சர்ச்சையை கிளப்பியிருக்கும், பலாத்கார வழக்கு
பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் பெண், மாதவிலக்கு காலத்தை கடந்த வயதானவர்.....- டெல்லி உயர்நீதிமன்றம்
தீர்ப்பில், போகிற போக்கில் இப்படி ஒரு கருத்தை நீதிபதிகள் தெரிவித்ததாக பெரிய சர்ச்சை வெடித்ததுள்ளது.
60 வயது பெண்ணை 45 வயது நபர் பலாத்காரம் செய்து கொன்று விட்டதாக குற்றவாளிக்கு கீழ்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் மேல்முறையீட்டில் அவரை டெல்லி உயர்நீதிமன்றம் விடுவித்துவிட்டது.
தீர்ப்பின் அம்சங்கள் இதுதான்..
இறந்துபோன பெண் மது அருந்தியிருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவருடன் உடல் உறவு கொண்டிருக்கிறார். உறவில் ஈடுபட்ட ஆணும் மருந்து அருந்தியிருகிறார்.
பிரேத பரிசோதனையில், பெண்ணின் மர்ம உறுப்பில் மட்டுமே லேசான காயம் இருப்பது தெரியவந்துள்ளது. அது திணிப்பின் காரணமாக இருக்கலாம்.
பலாத்காரம் நடந்திருந்தால், போராட்டத்தின் போது பெண்ணின் உடலில் காயங்கள் ஏற்பட்டிருக்கவேண்டும்.ஆனால் அப்படி வேறெங்கும் காயம் இல்லை.
பெண் சம்மதித்துதான் உறவு நடந்திருக்கிறது. சம்மதம் இல்லா மல் வன்புணர்வில் ஈடுபடுவதற்கும். பெண்ணின் சம்மதத்தை பெற்றுவிட்டு அதன் பின் உறவில் முரட்டுத்தனம் காட்டு வதற்கும் வித்தியாசம் உள்ளது.
முரட்டுத்தனமான உறவில் பெண் இறந்துவிட்டிருக்கிறார். எனவே கொலை மற்றும் பாலியல் பலாத்காரம் குற்றச் சாட்டுகளிலிருந்து சந்தேகத்தின் பலனின் அடிப்படையில் விடுவிக்கிறோம் என்று நீதிபதிகள் கூறியிருக்கின்றனர்.
இருப்பினும், வயதான பெண் என்பதை குறிப்பிடுவதற்காக மாதவிலக்கு காலம் பற்றியெல்லாம் தீர்ப்பில் சொல்லுவது ?
சர்ச்சையை கிளப்பியிருக்கும், பலாத்கார வழக்கு
சர்ச்சையை கிளப்பியிருக்கும், பலாத்கார வழக்கு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் பெண், மாதவிலக்கு காலத்தை கடந்த வயதானவர்.....- டெல்லி உ...
Post a Comment