Ads (728x90)


சென்னை: குடும்ப நிகழ்ச்சிகளுக்கு தேவையான அளவு பால் குறித்து  ஆவினுக்கு போன் செய்தால், குறித்த நாளில் பால் வீடு தேடிவரும். இத்  திட்டம் ஓரிரு நாட்களில் நடைமுறைக்கு வர உள்ளது. ஆவின் பால்  திருட்டு புகழ் வைத்தியநாதன் கைதுக்கு பிறகு ஆவின் நிர்வாகம்  பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  சென்னையில் உள்ள தானியங்கி பால் பூத்துகளை மூடிவிட்டு அதற்கு  பதிலாக பேக் செய்யப்பட்ட பால் கவர்களை விநியோகிக்க முடிவு  செய்துள்ளது. இந்த திட்டம் 16ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.  மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியங்களில் இருந்து  சென்னையில் உள்ள  ஆவின் பால் பண்ணைகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம்  கொண்டுவரப்படும் பாலை கண்காணிக்க, டேங்கர் லாரிகளில்  ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தப்பட உள்ளது. பேக் செய்யப்பட்ட பாலை  பால் பண்ணைகளில் இருந்து லாரிகள் மூலம் டிரேக்களில் ஏற்றும்  இடங்களை சிசிடிவி மூலம் கண்காணிக்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. பால் தரத்தை சோதிக்கும் அதிகாரிகள் தொடர்ந்து  ஒரே இடத்தில் பணியாற்றுவதற்கு தடை விதித்து, அவர்களை சுழற்சி  முறையில் பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
aavin milk packet
திருமணம் மற்றும் குடும்ப விழாக்களுக்கு குறைந்தபட்சம் 100 லிட்டரில்  இருந்து அதிகபட்சமாக சுமார் ஆயிரம் லிட்டர் வரை மொத்தமாக பால்  வாங்க விரும்புபவர்கள், துணைப் பொதுமேலாளர் (புராடக்ட்), துணை  மேலாளர் (வர்த்தகம்) ஆகியோருக்கு தேவையான பாலின் அளவு  குறித்து தொலைபேசி மூலம் தெரிவித்துவிட்டால். விழா நடைபெறும்  நாள் அன்று குறிப்பிட்ட முகவரியில் பால் வழங்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளளது. இத்திட்டம் இம்மாதம் 16ம் தேதி முதல் அமலுக்கு  வர இருப்பதாக ஆவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாதாந்திர  பாலுக்கான புதிய அட்டை (ஸ்மார்ட்கார்டு) வழங்கவும்  திட்டமிடப்பட்டுள்ளது. நுகர்வோரின் புகைப்படத்துடன் கூடிய அனைத்து  தகவல்களும் இந்த அட்டையில் இடம் பெற்றிருக்கும். இத்திட்டத்தின்  மூலம் போலி மாதாந்திர அட்டைகள் ஒழிக்கப்பட்டு விடும்.

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தவும்,  பால் பொருட்களின்  விற்பனையை அதிகரிக்கவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.   கொள்முதல் விலையை உயர்த்தும்பட்சத்தில் ஆவின் பால் விலை  மற்றும் பால் பொருட்களின் விலையும் 10 சதவீதத்திலிருந்து  அதிகபட்சமாக 30 சதவீதம் வரை உயர்த்தப்படவும். வாய்ப்பு உள்ளது.   இவ்விலை ஏற்றத்துக்கான அறிவிப்பு நவம்பர் அல்லது டிசம்பர்  மாதங்களில் வெளிவரலாம் என்று ஆவின் நிர்வாக வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.
குடும்ப நிகழ்ச்சிகளுக்கு போனில் தகவல் கொடுத்தால் ஆவின் பால் கிடைக்கும்

சென்னை: குடும்ப நிகழ்ச்சிகளுக்கு தேவையான அளவு பால் குறித்து  ஆவினுக்கு போன் செய்தால், குறித்த நாளில் பால் வீடு தேடிவரும். இத்  திட்டம் ஓர...

Post a Comment