விமானத்தில் பயணம் செய்கிறவர்கள் இனி ஜன்னல் ஓர இருக் கையை கேட்டுப் பெற வேண்டிய அவசியம் இருக்காது. உலகிலேயே முதன்முறையாக ஜன்னல் இல்லாத, அதேந...
விமானத்தில் பயணம் செய்கிறவர்கள் இனி ஜன்னல் ஓர இருக் கையை கேட்டுப் பெற வேண்டிய அவசியம் இருக்காது. உலகிலேயே முதன்முறையாக ஜன்னல் இல்லாத, அதேநேரம் பயணிகள் வான்வெளியைப் பார்த்து ரசிக்கும் வகையில் வடி வமைக்கப்பட்ட விமானம் பயன் பாட்டுக்கு வர உள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த புத்தாக்க செயல்முறை மையம் (சிபிஐ) என்ற நிறுவனம், விமானத்தின் ஜன்னல்களுக்கு பதிலாக எடை குறைவான ஸ்மார்ட்ஸ்கிரீனை பொருத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் எரிபொருள் செலவு மிச்சமா வதால், விமானக் கட்டணமும் குறையும் என எதிர் பார்க்கப்ப டுகிறது.
இந்த ஸ்கிரீனுக்கு வெளிப்புறத் தில் கேமராக்கள் பொருத்தப்படும். இத்துடன் ஆர்கானிக் ஒளி உமிழும் டயோடு (ஓஎல்இடி) தொழில் நுட்பத்தின் மூலம் இந்த விமானத் தில் பயணம் செய்யும் பயணிகள், இன்டர்நெட்டில் உலவிக் கொண்டே வான்வெளி யில் என்ன நடக்கிறது என்பதை ஸ்கிரீனில் பார்த்து ரசிக்க முடியும்.
மேலும் இந்த ஸ்மார்ட்ஸ்கிரீன் ஆன், ஆப் வசதி கொண்டதாக இருக்கும். இதன்மூலம் விரும்பும் போது வான்வெளியைப் பார்க்கவும், விரும்பாதபோது மூடிவிடவும் முடியும். இந்த விமானம் விரைவில் பரிசோதனை செய்யப்பட உள்ளது. எனினும் வர்த்தக ரீதியாக செயல் பாட்டுக்கு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆக லாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செல்போன்கள், தொலைக் காட்சிகள் ஆகியவற்றில் பயன்ப டுத்தப்படும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இந்த ஜன்னல் இல்லாத ஸ்மார்ட்ஸ்கிரீனை சிபிஐ நிறுவன விஞ்ஞானிகள் உருவாக்கி வருகிறார்கள்.
சிபிஐ நிறுவன விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் இந்த தொழில்நுட்பத்தை ‘வெளிப் புறத்தைப் பார்க்கும் வசதியுடன் கூடிய ஜன்னல்கள் இல்லாத கேபின்’ என கூறுகிறார்கள். ஜன்னலுக்கு பதில் ஸ்மார்ட்ஸ்கிரீன் பொருத்தப்பட்ட மாதிரி விமானம்
உலகில் முதன்முறையாக ஜன்னல் இல்லாத விமானம்: பயணிகள் வான்வெளியை ரசிக்க முடியும்
Related Posts
- Anonymous29 Dec 2014வழக்கம்போல் இயக்கப்படும் பஸ்களை மறித்தால் கடும் நடவடிக்கை: அரசு அதிகாரி எச்சரிக்கை
தமிழ்நாடு முழுவதும் பஸ் போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று காலையில் டிரைவர்–கண்டக்டர்கள் மறியலி...
- Anonymous27 Dec 2014மிரட்டி பணம் பறிக்கின்றனவா மேட்ரிமோனியங்கள்?
வீட்டைக் கட்டிப் பார்... கல்யாணத்தைப் பண்ணி பார், என்பார்கள். அத் தனை நிஜம் இந்த வார்த்தைகள...
- Anonymous25 Dec 2014இந்த இறைச்சிக்கடையில் என்னவெல்லாம் விற்கிறாங்கள்? (((இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம்)))
இந்தனோசியாவின் வடக்கு சலவேசி பகுதியில் உள்ள டோமொகன் சந்தை… காலையில் இந்த சந்தை கடுமையான பிஸியாக ...
- Anonymous24 Dec 2014கலையுலக பிரம்மா கே.பாலச்சந்தரின் சாதனை பட்டியல்
கலையுலக பிரம்மா கே.பாலச்சந்தரின் சாதனை பட்டியல் • கமல், சரிதாவை வைத்து பாலச்சந்தர் தெலுங்க...
- Anonymous18 Dec 2014பாகிஸ்தானில் பள்ளி குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: மலாலா கண்டனம்
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளி மற்றும் கல்லூரிக்குள் புகுந்த தெரிக்-இ-தலிபான் இயக்க த...
- Anonymous28 Dec 2014இமெயில் ஐடியில் டொமைன் உங்கள் சாய்ஸ்!
நம்பிக்கை மிகுந்த தகவல் பரிமாற்றத்தில் தற்போது மிக முக்கிய இடத்தில் இருப்பது, ‘மெயில்’ என்று சொல்லப...
- Anonymous11 Dec 2014"மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் செல்ஃபி !" - புதிய மொபைல்
உலகமே செல்ஃபி உலகமாகி விட்டது. மார்கெட்டுக்கு போனா செல்ஃபி.. பிக்னிக் போனா செல்ஃபி.. பார்ட்டிக்கு...
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment