கீரைகள் இயற்கை நமக்கு கொடுத்த கொடை . நம் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில்
கீரைகளுக்கு எப்போதுமே முக்கிய பங்கு உண்டு. இன்று நாம் அன்றாடம்
பயன்படுத்தும் கீரை வகைகள் தனிப் பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருபவை.
இன்னும் பல கீரை ரகங்கள் நமது வயல்களிலும், நீர்நிலைகளிலும் இருந்து
வருகின்றன.
சிறு கீரை, தண்டுக் கீரை, முளைக் கீரை, அகத்திக் கீரையெல்லம் ஒரு காலத்தில் வயல் வரப்புகளிலும், மானாவாரி நிலங்களிலும், குளம், குட்டை, ஏரி ஓரங்களிலும் இருந்தவையே. காலப்போக்கில் அதிலிருந்து விதைகள் பிரித்தெடுக்கப்பட்டு, தனியாக பயிர் செய்யும் அளவுக்கு வளர்ந்து விட்டன. இதுமாதிரி பல கீரை ரகங்கள் பயிர்களோடு களையாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்கும் மழைக் காலங்களில் கொல்லைப்பக்கம் போறவங்க, கையில் கீரைகளோடு வருவதை பார்த்திருப்போம்.
கிருஷ்ணகிரியைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வரும் விவசாயிகள் கிருஷ்ணகிரி நகர சந்தையில் இந்த கீரைகளை விற்பனை செய்கின்றனர். இதில் குமட்டுக் கீரை, பண்ணைக் கீரை, நாட்டுப் பொன்னாங்கன்னி ஆகியவை பரவலாக அறியப்படாத கீரை ரகங்கள். சந்தையில் இந்த கீரையை விற்றுக் கொண்டிருந்த திம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்தம்மாள் ஆர்வமோடு பேசினார்.
"கலக்காய் (நிலக்கடலை) தோட்டத்திலும், அவரை, துவரை, சோளம், சாமை வயல்கள்லயும் பரவலா இந்த கீரைங்க வெளைஞ்சி கிடக்குது. குமட்டுக் கீரையை ‘குமால்’ கீரைன்னும், பண்ணைக் கீரையை ‘கோல் பண்ணை’ கீரைன்னு சொல்வாங்க. எங்களுக்கு விவரம் தெரிஞ்சதிலிருந்தே வீட்ல சமச்சி சாப்பிட்டுட்டு வர்றோம். மழைக் காலத்துல தோட்டம், தொரவுகள்ல நிறைய விளையும். அந்த நேரத்துல சந்தைக்கு பறிச்சிட்டு வந்து விப்போம்.
மழைக்காலங்கள்ல நிறைய விளையும். அத கொஞ்சமா பறிச்சிட்டு வந்து கொஞ்ச நேரத்துல வித்துட்டு கிளம்பிடுவோம். இந்த ரெண்டு கீரையுமே பருப்போட சேத்து வேக வெச்சி கடைஞ்சி சாப்பிட்டா குழம்பு அவ்ளோ ருசியா இருக்கும். அந்த குழம்புல வடகத்த போட்டு தாளிச்சா அந்த மணம் மூக்கைத் துளைக்கும்.
ஆடி, ஆவணில சேடை ஓட்டுறது, தலை வெட்டுறது, பயிர் நடறதுன்னு ஆம்பள, பொம்பளைங்களுக்கு வேல அதிகமா இருக்கும். தெம்பா வேல செய்யிறதுக்கு இந்த கீரைங்கதான் உதவுது. இதோட வயித்துல புண்ணு இருந்தாலும் ஆத்திடும். மண்ணுல தொடர்ந்து ஈரம் இருந்து, ஆடு, மாடுக சாப்பிடாம இருந்தா நிறைய விளையும். குமட்டுக் கீரையில குழம்பு, பொறியல் ரெண்டுமே செய்யலாம். பூ வர்றதுக்குள்ள பறிச்சி சாப்பிட்டா, ஒரு சுவையும், அதுக்கு பிறகு ஒரு சுவையும் இருக்கும். பண்ணைக் கீரையில குழம்பு மட்டுமே செய்வோம்.
இதோட சளி புடிச்சவங்களுக்கு, புள்ளைதாச்சிங்க, குழந்தை பெத்த புதுசல இருக்கிறவங்களுக்கு பண்ணைக் கீரையை கொடுக்க மாட்டாங்க. மத்த கீரைங்க மாதிரி தனிப்பயிரா சாகுபடி செய்யறதில்ல. மானாவாரியில விளையறதுனால எந்த ரசாயன கலப்பும் இல்லாம வளருதுங்க.
அதனால சுவையும், சத்தும் மற்ற கீரைகளவிட கூடுதலாவே இருக்கும். கொல்லை, கழனின்னு அலைஞ்சு பறிச்சிட்டு வர்றோம். டவுன்ல இந்த கீரையைப் பத்தி தெரிஞ்சவங்க வாங்கிட்டு போயிடுறாங்க. ஒரு கட்டு 5 ரூபான்னு விக்கிறோம்" என்றார்.
நாட்டுப் பொன்னாங்கன்னி கீரையைப் பற்றி பேசிய மோட்டூரைச் சேர்ந்த வள்ளியம்மாள், "தண்ணி தேங்குற நிலத்துலதான் நாட்டுப் பொன்னாங்கன்னி நிறைய படந்திருக்கும். இப்போ நெல் போடப் போற நிலங்கள்லயும் நிறைய கிடைக்குது. இதோட தண்டுப்பகுதி குச்சி மாதிரி இருக்கும்.
ஆனா, சாப்பிடும்போது நார் மாதிரி பிரிஞ்சி வரும். ஏரி, குட்டைகள்ல வளர்ற பொன்னாங்கன்னியோட தண்டுப்பகுதி தடிப்பாவும், சாப்பிடறதுக்கு மிருதுவாவும் இருக்கும்.
இதோட மல்லி, கத்திரிக்காய் தோட்டங்கள்ல களைகளோடயும் சேர்ந்து வளரும். இத பொறியலா செஞ்சு சாப்பிடுவாங்க. உடல் சூட்ட குறைக்கிறதுக்காக சாப்பிடுவாங்க. ஒரு கட்டு 10 ரூபான்னு விக்கிறோம்" என்றார்.
-த.ஜெயகுமார்

கீரைகள்... இருக்குது பல ரகங்கள்...!
கீரைகள் இயற்கை நமக்கு கொடுத்த கொடை . நம் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் கீரைகளுக்கு எப்போதுமே முக்கிய பங்கு உண்டு. இன்று நாம் அன்றாடம் பயன்...
Post a Comment