ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பான விவாதம் நடைபெற்றது.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டால் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டது.
அவரது ஜாமீன் மனு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது ஜெயலலிதா சார்பில் மூத்த வக்கீல் பாலி எஸ்.நாரிமன் ஆஜராகி வாதாடினார்.
சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் சுஷீல் குமார் மற்றும் கே.டி.துளசி ஆகியோர் பாலி எஸ்.நாரிமன் முன்வைக்கும் வாதங்களையே தாங்களும் ஆதரிப்பதாக முன்பாகவே தெரிவித்தனர்.
விசாரணை துவங்கியதும் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, இது ஊழல் தொடர்பான வழக்கு என்றும், ஊழல் என்பது மனித உரிமையை மீறும் செயல் என்றும், எனவே இதுபோன்ற வழக்குகள் தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புகள் ஏதேனும் இருந்தால் எங்கள் பார்வைக்கு முன்வைக்கலாம் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து தனது வாதத்தை தொடங்கிய மூத்த வக்கீல் பாலி எஸ்.நாரிமன், ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் சில மாநிலங்களின் ஐகோர்ட்டுகள் பிறப்பித்த சுமார் 18 தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் பிரதிநிதியான ஒருவர் ஊழல் தடுப்பு சட்டம் 1988-ன் கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டால் அந்த தண்டனை அறிவிக்கப்பட்ட 30 நாட்களில் அந்த கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சட்டரீதியான கிரிமினல் மேல் முறையீட்டை அந்த மாநில ஐகோர்ட்டில் தாக்கல் செய்யலாம். அந்த மேல் முறையீடு சட்டரீதியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட உடனே அந்த குற்றவாளி தண்டனை குறைப்புக்கும் ஜாமீனுக்கும் உரியவர் ஆகிறார்.
இது சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்துள்ள ஒரு தீர்ப்பின் அடிப்படையில் வகுத்துள்ள நெறிமுறையாகும். இதை கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி சந்திரசேகரா கருத்தில் கொள்ளாமல் நீதிமன்ற பிழையினை செய்துள்ளார். இது நெறிமுறைக்குப் புறம்பான செயலாகும். எனவே கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி பிறப்பித்த உத்தரவில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.
பாலி எஸ்.நாரிமன் இவ்வாறு கூறியதும் குறுக்கிட்ட தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, “நீங்கள் மேற்கோள் காட்டிய தீர்ப்புகளை கருத்தில் கொள்ளும் போது தண்டனை மீதான தடைக்கு உங்கள் கட்சிக்காரருக்கு உரிமை இருப்பதாக தெரிகிறது. இருந்தாலும் உங்கள் கட்சிக்காரர் இந்தியாவில் உள்ள தலைசிறந்த வழக்கறிஞர்களை கீழமை நீதிமன்றங்களிலும், ஐகோட்டுகளிலும் சுப்ரீம் கோர்ட்டிலும் அமர்த்தி இந்த வழக்கை 18 வருடங்களாக இழுத்தடித்த விதம் எங்களுக்கு தெரியும். உங்கள் கட்சிக்காரரை ஜாமீனில் விடுவித்தால் இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை நீங்கள் 20 வருடங்களுக்கும் மேல் இழுத்தடிக்க மாட்டீர்கள் என்று நாங்கள் ஏன் கருதக்கூடாது?’’ என்று கேட்டார்.
மற்றொரு நீதிபதியான ஏ.கே.சிக்ரி, “அப்படி 20 வருடங்களுக்கு ஒரு வழக்கை நீங்கள் இழுத்தடித்தால் நீதியின் நிலை என்ன?’’ என்று கேட்டார். இன்னொரு நீதிபதியான மதன் பி.லோகுர் அதனை ஆமோதிப்பது போல் தலையசைத்தார்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் பாலி எஸ்.நாரிமன் தொடர்ந்து வாதிட்டார். அவர் கூறியதாவது:-
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். அந்த வழக்குகளைப் பற்றியோ மற்ற வழக்கறிஞர்கள் பற்றியோ நான் எதுவும் கருத்துக் கூற விரும்பவில்லை. இந்த குறிப்பிட்ட மனு மீதான விசாரணையில் என் கட்சிக்காரர் சார்பாக நான் ஆஜராகி இருக்கிறேன். இந்த நீதிமன்றம் என்ன உறுதிமொழி கேட்டாலும் அதனை பிரமாண பத்திரம் வடிவில் அவர் சார்பாக தாக்கல் செய்யத் தயாராக இருக்கிறேன். எந்த நிபந்தனை வைத்தாலும் நான் கட்டுப்பட தயாராக இருக்கிறேன்.
