பிணமாகிப்போன மனித உரிமை ஆணையம்.......
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடாணை அருகே உள்ள எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த அல்லாபிச்சையின் மகன் 24வயதான செய்யிது முஹம்மது என்பவருக்கும்,
அதே பகுதியில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை வைத்திருக்கும் அருள்ராஜ் என்பவருக்கும் இடையே நடந்த தகராறு சம்பந்தமாக,
அருள்ராஜின் புகாரின் அடிப்படையில், விசாரணைக்காக எஸ்.பி.பட்டிணம் காவல்நிலையத்திற்கு செய்யது முஹம்மதுவை அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவரை மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இந்நிலையில்,காவல்நிலையம் வந்த காவல் உதவி ஆய்வாளர் காளிதாஸ், செய்யது முஹம்மதுவை கடுமையாகத் தாக்கி,
தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் செய்யது முஹம்மதுவின் மார்பில் மூன்றுமுறை சுட்டு தனது மானங்கெட்ட வீரத்தைக் காட்டி, செய்யது முஹம்மதுவை படுகொலை செய்திருக்கிறான்......
"என்னை கொலைசெய்ய முயற்சித்ததால் நான் தற்காப்புக்காக சுட்டேன்" என்று, வழக்கம்போல காவல்துறையினர் விடும் கட்டுக்கதையையே விட்ட காளிதாஸ்,
அதை நம்பவைக்க தனது உடம்பில் சக காவல்துறை ரவுடிகள் துணைக்கொண்டு கத்தியால் கீறி, செய்யது முஹம்மது தன்னை கத்தியால் குத்தினான் என்று பீலாவும் விட்டான்.
செய்யது முஹம்மதுவை சட்டவிரோதமாக சுட்டுக்கொலை செய்த, காவல் உதவி ஆய்வாளர் காளிதாஸ் என்கிற சட்டவிரோத போலீஸ் பொறுக்கி நாயை,
தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் வண்மையாகக் கண்டித்தும், காளிதாசை உடனடியாகக் கைதுசெய்து அவனை பணிநீக்கம் செய்யவும் தமிழக அரசை வலியுறுத்துகிறது.
தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுக்கொண்டு, ரவுடிகள் போல செயல்படுகின்ற தமிழக காவல்துறையினரின் மீது எத்தகைய கடுமையான நடவடிக்கைகள் எடுக்காமல்,
பிணமாகிப்போன மனித உரிமை ஆணையத்தை தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் வண்மையாகக் கண்டிக்கிறது.
பிணமாகிப்போன மனித உரிமை ஆணையம்.......
பிணமாகிப்போன மனித உரிமை ஆணையம்....... இராமநாதபுரம் மாவட்டம் திருவாடாணை அருகே உள்ள எஸ்.பி.பட்டிணத்தைச் சார்ந்த அல்லாபிச்சையின் மகன் 2...
Post a Comment