Ads (728x90)

ரெனோ பல்ஸ் ஹேட்ச்பேக் காருக்கு, 'செம' ஆஃபர் ஒன்றை அளிக்கிறது ரெனோ இந்தியா. 'பல்ஸ் பெட்ரோல் காருக்கான விலையை மட்டும் கொடுத்துவிட்டு, பல்ஸ் டீசல் மாடலை வாங்கிச் செல்லலாம்'  என ரெனோ இந்தியா தன்னுடைய சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளது. 

எக்ஸ் ஷோரூம் டெல்லி விலைபடி, ஆஃபர் இல்லாமல் ரெனோ பல்ஸ்  RxL டீசல் மாடலின் விலை 6.16 லட்சம் ரூபாய். ரெனோ பல்ஸ் RxL பெட்ரோல் மாடலின் விலை 5.19 லட்சம் ரூபாய்.
 
சுமார் 1 லட்சம் ரூபாயை இந்த ஆஃபர் மூலம் சேமிக்க முடியும். இரண்டு ஆண்டுகள் வாரன்ட்டியும் கூடுதலாக அளிக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு இலவச ரோடு சைடு அஸிஸ்டென்ஸும் அளிக்கப்படுகிறது. 

பல்ஸ் காரைப் போலவே, ஸ்காலா செடான் காரிலும் இதே ஆஃபர் உண்டு. ஸ்காலா RxL டீசல் மாடலின் விலை இப்போது 8.01 லட்சம் ரூபாய் மட்டுமே. 

ஆஃபர் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும்தானாம். மேலும் தகவல்களைத் தெரிந்துகொள்ள, அருகில் உள்ள ரெனோ டீலரை அணுகுங்கள். 
-vikatan-
பெட்ரோல் கார் விலையில், டீசல் கார் - ரெனோவின் அதிரடி ஆஃபர்

ரெ னோ பல்ஸ் ஹேட்ச்பேக் காருக்கு, 'செம' ஆஃபர் ஒன்றை அளிக்கிறது ரெனோ இந்தியா. 'பல்ஸ் பெட்ரோல் காருக்கான விலையை மட்டும் கொடுத்த...

Post a Comment