியங்கள்தான். அதிலும் கேழ்வரகில் அதிகச் சத்துக்கள் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்தார்கள். அதனால்தான் கேழ்வரகில் நிறைய பொருட்களை தயார் செய்கிறோம். அன்றாட வாழ்க்கையில் மக்கள் பயன்படுத்தும் விதத்தில் ராகி பைட்ஸ், செரல்ஸ், தோசை மாவு மிக்ஸ், இட்லி மிக்ஸ் என்று மக்கள் எளிதில் பயன்படுத்தும் விதங்களில் தயாரித்து வருகிறோம்.
கேழ்வரகின் சிறப்பே நார்ச்சத்து, சர்க்கரை கட்டுப்பாடு, கால்சியம், குறைந்த கொழுப்புச்சத்து ஆகிய தன்மையாகும். கோதுமையைவிட 10 மடங்கு கூடுதல் சத்து கொண்டது. அதனால் கேழ்வரகை முக்கிய பொருளாக எடுத்து சந்தைப்படுத்தி வருகிறோம்" என்றார்.
-த. ஜெயகுமார்
படங்கள்: ஆர். வருண்பிரசாத்

மதிய உணவுத் திட்டத்தில் கேழ்வரகு: வேளாண் விஞ்ஞானி கோரிக்கை!
சென்னை: மதிய உணவுத் திட்டத்தில் கேழ்வரகை சேர்க்க வேண்டும் என வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். ஏழை, பாழைகள்...
Post a Comment