மறுப்பிறவி எடுக்குமா மழை நீர் சேகரிப்பு திட்டம்?
இதற்கு பருவமழை பொய்த்தது ஒரு காரணம் என்றால் ஆண்டுதோறும் பெருகி வரும் மக்கள் தொகையும் மற்றொரு முக்கிய காரணம். மக்கள் தேவைக்காகவும், தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்காகவும் ராட்சத இயந்திரங்கள் மூலம் நிலத்தடி நீர் அதிகளவு உறிஞ்சப்படுகிறது. இதனால் தமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சுகாதாரமான குடிநீரும் கிடைப்பதில்லை. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேவை அதிகரிப்பதால் அதன் விலையும் தாறுமாறாக விற்கப்படுகிறது.
நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க தமிழக அரசு, கடந்த 2003 ஆம் ஆண்டு மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வீடுகள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனை, தொழிற்சாலைகள், தனியார், அரசு கட்டடங்கள் ஆகியவற்றில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. பரப்பளவு ஆயிரம் சதுரஅடிக்கு மேல் உள்ள கட்டடங்களில் இத்திட்டத்தைக் கட்டாயம் செயல்படுத்த அரசு உத்தரவிட்டது. இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மழை நீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தாத கட்டடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்படடது. புதிய கட்டடங்களுக்கான வரைபடத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டம் இல்லையெனில் அனுமதி மறுக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சியில் 33 கி.மீட்டர் பரப்பளவில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மழை நீர் தேங்குவதை தவிர்க்க 1996 ஆம் ஆண்டு முதல் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2001ஆம் ஆண்டு முதல் மழை நீர் சேகரிக்கும் திட்டத்தை அனைத்து மாநகராட்சிக்கு கட்டடம், பள்ளிகள், மருத்துவமனைகள், அலுவலக கட்டடங்கள் சமுதாய கூடங்கள், துணை மின் நிலையங்கள், பாலங்கள், பூங்காக்கள், மேம்பாலம் உள்பட 1,344 இடங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது. ஆனால் மாநகராட்சி அலுவலகம் செயல்படும் ரிப்பன் மாளிகையில் கூட மழை நீர் சேகரிப்பு திட்ட குழாய்கள் உடைந்து காணப்படுகிறது. இந்த லட்சணத்தில்தான் சென்னையில் மழை நீர் சேகரிப்பு திட்டம் இருக்கிறது.
இந்த நிலையில் மழை நீர் சேகரிப்பு திட்டத்திற்கு மறுவாழ்வு தரவேண்டிய அவசர சூழல் இன்று தவிர்க்க இயலாமல் உருவாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக முன்பு இத்திட்டத்தை துவங்கிய இயக்கமே, தற்போதும் ஆளும் பொறுப்பில் உள்ளதால் இதை முன்னெடுப்பது என்பதும் வெற்றிகரமானதாக ஆக்குவதும் ஆளும் அரசின் கையில் உள்ளது.
-எஸ்.மகேஷ்
மறுப்பிறவி எடுக்குமா மழை நீர் சேகரிப்பு திட்டம்? வ டகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை பெய்யும். இந்த காலத்தில்...
Post a Comment