காய்ச்சல் சீக்கிரம் சரியாக ஊசி போட வேண்டாம் என்று தமிழக சுகாதாரத் துறை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து தமிழக பொது சுகாகாரத்துற...
காய்ச்சல் சீக்கிரம் சரியாக ஊசி போட வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்
துறை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து தமிழக பொது சுகாகாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி கூறுகையில்,
காய்ச்சல் சீக்கிரம் சரியாக சில மருத்துவர்களும், பெரும்பாலான போலி
மருத்துவர்களும் ஸ்டெராய்டு, டைக்லோபினாக், பாராசிட்டமால் ஊசிகளை
போடுகிறார்கள். ஸ்டெராய்டு ஊசி போடுவதால் காய்ச்சலின் காரணம் சரியாகாது.
ஸ்டெராய்டு ஊசியால் காய்ச்சல் அப்போது குறையுமே தவிர உடலின் நோய் எதிர்ப்பு
சக்தி குறைந்துவிடும்.
டைக்லோபினாக் காய்ச்சல் மருந்து கிடையாது அது வலி நிவாரணி. இந்த ஊசிகளை
காய்ச்சலுக்கு போட்டால் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட
வாய்ப்பு அதிகம்.
அதனால் டைக்லோபினாக், ஸ்டெராய்டை காய்ச்சலுக்கு ஊசியாகவோ,
மாத்திரையாகவோ
எடுத்துக் கொள்ள வேண்டாம்.
பாரசிட்டமால் காய்ச்சல் மருந்து தான். அதை மாத்திரையாக உட்கொள்ளலாம். ஆனால்
ஊசியாக போட்டால் வலி தான் அதிகம். இதனால் உடலில் தேவையில்லாத பிரச்சனை
ஏற்படும். காய்ச்சலுக்காக மருத்துவர்களிடன் சென்றால் அவர்களின் ஆலோசனைப்படி
மாத்திரை, மருந்துகளை மட்டும் பெற்று சாப்பிடுங்கள். மருந்து, மாத்திரை
சாப்பிட்டும் காய்ச்சல் குறையாவிட்டால் மிதமான வெந்நீரில் துணியை நனைத்து
நெற்றி, முகம், கை, கால்கள் என உடல் முழுக்க துடைத்தால் காய்ச்சல் விரைவில்
குறையும்.
மருத்துவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து காய்ச்சலுக்கு தேவையில்லாத ஊசிகளை
போடாமல் இருக்க வேண்டும் என்றார்.
காய்ச்சலுக்கு ஊசி போடாதீங்க: எச்சரிக்கும் தமிழக சுகாதாரத் துறை
Related Posts
- Anonymous29 Dec 2014வழக்கம்போல் இயக்கப்படும் பஸ்களை மறித்தால் கடும் நடவடிக்கை: அரசு அதிகாரி எச்சரிக்கை
தமிழ்நாடு முழுவதும் பஸ் போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று காலையில் டிரைவர்–கண்டக்டர்கள் மறியலி...
- Anonymous27 Dec 2014மிரட்டி பணம் பறிக்கின்றனவா மேட்ரிமோனியங்கள்?
வீட்டைக் கட்டிப் பார்... கல்யாணத்தைப் பண்ணி பார், என்பார்கள். அத் தனை நிஜம் இந்த வார்த்தைகள...
- Anonymous25 Dec 2014இந்த இறைச்சிக்கடையில் என்னவெல்லாம் விற்கிறாங்கள்? (((இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம்)))
இந்தனோசியாவின் வடக்கு சலவேசி பகுதியில் உள்ள டோமொகன் சந்தை… காலையில் இந்த சந்தை கடுமையான பிஸியாக ...
- Anonymous24 Dec 2014கலையுலக பிரம்மா கே.பாலச்சந்தரின் சாதனை பட்டியல்
கலையுலக பிரம்மா கே.பாலச்சந்தரின் சாதனை பட்டியல் • கமல், சரிதாவை வைத்து பாலச்சந்தர் தெலுங்க...
- Anonymous18 Dec 2014பாகிஸ்தானில் பள்ளி குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: மலாலா கண்டனம்
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளி மற்றும் கல்லூரிக்குள் புகுந்த தெரிக்-இ-தலிபான் இயக்க த...
- Anonymous28 Dec 2014புதிய மோட்டோரோலா X (Gen2) மொபைல்
இந்த வருடம் மோட்டோரோலா நிறுவனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கூகுள் தேடலிலும் அதிகம் தேடப...
- Anonymous27 Dec 2014பண்டித மதன் மோகன் மாளவியா - சிறப்பு பகிர்வு
பண்டித மதன் மோகன் மாளவியா இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்காற்றிய முக்கிய ஆளுமைகளில் ஒருவர். ...
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment