புலிப்பார்வை படம் நேற்று மீண்டும் தமிழ் உணர்வாளர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது...,
செய்யப்பட்ட பிறகு மீண்டும் திரையிடப்படுகிறது என்று சொல்லப்பட்டாலும் படத்தில் எந்த ஒரு தொகுப்பாக்கமும் செய்யப்பட்டது போல் தோன்ற வில்லை..,
பாலச்சந்திரன் உட்பட மற்ற ஈழ சிறுவர்களும் அணிந்திருந்த புலிகள் சீருடை இப்போது வெள்ளை ஆடைக்கு மாற்ற பட்டுள்ளது அதுவும் முழுக்க வரைகலை ( கிராபிக்ஸ் ) அப்பட்டமாக தெரிகிறது...,
பாலச்சந்திரன் விரட்டி விரட்டி பிடிக்கப்பட்டதாகவும்..,
எதற்கு போராடனும் எதற்கு சாகனும் என்று ஈழத்து பெண் சொல்வது..,
கன்னி வெடிகளை ஈழத்து பெண் அகற்றி அதற்காக பணம் வாங்குவது போலவும்..,
பாலச்சந்திரன் கொல்லப்பட்ட விஷயம் இந்தியாவிற்கு தெரிந்தால் இந்தியா கொந்தளிக்கும் என்று சிங்கள ராணுவ அதிகாரி பேசுவது போலவும்..,
அதே போல் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதற்கு எந்த ஒரு அரசியலும் காரணம் அல்ல தனிப்பட்ட ஒரு சிங்கள ராணுவ அதிகாரியின் கோவமே காரணம் என்று படம் ஆரம்பத்தில் இருந்தே சொல்ல வருகிறார்கள்..,
கடைசியாக தலைவர் பேசும் உரையில் இந்தியாதான் நமக்கு எல்லாம் என்று சொல்வது
ராமர் பாலம் போட்டதை பற்றி தலைவர் புலிகளிடம் பேசுவது..,
பாலச்சந்திரன் மீட்கப் படுவதற்காக அத்தனை புலிகளும் உயிரை விடுவது போலவும்..,
தலைவர் சிங்கள ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டதாகவும் அதன் பின்னர் புலிகள் தலைவரின் படத்தை வைத்து அழுவதும் பின் தலைவர் உயிரோடு இருக்கிறார் என்று அலுத்து கொண்டே புலிகள் பேசுவது போலவும்...,
நாம் இதை ஏற்றுகொள்வோமானால்.,
இதன் பின்னர் மிக பிரம்மாண்டமான அதிக செலவில் மிக நுணுக்கமான நமக்கான எதிர்ப்பு அரசியலை கொண்டு வருவார்கள்..,
படமே முற்றிலுமாக எதிர்க்கப்பட வேண்டியதுதான்..,
புலிப்பார்வை படம் நேற்று மீண்டும் தமிழ் உணர்வாளர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது..., பல்வேறு தொகுப்பாக்கம் ( எடிட்டிங் ) செய்யப்பட்ட பி...
Post a Comment