சிங்கள பௌத்த பேரினவாதிக்கு இந்தியா அரசு அஞ்சல் தலை வெளியிட்டது !!
இந்திய அரசு தொடர்ந்து இலங்கையில் வாழும் தமிழினத்திற்கு எதிராக செயல்படுவது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் சிங்கள பௌத்த பேரினவாதத்தை கட்டி எழுப்பிய ஒரு பௌத்த பிக்குக்கு இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டு இந்த அளவிற்கு சிங்கள பாசத்தை காட்டும் என நாம் யாரும் அறிந்திருக்கவில்லை.
இந்திய குடியரசு தலைவரும், பாஜக தலைவரும் சேர்ந்து பௌத்த பேரினவாதியான அங்காரிகா தர்மபாலா என்னும் புத்த துறவிக்கு இந்தியாவின் சார்பில் அஞ்சல் தலை வெளியிட்டுள்ளனர். இந்தியா இலங்கை உடனான உறவை பலப்படுத்தவும் பௌத்த பண்பாட்டை இந்திய அரசு ஊக்குவிக்கவும் இந்த அஞ்சல் தலையை வெளியிடுவதாக இந்திய அரசு கூறியுள்ளது.
சிங்கள பௌத்த தேசியத்தை வளர்த்தெடுக்க பாடுபட்ட ஒரு புத்த பிக்குவிற்கு இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட வேண்டிய அவசியம் என்ன ? தமிழ் மொழியையும் தமிழர் பண்பாட்டையும் மதிக்காத இந்திய அரசு சிங்களத்திற்கு வரிந்து கட்டுக் கொண்டு அவர்களது அடையாளங்களை பரப்புவதற்கு எல்லா வேலைகளையும் செய்வது வெட்கக்கேடு. தமிழர்களை கொன்று குவிக்கத் தூண்டிய சிங்கள பேரினவாதத்தை இந்திய அரசு மேன்மேலும் வளர்த்தெடுக்க முயற்சி செய்வது இதிலிருந்து அப்பட்டமாக தெரிகிறது. விரைவில் சு.சாமி கேட்டது போல கொலைகாரன் ராகபக்சேவிற்கு பாரத இரத்தினம் என்ற விருதை இந்திய அரசு வழங்கினாலும் வியப்பதற்கு இல்லை.
இந்த மனநிலையில் இந்திய அரசு இருக்கும் வரை இந்தியா தமிழர்களுக்கு எந்த விதத்திலும் நன்மையை செய்யாது என்பது மேலும் உறுதியாகி உள்ளது.
சிங்கள பௌத்த பேரினவாதிக்கு இந்தியா அரசு அஞ்சல் தலை வெளியிட்டது !!
சிங்கள பௌத்த பேரினவாதிக்கு இந்தியா அரசு அஞ்சல் தலை வெளியிட்டது !! இந்திய அரசு தொடர்ந்து இலங்கையில் வாழும் தமிழினத்திற்கு எதிராக செயல்படு...
Post a Comment