மைக்கேல்
மற்றும் டேனியல் ஃப்ளோரா என்ற இரட்டையர்கள் இன்ஸ்டாகிராமில் (instagram)
தங்கள் படங்களை அப்லோட் செய்ததும், இவர்களின் 'சூப்பர் ஸ்டைல்' பார்த்து
ஒரே நாளில் 50,000 ரசிகர்கள் குவிந்துவிட்டனர்.
மூன்று வயதாகும் இந்த லண்டன் இரட்டையர்கள் இணையத்தில் இப்போது சூப்பர்
ஜோடிகளாக கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் இவர்களுடைய 'சூப்பர்
டிரெஸ்ஸிங் ஸ்டைல்'. அம்மா ஜேன் ஃப்ளோரா (Jane Flora), ஒரு ஃபேஷன் டிசைனர்.
தன் இரட்டைக் குழந்தைகளுக்கு விதவிதமான உடைகளை தயாரித்து, அதற்கு
மேட்ட்சிங்காக ஷூ, டை, கண்ணாடி எனப் பார்த்து பார்த்து, அணிவித்து,
மாடல்களைப் போல ஷாப்பிங் அழைத்து வருகிறார். இந்த கலக்கல் கூட்டணியைப்
பார்க்கும் எல்லோருடைய கண்களும் இந்த ட்வின்ஸ் மீதுதான்.
இவர்களுடைய ஸ்டைலான உடைகளைப் பார்த்து அசந்துபோகிறார்கள். 'ஹே சோ
கியூட்' என்று இவர்களின் கன்னத்தில் செல்லமாகத் தட்டிக் கொடுப்பதுடன்,
கூடவே இரட்டையர்களுடன் செல்ஃபியும் எடுத்துகொள்கிறார்கள். இப்போது இந்த
சூப்பர் ஸ்டைல் ட்வின்ஸை செல்லமாக 'கிங்-1, கிங்-2' என்று அழைக்கிறார்கள்.
இதைப் பார்த்ததும் இவர்களின் அம்மா, விதவிதமான டிரஸ்களில் ஃபோட்டோக்களை
எடுத்து instagram-ல் அப்லோட் செய்தும் வருகிறார். இன்று என்ன காஸ்ட்யூம்
என்று ஒவ்வொரு நாளும் ஆவலுடன் காத்திருப்பவர்களும் இருகிறார்கள். இப்போது
அம்மா டிரஸ் போட்டுவிட்டு கேமராவை கையில் எடுத்தால் போதும், இருவரும்
ஹீரோக்களைப் போல் போஸ் கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
-என்.மல்லிகார்ஜுனா, கே.ஆர்.ராஜமாணிக்கம்
-என்.மல்லிகார்ஜுனா, கே.ஆர்.ராஜமாணிக்கம்
லண்டனைக் கலக்கும் சுட்டி இரட்டையர்கள்!
மை க்கேல் மற்றும் டேனியல் ஃப்ளோரா என்ற இரட்டையர்கள் இன்ஸ்டாகிராமில் (instagram) தங்கள் படங்களை அப்லோட் செய்ததும், இவர்களின் 'சூப்பர்...
Post a Comment