எதெல்லாம்
சாதனை ஆகும்? ஒரு காபி மெஷினை ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு
எடுத்துச் சென்றால் அது சாதனையா? பூமியில் ஓர் இடத்தில் இருந்து இன்னோர்
இடத்திற்கு எடுத்துச் சென்றால் அது சாதாரண விஷயம். பூமியில் இருந்து 260
கிலோமீட்டர் உயரத்திற்கு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு எடுத்துச்
சென்றால் அது சாதனைதானே? அந்தப் பெருமையைப் பெறப்போகிறார் ஒரு பெண்
விண்வெளி வீராங்கனை. அவர் பெயர் சமாந்தா கிரிஸ்டோஃபொ ரெடி.
'எஸ்பிரஸ்ஸோ' என்பது இத்தாலியின் புகழ்பெற்ற காஃபி
தயாரிக்கும் நிறுவனம். 1884-ம் வருடத்தில் இருந்து காபி மெஷின்களை
தயாரித்து விற்பனை செய்து கொண்டிருக்கிறது. சர்வதேச விண்வெளி
நிலையத்திற்கு பல நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்களும் அடிக்கடி சென்று
வருவது வழக்கம். அப்படி செல்லும்போது உணவுகள், வீட்டில் உள்ளவர்கள்
கொடுக்கும் பரிசுப் பொருட்கள் போன்றவற்றை ராக்கெட் மூலம் எடுத்துச்
செல்வார்கள். அங்கே காபி குடிக்க முடியாது என்பது விண்வெளி வீரர்களுக்கு
நீண்ட நாட்களாக இருந்த மனக்குறை. ஏனெனில் அங்கே நிலவும் ஜீரோ
கிராவிட்டியில், மெஷினில் இருந்து காபித்துளிகள் வெளியே வந்ததுமே மிதக்க
தொடங்கி விடும். (தண்ணீரை பைப்பில் உறிஞ்சிக் குடிப்பார்கள்.)
இரண்டாவது, அந்த அழுத்தத்திற்கு தாங்கும் வண்ணம் காபி மெஷின் இருக்க வேண்டும். இல்லை என்றால் துண்டு துண்டாக சிதறிவிடும். இதனால் விண்வெளியில் காபி என்பது கனவாகவே இருந்தது. இந்நிலையில்தான் விண்வெளி வீரர்களுக்கு கைகொடுக்க முன் வந்தது எஸ்பிரஸ்ஸோ.
அமெரிக்க விண்வெளி வீரர் டொனால்ட் பெடிட் என்பவர் ஒரு காபி காதலர். ‘விண்வெளி நிலையத்தில் காபி மெஷின்’ என்று கேள்விப்பட்டதும் அவரே அதை எப்படி எல்லாம் தயாரிக்கலாம் என்று அறிவியல் ஐடியாக்கள் கொடுத்துவிட்டார். 20 கிலோகிராம் எடையில் உயர் அழுத்தங்களைத் தாங்கும் எஃகு கொண்டு காபி மெஷினை தயாரித்தது எஸ்பிரஸ்ஸோ.
ஜீரோ கிராவிட்டியிலும் குழாயில் இருந்து காபி பிடிப்பது மாதிரி ஸ்பெஷலாக டிசைன் செய்தார்கள். நாசா பரிசோதனை செய்து ஓகே சொல்லிவிட, இத்தாலியின் முதல் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையோடும், விண்வெளிக்கு காபி மெஷின் எடுத்துச் சென்ற முதல் விண்வெளி வீரர் என்கிற வரலாற்று சாதனையோடும் பயணிக்க இருக்கிறார் சமந்தா கிரிஸ்டோஃபொரெடி.

-கலீல்
-vikatan-
பூமியைப் பார்த்துக் கொண்டே சுடச்சுட காபி!
எ தெல்லாம் சாதனை ஆகும்? ஒரு காபி மெஷினை ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு எடுத்துச் சென்றால் அது சாதனையா? பூமியில் ஓர் இடத்தில்...
Post a Comment