நாடு முழுவதும் எல்இடி விளக்குகளைப் பயன்படுத்துவதற்காக ஏழை மக்களுக்கு ரூ. 10 விலையில் எல்இடி பல்புகளை விற்பனை செய்ய மத்திய மின்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
சந்தையில் ரூ. 400 விலையில் விற்பனை செய்யப்படும் இத்தகைய பல்புகளை ஏழை மக்களும் பயன்படுத்தும் வகையில் ரூ. 10 விலையில் விற்பனை செய்ய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. எரிசக்தியை சிறப்பாக செயல்படுத்தும் அமைப்பு (பிஇஇ) மற்றும் எரிசக்தியை சிறப்பாக பயன்படுத்த உதவும் சேவை நிறுவனம் (இஇஎஸ்எல்) ஆகியன இணைந்து நான்கு பொதுத்துறை நிறுவனங்களை கூட்டு சேர்த்து எல்இடி பல்பு தயாரிப்பு பணியை மேற்கொண்டுள்ளன.
இஇஎஸ்எல் நிறுவனம் மொத்தமாக எல்இடி பல்புகளைக் கொள்முதல் செய்து அவற்றை ரூ. 10 விலையில் ஏழை மக்களுக்கு விற்பனை செய்ய உள்ளதாக மத்திய மின்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ரூபாய்க்கு எல்இடி பல்ப்: மத்திய மின் அமைச்சகம் முடிவு
நாடு முழுவதும் எல்இடி விளக்குகளைப் பயன்படுத்துவதற்காக ஏழை மக்களுக்கு ரூ. 10 விலையில் எல்இடி பல்புகளை விற்பனை செய்ய மத்திய மின்துறை அமைச்சக...
Post a Comment