‘இட்ஸ் மெடிக்கல் மிராக்கல்’ என்று மருத்துவ உலகை கோரஸாக சொல்ல வைத்த பெயர். இனி வரும் காலங்களில் மருத்துவ மாணவர்கள் ‘லுகாஸ் மோர்’ பற்றிய பாடம் படிப்பார்கள். அவர் பிறந்த தினமான 2013 ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதியை எந்த மருத்துவரும் எளிதில் மறக்க முடியாது. அப்படி மருத்துவ உலகமே கொண்டாடும் வகையில் லுகாஸ் மோர் செய்த சாதனை என்ன என்கிறீர்களா?
கருவாகி 23 வாரங்களிலே தன் தாயின் வயிற்றிலிருந்து பூமிக்கு வந்தவர். மேற்கத்திய நாடுகளைப் பொறுத்தவரை தம் வயிற்றில் உருவான கருவினை கலைக்க விரும்புவோர், கரு உருவான 24 வாரங்களுக்குள் அதைச் செய்துவிட வேண்டும். ஏனெனில் 24 வாரங்களுக்கு பிறகே, குழந்தையின் உண்மையான வளர்ச்சியிருக்கும். ஆனால், லுகாஸ் மோரோ கருக்கலைப்பு செய்யும் கால கெடுக்கு முன்னதாகவே பிறந்துவிட்டார். அவர் பிறந்தப்போது அவரது எடை வெறும் 520 கிராம்தான். பிறக்கும்போதே பரிதாபமான தோற்றத்துடன் இருந்த அவருக்கு மூளையில் ரத்த கசிவு, இதயத்தில் ஒட்டை என பல பிரச்னைகள். மேலும் உள் உறுப்புகள் வலிமையற்று எளிதில் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் இவரால் தொடர்ந்து ஆரோக்யமாக உலகில் வாழ முடியாது. அதனால், கருணைக் கொலைச் செய்துவிடுவது நல்லது என மருத்துவர்கள் லுகாஸின் பெற்றோரிடம் ஆலோசனைச் சொல்லினர்.
எனினும் அதை பெற்றோர் ஏற்க மறுத்தனர். என்ன ஆனாலும் சரி அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதென முடிவு செய்தனர். அதிசயம் என்னவென்றால் லுகாஸ் இப்போது தனது முதல் பிறந்த நாளை வெற்றிகரமாக கொண்டாடி முடித்துள்ளான்.
இந்த அதிசயம் நிகழ்ந்தது பற்றி இன்னும் தங்களை கிள்ளிப்பார்த்து வியக்கின்றனர் லுகாஸின் பெற்றோர்கள்.
“மகனின் உடல்நிலவரம் குறித்து மருத்துவர்கள் சொன்னத்தைக் கேட்டு மனதளவில் உடைந்துவிட்டோம். ஆனால், அவர்கள் சொன்னதுப் போல் அவனை கருணைக் கொலைச் செய்ய விரும்பவில்லை. அவன் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்களை தெரிந்து அவனால் அவற்றை எதிர்த்து போராட முடியுமா என்பதைத் தெரிந்துக் கொள்ளாமல் அவனை எதுவும் செய்யக்கூடாது. ஒருவேளை அவனால் இவற்றை எதிர்க்க முடிந்தால், நாங்கள் அதற்கு துணையாக நிற்போம் என்று மருத்துவர்களிடம் எடுத்துச்சொன்னோம். அதற்கேற்றார் போல் தொடர் சிகிச்சையில் பத்தே நாட்களில் அவன் சராசரி எடைக்கு வந்துவிட்டான். கொஞ்ச நாட்களில் அவனது மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவும் நின்றது. நான்கு மாத கால தீவிர கண்காணிப்புக்கு பிறகு, லுகாஸ் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டான். இப்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் முதல் பிறந்த நாளைக் கொண்டாடி முடித்துவிட்டான்“ என ஆனந்த கண்ணீர் வழிய பேசுகிறார்கள் லுகாஸின் பெற்றோர்.
கடந்த நான்கு வருடங்களி்ல், அமெரிக்காவில் மட்டும் 23-வது வாரத்தில் 120 குழந்தைகள் பிறக்கும்போதே நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்து எந்தவித பிரச்னைகளும் இன்றி நலமாக உள்ளன. லுகாஸ் பிறந்த பிறகு, கருக்கலைப்புக்கான காலக்கெடுவை 20 வாரமாக மாற்ற வேண்டும் என்ற குரல் அந்நாடுகளில் ஒங்கி ஒலிக்கத்தொடங்கியுள்ளன
-கு. அஸ்வின்

அப்படி மருத்துவ உலகமே கொண்டாடும் வகையில் லுகாஸ் மோர் செய்த சாதனை என்ன என்கிறீர்களா?
‘இட்ஸ் மெடிக்கல் மிராக்கல்’ என்று மருத்துவ உலகை கோரஸாக சொல்ல வைத்த பெயர். இனி வரும் காலங்களில் மருத்துவ மாணவர்கள் ‘லுகாஸ் மோர்’ பற்றிய ப...
Post a Comment