ஐதராபாத்தின் ஒருநாள் போலீஸ் கமிஷனரானான் 10 வயது சிறுவன்
ஐதராபாத்: ஐதராபாத்தைச் சேர்ந்த 10வயது சிறுவன், இன்று ஒருநாள் மட்டும் அந்நகரத்தின் போலீஸ் கமிஷனராக பதவி வகிக்கிறான். தெலுங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்த 10வயது சிறுவன் சாதிக். உடல்நலக்குறைவு காரணமாக இன்னும் சில மாதங்களில் இறந்து விடுவான் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தனது உறவினர்களைப் போல தான் ஒரு போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்பதே சாதிக்கின் விருப்பம் என கூறப்படுகிறது.சாதிக்கின் இந்த விருப்பம் மேக் எ விஷ் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் ஐதராபாத் போலீஸ் கமிஷனர் மகேந்தர் ரெட்டிக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று ஒருநாள் சாதிக்கை போலீஸ் கமிஷனராக்கி, அவனது விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார் மகேந்தர் ரெட்டி. போலீஸ் உடை அணிந்து வந்த சாதிக்கை, மகேந்தர் ரெட்டி உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் சல்யூட் அடித்து வரவேற்றனர். பின்னர் ரவுடிகளை துரத்திச் சென்று பிடிப்பது தனக்கு மிகவும் தனது ஆவலை வெளியிட்டுள்ளான் சிறுவன் சாதிக். இதுகுறித்து மகேந்தர் ரெட்டி கூறுகையில், சிறுவனின் ஆசையை நிறைவேற்றியதில் தான் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.
-DINAMALAR-
ஐதராபாத்தின் ஒருநாள் போலீஸ் கமிஷனரானான் 10 வயது சிறுவன்
ஐதராபாத்தின் ஒருநாள் போலீஸ் கமிஷனரானான் 10 வயது சிறுவன் ஐதராபாத்: ஐதராபாத்தைச் சேர்ந்த 10வயது சிறுவன், இன்று ஒருநாள் மட்டும் அந்நகரத்தின்...
Post a Comment