என்னுடைய கட்சிக்காரர் ஜெயலலிதாவின் உடல்நிலை, வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டாவது அவர் சிறையில் இருந்து வெளியில் வர அனுமதிக்க வேண்டும். அவரை மருத்துவ காரணங்கள் தவிர வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அவருக்கு நிபந்தனை விதித்தாலும் சரியே. மேலும் சுப்ரீம் கோர்ட்டில் சரீன் மற்றும் பஞ்சாப் அரசு தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் என்னுடைய கட்சிக்காரர் ஜெயலலிதாவுக்கு தண்டனையின் மீதான தடைக்கு உரிமை உள்ளது.
இவ்வாறு அவர் கூறியதும் சுப்பிரமணியசாமி குறுக்கிட்டு வாதாட எழுந்தார்.
அதற்கு ஆட்சேபம் தெரிவித்த சசிகலா தரப்பு வக்கீல் கே.டி,எஸ்.துளசி, “இந்த மனுவின் மீதான விசாரணையில் வாதாட சுப்பிரமணியசாமிக்கு எந்த வகையில் முகாந்திரம் உள்ளது?’’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, “சுப்பிரமணியசாமிதான் இந்த மூல வழக்கில் அடிப்படை புகார்தாரர். எனவே அவருக்கு முகாந்திரம் உள்ளது“ என்று கூறினார். அத்துடன், “இதனை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் தரப்பில் ஏதேனும் வாதங்கள் இருந்தால் முன்வைக்கலாம்’’ என்றார்.
தொடர்ந்து சுப்பிரமணியசாமி தனது வாதத்தின் போது கூறியதாவது:-
இது ஊழலுக்கு எதிரான வழக்கு. ஜெயலலிதா தரப்பில் இந்த வழக்கை 18 ஆண்டு காலம் இழுத்தடித்தார்கள். இந்த வழக்கின் தீர்ப்பு வந்தவுடன் என்னுடைய வீட்டை தாக்கினார்கள். என்னைப் பற்றி மிகவும் கேவலமாக போஸ்டர்கள் ஒட்டினார்கள். நீதிபதி குன்காவை அவதூறாக சித்தரித்து போஸ்டர்களை ஒட்டினார்கள். கர்நாடக நீதிபதிகள் ரத்தினகலா மற்றும் சந்திரசேகராவை அவதூறாக சித்தரித்தார்கள். நீதிமன்றத்தை அவமதித்தார்கள். நீதிபதி மைக்கேல் டி.குன்காவின் தீர்ப்பை எரிக்க முயன்றார்கள். சில இடங்களில் எரிக்கவும் செய்தார் கள். தமிழகத்தில் அங்காங்கு வன்முறை ஏற்பட்டது. இவை அனைத்தையும் ஜெயலலிதான் தூண்டினார்.
இவ்வாறு அவர் கூறியதும் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து குறுக்கிட்டு, “இத்தனை சம்பவங்களையும் ஜெயலலிதாதான் தூண்டிவிட்டு செய்யவைத்தார் என்பதற்கு ஆதாரமாக உறுதியான ஆவணங்களை தாக்கல் செய்து உங்களால் வாதிட முடியுமா?’’ என்று கேட்டார்.
உடனே சுப்பிரமணியசாமி,...“அ.தி.மு.க. கட்சியின் ஒப்பற்ற தலைவியே ஜெயலலிதாதான். அவருடைய கவனத்தில் இல்லாமல் இவை அனைத்தும் நடந்திருக்க வாய்ப்பு இல்லை“ என்று கூறினார்.
அதற்கு நீதிபதி, “இது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது நாம் தண்டனை தடை விதிப்பது குறித்தும் ஜாமீன் வழங்குவது குறித்தும் உங்களுடைய வாதம் என்ன? உங்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க உத்தரவு வழங்கப்படும்’’ என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட பாலி எஸ்.நாரிமன், “அரசியல் முறையின் மாண்பை நாம் காப்பாற்ற வேண்டும். நடந்த சம்பவங்களை பார்க்கும் போது அதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் நான் வருத்தம் தெரிவிக்கிறேன். ஒரு வழக்கறிஞராக என்னாலும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது’’ என்று கூறினார்.
இதற்கு சுப்பிரமணியசாமி, சிரித்துக்கொண்டே, “எனக்கு குருவே பாலி நாரிமன்தான். அவரிடம் இருந்துதான் நான் சட்டத்தை கற்றுக் கொண்டேன். அதனால் அவர் உத்தரவாதம் அளித்தால் அதுவே எனக்கு போதுமானது’’ என்றார்.
அதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் வக்கீல் பாலி எஸ்.நாரிமன், “நாங்கள் 6 வாரத்துக்குள் அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்துக்கும் எதிர் தரப்புக்கும் சமர்ப்பித்து விடுகிறோம். மூன்று மாதங்களுக்குள் மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை முடித்துக்கொள்ள உத்தரவிட்டாலும் ஏற்றுக் கொள்கிறோம்’’ என்றார்.
