மாதம் மும்மாரி பெய்த தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை என்று தவித்து வருகிறோம். ஆனால் இந்தியாவின் மிகப் பெரிய பாலைவன பூமியான ராஜஸ்தானில் இப்போது தண்ணீர் பிரச்னை அவ்வளவாக இல்லையாம். காரணம் வாட்டர் ஏ.டி.எம்., (water ATM) -கள்தான் என்கிறார்கள்.
முன்பெல்லாம் இந்தப் பகுதிகளில் தண்ணீர் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும், அசுத்தமாகவும் குடிப்பதற்கு தகுதியற்றதாகவும் இருககும். ஆனால் இப்போது அப்பகுதி கிராமங்களில் தண்ணீர் பஞ்சமே இல்லை. 24 மணி நேரமும் சுத்தமான தண்ணீர் கிடைக்கிறது. அதற்கு காரணம் வாட்டர் ஏ.டி.எம்.தான் என குடித்து.... மன்னிக்கவும், அடித்து சொல்கிறார்கள். (water ATMs).
ஒரு காலத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வர் மாவட்டத்தின் பாகர்பூருக்குச் (Bhakharpur) சென்று ஒரு டீ கடையில் டீ சொல்லிவிட்டு குடிக்கத் தண்ணீர் கேட்டால், அரை டம்ளர் தண்ணீர்தான் கொடுப்பார். டம்ளர் நிறைய தண்ணீர் கேட்டால், இன்னொரு டீ வேண்டுமானாலும் ஃபிரீயா தருகிறேன் தண்ணீர் மட்டும் கேட்காதீங்க என்பார்கள். அந்த அளவுக்கு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடியதுண்டு இங்கு. மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களிலும் இதே நிலைமைதான்.
ஆனால் இப்போதோ பாகர்பூர் கிரமத்தில் 5 ரூபாய்கு 20 லிட்டர் சுத்தமான தண்ணீர் கிடைக்கிறது. ராஜஸ்தான் பப்ளிக் ஹெல்த் இன்ஜினீரிங் துறையும் கேர்ன் நிறுவனமும் (இந்தியன் ஆயில் & கேஸ் கம்பனி) சேர்ந்து, ஆர்.ஓ ( Reverse Osmosis) வாட்டர் பிளான்ட் மூலமாக சுத்தமான தண்ணீர் சப்ளை செய்கிறது. இந்த திட்டத்துக்கு 'ஜீவன் அம்ருத்' (Jeevan Amrit ) என்று பெயர். இதன் சிறப்பு ஏ.டி.எம்.மையங்களில் இருந்து தண்ணீர் பெறமுடியும்.
இத்திட்டத்தின்படி பயனடைய வாட்டர் ஏ.டி.எம். கார்டு'களை 150 ரூபாய் செலுத்தி பெற்றுகொள்ளவேண்டும். அதே தொகைக்கு ரீசார்ஜ் செய்தபிறகு இந்த கார்ட்டை பயன்படுத்தலாம். குறைந்த பட்சம் 20 ரூபாய்க்கும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இந்த வார்ட்டர் கார்டுகள் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானம் கிராம நிர்வாகத்தின் மூலம் ஆர்வோ வாட்டர் பிளான்ட் ஊழியர்களுக்கும், ஏ.டி.எம்., ஆப்ரேட்டர்களுக்கும் மாத சம்பளமாகத் தரப்படுகிறது. மீதம் இருந்தால், கிராம நிர்வாகத்துக்குச் சேரும்.
''ஒரு நேரத்தில் எங்கள் கிராமத்தில் உள்ள மக்கள் தண்ணீருக்காக பல மைல்கள் நடந்து சென்று தண்ணீர் கொண்டுவருவார்கள். தண்ணீர் கிடைத்தாலும் அது சுத்தமானதாக இருக்காது. ஒருவேளை தண்ணீர் லாரி வந்தால் தண்ணீர் பிடிக்கும் போட்டியில் சண்டை போட்டுக்கொள்வார்கள். எங்க ஊரில் பாதி சண்டை தண்ணீர்க்காகவே நடந்ததாக இருக்கும். இப்போது ஏ.டி.எம். மூலம் சுத்தமான தண்ணீர் கிடைப்பதோடு, உடல் ஆரோக்கியமாகவும் இருக்கிறது என்கிறார் பாகர்பூர் கிராமவாசி ஒருவர்.
24 மணி நேரமும் சுத்தமான தண்ணீர் சப்ளை செய்யும் இந்த 'ஜீவன் அம்ருத்' திட்டத்தை இன்னும் பல கிராமங்களில் விரிவு படுத்த ராஜஸ்தான் பப்ளிக் ஹெல்த் இன்ஜினீரிங் டிப்பார்ட்மெண்ட் திட்டம் தீட்டி வருகிறது. ராஜஸ்தான் உட்பட பல மாநிலங்களில் மேலும் பல தண்ணீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் உள்ள பல பகுதிகளில் 'பரிமல் பவுன்டேஷன்' நவீன விஞ்ஞான முறையில் சுத்தமான தண்ணீர் ஏ.டி.எம்-கள் மூலம் சப்ளை செய்துவருகிறது. இந்த திட்டத்திற்கு 'சர்வஜல்' என்று பெயர்.
ஹிமாச்சல் பிரதேஷ் தலை நகர் சிம்லாவில் தற்போது வாட்டர் ஏ.டி.எம்.கள் அமைக்கப் பட்டுள்ளன. இதில் 50 பைசாவுக்கு 1 லிட்டர் சுத்தமான நீர் கிடைக்கிறது. இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து விரிவுபடுத்த அரசாங்கம் யோசித்து வருகிறது. டெல்லியில் வாட்டர் ஏ.டி.எம்கள் திறக்கப்பட்டுள்ளன. டெல்லி அரசாங்கமும் வாட்டர் ஏ.டி.எம்களைத் திறக்க திட்டமிட்டுள்ளது.
போகிறபோக்கைப் பார்த்தால் நாடு முழுக்க பணம் எடுக்கும் வங்கி ஏ.டி.எம்களுக்கு இணையாக வாட்டர் ஏ.டி.எம் வந்துவிடும்போல் இருக்கிறது. எது எப்படியோ ஏடிஎம்களிலிருந்து எடுக்கும் தண்ணீரை பணம் போல(!?) மக்கள் செலவு செய்யாமல் இருந்தால் சரி!
-என்.மல்லிகார்ஜுனா, கே.ஆர். ராஜமாணிக்கம்
-vikatan=

குடிநீர் பிரச்னை ...வருகிறது water ATMகள்!
மா தம் மும்மாரி பெய்த தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை என்று தவித்து வருகிறோம். ஆனால் இந்தியாவின் மிகப் பெரிய பாலைவன பூமியான ராஜஸ்தானில் இப்போத...
Post a Comment