அமெரிக்காவின் கறிக்கோழி இறக்குமதிக்கு, இந்தியா விதித்திருந்த தடையை, உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூ.டி.ஓ.,) ரத்து செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, மிகக் குறைந்த விலையில், அமெரிக்க கறிக்கோழி, இந்திய சந்தைக்கு வரவுள்ளது. இதனால், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழி விற்பனை, கடுமையாக பாதிக்கப்படும் என, இந்திய கறிக்கோழி பண்ணையாளர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.
கறிக்கோழி உற்பத்தியில், உலகின் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில், பிரேசில் மற்றும் சீனா உள்ளன. இந்தியா, ஐந்தாவது இடத்தில் உள்ளது.இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழி, உள்நாட்டு தேவை போக, ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உள்ளது. இதனால், அமெரிக்காவில் இருந்து கறிக்கோழி இறக்குமதியை, இந்தியா தடை செய்தது. இதற்காக 2007ல், அமெரிக்காவில் பரவிய, பறவை காய்ச்சலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாதடை விதித்து.இதை எதிர்த்து, உலக வர்த்தக அமைப்பிடம், அமெரிக்கா முறையிட்டது.இந்த வழக்கை விசாரித்த, உலக வர்த்தக அமைப்பு, 'அமெரிக்க கறிக்கோழிக்கு, இந்தியா விதித்த தடை செல்லாது' என, நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து, இந்தியா மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.ஆனால், உலக வர்த்தக ஒப்பந்தப்படி, இந்தியா சொல்லும் காரணம், வலுவில்லாமல் உள்ளது. அமெரிக்காவில், 2007ல் ஏற்பட்ட பறவை காய்ச்சலுக்குப் பின், இந்தியாவில் நான்கு முறை பறவை காய்ச்சல் ஏற்பட்டு, கால்நடைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.எனவே, மேல்முறையீட்டில், இந்தியாவுக்கு சாதகமான உத்தரவு வராது என, கோழி பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.
பிரச்னை என்ன?
இதுகுறித்து, இந்திய கறிக்கோழி கூட்டமைப்பின், மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழிக்கு, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் தடை விதித்துள்ளன. இதற்கான காரணம் வேறு. அமெரிக்காவில், கறிக்கோழியின் தொடைப் பகுதியை பயன்படுத்துவதில்லை.இதில், கொழுப்பு சத்து அதிகம் இருப்பதால், கோழியின் இரு தொடைகளையும் வெட்டி வீசிவிட்டு, பிற பகுதிகளை மட்டும் தான் பயன்படுத்துகின்றனர். இதனால், கறிக்கோழியின் தொடை பகுதி, பெருமளவில் அங்கு வீணாகிறது. இதை, எப்படியாவது விற்க வேண்டும் என்பதற்காக, ஏற்றுமதி செய்யத் துடிக்கின்றனர். இதற்கு, உலக வர்த்தக அமைப்பு அளித்துள்ள உத்தரவு, அமெரிக்காவுக்கு சாதகமாக உள்ளது.உலக வர்த்தக ஒப்பந்தப்படி, அனைத்துத் தரப்பு மக்களுக்கும், தரமான உணவை அளிக்க வேண்டும். அதேநேரத்தில், உலகின் ஒரு பகுதியில், தேவையற்றது என, தூக்கி எறியும் பொருளை, பிற பகுதிகளில் விற்க முடியாது.எனவே, கறிக்கோழி இறைச்சியை, விற்பனை செய்ய அமெரிக்கா விரும்பினால், முழுக் கோழியாக விற்க வேண்டும். அவர்களுக்கு வேண்டாம் என, தூக்கி எறியும் கோழியின் தொடை பகுதியை விற்கக் கூடாது என, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள், அமெரிக்காவின் கறிக்கோழி இறக்குமதிக்கு தடை விதித்துள்ளன.இதுபோன்ற அணுகுமுறையை, இந்தியாவும் எடுக்க வேண்டும். எனவே, அமெரிக்க கறிக்கோழி இறக்குமதியைத் தடுக்க, இம்முறை தான் உகந்தது.
பாதிப்பு என்ன?
இந்தியாவில், சராசரியாக ஒரு நபர், ஒரு நாளைக்கு, 13.70 கிராம் கறிக்கோழி உட்கொள்கிறார். இதன் விலை, 2.66 ரூபாய். அமெரிக்காவில் இருந்து, இறக்குமதி செய்யப்படும், கறிக்கோழி இந்திய விலையைவிட, 50 சதவீதம் குறைவாகக் கிடைக்கும்.அமெரிக்காவில், தேவையில்லை என, தூக்கி எறியப்படுபவை என்பதால், அதற்கு எந்த விலை நிர்ணயமும் இல்லை. கோழியின் தொடையை வெட்டி எறியும்போதே, அதற்கான விலையை, கோழியின் பிற பகுதி விலையுடன் சேர்ந்து விற்பனை செய்கின்றனர்.எனவே, தொடைக் கறிக்கான விலையை, அமெரிக்க வியாபாரிகள், ஏற்கனவே, அவர்களது நாட்டில் சம்பாதித்து விடுகின்றனர். எனவே, தொடை கறியை எந்த விலைக்கு விற்றாலும், அமெரிக்க வியாபாரிக்கு லாபமே.இந்த விலைப் போட்டியில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கறிக்கோழியை, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கறிக்கோழியுடன், போட்டியிட்டு சந்தைப்படுத்த முடியாது.
சில்லரை விற்பனை:
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கறிக்கோழி, பதப்படுத்தப்பட்டு, பெட்டிகளில் அடைத்து சந்தைக்கு வரும். இவற்றை, சில்லரை விற்பனைக் கடைகளில் விற்கலாம். ஓட்டல்களுக்கு நேரடியாக சப்ளை செய்யலாம்.உள்நாட்டில், கறிக்கோழியை வாங்கி, சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும். அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கறிக்கோழியை, வாங்கியதும் உடனடியாக சமைக்க முடியும். எனவே, உள்ளூர் சந்தையில், அமெரிக்க கோழிக்கறி எளிதில் விற்கப்படும்.இந்த விவாகரத்தில், பண மதிப்பிலான பாதிப்பை, உடனடியாக அளவிட முடியாது. ஆனால், தோராயமாக தற்போதைய உள்நாட்டு விற்பனையில், 40 சதவீதத்துக்கும் மேல், அமெரிக்க கறிக்கோழி ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

வருகிறது அமெரிக்க கறிக்கோழி உள்நாட்டு கோழி விற்பனை 40 சதவீதம் பாதிக்கும்?
அமெரிக்காவின் கறிக்கோழி இறக்குமதிக்கு, இந்தியா விதித்திருந்த தடையை, உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூ.டி.ஓ.,) ரத்து செய்துள்ளது. இதைத் தொடர்ந்...
Post a Comment