அதன்பிறகு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்ற இரு நீதிபதிகளான ஏ.கே.சிக்ரி மற்றும் மதன் பி.லோகுர் ஆகியோருடன் சில நிமிடங்கள் ஆலோசனை செய்தார்.
ஆலோசனைக்குப் பிறகு தலைமை நீதிபதி வழங்கிய தீர்ப்பு விவரம் வருமாறு:-
“சரீன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் உங்கள் கட்சிக்காரருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கவும், அவருக்கு ஜாமீன் வழங்கவும் உரிமை உள்ளது. ஆனால் சில விஷயங்கள் உள்ளன. அதாவது அவர் தப்பித்துப் போய்விடுவார்; விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டார்; அவரால் இந்த விசாரணைக்குக் குந்தகம் ஏற்படும் என்பவை போன்ற காரணங்களால் மட்டுமே இந்த தண்டனை மீதான இடைக்கால தடையை நிறுத்தி வைக்கமுடியும். ஜாமீனையும் வழங்க முடியாது.
அவை போன்ற பிரச்சினைகள் இந்த வழக்கில் எழவில்லை. சுப்பிரமணியசாமி எடுத்து வைத்த வாதங்களையும் நாங்கள் கருத்தில் எடுத்துக் கொள்கிறோம். இந்த வழக்கில் நாங்கள் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பிக்கிறோம். அந்த உத்தரவின்படி வருகிற டிசம்பர் மாதம் 18-ந் தேதி அன்று இந்த வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும். இன்னொரு விஷயம் நானும் கன்னடர்தான். நீதிபதி மைக்கேல் டி.குன்காவை எதிர்த்து போஸ்டர் ஒட்டும் உங்கள் கட்சிக்காரரின் தரப்பினர் என்னையும் அப்படி விமர்சித்து போஸ்டர் ஒட்ட மாட்டார்களா?
இவற்றை கட்டுப்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருந்தாலும் நாங்கள் அதற்கு தயாராக இல்லை. ஆனால் இவை போன்ற எந்தவிதமான அசம்பாவிதங்களிலும் யாரும் ஈடுபடக்கூடாது. 6 வாரம் அவகாசம் கேட்டீர்கள். நாங்கள் உங்களுக்கு 8 வாரம் அவகாசம் அளிக்கிறோம். 17.12.2014-ந் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ கர்நாடக ஐகோர்ட்டில், 35,000 பக்கங்கள் இருப்பதாகக் கூறும் ஆவணங்களை எந்தவிதமான தாமதமும் ஒத்திப்போடுதலும் இல்லாமல் தாக்கல் செய்ய வேண்டும். மேல்முறையீட்டு வழக்கை தொடங்குவதற்கான வேண்டுகோள் மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் தாக்கல் செய்யுங்கள். எந்தவிதமான காரணத்தை கொண்டும் அந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை ஒத்திப்போடுவதற்கு உங்கள் கட்சிக்காரர் முயற்சிக்கக் கூடாது.
இது குறித்து நீங்கள் எடுத்த நடவடிக்கை பற்றி சுப்ரீம் கோர்ட்டில் டிசம்பர் 18-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் ஒருநாள் தாமதம் ஏற்பட்டாலும் ஜெயலலிதா மற்றும் பிற மனுதாரர்களின் ஜாமீனை ரத்து செய்து விடுவோம். விசாரணை தொடங்கிய பிறகு ஒரு ஒத்திவைப்புக்குக் கூட நீங்கள் முயற்சிக்கக் கூடாது.
சுப்பிரமணிய சாமியையும் இது தொடர்பான வழக்கில் மனுக்களை தாக்கல் செய்தவர்களையும் எந்தவகையிலும் துன்புறுத்தக் கூடாது. அதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் இந்த நீதிமன்றத்தை நாடினால் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். அதனுடைய முடிவு விபரீதமாக இருக்கும். இப்போது அளிக்கும் ஜாமீனை ரத்து செய்ய தயங்கமாட்டோம். இவற்றை நீங்கள் உங்கள் கட்சிக்காரரிடம் அறிவுறுத்துங்கள்.
மூத்த வழக்கறிஞரான நீங்கள் அளிக்கும் உத்தரவாதங்களை ஏற்றுக் கொள்கிறோம். எனவே, இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் உள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து அனைவருக்கும் ஜாமீன் வழங்குகிறோம். கர்நாடக ஐகோர்ட்டில் நடக்கும் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் வக்கீல்கள் ஆஜரானால் போதும். உங்கள் கட்சிக்காரர் ஆஜராக தேவையில்லை.
இவ்வாறு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.

ஜெயலலிதா ஜாமீன் மனுவின் மீது சுப்ரீம் கோர்ட்டில் நடந்த பரபரப்பு விவாதம்
ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பான விவாதம் நடைபெற்றது. சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டால் 4 ஆண்டுகள...
Post a Comment