ட்விட்டர் டுமீல்! - ராம்கோபால் வர்மாவின் அதிரடி
விநாயகரைப் பற்றி விமர்சித்ததால் இந்து அமைப்புகளின் எதிர்ப்பு ஆளானார். பெண்களைப் பற்றி தரக்குறைவாக கருத்து சொல்லி மகளிர் அமைப்புகளின் கடும் சொல்லுக்கு இரையானார். சமீபத்தில் ’சாவித்ரி’ என தெலுங்கில் ஒரு படத்தைத் தயாரிப்பதாக அறிவித்தார். இது தனது பள்ளி பருவத்தில் பார்த்த சாவித்ரி டீச்சரை மனதில் வைத்து உருவான படம் என சொன்னார். இது விடலைகளுக்கு ஏற்படும் விபரீத எண்ணங்களை சொல்லும் கதை என்பது போஸ்டரைப் பார்த்துதான் சமூக அமைப்பாளர்களுக்கு பளிச்சிட்டது.
உடனே ட்விட்டரைத் திறந்த ராம்கோபால் வர்மா, ’மக்கள் ஒரு படத்துக்கு மட்டும் இவர்களுக்கு 100 கோடி ரூபாய் வசூலித்து தருகிறார்கள். இவர்களோ சில லட்சங்களை மக்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்’ என சாடியிருக்கிறார். இப்போது ஒட்டுமொத்த டோலிவுட் இண்டஸ்ட்ரியும் இவர் மேல் கடுப்பில் இருக்கிறது. அடுத்ததாக இவர் என்ன சர்ச்சையை கிளப்பப் போகிறார் என இப்போதே சினிமா துறையில் இருப்பவர்கள் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.
முன்புபோல பிஸியா இல்லாம சும்மா இருக்கிறதால இப்படி ட்விட்டரில் மத்தவங்களை ரிவீட் அடிக்கலாமா வர்மா சார்?!
- ஜியா உல் ஹக்
ட்விட்டர் டுமீல்! - ராம்கோபால் வர்மாவின் அதிரடி சர்ச்சை கருத்துகளால் வில்லனாகி இருக்கிறார் ராம்கோபால் வர்மா. ஒரு மனுஷன் எத்தனை எதி...
Post a Comment