'தல 55' : அஜித்தின் இன்ட்ரோ பாடல்!
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'தல 55' படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அனுஷ்கா, த்ரிஷா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கும் இப்படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. அருண் விஜய் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
வழக்கமாக, கௌதம் மேனன் படங்களில் ஹீரோவுக்கான இன்ட்ரோ பாடல் இருக்காது. ஆனால், இதில் அஜித்துக்காக ஒரு மாஸ் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
'அதாரு அதாரு உதாரு உதாரு' எனத் தொடங்கும் அஜித்தின் இன்ட்ரோ பாடலுக்கு ஹாரீஸ் ஜெயராஜ் சமீபத்தில் இசையமைத்துள்ளார்.
படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளன. நான்கு பாடல்களுக்கு ஹாரீஸ் இசையமைத்துவிட்டார். இன்னும் ஒரு பாடலுக்கு இசையமைத்தவுடன், இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் 'தல55' இசை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'தல 55' : அஜித்தின் இன்ட்ரோ பாடல்!
'தல 55' : அஜித்தின் இன்ட்ரோ பாடல்! கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'தல 55' படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி...
Post a Comment