பெங்களூர்: காவிரியின் குறுக்கே வனப்பகுதியில் மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில காவல்துறை எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
பெங்களூரில் இருந்து 100 கி.மீ தொலைவில் கனகபுரா தாலுகாவில் மேகதாது என்ற இடம் உள்ளது. இது காவிரியில் அர்காவதி என்ற துணை நதி கலந்து சங்கமிக்கும் இடமாகும்.
இங்குக காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டப்போவதாக கர்நாடக அரசு அண்மையில் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதுடன் கர்நாடக அரசின் திட்டத்துக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது என்று வலியுறுத்தியும் தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது
மேகதாதுவில் கர்நாடக அரசு குடிநீருக்கு பயன்படுத்தவும், நீர் மின் நிலையங்கள் அமைக்கவும் மட்டுமே அணை கட்டுவதாக அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு குறைந்து விடும் ஆபத்து உள்ளது என்பதால் மேகதாது திட்டத்துக்கு தமிழகத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து நாளை மாபெரும் போராட்டத்தை நடத்த உள்ளனர்.

வனத்துறை எதிர்ப்பு ஏன்?
இந்நிலையில், மேகதாது வனப்பகுதியில் அணை
கட்ட சாத்தியக் கூறு இல்லை என்று கர்நாடக அரசு அதிகாரிகள் கருத்து
தெரிவித்துள்ளனர். இரு மலைகளுக்கு இடையேதான் அணை கட்ட முடியும்.
திறந்தவெளி போன்ற நிலப்பரப்பில் அணை கட்டினால் அதிக அளவு தண்ணீரைத் தேக்க
முடியாது என்றும் அதனால் அதிக அளவில் பலன் கிடைக்காது என்றும் வனத்துறை
அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேகதாது அமைந்துள்ள ராம்நகர் மாவட்ட விவசாயிகளும்,
வனத்துறையினரும் அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அணை கட்டுவதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த கர்நாடக அரசு
திட்டமிட்டுள்ளது. இவை பெரும்பாலும் விவசாய நிலங்கள் என்பதால் தங்களது
வாழ்வாதாரம் பாதிக்கும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு விவசாய அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இந்த திட்டத்தை வேறு வழியிலோ அல்லது வேறு இடத்திலோ நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேகதாது பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் தரப்பிலும் இந்த திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளனர்.
தற்போது கர்நாடக அரசு அணை கட்ட தேர்வு செய்துள்ள இடம் பல ஆயிரம் வன உயிரினங்கள் வாழும் முக்கிய பகுதியாகும். இந்த இடத்தைத் தான் யானைகள் தங்களின் வழித்தடமாக பயன்படுத்தி வருகின்றன.
இந்த வனப்பகுதியில் மட்டும் 6,000 யானைகளும், 300 க்கும் மேற்பட்ட புலிகளும் வசிக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட பலவகை ஊர்வன மற்றும் பறவையினங்களும் வாழ்கின்றன. அணை கட்ட 2,500 ஏக்கர் வனப்பகுதியை கையகப்படுத்தும் போது வன உயிரினங்கள் பாதிக்கப்படும். அதனால் அவைகளின் வாழ்விடத்தை கைப்பற்றி அணை கட்டுவது முறையல்ல என்று கர்நாடக வனத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் பல லட்சம் மரங்களையும் அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

கடந்த 24 ஆண்டுகளில்இந்தப்பகுதியில் உள்ள பல அரிய வகை
வன உயிரினங்கள் படிப்படியாக அழிந்து வருகின்றன. எனவே வன உயிரினங்களைக்
காப்பாற்ற வேண்டுமானால் மேகதாது அணை திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும்,
இந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என்றும் மத்திய அரசுக்கு கடிதம்
எழுத முடிவு செய்து இருப்பதாக கர்நாடக வனத்துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்த மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா மாநில
அரசு என்ன நடவடிக்கையை மேற்கொள்ளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து
உள்ளது.
-vikatan-
காவிரியின் குறுக்கே அணை: கர்நாடக வனத்துறையே எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?
பெங்களூர்: காவிரியின் குறுக்கே வனப்பகுதியில் மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில காவல்துறை எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பெங்களூரில் இருந்து 10...
Post a Comment