இலங்கையில் சித்திரவதைகளும் பாலியல் வன்முறைகளும் தொடர்கின்றன!- பிரித்தானிய அமைப்பு
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சித்திரவதையில் இருந்து விடுதலை ( ப்ரீடம் ப்ரம் டோச்சர் ) என்ற அமைப்பு இலங்கையில் தொடர்ந்தும் சித்திரவதைகள் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தியுள்ளது.
அமைப்பின் தலைவர் ஜூலியட் கொஹென் ஜெனீவா மனித உரிமைகள் குழுவின் அமர்வில் நேற்று பங்கேற்றபோது இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
எனினும் இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் கரிசனை கொள்ளாது இருந்து வருவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
இலங்கையில் தொடரும் பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் என்பன தொடர்பில் இலங்கை அரசாங்கம் மறுப்பை வெளியிட்டு வருகிறது.
எனினும் அதற்கான ஆதாரங்களை தாம் மனித உரிமைகள் குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக கொஹேன் குறிப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெற்ற நெருப்பால் சுட்ட 73 வீத சம்பவங்களும் 60 வீத பாலியல் வன்முறைகளும் கண்டறியப்பட்டுள்ளன.
இதேவேளை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர்கள் என்ற கூறப்படுவோர் மீது தொடர்ந்தும் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே இந்த விடயத்தில் உரிய நடவடிக்கைகள் அவசியம் என்று கொஹென் கேட்டுக்கொண்டார்.
இலங்கையில் சித்திரவதைகளும் பாலியல் வன்முறைகளும் தொடர்கின்றன!- பிரித்தானிய அமைப்பு
இலங்கையில் சித்திரவதைகளும் பாலியல் வன்முறைகளும் தொடர்கின்றன!- பிரித்தானிய அமைப்பு பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சித்திரவதையில் இருந்து வி...
Post a Comment